சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Socialist Party officials call for drone patrols inside France

சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகள் பிரான்சிற்குள் ஆளில்லா விமான ரோந்துக்கு அழைப்புவிடுகின்றனர்

By Pierre Mabut and Alex Lantier 
3 October 2013

Use this version to printSend feedback

ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) அதிகாரிகள் பிரான்சின் இரண்டாவது பெரிய நகரான மார்சேய் நகரத்திற்குப் பொலிஸ் பாதுகாப்பிற்கு டிரோன்கள் (ஆளில்லா விமானம்) பயன்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை போதைப் பொருள் வருகை அதிகரிப்பதை தடுக்கவும் குற்றக் குழுக்களின் நடவடிக்கைகளை அடக்கவும் தேவை எனக் கூறப்பட்டாலும், PS உடைய பிரெஞ்சு சட்டத்தை செயற்படுத்தும் பிரிவு மற்றும் வலதுசாரி சட்டம் ஒழுங்கு நிறைவேற்றல் இராணுவமயமாக்கப்பட வேண்டும் என்ற பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் இது.

ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலாக வசிக்கும் துறைமுக நகரான மார்சேய் 13.2% வேலையின்மையை எதிர்கொண்டுள்ளது; பிரான்சிலேயே மிகவும் குறைந்த அளவில்தான் உயர்கல்வி தகமைச் சான்றுகளை கொண்டுள்ளது.

Bouches-du-Rhône மாகாண பொலிஸ் துறைத் தலைவரும் Préfet யுமான Jean-Paul Bonnetain, முதலில் செப்டம்பர் 9 நடந்த வட்டமேசை மாநாட்டில் டிரோன்கள் பயன்பாடு குறித்த வாய்ப்புக்களை எழுப்பினார். அவர் நகரத்தின் வறிய வட பகுதிகளில் போதைப் பொருள் குறித்த குற்றங்களில் கவனக் குவிப்புக்காட்டினார். அவருடைய உதவியாளர்கள் டிரோன்கள் “நீண்டக்கால கண்காணிப்பிற்கும், மற்றும் அசாதாரண மார்சேய் புறநகர் நிலப்பகுதி அமைப்புக்களில் சில விசாரணைகளுக்கும் பயனுடையதாக இருக்கும்” என்றனர்.

PS வேட்பாளராக மார்சேய் மேயர் பதவிக்கு போட்டியிடக்கூடிய Eugène Caselli, உடனடியாக திட்டத்தைப் பற்றிக் கொண்டார். ஆனால், “அரசு, மார்சேயை குற்றத்திற்கு எதிரான உண்மையான சோதனைக் கூடமாக, புதிய தொழில்நுட்ப சாதனங்கள் கூடிய சோதனைக் கூடமாக செய்ய வேண்டும். இப்பொழுது நம்மிடம் 7 டிரோன்கள் உள்ளன, நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்” என்றார் அவர்.

பிரான்சிலுள்ள நிலைமையை தூண்டும் வகையில் மெக்சிக்கோவுடன் அவர் ஒப்பிட்டார்; அங்கு முக்கிய போதைவஸ்துக் குழுக்களுக்கும் அர கருவியிலுள்ள அவைகளின் ஆதவாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போரே நடக்கிறது, 60,000 க்கும் மேலானவர்களை இது பாதித்துள்ளது. “இது மிகவும் தீவிரமானது; மேலும் இது மெக்சிகோ நகரில் நடைபெறுகிறது” என்று அவர் மாகாண நாளேடான La Provence  ல் பிரான்சில் டிரோன்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்னும் தன்னுடைய திட்டங்களை நியாயப்படுத்த உதவுவதற்காக கூறினார்.

PS இன் Bouches-du-Rhône மாகாணத்தின் (மார்சேயை உள்ளடக்கியது) தலைவரான Jean-Noël Guérini திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து இதில் 1 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யத் தயாராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. Guérini இப்பொழுது செல்வாக்கை செலுத்த முற்படுவதற்கும் குற்றச் சதி விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

மார்சேய் மக்களை கண்காணிக்க டிரோன்களை பயன்படுத்துவது பிரெஞ்சு சமூகத்தை இராணுவமயப்படுத்தும் PS உடைய பரந்த செயற்பாட்டின் ஒரு பகுதியாகும். PS இன்  செனட்டர் சமியா காலி, ஏற்கனவே குற்றங்களுக்கு எதிராகப் போரிட மார்சேயில் இராணுவம் தலையிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல் PS உடைய Poitou-Charente மாகாணத்தின் தலைவரும் 2007ல் ஜனாதிபதி வேட்பாளருமான செகோலீன் ரோயால் கடந்த மாதம் இராணுவத்தை பிரான்சிற்குள் செயல்படுத்துவதற்கு ஆதரவைக் கூறினார்: “கொலைகார குழுக்களின் ஆயுதங்களை பறிப்பதற்கு பொலிசுக்கும் இராணுவத்திற்கும் இடையே ஏன் ஒத்துழைப்புக் கூடாது” என்று அவர் கேட்டார்.

