சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈரான்

Interim agreement reached on Iran’s nuclear programs

ஈரானின் அணுசக்தித் திட்டங்களில் இடைக்கால உடன்பாடு ஏற்பட்டது

By Peter Symonds 
25 November 2013

Use this version to printSend feedback

ஜெனீவாவில் நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப்பின், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து ஓர் இடைக்கால உடன்பாடு ஞாயிறு அதிகாலை அடையப்பட்டது; இது நீண்ட காலத்திற்கான பேச்சுக்களுக்கும், விரிவான உடன்பாட்டிற்கும் அரங்கு அமைக்கிறது.

ஈரானுக்கும் P5+1 குழுவிற்கும் (அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி) இடையேயேன முந்தைய சுற்றுப் பேச்சுக்கள் இம்மாதம் முன்னதாக உடன்பாடு இல்லாமல் முறிவுற்ற பின்னர் கடந்த புதனன்று ஜெனீவாவில் மீண்டும் தொடங்கின. அமெரிக்க காங்கிரஸ் மேலும் பேச்சுவார்த்தைகளை தகர்க்கக்கூடிய வகையில்  ஈரான் மீது புதிய தண்டனை அளிக்கும் தடைகளைச் சுமத்துவதாக அச்சுறுத்துகையில், உடன்பாடு அனைத்து ஈரானிய திட்டங்களையும் தேக்க வைத்து, ஊடுருவும் சோதனைகளுக்கு அனுமதிக்கிறது, இதற்குப் பதிலாக தற்போதுள்ள முடக்கிவிடும் பொருளாதார தடைகளில் இருந்து குறைந்தப்பட்ச நிவாரணம் ஆட்சிக்கு கிடைக்கும்.

அடுத்த 6 மாதகால பேச்சுக்களின் போது நடைமுறையில் இருக்கும் உடன்பாட்டின் அடிப்படையின்கீழ் ஈரான் கீழ்க்கண்டவாறு உறுதியளித்துள்ளது:

* இது அதன் புஷெர் மின் உற்பத்தி உலைக்கூட எரிபொருளுக்கு தேவையான 5 சதவிகித யுரேனிய செறிவூட்டல் தரத்திற்கு தாண்டாமல் பார்த்துக் கொள்ளும், மற்றும் பொருளின் கையிருப்பு அதிகரிக்கப்பட முடியாது.

* இருக்கும் சேமிப்பான 20 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம், மேலும் செறிவூட்டலுக்கு பயன்படுத்தப்பட முடியாது, தெஹ்ரான் ஆய்வு உலைக்கூடத்திற்கு எரிபொருளாக மாற்றப்படும் அல்லது அது 5 சதவிகிதம் அளவிற்கு நீர்த்துவிடப்படும். 90 சதவிகித அடர்த்தி ஆயுதங்கள் தர யுரேனியம் தயாரிக்க தேவையாகும்.

* அதன் தற்போதைய செறிவூட்டல் திறனை தேக்கிவைக்கும்; கூடுதல் எரிவாயு மையநீக்கிகள் நிறுவப்படமாட்டாது; இதையொட்டி இருக்கும் 16,000 மையநீக்கிகளில் பாதிக்கு மேல் செயல்பட முடியாதவை ஆகிவிடும்.

* Arak கன நீர் உலைக்கூடப்பணி நிறுத்தப்படும்; இது முழுமை அடைந்திருந்தால் அணுவாயுதத்திற்குத் தேவையான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கும்.

* மிக ஊடுருவும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் ஆய்வு (IAEA) ஏற்கப்பட்டு, நடைமுறைக்கு வரும்; எப்போதும் கூடுதல் கண்காணிப்பு, அனைத்து இருக்கும் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள நிலையங்கள் பற்றிய விரிவான தகவல்கள், அன்றாடம் முக்கிய அணுசக்தி நிலையங்களுக்கு செல்லுதல், யுரேனியச் சுரங்கங்களில், ஆலைகளில் மையநீக்கிப் பணிக்கூடங்களில் ஆய்வு நடத்துதல் ஆகியவை நடைபெறும்.

ஈரான் இதற்கு ஈடாக மிகவும் குறைந்ததைத்தான் பெற்றது என்பதை வலியுறுத்த வாஷிங்டன் பெருமுயற்சி எடுத்தது. நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா “நிதானமான நிவாரணத்திற்கு ஒப்புக் கொண்டது, அதே நேரத்தில் நம் கடுமையான தடைகளைத் தொடர்வோம்” என்று அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்க தலைமையிலான பொருளாதார தடைகள், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதியாக்கியுள்ளன மற்றும் சர்வதேச வங்கி, நிதிய முறையில் இருந்து கிட்டத்தட்ட நாட்டை முடக்கிவிட்டது. இது, உயர் பணவீக்க விகிதம், உயரும் வேலையின்மை மற்றும் மக்களுக்கு பொருளாதார பேரிடர்களையும் உருவாக்கியுள்ளது.

இடைக்கால உடன்பாட்டின்கீழ் ஈரான், சர்வதேச வங்கிக் கணக்குகளில் உள்ள அதன் சொந்த சொத்துக்களில் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் டாலர்களை படிப்படியாக அணுகமுடியும். அது பெட்ரோகெமிக்கல்ஸ், தங்கம், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் விமானப் பகுதிகளில் வணிகம் நடத்த முடியும். தடைகள், உணவு மற்றும் முக்கிய மருத்துவ பொருட்கள் இறக்குமதியை தாக்கியுள்ளன என்ற மறைமுகமான ஒப்புதலுடன், உன்பாடு மனிதாபிமான வணிகம் எனப்படுவதற்கு வசதி அளிக்கிறது. சலுகைகளின் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொருள்விளக்கங்களில் வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன. இது உடன்பாடு செயல்படுவது முறியலாம் என்னும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ருஹானி உடன்பாடு முதல்தடவையாக நாட்டின் யுரேனிய செறிவூட்டல் உரிமையைஒப்புக் கொண்டுள்ளது என்றார். இக்கூற்றை அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி கடுமையாக மறுத்தார்.

அடுத்த ஆறு மாதங்களில் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி ஈரான் மீது இன்னும் பெரிய சலுகைகளுக்கு அழுத்தம் கொடுக்கும்—இது அணுத் திட்டங்களை கணிசமாக குறைக்க வேண்டும் என்று மட்டுமில்லாமல் பிற பொருளாதார, மூலோபாய பிரச்சினைகளிலும் வரும்; அதில் சிரியாவில் போரும் அடங்கும். நேற்று ஒபாமா ஈரான் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால் “நாம் நிவாரணத்தை நிறுத்தி அழுத்தத்தை அதிகரிப்போம்.” என்றார். குறிப்பான இராணுவ அச்சுறுத்தலைக் கூறவில்லை என்றாலும். ஒபாமா எப்படியும் தலைமைத் தளபதி என்னும் முறையில் “ஈரான் அணுவாயுதம் பெறுவதைத் தடுக்க தேவையானதை நான் செய்வேன்” என்றார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தெனியாகு நேற்று உடன்பாட்டைக் கண்டித்து, இது “ஒரு வரலாற்று உடன்பாடு அல்ல” “வரலாற்றுத் தவறு” என கண்டித்தார்அவர், ஒரு கணிசமான நடவடிக்கை எடுக்க வேண்டும்,உலகில் மிக ஆபத்தான ஆட்சி”  “உலகின் மிக ஆபத்தான ஆயுதத்தைப்பெற அனுமதிக்கிறது” என்றார். இஸ்ரேல் ஏற்கனவே அணுவாயுதக்கிடங்கைக் கொண்டிருப்பது மட்டும் இல்லமால், மத்திய கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு நீண்ட கால வரலாற்று சான்றையும் கொண்டுள்ளது.

மந்திரிசபைக் கூட்டத்திற்கு பின் நெத்தெனியாகு இஸ்ரேல் உடன்பாட்டின் படி நடந்து கொள்ளாது, “எந்த அச்சுறுத்தலையும் எதிர்த்து, தானாகவே, தன்னைக்காத்துக் கொள்ளும் கடமை உள்ளது” என அறிவித்தார். பிரதம மந்திரி பலமுறை ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து எச்சரித்துள்ளார். வெளியுறவு மந்திரி அவிக்டனர் லைபர்மன் கூறினார்: “நாம் சில முடிவுளை எடுக்கப்போகிறோம் என்பது வெளிப்படை, அனைத்து விருப்புரிமைகளும் மேசை மேல் உள்ளன.”

உடன்பாடு குறித்து நேற்று சௌதி அரேபியா கல்போல உத்தியோகபூர்வ மௌனம் காத்தது. ஆனால் கடந்த வெள்ளியன்று பிரித்தானியாவிற்கான சௌதியின் தூதர் இளவரசர் மகம்மத் பின் நவப்பின் அப்துல் அஜிஸ், ரியாத்சோம்பேறி போல் உட்கார்ந்திராது... நம் நாட்டையும், பிராந்தியத்தையும் சிறந்த வழியில் எப்படி பாதுகாக்க முடியும் என்பது பற்றி தீவிரமாக சிந்திக்கும்” என்று எச்சரித்தார்.

ஒபாமா நிர்வாகம் அமெரிக்க காங்கிரசிலும் எதிர்ப்பை முகங்கொடுக்கிறது. ஜனநாயகக் கட்சியின் செனட் வெளிவிவகார உறவுகள் குழுவின் தலைவர் பாப் மெனெண்டெஸ்,பேச்சுக்கள் பிறழ்ந்தாலோ ஈரான் இடைக்கால உடன்படிக்கையை மீறினாலோ” தான் சக ஊழியர்களுடன் ஒத்துழைத்து, ஈரானுக்கு எதிரான கடுமையான தடைகளை உறுதி செய்ய தயாராக இருப்பேன் என்றார்.

