சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China announces “air defence identification zone” in East China Sea

கிழக்கு சீனக்கடலில் “வான்பாதுகாப்பு அடையாளப்பகுதியை” சீனா அறிவிக்கிறது

By John Chan 
25 November 2013

Use this version to printSend feedback

ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் அழுத்தங்களை அதிகரித்துள்ள நடவடிக்கையில் சீன பாதுகாப்பு அமைச்சரகம் வார இறுதியில் “வான் பாதுகாப்பு அடையாள பிராந்தியத்தை” (ADIZ) ஏற்படுத்துவது குறித்து அறிவித்துள்ளது. இது கிழக்கு சீனக் கடலில் பெரும்பகுதியை உள்ளடக்குவதுடன், இதில் டயோயு/சென்காகு தீவுகளும் அடங்கும். இத்தீவுகள் பெய்ஜிங் இற்கும் டோக்கியோவிற்கு இடையே கடுமையான மோதலின் மையத்தில் உள்ளன.

சீனா அறிவித்துள்ள வான் பாதுகாப்பு பிராந்தியம் ஜப்பானின் சொந்த வான் பாதுகாப்பு அடையாள பிராந்தியத்தை மீறுகின்றது. சீன நடவடிக்கையை ஒபாமா நிர்வாகம் உடனே குறைகூறி அமெரிக்கா சீனாவின் பிராந்தியத்தை கவனத்திற்கெடுக்காது என்று குறிப்பிட்டுள்ளது. வாஷிங்டன் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே பிரச்சினைக்கு உட்பட்ட கிழக்கு சீனக் கடலில் போர் மூண்டால் அமெரிக்க ஜப்பானியப் பாதுகாப்பு உடன்படிக்கை பிரயோகிக்கப்படும் என்று வலியுறுத்தியுள்ளது.

சீன அறிவிப்பின் வெடிப்புத்தன்மையான தாக்கங்களின் சாத்தியப்பாட்டை அடிக்கோடிடும் வகையில், சீன விமானப் படை முன்கூட்டிய எச்சரிக்கை விமானம் மற்றும் போர் விமானங்களை பாதுகாப்புப் பகுதிக்கு அனுப்பி வைத்தது. இது ஜப்பானை அதன் F15 போர் விமானங்களை அனுப்பி வைக்கத் தூண்டியது.

வான் பாதுகாப்பு பிராந்தியத்தினுள் நுழையும் எந்த விமானமும் சீன விமானப்படைக்கும் வான்பாதுகாப்பு அமைப்பு முறைக்கும் எச்சரிக்கை கொடுக்கும். சீனப்பாதுகாப்பு அமைச்சரகத்தின் அறிக்கையின்படி, விமானங்கள் தங்கள் பயண பாதைகளையும் எந்த நாட்டை சேர்ந்தவை என்பதையும் குறிப்பிட வேண்டும், வானொலித் தொடர்பில் இருக்க வேண்டும். “அடையாளத்தை கொடுக்க  ஒத்துழைக்க மறுக்கும் விமானங்களையும் அதேபோல் தம் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் விமானங்களுக்கும் சீனாவின் ஆயுதப்படைகள் பாதுகாப்பு அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் பதிலளிக்கும்.”

இந்த நடவடிக்கை, சீன இராணுவம் செய்தி ஊடகத்திற்கு கருத்தைக் கசிய விட்டு இரண்டு வாரங்களுக்குள் வந்துள்ளது. இது ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னுரிமை வழங்குதல்” என்பதால் நடைமுறைக்கு வந்துள்ள பிராந்தியத்தில் இராணுவ அழுத்தங்களின் அதிகரிப்பிற்கு ஒரு விடையிறுப்பு ஆகும். அது இராஜதந்திர, இராணுவ முறையில் சீனாவை தனிமைப்படுத்தி சூழ்ந்து கொள்ளும் நோக்கத்தை மையமாகக் கொண்டுள்ளதுடன், கிழக்கு, தெற்கு ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கம் இருப்பதைச் சவால்விடும் நோக்கத்தை தடுக்க முயல்வதாகும். “முன்னுரிமையின்” முக்கிய கூறுபாடு ஜப்பான் மீண்டும் இராணுவமயமாதலுக்கு ஆதரவு கொடுப்பதாகும்.