இன்னும் பரந்த முறையில் பிரெஞ்சு சமூகம் இராணுவமயமாக்கப்படுதல் 1991ல் பயங்கரவாத எதிர்ப்பு என்றVigipirate அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே தொடங்கியது; குறிப்பாக 2001ல் அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில் PS அரசாங்கம் சேர்ந்தது தொடக்கமாகும். சமூக அறிவியல் வல்லுனரான Mathieu Rigouste  “Vigipirate  ஐ “புறநகர் கண்காணிப்பு இராணுவமயமாக்கப்படுவதின் தீவிரத்தன்மை” என்றும் “பொலிஸ் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துவது” என்றும் கூறினார். பல ஆண்டுகளாக பிரெஞ்சு போக்குவரத்து மாறுமிட மையங்களில் தொடர்ச்சியான இராணுவ ரோந்துகள் உள்ளன.

PS அரசியல்வாதிகள் தொழிலாள வர்க்கப் புறநகர்ப் பகுதிகளில் இராணுவத் தலையீட்டிற்கு அழைப்புக்கள் கொடுப்பது இந்தப் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதின் விரிவாக்கம்தான்.

சமீபத்திய போதைவஸ்து அல்லது பயங்கரவாதத்திற்கு எதிராக என்று கூறப்படும் டிரோன்கள் நிலைப்பாடானது; ஆனால் பிரெஞ்சு நகரங்கள் இராணுவமயமாக்கப்படுதலின் முக்கிய இலக்கு தொழிலாள வர்க்கமாகும், குறிப்பாக பிரான்சின் வறிய புறநகர்ப் பகுதிகளில். ஆளும் உயரடுக்கு, PS ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சிக்கன மற்றும் போர்க் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு பெருகியிருப்பதை வேதனையுடன் உணர்ந்துள்ளது.

PS அடக்குமுறை மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு என்று தீவிர வலதிற்கு மாறியிருப்பது சர்வதேச அளவில் அதனுடைய தெளிவான வெளிப்பாட்டை ஜனாதிபதி ஹாலண்டின் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர் உந்துதலில் கண்டுள்ளது. ஆனால் இப்பொழுது பிரெஞ்சு ஆளும் வர்க்கம் வெளியுறவுக் கொள்கையை மட்டுன்றி உள்நாட்டில் வர்க்க உறவுகளுக்கும் இராணுவத்தை அழைக்க விரும்புகிறது.

கடந்த தசாப்தத்தில் இரண்டு முறை, 2005 மற்றும் 2007 இல் முதலாளித்துவம் அதிர்ச்சியுற்றது, அதனுடைய பொலிஸ் படைகள் புறநகர் இளைஞர்களின் வெகுஜனக் கலகங்களால் செயலற்றுப் போயின. இதை எதிர்கொள்ளும் வகையில் அது அவசரகால சட்டத்தை சுமத்தியது, தவிர கங்காரு நீதிமன்றங்களும் பொலிஸ் அடக்குமுறையும் நடைமுறைக்கு வந்தன.

டிரோன்களின் உயர் தொழில்நுட்பக் கண்காணிப்பு திறன்கள், அத்தகைய தன்னெழுச்சியான மக்கள் சீற்றத்தின் வெடிப்பின் போது இளைஞர்களை அடையாளம் காணவும் இலக்கு கொள்ள முயல்கையிலும் மதிப்பற்ற தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்க அழுத்தங்கள் ஐந்து ஆண்டுகள் முன்னோடியில்லாத உலகப் பொருளாதார நெருக்கடி, இடையறா சிக்கன நடவடிக்கைகள் என்று வலது முதலாளித்துவ இடது கட்சிகள் இரண்டின் நடவடிக்கைகளுக்கு பின் எழுகையில் டிரோன்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்பிற்கு எதிராக இயக்கப்படுகின்றன.