ஆனால் ஜனநாயகக் கட்சி செனட்டர் சக் ஷ்யூமர் “ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒன்றாகச் சேர்ந்து கூடுதல் தடைகளை டிசம்பரில் சந்திக்கும்போது இயற்றுவோம்” என்றார்.இத்தகைய நடவடிக்கை உடன்பாட்டையே இல்லாமல் போகச் செய்துவிடும்.

எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, உள்நாட்டு மற்றும் மத்திய கிழக்கு நட்பு நாடுகளிடம் இருந்து, ஒபாமா நிர்வாகம் தெஹ்ரானுடன் விரிவான உடன்பாட்டிற்கு நகர்கிறது. வாஷிங்டனுடைய பிரதான அக்கறை, ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் அல்ல, ஆனால் ஈரானின் பாரிய எண்ணெய், எரிவாயு இருப்புக்களை அமெரிக்கா அணுக மற்றும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் தனது மேலாதிக்க பாத்திரத்தை உறுதி செய்ய தெஹ்ரானை உதவ வைப்பதுதான்.

முதலாளித்துவ ஈரானிய ஆட்சி, முன்பு 1979 ஈரானியப் புரட்சியில் இருந்து வாஷிங்டனுடன் இருந்துவந்த மோதலை நிறுத்த ஓர் உடன்பாட்டிற்கு தயார் என அதன் விருப்பத்தை தெரிவித்திருந்தது. 2003ல் தற்போதைய ஈரானிய வெளியுறவு மந்திரி ஜவாட் சரீஃப் அமெரிக்காவுடன் “ஒரு பெரும் பேரத்திற்கு” ஆன வரைவில் ஈடுபட்டிருந்தார்; ஆனால் புஷ் நிர்வாகம் அதை புறக்கணித்துவிட்டது. 2003 ல் இருந்து 2005க்குள் அமெரிக்கா, ஈரானுக்கும் EU3 எனப்படும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனிக்கும் இடையே நடத்த பேச்சுக்களையும் திறம்பட சேதப்படுத்தியது. அப்பொழுது ஈரான் யுரேனிய செறிவூட்டலை நிறுத்திவைத்து அனைத்து IAEA ஆய்வுகளையும் அனுமதித்திருந்தது.

ஆனால் ஒபாமா நிர்வாகம், குறிப்பாக ஹாசன் ருஹானி ஜனாதிபதியாக ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஈரானுடன் சமரசத்திற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறது. அவர் ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுடன் இணைந்து அமெரிக்காவுடன் அழுத்தங்களைக் குறைக்க முற்படுகிறார்; EU 3 உடனான முந்தைய பேச்சுக்களில் அவர்தான் நாட்டின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக இருந்தார்.

வார இறுதியில் அசோசியேட்டட் பிரஸ் கட்டுரை ஒன்று இந்த ஆண்டு உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள், வெளிவிவகார செயலர் கெர்ரி, துணை வெளிவிவகார செயலர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் ஈரானியப் பிரதிநிதிகளிடம் உட்பட நடத்திய இரகசிய பேச்சுக்களை விவரித்திருந்தது. ஓமானின் சுல்தான் க்வாபூஸ் இன் இடைத்தரகு ஏற்பாட்டில், மார்ச் தொடங்கி, குறைந்தப்பட்சம் ஐந்து திருட்டுத்தனமான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன, இவை வெறுமனே ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி சிரிய போர் உட்பட, பல பிரச்சினைகளை விவாதித்திருந்தன.

இக்கூட்டங்கள் மற்ற P5+1 குழு உறுப்பு நாடுகளிடம் இருந்து இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன, செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுமன்றக் கூட்டம் வரை இஸ்ரேலிடம் இருந்தும் கூட. அடுத்த நாள் ஒபாமா, நெத்தெனியாகுவிடம் இரகசிய  விவாதங்களைப்பற்றிக் கூறியபின், இஸ்ரேலிய பிரதமர் ஐ.நா. பொது மன்றத்தில் தன் உரையில் ருஹானியை “ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்” என்று கண்டித்தார்.

ருஹானி மற்றும் நேற்றைய ஜெனீவா ஒப்பந்தம் பற்றிய நெத்தெனியாகுவின் கடுமையான விமர்சனத்திற்கு பின்னால், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே குறைந்தப்பட்ச உன்பாடு கூட மத்திய கிழக்கில் மூலோபாய உறவுகளை மாற்றும், இது இஸ்ரேல் இன்னும் பிற அமெரிக்க நட்பு நாடுகளின் நிலைமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அவற்றின் பிராந்திய போட்டி நாடான ஈரானுக்கு நலன் தரும் என்ற அச்சம் உள்ளது.