சீன விரோத மூலோபாயத்தின் பகுதியாக வாஷிங்டன் கிழக்கு சீனா, தென் சீனக் கடல்களில் சீனாவிற்கும் அண்டை நாடுகளான ஜப்பான் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்றவற்றிற்கும் இடையே நீண்டகாலமாக இருக்கும் நிலப்பகுதி மோதல்களைத் தூண்டிவிடுகிறது.

சில காலமாக ஜப்பான் அதன் சொந்த வான் பாதுகாப்பு பிராந்தியத்தை தனது பகுதியில் கொண்டுள்ளது. இது சீன விமானங்கள் சர்வதேச வான் பகுதியில் ஓகினாவா தீவுக் கூட்டத்திற்கு அண்மையில் பறப்பதற்கு எதிராக ஜப்பானிய போர் விமானங்கள் அடிக்கடி பறப்பதில் முடிந்துள்ளது. பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் ஜப்பானிய அரசாங்கம் சீன டிரோன்களை சுட்டு வீழ்த்துவதாகக்கூட அச்சுறுத்தியுள்ளது. இது பெய்ஜிங்கை அத்தகைய போக்கு “போர் நடவடிக்கை” எனக் கருதப்படும் என்ற எச்சரிக்கைகளை விடுக்கச் செய்துள்ளது.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சரகம் ஓர் அறிக்கையில், சீன வான் பாதுகாப்பு பிராந்தியத்தை “முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல, மிகவும் வருந்தத் தக்கது, வான்வழி சென்காகு தீவுகள் மீது ஜப்பானிய நிலப்பகுதி அடங்கியுள்ளது, இத்தீவுகள் ஜப்பானின் இயல்பான நிலப்பகுதிகள்” என்று அறிவித்துள்ளது. அறிக்கை தொடர்கிறது: “ஒருதலைப்பட்சமாக இத்தகைய வான்பகுதியை நிறுவுதல், அப்பகுதியில் விமானங்கள் செல்லுவதை தடைக்கு உட்படுத்துதல் மிக ஆபத்தானது. இது இப்பகுதியில் தவறான கணக்கீட்டிற்கு வகை செய்யும்.” ஜப்பான் சீனாவிடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதை பெய்ஜிங் உடனே நிராகரித்தது.

ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜப்பான் ஓகினாவா பிராந்தியத்தில் பெரியளவிலான இராணுவப் பயிற்சியை முடித்தது. இதில் தரைத்தளம் உடைய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் 350 போர்விமானங்களும் சீனக் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்துவது போல் பயிற்சி பெற்றன. இதற்கு இரு வாரங்களுக்கு முன் ஒரு முக்கிய சீனக் கடற்படை பயிற்சி இதே பிராந்தியத்தில் “மொபைல் 5” என்ற பெயரில் “முதல் தீவுகூட்டத்தை” -First Island Chain,- ஊடுருவல் என்பதைப் போல் நடத்தியது. இது ஜப்பானில் இருந்து ஓகினாவா வரை, தைவான், பிலிப்பைன்ஸ் வரை படர்ந்துள்ளது. இப்பயிற்சியில் ஆள்கடலில் ஒரு எதிராளி கடற்படைக்கு எதிராக கடல் உத்திநடவடிக்கைகளும் இருந்தன.

அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி சனிக்கிழமை அன்று சீன வான் பாதுகாப்பு பிராந்தியம் நிறுவப்படுவதைக் கண்டித்து, “அமெரிக்கா சீனாவின் அறிவிப்பான “கிழக்கு சீன  வான் பாதுகாப்பு அடையாளப்பகுதி” நிறுவியுள்ளதைப் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் “பறக்கும் சுதந்திரத்தையும்” “கடலில் பயணிக்கும் உரிமையையும் கொண்டுள்ளன” என்றார். இது நடைமுறையில் சீனாவின் நீர்ப்பகுதி மற்றும் வான்வெளிக்கு சற்று வெளியே போர்க்கப்பல்கள் அல்லது விமானங்கள் வெளியே நிலை கொள்ள செய்யும்.