முந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்குக் கொடுக்கப்பட்ட அனைத்து சமூக சலுகைகளும் இப்பொழுது கிழித்தெறியப்படுகின்றன; இது ஆளும் உயரடுக்கின் பிற்போக்குத்தனக் கொள்கைகளை, இருக்கும் அரசியல் கட்சிகள் சவாலுக்கு உட்படுத்தாத சூழலில் நடக்கின்றன; கட்சிகள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்திலிருந்து அன்னியப்பட்டுள்ளன. உண்மையில் முதலாளித்துவ இடதான PS, மற்றும் அதை ஆதரிக்கும் அதனுடைய போலி இடது சக்திகளான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அல்லது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவைதான் இப்பொழுது மக்கள் மீது தீவிரப் பொலிஸ் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.

இராணுவ தொழில்நுட்பம் மற்றும் இராணுவப் பிரிவுகளை உள்நாட்டுப் பொலிஸ் பணிக்கு பயன்படுத்தும் முடிவு குறிப்பாக நிறுத்தப்பட்டது, ஆளும் வர்க்கம் அக்டோபர் 1917 புரட்சிக்கு விடையிறுக்கும் வகையில் கொடுத்த சலுகைதான்.

வரலாற்றுப் பேராசிரியரான Jean-Marc Berlière சமீபத்தில் Le Monde க்குக் கொடுத்த பேட்டியில் பாரிஸ் கம்யூன் 1871ல் இரத்தம் சிந்த நசுக்கப்பட்டதற்கும், முதலாம் உலகப் போர் பற்றியும் நினைவு கூர்கையில், முதலாளித்துவம் வாடிக்கையாக இராணுவத்தை உள்நாட்டுப் பொலிஸ் வேலைக்கும் பயன்படுத்தியது, குறிப்பாக வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்கு என்றார்.

சட்டம் மற்றும் ஒழுங்குப் பணிகள் செல்வாக்கில்லாதவை, இராணுவமானது அடிவாங்குதல்கள், திட்டுக்கள், துப்பல்கள் இவைகளைப் பெற்றன. Fourmises, Narbonne போன்ற இடங்களில் பெரும்பாலும் முதலாளிகளுக்கு உதவும் வகையில் அவை வேலைநிறுத்தங்களில் தலையீடு செய்ததால் வாடிக்கையாக படுகொலைகள் நிகழ்ந்தன; இவை அதனுடைய தோற்றத்தை இருண்டதாக்கின; ஏற்கனவே அவை சமரசத்திற்கு உட்பட்டிருந்தன. சர்வதேச உள்ளடக்கம் மற்றும் ஜேர்மனிக்கு எதிரான பழிவாங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை, இராணுவ நடவடிக்கைகளின் செல்வாக்கற்ற தன்மையின் உந்துததால் இராணுவவாதத்திற்கு எதிர்ப்பு என்பவற்றால் ஒழுங்கை நிலைநாட்டுவது ஒரு தீவிர அக்கறையாயிற்று.

முதலாளித்துவம் மற்றும் போருக்கு, முதலாவது உலகப் போரில் பயனற்ற முறையில் மில்லியன் கணக்கானவர்கள் இறந்தபின் ஏற்பட்ட ஆழ்ந்த எதிர்ப்புஇது மிக உயர்ந்த வெளிப்பாட்டை போல்ஷிவிக் புரட்சியிலும் சோவியத் ஒன்றியத்தில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவதிலும் கண்டது; ஆளும் வர்க்கம் இராணுவத்தை உள்நாட்டுப் பொலிஸ் பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்தியது; இதற்குப் பதிலாக நடமாடும் gendarmerie படைகளை நிறுவியது. தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இராணுவத்தை அது நம்ப இயலாது என்பதை உணர்ந்தது. Berlière கூறினார்: அரசியல் இடர் மிகப் பெரியதுஇராணுவச் சிப்பாய்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்?’

எனினும் இத்தகைய கணிப்பீடுகள், இன்றைய பேரினவாத அரசியல் ஸ்தாபனத்திற்கு முற்றிலும் அன்னியப்பட்டுள்ளன, இதில் PS உடைய சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த பற்றாளர்கள் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸிலிருந்து நவ-பாசிச சக்திகளான மரின் லு பென்னுடைய தேசிய முன்னணி வரை உள்ளன. முதலாளித்துவத்தின் நடவடிக்கைகள் தானியங்கி இராணுவத் தொழில்நுட்பத்தை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துதல் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். வரவிருக்கும் சமூகப் போராட்ட அலையில், இது ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்ளும்; ஆளும் வர்க்கமோ மக்கள் எதிர்ப்பை பெரிதும் நசுக்குவதற்கு தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது.