சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political issues in the struggle against the threat of fascism and dictatorship in Greece

கிரேக்கத்தில் பாசிச, சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

Christoph Dreier
28 September 2013

Use this version to printSend feedback

கடந்த வாரம் இசைக்கலைஞர் பாவ்லோஸ் பைசஸ் பாசிசக் குண்டர்களால் கொலையுண்டது கிரேக்கத்தில் வர்க்க அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் அன்றாடம் தெருக்களுக்கு வந்து பாசிச அச்சுறுத்தல் மற்றும் சமூகநலத் திட்டங்கள், வேலைகள், ஓய்வூதியங்களில் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பரிக்கின்றனர். பொலிசார் வன்முறையுடன் இவற்றை எதிர்கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதோடு, பாசிச கோல்டன் டோன் அமைப்பின் அலுவலகங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கின்றனர். ஆளும் வட்டங்களில், ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு வரக்கூடும் என்பது பற்றிய வெளிப்படையான விவாதங்கள் உள்ளன.

பாசிசமும், சர்வாதிகாரமும் உண்மையான ஜனநாயக, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், நெருக்கடிக்குள் அரசியல் ரீதியாக சுயாதீன சக்தியாக தொழிலாள வர்க்கம் தலையிட்டால்தான் அதைத் தடுக்கமுடியும். அத்தகைய வேலைத்திட்டத்தின் அடிப்படையில்தான், தொழிலாள வர்க்கம் தனக்குப் பின்னே சமூகத்தில் உள்ள ஒடுக்கப்படும் தட்டுக்கள் அனைத்தையும் அணிதிரட்ட முடியும். அத்தகைய இயக்கம், அரசாங்கத்திற்கோ முதலாளித்துவக் கட்சிகளுக்கோ தன்னைத் தாழ்த்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது; அவை இன்னும் ஆக்கிரோஷத்துடன் ஜனநாயக உரிமைகளையும் தொழிலாளர்களின் சமூக நலன்களையும் தாக்குகின்றன. இந்த இயக்கம் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சமூகநலத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு இவற்றுடன் இணைந்தவகையில் முதலாளித்துவத்திற்கு எதிராக இயக்கப்பட வேண்டும்.

பாசிச கும்பல்கள் மற்றும் அவற்றின் போலீஸ் உடந்தையாளர்களிடமிருந்து தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை பாதுகாக்க, புறநகர்ப்பகுதிகளிலும் ஆலைகளிலும் சுய பாதுகாப்பு குழுக்களை அமைப்பதோடு, வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கும் தயார் செய்ய வேண்டும்.

ஹோலோகோஸ்ட் பேரழிவை நிராகரித்து, மாற்றியமைக்கப்பட்ட ஸ்வாஸ்திகாவை தன் அடையாளமாகக் கொண்டுள்ள கோல்டன் டோன், திட்டமிட்டவகையில் ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரச கருவிகளுள் இருக்கும் சக்திகள், அரசியல் நடைமுறை மற்றும் பெரும் வணிகங்கள் இக் கட்சியை நிறுவி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதைத் தலைமை தாங்க விடுகின்றன. பெரும் செல்வந்தர்கள் தட்டினால் நிதியளிக்கப்படும் இக்கட்சி, துணை இராணுவப் பிரிவுகளையும் நிறுவியுள்ளது, இராணுவத்தின் பயிற்சியை பெறுகிறது, பொலிசின் ஆதரவைப் பெறுகிறது.

இதே வட்டங்கள், இப்பொழுது ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவும் திட்டங்களை விவாதிக்கின்றன. புதன் அன்று KEED எனப்படும் கிரேக்க இருப்புவீரர்கள் கூட்டமைப்பு, ஆயுதப் படைகளின் “உத்தரவாதத்தின் கீழ்” “தேசியத் தேவை” அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று கோரியது. இந்த அமைப்பின் கோரிக்கைகள் பெரிதும் கோல்டன் டோனின் கருத்துக்களுடன் இணைந்தவை: அதில் குடியேறியவர்களை நாடு கடத்துதல் மற்றும் கிரேக்கத்தில் இருக்கும் ஜேர்மனிய சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் ஆகியவை அடங்கும்.

இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகளின் நோக்கம், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர்ந்து காட்டும் எதிர்ப்பை நசுக்குவதுதான். கிரேக்கத்தில் வர்க்கப் போராட்டங்கள், ஆளும் வர்க்கம் இனியும் பாரம்பரிய முறையில் சமூகத் தாக்குதல்களை சுமத்த முடியாது என்ற புள்ளியை அடைந்துவிட்டதை குறிக்கிறது. சமீபத்திய முக்கூட்டின் ஆணைகளை —ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி— தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறிச் செயல்படுத்துவதற்கு ஆளும் உயரடுக்கு பெருகிய முறையில் இராணுவம், பொலிஸ் மற்றும் பாசிசக் குண்டர் குழுக்களைத்தான் நம்பியுள்ளது.

ஐரோப்பா மற்றும் சர்வதேசம் முழுவதிலும் அப்பட்டமாக வெளிப்படும் ஒரு வினாவைத்தான் கிரேக்கமும் காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிடம் இருந்தும் அரசியல் ரீதியாக முற்றிலும் முறித்துக் கொண்டு அரசியல் வாழ்வில் தலையிட வேண்டும், பெரு வங்கிகள், பெரு நிறுவனங்களின் சொத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும், தொழிலாளர்களின் அரசாங்கத்தை  நிறுவ வேண்டும் இல்லையேல் ஆளும் வர்க்கம் சமூகத்தை காட்டுமிராண்டித்தனத்திற்குள் தள்ளவிடும். இப்பொழுது உள்ள முக்கியமான வினா, ஒரு அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதுதான்.

இந்த முன்னோக்கை பல போலி இடது குழுக்கள், சிரிசா, KKE எனப்படும் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை எதிர்க்கின்றன. தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து அவை தொழிலாளர்களின் போராட்டங்களை சேதப்படுத்தி அவர்களை ஆளும் வர்க்கத்தின் “ஜனநாயகக்” கட்சிகள் என்பவற்றிற்கு தாழ்த்துகின்றன, முக்கியமாக சமூக  ஜனநாயக PASOK க்கு. அவை, தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக முடக்கி, மிக வலதுசாரிக் கூறுபாடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை தோற்றுவிக்கின்றன. தேசியவாத மற்றும் போலி ஜனரஞ்சக கருத்துக்களைக் கூறி, மத்தியதர வர்க்கத்தின் திகைப்பிலுள்ள அடுக்குகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் சில பிரிவுகளையும் ஈர்க்க முயற்சிக்கின்றன.

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான, வங்கியாளர்களின் சதித்திட்டமான ஐரோப்பிய ஒன்றியத்தை சிரிசா (SYRIZA) ஆதரிக்கிறது, அத்தோடு தன்னை ஆளும் கட்சிகளின் “ஜனநாயக சக்திகளுடன்” “உறுதிப்பாட்டிற்கு” என்றும் காட்டிக்கொள்கிறது: இதில் வலதுசாரி புதிய ஜனநாயகமும் அடங்கும். இது முதலாளித்துவக் கட்சிகளையும் அவை பாதுகாக்கும் முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய சுயாதீன அணிதிரள்வையும் எதிர்க்கிறது. இவ்வகையில் அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது.

