சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The 16,000 Dow

டோவ் ஜோன்ஸ் குறியீடு 16,000

Andre Damon
25 November 2013

Use this version to printSend feedback

டோவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு சராசரி, தொடர்ச்சியான ஏழாவது வார உயர்வில், வியாழனன்று முன்னொருபோதும் இல்லாதபடிக்கு முதன்முறையாக 16,000த்திற்கும் அதிகமான புள்ளிகளில் நிறைவுற்றது. இந்த அருஞ்சாதனையை உடனடியாக மற்றொரு மைல்கல் தொடர்ந்தது: அதுவாவது, S&P 500 குறியீடு 1,804இல் முடிவுற்றது, அந்த குறியீடு வரலாற்றில் முதன்முறையாக 1,800க்கு அதிகமான புள்ளிகளோடு முடிந்துள்ளது.

2009க்கு பின்னரில் இருந்து இருமடங்காகி உள்ள டோவ் குறியீடு கடந்த ஆண்டு வாக்கில் 24 சதவீத உயர்வை எட்டியது. இதேபோன்று S&P 500 28 சதவீதம் உயர்ந்தது.

எவ்வாறிருந்த போதினும், ஒரு உண்மையான மற்றும் ஆரோக்கியமான பொருளாதார மீட்சியை வெளிப்படுத்தாமல், பங்குச்சந்தையின் உயர்வு, ஒரு பரந்த சமூக அவலத்தின் விரிவையும் மற்றும் முன்நிகழ்ந்திராத சமூக சமத்துவமின்மையின் ஒரு விரிவையும் இணையாக கொண்டுள்ளது.

2008இல் 28.2 மில்லியனாக இருந்த கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டத்தின் கீழ் (Supplemental Nutrition Assistance Program) உதவி பெறும் மக்களின் எண்ணிக்கை 2013 ஏப்ரலில் 47.7 மில்லியனாக உயர்ந்துள்ளது, இது எழுபது சதவீத உயர்வாகும். இந்த எண்ணிக்கை, குறைவதற்கு மாறாக, 2012 மற்றும் 2013க்கு இடையில் 1 மில்லியனுக்கும் அதிகமான புதிய உணவு மானிய முத்திரை பெற்றவர்கள் சேர்க்கப்பட்டதோடு சேர்ந்து, தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடும்வறுமை நிலையின் இந்த பரந்த அதிகரிப்பிற்கான காரணத்தைக் கண்டறிவது ஒன்றும் சிரமமில்லை: 2007 மற்றும் 2102க்கு இடையே, அமெரிக்காவில் நடுத்தர மக்களின் குடும்ப வருமானம் 8.3 சதவீத அளவிற்கு சரிந்திருந்தது. வேலையிலிருந்த மக்களின் சதவீதத்தில் ஏற்பட்ட கூரிய சரிவு, மற்றும் கூலிகளில் ஏற்பட்ட ஒரு வீழ்ச்சியின் ஒரு கலவையால் அந்த செங்குத்தான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. மே 2009இல் இருந்து உற்பத்தித்துறை கூலிகள் மூன்று சதவீதம் குறைந்துள்ள நிலையில், வேலை செய்யும் வயதில் வேலையிலிருந்த அமெரிக்க மக்களின் சதவீதம் 2008க்குப் பின்னால் 4.6 சதவீதம் சரிந்துள்ளது.

அமெரிக்க கல்வித்துறையால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், வீடற்றோர் கல்விக்கான தேசிய மையத்தால் அக்டோபரில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, பொதுப் பாடசாலைகளில் பதிவு செய்திருந்த 1.1 மில்லியனுக்கும் மேலான குழந்தைகள் 2011-2012இல் ஏதோவொரு சமயத்தில் வீடற்று இருந்ததாக கண்டறிந்தது. இது பொருளாதார நெருக்கடி தொடங்குவதற்கு முன்னர் இருந்ததை விட 72 சதவீதம் அதிகமாகும்.

சமூக அவலம் மற்றும் கடும்வறுமை நிலைமையின் வேகமான அதிகரிப்பின் மறுபுறம், பெரும் செல்வந்தர்களின் செல்வத்தில் பரந்த பெருக்கம் ஏற்பட்டுள்ளது. UBS மற்றும் Wealth-Xஆல் இந்த மாத தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கையின்படி, 2009இல் இருந்து உலக பில்லினியர்கள் அவர்களின் மொத்த நிகர மதிப்பை இரட்டிப்பாக்கி உள்ளனர். உலக மக்கள்தொகையில் 4.4 சதவீதம் மட்டுமே அமெரிக்கா கொண்டிருக்கிறது என்றபோதினும், போர்ப்ஸ் தகவலின்படி, உலக பில்லினியர்களில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொண்டுள்ளது.

