சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Crackdown on Golden Dawn in Greece

கிரேக்கத்தில் கோல்டன் டோன் மீதான நடவடிக்கை

By Christoph Dreier 
30 September 2013

Use this version to printSend feedback

கடந்த வார இறுதியில், கிரேக்க அரசாங்கம், பாசிச கோல்டன் டோன் கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுத்தது; 1974ம் ஆண்டு இராணுவ சர்வாதிகாரம் முடிவுற்றபின், ஓர் அரசியல் கட்சிக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

கோல்டன் டோனுடைய 18 முக்கிய உறுப்பினர்கள், கட்சித் தலைவர் நிகோஸ் மிஷேல்லோலியாகோஸ் உட்பட, கைது செய்யப்பட்ட குற்றம்சார்ந்த அமைப்பை நிறுவியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். மிஷேல்லோலியாகோஸ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முன்று சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; அதைத்தவிர 40,000  யூரோக்கள் ரொக்கமும் ($54,000) பறிமுதல் செய்யப்பட்டது. முப்பது பிற கோல்டன் டோன் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.

இக்குற்றச்சாட்டுக்கள், பாசிச எதிர்ப்பு நவீன இசைக்கலைஞர் பாவ்லோஸ் பைசஸ் ஒரு கோல்டன் டோன் குண்டரால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வந்துள்ளன. பாசிஸ்டுகளுடன் தங்கள் ஒத்துழைப்பை கொண்டிருந்ததால் இரண்டு உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து இராஜனாமா செய்துள்ளனர், மற்றவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அல்லது பிற பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அன்றே, உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கட்சிகளுக்கு அரச நிதியளிப்பதை நிறுத்தும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

கோல்டன் டோனுடைய 18 பாராளுமன்ற பிரதிநிதிகளும் மொத்தமாக இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர்; இது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய தேர்தல்களை தூண்டி அரசியல் அழுத்தங்களையும் அதிகரிக்கும். நூற்றுக்கணக்கான கோல்டன் டோன் ஆதரவாளர்கள் கட்சி அலுவகங்களில் கூடி சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பாசிஸ்ட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கும், நல்ல தொடர்புடைய KEED எனப்படும், உயரடுக்கு வீரர்கள்  ரிசேர்வ் படைச் சங்கம், உட்குறிப்பாக கடந்த புதனன்று ஒரு இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தது.

கோல்டன் டோனுக்கு எதிரான நடவடிக்கை, ஒரு ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலே நடைபெறுகிறது. பைசஸ் மரணத்திற்குப்பின் கோல்டன் டோன் மீது ஆழ்ந்த மக்கள் சீற்றமுள்ள நிலையில் அரசாங்கம், மக்கள் எதிர்ப்பை மீறி, ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள பெருகிய முறையிலான வெட்டுக்களையும், பெரும் பணிநீக்கங்களையும் செயல்படுத்த முடியாதுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் பாசிச அச்சுறுத்தல் மற்றும் சமூக தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அனைத்து நிர்வாக ஊழியர்களில் 37% அகற்றப்பட்டதை எதிர்த்து ஒன்பது பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுவிட்டன. பள்ளி மாணவர்கள் 200 பள்ளிகளை ஆக்கிரமித்துள்ளனர். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களைக் கட்டுப்படுத்தவோ அவற்றை விற்றுவிடுவதையோ கடினம் எனக் காண்கின்றனர்.

சனிக்கிழமையன்று கிரேக்க நாளேடான Kathimerini கிரேக்கத்தில் பெரும்பாலான மேயர்கள் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, தங்களுடைய வரவு-செலவுத் திட்டங்களை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்ப மறுக்கின்றனர் எனத் தெரிவிக்கிறது.

இன்னும் அதிக சிக்கன நடவடிக்கைகள் எடுக்கவும் பணிநீக்கங்களை வலியுறுத்தவும், ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகிய முக்கூட்டுதற்பொழுது மீண்டும் ஏதென்ஸிற்கு வந்துள்ளன. ஆளும் வட்டங்களில் சமூகநல வெட்டுக்களுக்கு எதிர்ப்பும் பாசிச வன்முறைக்கு எதிர்ப்பும் புரட்சிகர உட்குறிப்புக்களைக் கொள்ளும் என்னும் அச்சம் பெருகிக் கொண்டிருக்கிறது.

ஆளும் உயரடுக்கிற்குள் கோல்டன் டோனின் நடவடிக்கைகளை, நிலைமையை அமைதிப்படுத்த கட்டுப்படுத்துவதா என்ற விவாதம் நடைபெறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கோல்டன் டோனை நிதி கொடுத்து உருவாக்கிய, இராணுவம் மற்றும் பொலிசின் சில பிரிவுகள், இப்பொழுது இராணுவ ரீதியான ஆட்சி மாற்றத்தைப் பற்றி விவாதிக்கின்றன.

மற்றொரு பிரிவு, வெளிப்படையாக பாசிஸ்ட்டுக்களை இப்பொழுது பயன்படுத்துவதால் வரும் நிலைமை உறுதியின்மையின் இடரைப் பற்றிக் கவலைப்படுகிறது. பைசஸ் கொலைக்குப் பின் வந்த வெகுஜன எதிர்ப்புக்கள் கோல்டன் டோனுடன் வெளிப்படையான உடன்பாடு சமூக மோதல்களை தீவிரப்படுத்தும் என்று குறிப்புக் காட்டுகின்றன.

எனவே, கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகக் கட்சி (ND) பாதுகாப்பு மந்திரி நிக்கோஸ் டென்டியஸ் கூறியுள்ளபடி, அரசாங்கம் கோல்டன் டோனை கட்டுப்படுத்தமுடிவு எடுத்தது. குறைந்தபட்சம் தற்போதைக்கேனும், சில முக்கிய நபர்கள் சிறையில் தள்ளப்படுவர். பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பணிகளிலுள்ள பரந்த வலையமைப்புகளின் முக்கிய அதிகாரிகள் கோல்டன் டோனுக்கிற்கு காட்டும் பரிவுணர்வு தொடரும் என்றாலும்கூட.

இச் சூழ்ச்சிக்கையாளல்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுடன் தொடர்பு எதையும் கொண்டிருக்கவில்லை. மாறாக அரசு, கோல்டன் டோனுக்கு எதிராக கட்சியின் மீது ஒருவேளை வரக்கூடிய தடை உட்பட நடக்கும் நடவடிக்கைகளை முன்னோடியாக கொண்டு முழு சனத்தொகை மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை முடுக்கிவிடத் தயாரிப்புக்களை நடத்தும்.

ND  உடைய பிரதிநிதிகள் பல முறை அரச நடவடிக்கை இரு தீவிர முனைகளுக்கும்எதிராக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்; அதாவது இது இறுதியில் இடது சாரி அமைப்புக்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும்.

பல பாசிச விரோத ஆர்ப்பாட்டங்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டன அல்லது பொலிசாரால் சமீபத்திய வாரங்களில் தடைக்கு உட்பட்டன.

ஆளும் வர்க்கம், தொழிலாளர்களின் சமூக எதிர்ப்பை அடக்க அரச அடக்குமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கியத்தைக் கொண்டுள்ளது. வேலைநிறுத்தத்திலுள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே இராணுவச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டு, வேலையை கட்டாயமாக பொலிஸ் வன்முறை மூலம் இந்த ஆண்டு மூன்று முறை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். கூடும் உரிமை தடைக்கு உட்படுதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் ஆகியவைகள் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகும்.

மிகப் பெரிய எதிர்க் கட்சியான சிரிசா (தீவிர இடது கூட்டணி) நிலைமையை உறுதிப்படுத்த முற்படுவதில் மையப் பங்கைக் கொண்டுள்ளது; நடைமுறையில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கிறது. கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்து அரச கடன்கள் வங்கிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று உறுதிமொழி கொடுத்துள்ளது; அதே நேரத்தில் கிரேக்கத்தின் பிணை எடுப்பு விதிமுறைகள் மறு பேச்சுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

கோல்டன் டோனுக்கு எதிரான அரச நடவடிக்கைக்கு விடையிறுக்கும் வகையில் கட்சி தன்னை அரசக் கருவி மற்றும் அரசாங்கத்திற்குப் பின் நிறுத்தியுள்ளது. தொலைக் காட்சியான SKAI க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ், பொலிசை அதனுடைய கோல்டன் டோனுடனான உறவுகளுக்கு, ஒரு ஜனநாயக சக்தி என்று பாராட்டினார்.

இத்தலையீடு நம்முடைய ஜனநாயகம் உறுதியாகவும் ஆரோக்கியமாகவுமுள்ளது என்பதைக் காட்டுகிறதுஎன்று அவர் கூறினார். சிலர் நம்மை 1960 களுக்கு பின்தள்ள முயன்றாலும், எதிர்ப்பு இதைத் தடுத்துவிடும்.

புதிய ஜனநாயகத்திற்கு தன்னுடைய முறையீட்டை புதுப்பித்து சிரிசாவுடன் அமர்ந்து கோல்டன் டோனுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று சிப்ரஸ் கூறியுள்ளார்.

இக்கட்சி, ஏற்கனவே உறுதிப்பாட்டிற்குஒரு சக்தியாக தன்னைக் காட்டிக் கொண்டு, சிக்கன நடவடிக்கைகளை சுமத்த உதவியாக இருப்பதற்கு அரசாங்கத்தில் சேரத்தயார் என்று குறிப்புக் காட்டியுள்ளது. சிரிசாவுடன் ஈடுபாடு கொண்டுள்ள அரசாங்கம் சமூகத் தாக்குதல்களை தொடரும், தொழிலாள வர்க்கத்தின் மீதான அரச தாக்குதல்களையும் செயல்படுத்தும். இது இன்னும் மிருகத்தன சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு மாற உதவும்.

தங்களுடைய சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, அரசியல் நிகழ்வுகளில் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரச கருவிகளிடமிருந்து சுயாதீனமாக செயற்பட தொழிலாளர்கள் தலையிட வேண்டும். தங்களுடைய சொந்த வழிமுறைகளில் பாசிஸ்ட்டுக்களையும் அரசாங்கத்தின் தாக்குதல்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். சுயாதீனமான பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பொது வேலைநிறுத்தத்திற்கும் தயாரிப்புக்களையும் செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சிரிசா போன்ற போலி இடது அமைப்புக்கள் உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்தும், தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக இருக்க வேண்டும்; இக்கட்சிகள் தங்களால் முடிந்த அளவிற்கு தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கி அவர்களை அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளுக்கு கீழ்ப்படுத்த முற்படுகிறது.