சீனா அதன் அச்சுறுத்தலான அடையாளம் கூறாத விமானங்களுக்கு அல்லது பெய்ஜிங் உத்தரவுகளுக்குப் பணியாதவற்றிற்கு எதிராக நடவடிக்கை என்பதை செயல்படுத்தக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.” கெர்ரி தொடர்ந்தார். “மேலாக வானில் பறப்பது மற்றும் சர்வதேச சட்டப்படி கடல், வான்பகுதியை பயன்படுத்தும் சுதந்திரம் பசுபிக்கின் செழிப்பு, உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு அடிப்படையாகும்.” என்றார்.

இராணுவத்துடன் நெருக்க பிணைப்புக்கள் கொண்ட சீன ஜனதிபதி ஜி ஜின்பிங், சமீபமாதங்களில் சீனப் படைகள் இதே உரிமையை ஜப்பானில் “பறக்கும் சுதந்திரத்திற்கும்” பொருத்தமாக்க வேண்டும், கிழக்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு அருகே உள்ள பிராந்தியங்களிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்றார். சீன இராணுவ விமானங்கள் மேற்கு பசிபிக்கில் நுழைய ஓகினாவா தீவுக்கூட்டத்திற்கு அருகில் இருக்கும் சர்வதேச வான் பகுதியை அடிக்கடி பயன்படுத்துகின்றன.

சீன மின்னணு கண்காணிப்புக் கப்பல்கள் ஹவாய்க்கு அருகே நீர்நிலைகளில் காணப்படுவதாக அறிக்கைகள் வந்துள்ளன. இது முதல் தடவையாக அமெரிக்க பசிபிக் கடற்படையில் இருந்து தகவல்கள் சேகரிக்க எனக் கூறப்படுகிறது.

சீனா இதற்கு முன்பு வான் பாதுகாப்பு பிராந்தியம் ஒன்றைப் பராமரித்தது இல்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் ஜப்பான், தைவான், தென்கொரியா ஆகியவை பல தசாப்தங்களாக அத்தகைய முறைகளைக் கொண்டுள்ளன. ஒரு நவீன விமானப் படையை நிறுவ பெரும் வளங்களை முதலீடு செய்தபின், சீன ஆட்சி இப்பொழுது அத்தகைய வான் பாதுகாப்புப் பிராந்தியம் ஒரு இராணுவத் தேவை எனக் கருதுகிறது.

அதன் Sharp Sword ஸ்டெல்த் டிரோன் குண்டுபோடும் விமானத்தை சோதனைக்குப் பறக்கவிட்ட ஒரு நாளுக்குப்பின் சீனா வான் பகுதியை அறிவித்துள்ளது. இதனூடாக அமெரிக்கா, பிரான்ஸ் பிரித்தானியாவிற்கு பின்னர் அத்தகைய தொழில்நுட்பத்தை வளர்க்கும் நான்காவது நாடு சீனாவாகும்.

சீனாவில் வான் பாதுகாப்பு பிராந்திய அறிவிப்பு குறித்து பென்டகன் ஆக்கிரோஷமாக விடையிறுத்துள்ளது. பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் உத்தியோகபூர்வ நிலைப்பாடான அமெரிக்க ஜப்பான் பாதுகாப்புக் கூட்டணி சென்காகு தீவுகளை கணக்கில் கொண்டுள்ளது என்றார். இதன் உட்குறிப்பு சீனாவுடன் போர் ஏற்பட்டால் அமெரிக்கா இயல்பாக ஜப்பானுடன் சேரும் என்பதாகும். “இப்போக்கு பிராந்தியத்தில் இருக்கும் நிலையை மாற்றும் ஒரு ஸ்திரமற்ற முயற்சி ஆகும்” என்று ஹேகல் பெய்ஜிங்கை எச்சரித்தார்.

தன்னுடைய வான் பாதுகாப்பு பிராந்தியம் குறித்த சீனாவின் விதிகளை அமெரிக்கா பொருட்படுத்தாது என்று ஹேகல் வலியுறுத்தினார். “சீன மக்கள் குடியரசின் இந்த அறிவிப்பு, அமெரிக்கா எப்படி இப்பிராந்தியத்தில் இராணுவ செயற்பாடுகளை நடத்துகிறது என்பதை மாற்றாது” என்றார் அவர்.

அமெரிக்க இராணுவம் ஹேகல் அறிவித்துள்ள அடிப்படையில் நடந்து கொண்டால், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான மோதல்கள் அல்லது நேரடிப் போர் ஏற்படுவதற்கான ஆபத்துக்களை அதிகரிக்கும்.