கலிபோர்னியா பேர்க்லி பல்கலைக்கழக பேராசிரியர் எமானுவேல் சாயேஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கிய ஓர் அறிக்கையின்படி, அடிமட்டத்தில் உள்ள 95 சதவீதத்தினர் தங்களின் வருவாய் மந்தமாகி இருப்பதைக் காண்கின்ற அதேவேளையில், 2009இல் இருந்து, ஒரு சதவீத பணக்காரர்கள் அனைத்து வருவாய் ஆதாயங்களின் ஓர் திகைப்பூட்டும் 95 சதவீதத்தைக் கைப்பற்றி உள்ளனர்.

சனியன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்க வருவாய் சமத்துவமின்மை புஷ் நிர்வாகத்தைவிட ஒபாமா நிர்வாகத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் நான்கு மடங்கு வேகமாக அதிகரித்தது. அந்த நாளிதழ் செய்திகளின்படி, 2001இல் இருந்து 2008 வரையில், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் போது, நடுத்தர மக்களின் சராசரி வருவாய் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு 0.28 சதவீத புள்ளிகள் அதிகரித்தது. 2009இல் இருந்து கடைசியாக இருக்கும் 2011ஆம் ஆண்டு தரவுகள் வரையில், ஆண்டுதோறும் அந்த விகிதம் 1.14 சதவீத புள்ளிகள் உயர்ந்தது, அல்லது அநேகமாக நான்கு மடங்கு வேகமாக அதிகரித்தது."

பங்கு விலைகளின் பரந்த உயர்வானது தனிமனிதர்களின் மற்றும் பாரபட்சமற்ற பொருளாதார சட்டங்களின் விளைவு அல்ல, மாறாக ஒபாமா நிர்வாகத்தால் பின்பற்றப்பட்ட தீர்க்கமான கொள்கைகளின் விளைவாகும். இந்த நிர்வாகம், அதன் தங்கியிருந்த பதவிகாலம் முழுவதும், பெரும் பணக்காரர்களின் நிதியியல் அமைப்புமுறை சொத்து மதிப்புகளுக்கு முட்டுகொடுக்க அதன் அதிகாரத்தில் அனைத்தையும் செய்துள்ளது. இது மக்களிடமிருந்து செல்வவளம், நிதியியல் பிரபுத்துவத்திற்கு மாறுவதில் ஒரு பரந்த பரிமாற்ற வடிவத்தை எடுத்துள்ளது.

செல்வங்கள் நிதியியல் பிரபுத்துவத்திடம் குவிவதன் மீது அதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்பதையும், மற்றும் நிதியியல் நெருக்கடியின் சுமையை அது தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் என்பதையும் தவறுக்கிடமின்றி தெளிவுபடுத்த ஒபாமா நிர்வாகத்தால் பல முடிவுகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 2009இல் நடப்பு அணிவகுப்பு தொடங்கியது.

வரிசெலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி, செயற்கையாக விலையேற்றப்பட்ட வங்கிகளின் விற்கமுடியா சொத்துக்களை வாங்க தோற்றப்பாட்டளவில் வரம்பில்லா நிதிகளை வழங்கும் ஒரு திட்டத்தின் விபரங்களை, மார்ச் 23இல், கருவூல செயலர் திமோதி கெய்த்னர் வெளியிட்டார். அப்போதிருந்து, பெடரல் ரிசர்வ் வைத்திருந்த அடமானம்-சார்ந்த பத்திரங்களின் மதிப்பு $68 பில்லியனில் இருந்து $1.4 ட்ரில்லியனாக உயர்ந்தது, மேலும் ஒவ்வொரு மாதமும் $40 பில்லியனாக பெருகி வருகிறது. அந்த நாளில், டோவ் அதிர்ச்சியூட்டும் விதத்தில் 7 சதவீத அளவிற்கு திரண்டு, 497 புள்ளிகள் அளவில் முடிவுற்றது.

