சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The return of the Euro crisis

யூரோ நெருக்கடி மீண்டும் திரும்புதல்

Peter Schwarz
4 October 2013

Use this version to printSend feedback

ஜேர்மனிய தேர்தல் பிரச்சாரத்தின் போது யூரோ நெருக்கடியை பற்றிய பேச்சுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது இப்பொழுது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசாங்கமோ, எதிர் கட்சிகளோ தவிர்க்க முடியாத அரசாங்க கடன், வங்கித் தோல்விகள், பில்லியன் டாலர் பிணை எடுப்புக்கள், சிக்கனத் திட்டங்கள் மற்றும் சமூகத் தாக்குதல்கள் போன்றவை தேர்தல் பிரச்சாரத்தில் செய்திகளாக ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக அவைகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை. பிரஸ்ஸல்ஸில் முடிவுகள் தாமதப்படுத்தப்பட்டதுடன், நெருக்கடிகள் மூடிமறைக்கப்பட்டன.

இப்பொழுது தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், நெருக்கடி புதுப்பிக்கப்பட்ட தீவிரத்துடன் திரும்பியுள்ளது. ஜேர்மன் தேர்தல்களின் போது செய்தித்தாள்களிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்த பாதிப்பான செய்திகள் மீண்டும் வந்துவிட்டன. முக்கிய வணிக செய்தித் தொடர்பாளர்கள், புதிய சிக்கனத் திட்டங்களையும் தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்களையும் கோருகின்றனர். இவற்றை தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமில்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் கோருகின்றனர்.

1930 களுக்கு பின் மிக நீண்ட, மிக ஆழமான மந்தநிலைக்கு வழிவகுத்த பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. கடுமையான சிக்கன நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்ட பின்னரும் கூட கிரேக்கத்திற்கு புதிய கடன் நிவாரணம் தேவைப்படுகிறது, 2011ல் 78 பில்லியன் யூரோ கடனால்மீட்கப்பட்ட போர்த்துக்கலுக்கு புதிய ரொக்க பணம் உட்செலுத்துதலுக்காக 50 பில்லியன் யூரோ தேவைப்படுகிறது. ஏற்கனவே பல பில்லியன் யூரோக்களை உதவியாகப் பெற்றபோதிலும், ஸ்பெயினின் வங்கிகள் திவால் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன.

இவை கடன் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளால் அவை தீவிரப்படுதப்பட்டுவிட்டன. இத்தகைய நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்தினதும் பொதுப்பணத்தினதும் இழப்பில் செல்வந்தர்களை செழிப்புடையவர்களாக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன. மில்லியனர்களின் எண்ணிக்கை உயருகையிலும், பங்குச் சந்தைகள் புதிய மட்டங்களை எட்டுகையிலும் வறுமை, வேலையின்மை மற்றும் அரசாங்கக் கடன் ஆகியவை பெருகுகின்றன.

யூரோப் பகுதியில் ஓராண்டிற்குள் சராசரி அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88 வீத்த்தில் இருந்து 92 வீதமாக உயர்ந்துவிட்டது. நாட்டின் இளைஞர்களில் பாதிப்பேரை வேலையின்மையில் தள்ளிவிட்ட ஆழ்ந்த வெட்டுக்கள் இருந்தபோதிலும்கூட, கடந்த ஆண்டு ஸ்பெயினின் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.2% என இருந்தது. இது கிரேக்கத்தில் 10% ஆகவும் அயர்லாந்தில் 8.3% ஆகவும் போர்த்துக்கல்லில் 6.4% ஆகவும் இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் கோரும் இப்பற்றாக்குறை 3% ஆக இருக்க வேண்டும் என்ற வரம்பை பிரான்ஸும் அடைய இயலாது. அதனுடைய வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை 4% ஐயும் விட அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய பொருளாதாரத்தை, பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகளால் பட்டினி போட்டபின், ஆளும் வர்க்கம் இப்பொழுது, மக்கள் இன்னும் அதிகமாக இடுப்புப் பட்டியை இறுக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றது.