சிரிசா (SYRIZA), பைசஸின் கொலைக்கும் அதைத் தொடர்ந்த வெகுஜன எதிர்ப்புக்களுக்கும் விடையிறுக்கையில் தன்னை, இருக்கும் அமைப்புமுறையை காப்பாற்றும் அமைப்பு என்ற நம்பகத்தன்மையை ஆளும் உயரடுக்கிற்கு காட்டிக் கொள்கிறது; அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகார தயாரிப்புக்களை முகங்கொடுக்குமாறு செய்யவும் முற்படுகிறது. வியன்னாவில் ஒரு சமீபத்திய கூட்டத்தில் சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஆயுதப்படைகளும் பொலிசும் “ஜனநாயகத் தன்மை உடையவை, ஜனநாயகத்திற்கு அவற்றால் ஆபத்து ஏதும் இல்லை” என்று அறிவித்தார். சில நாட்களுக்குப்பின், ஒரு இராணுவ ஆட்சிமுறைக்கான திட்டங்களும், கோல்டன் டோனுக்கும் பொலிசுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு குறித்த சான்றுகளும் வெளிப்பட்டன.

கோல்டன் டோன் மீதான அரச தடை, அடிப்படையில் இதே உள்ளடக்கத்தை கொண்டவை. இத்தகைய தடை பாசிஸ்ட்டுக்களை வலுவிழக்கச் செய்யப்போவதில்லை, ஆனால் இறுதியில் அவர்களை வலுப்படுத்திவிடும். நவ-பாசிஸ்ட்டுக்களுடன் ஆழ்ந்த சமரசத்திற்கு உட்பட்டுள்ள அரச கருவிக்கு, இது அரசியல் அமைப்புக்கள், தொழிலாள வர்க்கத்தற்கு எதிராக செயல்படக் கூடுதல் சக்தியைக் கொடுக்கும்.

சிரிசாவின் முக்கிய அக்கறை, கிரேக்க முதலாளித்துவத்தை உறுதிப்படுத்தி, அதன் உறவுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் காப்பதாகும். சிப்ரஸ் சமீபத்தில் ஆளும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து, பாசிஸ்ட்டுக்களுக்கு எதிராக ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் புதிய ஜனநாயகக் கட்சி, கோல்டன் டோனுடன் கணக்கிலடங்கா பிணைப்புக்களைக் கொண்டுள்ளது.

இதேபோன்ற கொள்கைகள்தான் கிரேக்கத்தில் பிற போலி இடது அமைப்புக்களாலும் முன்வைக்கப்படுகின்றன. இவை மத்தியதர வர்க்கத்தின் அதே சலுகை பெற்ற பிரிவுகளுக்காகத்தான் பேசுகின்றன, விவரங்களில்தான் வேறுபாடுகள் உள்ளன. KKE எனப்படும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, பாசிஸ்ட்டுக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் தலைமை தாங்க முடியும் என்ற போலித் தோற்றங்களை தூண்டுகின்றன, ஒரு “மக்கள் முன்னணிக்கு” அழைப்புக்களை விடுத்துள்ளது. அரச முதலாளித்துவ SEK  யும் கோல்டன் டோன் தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்னும் கூக்குரலில் சேர்ந்துள்ளது.

இக்குழுக்கள் அனைத்தும் தொழிற்சங்க அதிகாரத்துவம் போன்ற, குட்டி முதலாளித்துவத்தின் செல்வம் படைத்த தட்டுக்களுக்காக பேசுகின்றன— அவை அரச அடக்குமுறை, பாசிச அச்சுறுத்தலை விட தொழிலாளர்களின் சுயாதீன இயக்கம் குறித்து அதிகம் பயப்படுகின்றன. தொழிலாளர்களின் போராட்டங்களை நாசப்படுத்துதல் அவர்களை அரசாங்கத்திற்கு தாழ்த்துவது என்பதின் மூலம் அவை பாசிச எழுச்சிக்குத்தான் வழிவகுக்கின்றன.

பாசிசம் மற்றும் சர்வாதிகார அச்சறுத்தலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல்  அணிதிரள்வுக்கு, போலி இடது போக்குகளின் பிற்போக்குத்தன பங்கை அம்பலப்படுத்துதல் அவசியப்படுகிறது. இதுதான் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிடம் இருந்தும் தொழிலாள வர்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவவும், தொழிலாளர்களின் சக்தி மற்றும் சோசலிசத்தை வளர்ப்பதற்கும் இன்றியமையாததாக உள்ளது.