அதற்கு சில நாட்களுக்கு முன்னர், பிணையெடுக்கப்பட்ட காப்பீட்டு ஜாம்பவான் AIGஇன் செயலதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை மட்டுப்படுத்தும் எவ்வித தீவிர முயற்சியையும் தாம் எதிர்ப்பதாக ஒபாமா தெளிவுபடுத்தி இருந்தார், மற்றும் பிணெயெடுப்பு நிதிகளில் இருந்து, AIG செயலதிகாரிகளுக்கு $165 மில்லியன் கொடுப்பனவு வழங்குவதைத் தடுக்கும் காங்கிரஸின் ஒரு முன்மொழிவை முடக்க அந்நிர்வாகம் நகர்ந்தது.

பின்னர், ஆட்டோ தொழில்துறையின் மறுகட்டமைப்பிற்காக ஒபாமா மார்ச் 30இல் அவரது முன்மொழிவை விவரித்தார், அதில் ஆட்டோ தொழில்துறைக்கு பிணையெடுப்பு வழங்க பெடரல் நிதியின் ஒதுக்கீட்டிற்கான முன்நிபந்தனைகளாக வழங்கப்பட்டு வரும் கூலி மற்றும் சலுகைகளில் வெட்டுக்களை வெள்ளை மாளிகை திணித்தது.

அந்த மூன்று சம்பவங்களும், 1933ற்குப் பின்னர் டோவ் குறியீட்டில் மிகப் பெரிய நான்கு-வார உயர்வை உருவாக்குவதில் ஒன்று கலந்தன.

2010இன் முடிவில், அந்த நிர்வாகம் பணக்காரர்களுக்கான புஷ்-சகாப்த வரி வெட்டுக்களை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க உடன்பட்டது, அதேவேளை தொழில்வழங்குனர்கள் மற்றும் பணியாளர் இருவருக்குமான சம்பள வரிகளில் ஒரு வெட்டை நடைமுறைப்படுத்தியது, அந்நடவடிக்கை சமூக பாதுகாப்பு முறையிலிருந்து நிதிகளை வறண்டு போக செய்தது.

2011இன் கோடையில் பெடரல் கடன் அளவு நிர்ணயம் மீதான நெருக்கடி, அதற்கடுத்த பத்தாண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் செலவின வெட்டுக்களைத் திணிக்கும் ஓர் உடன்படிக்கையோடு முடிவுக்கு வந்தது, அதனோடு சேர்ந்து 2013 தொடக்கத்திற்குள் வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸிற்கு இடையே பற்றாக்குறை-குறைப்பு உடன்படிக்கை எட்டப்படவில்லை என்றால் அந்த நேரத்தில் அனைவருக்கும் பொருந்தும் மற்றொரு 1.2 ட்ரில்லியன் டாலர் ஒதுக்கீட்டு” வெட்டுக்கள் தொடங்கப்படும் என்ற ஓர் உடன்படிக்கையும் இருந்தது.

அந்த நெருக்கடி பேரங்களின் போக்கில், குடியரசு கட்சியினரோடு சேர்ந்து ஒரு "பெரும் பேரத்தின்" பாகமாக ஒபாமா மருத்துவ பராமரிப்பு (Medicare) மற்றும் சமூக பாதுகாப்பில் முன்பில்லாத அளவிற்கு வெட்டுக்களைத் தொடுத்தார்.

2012இன் இறுதியில், நிதிக் குன்று" (fiscal cliff) நெருக்கடி என்றழைக்கப்பட்ட ஒன்று கடந்த மார்ச்சின் தொடக்கத்தில் "ஒதுக்கீட்டு" வெட்டுக்களைத் தூண்டுவதில் பலன் அளிக்கும் வேலையைச் செய்தது. Head Start திட்டத்தில் இருந்து வீட்டுத்துறை மானியங்கள் வரை ஏழைகளுக்கான சட்டப்பூர்வ உதவிகள் வரை உள்ள திட்டங்களில் ஏற்கனவே உள்ள தீவிர வெட்டுக்களின் தாக்கத்தையும் சேர்த்து, தற்போதைய வரவு-செலவு திட்டம் மற்றும் கடன் வரம்பு முட்டுச்சந்தானது ஒருவேளை ஒடுக்கீட்டு வெட்டுக்களை விரிவாக்க பயன்படுத்தப்படக்கூடும்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், வெள்ளை மாளிகையும் காங்கிரஸூம் உணவு மானிய முத்திரைகள் வழங்குவதில் ஒரு 5 சதவீத குறைப்பை நடைமுறைப்படுத்தின, இது அந்த திட்டத்தின் வரலாற்றில் சலுகை தொகையில் செய்யப்பட்ட முதல் தேசியளவிலான குறைப்பாகும். அனைத்து குறிப்புகளும் காட்டுவதைப் போல, பெரும்பாலான மாநில வேலையின்மை உதவி திட்டங்களில் உள்ள 26 வார வரம்பிற்குப் பிந்தைய விரிவாக்கப்பட்ட பெடரல் வேலையின்மை சலுகைகள் காலாவதியாவதைத் தடுக்க அரசியல் அமைப்புமுறை ஒன்றும் செய்யப் போவதில்லை. அந்த விரிவாக்கப்பட்ட வேலையின்மை சலுகைகள் டிசம்பரில் காலாவதியாக உள்ளன.

இந்த ஒட்டுமொத்த காலத்திலும், பெடரல் அளவில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மாநில மற்றும் உள்ளூர் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் சலுகைகள் மீது நடத்தப்பட்ட ஓர் இரக்கமற்ற தாக்குதலோடு இணைந்துள்ளது, இது நூறு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் சமூக சேவை தொழிலாளர்களின் வேலைபறிப்பு உட்பட மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் சமூக திட்டங்களின் மீது ஓர் இரக்கமற்ற தாக்குதலோடு இணைந்துள்ளது. இந்த நிகழ்முறை டெட்ராய்ட் நகரின் திவால்நிலைமையில் அதன் சமீபத்திய வெளிப்பாட்டைக் காட்டியுள்ளது. அது திவால்நிலைமையை பயன்படுத்தி ஓய்வூதியங்கள் மற்றும் நகரின் தொழிலாளர்களின் சலுகைகளை குறைக்க ஒரு முன்மாதிரியை அமைக்க வெள்ளை மாளிகையோடு இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய காட்டுமிராண்டித்தன தாக்குதல்களைத் திணிக்க அரசாங்கத்தால் முடிந்ததென்றால் அது முழுமையாக தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் போலி-இடது பங்காளிகளால் செய்யப்பட்ட வர்க்க போராட்ட அடக்குமுறையைச் சார்ந்திருந்தது. இந்த காலப்பகுதி முழுமையும், தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கை தரங்கள் மீது நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதல்களை எதிர்க்க போராடியது, ஆனால் ஒவ்வொரு போராட்டமும் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் புதைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், கூடி பேரம்பேசுவதற்கான உரிமைகள் மீது விஸ்கான்சின் கவர்னர் ஸ்காட் வோல்கரின் தாக்குதல்களுக்கு எதிராக 2011 போராட்டங்களும், மற்றும் சிகாகோவில் 2012 ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், 2013 நியூ யோர்க் மற்றும் பாஸ்டன் பாடசாலை பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் ஆகியவை உட்பட பல தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களும் உள்ளடங்கும். இத்தகைய ஒவ்வொரு விடயத்திலும், போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் முடக்கப்பட்டன மற்றும் ஜனநாயகக் கட்சிக்குள் திருப்பிவிடப்பட்டன.

இவற்றிலிருந்து எடுக்க வேண்டிய மைய படிப்பினைகள் என்ன? முதலில், இராணுவ-உளவுத்துறை கூட்டணியோடு ஒபாமா நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு கருவியாக உள்ளது, மற்றும் பெரும்பான்மை மக்களிடமிருந்து சமூக செல்வவளத்தை பெரும் பணக்காரர்களுக்கு கை மாற்றுவதில் அதன் அனைத்து முயற்சிகளையும் ஒன்றுகுவித்துள்ளது.

பங்குச்சந்தையின் செழிப்பானது நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளது என்பதற்கான ஓர் அறிகுறி அல்ல: அது அதிலிருந்து வெகு தொலைவில் நிற்கிறது. அது முதலாளித்துவ அமைப்புமுறை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு அரசாங்கம் மற்றும் பெடரல் ரிசர்வ்விடம் தீர்வு இல்லை என்ற உண்மையின் ஒரு வெளிப்பாடாகும்.

முதலாளித்துவ அமைப்புமுறையே அடிப்படைப் பிரச்சினையாகும். தொழிலாள வர்க்கம் ஜனநாயக கட்சிக்கு அதன் அரசியல் அடிபணிவை முடிவுக்கு கொண்டு வந்து, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய பெரும் அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப போராட வேண்டும். அதுபோன்றவொரு இயக்கம், வோல் ஸ்ட்ரீட் காசினோ மூடப்பட வேண்டும், மற்றும் மக்களிடமிருந்து திருடப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் திருப்பி அளிக்கப்பட வேண்டும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், மற்றும் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகம் மறுஒழுங்கமைப்பு செய்யப்பட வேண்டுமென கோர வேண்டும்.