இத்தாலிய பிரதம மந்திரி என்ரிகோ லெட்டாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த பின், நிதியச் செய்தி ஊடகம் இன்னும் அதிக சமூகநலச் செலவுக் குறைப்புக்களை கேட்டுள்ளது. லெட்டாவின் கைஇப்பொழுது ஓங்கியுள்ளது என்றும், நாட்டின் போட்டித்திறனை அவர் மீண்டும் நிறுவும் வகையில், உற்பத்திச் செலவை குறைத்து, “அதனை பொதுச் செலவை வெட்டுவதன் மூலம் ஈடுசெய்யவேண்டும் என்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது.

பிரான்சில் பொது நிதி வழங்கலுக்கான உயர்சபை (le Haut Conseil des finances publiques - HCFP) இன்னும் கூடுதலான முயற்சிகள் வரவு-செலவுத் திட்டமிடுதலில் தேவை”, அப்பொழுதுதான் 2016ல் வரவு-செலவுத் திட்டம் சமநிலையை அடையமுடியும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஜேர்மனியில் செய்தித்தாளான Die Zeit, தேர்தலுக்கு முன்னரே அரசாங்கம்எத்தகைய உள்நாட்டுச் சீர்திருத்தத்தையும் இயற்றவில்லை என்றும்சர்வதேசப் பொறுப்பை எவ்வகையிலும் எடுத்துக் கொள்ளவதிலிருந்து பின்வாங்கியுள்ளது என்றும் குறைகூறியுள்ளது. பணம் பற்றாக்குறையான நகரசபைகள், மாநிலங்கள் மற்றும் மத்திய அரச மட்டத்திலும் மேலதிக வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் உலக யுத்த வலையங்களில் கூடுதலான இராணுவ நடவடிக்கைகள் அடுத்த அரசாங்கத்தின் செயற்பட்டியலில் முதன்மை பெற்றிருக்கும்.

இவ்விடயங்கள், ஜேர்மனிய ஜனாதிபதி ஜோச்சிம் கௌவ்க் (Joachim Gauck) நேற்று ஜேர்மன் மறுஐக்கிய தினத்தில் ஆற்றிய உரையில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன. கௌவ்க் உலக அரசியலிலும் யூரோ நெருக்கடியிலும் இன்னும் வலுவான ஜேர்மனியப் பங்கு இருக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார். “நமது பங்களிப்பு எமது நாட்டின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி வெளிப்படையாக முன்வைக்கப்படுகின்றது.” என்றார் அவர்.

ஐந்து ஆண்டுகால சிக்கனக் கொள்கைகள் பாரியளவில் ஐரோப்பாவில் வர்க்க அழுத்தங்களைத் தீவிரப்படுத்தி ஒரு பரந்த அரசியல் நெருக்கடி ஒன்றைக் கட்டவிழ்த்துள்ளது. கண்டத்தில் உறுதியான அரசாங்கத்தைக் கொண்ட ஒரு நாடு கூட கிடையாது. போர்த்துக்கல்லில் பழைமைவாத ஆளும் கட்சி சமீபத்திய உள்ளூராட்சி தேர்தல்களில் அதனுடைய வாக்குக்களில் 12% இனை இழந்தது. பிரான்சில் மக்களில் 23% தான் ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர். ஜேர்மனியில் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பாராளுமன்றத்திலிருந்து நவ-தாராளவாத FDP அகற்றப்பட்டதையடுத்து இப்பொழுது புதிய கூட்டணிப் பங்காளியை நாடவேண்டடியுள்ளது.

அதே நேரத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தினுள் பெருகிய அழுத்தங்கள் உள்ளன. ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையே பெருகும் பொருளாதாரப் பிளவு மற்றும் இத்தாலியின் தொடரும் நெருக்கடி, யூரோப் பகுதியின் மூன்று பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான சக்திகளின் சமநிலையை குழப்பத்திற்கு உட்படுத்தியுள்ளது.

தீவிர வலது, சோவினிச வெறிப் போக்குகள் செல்வாக்கை பெருக்கியுள்ளன. பிரான்சில் தேசிய முன்னணி (Front national) செல்வாக்கைப் பெறுகிறது, பழைமைவாத UMP, இந்த தீவிர வலது கட்சிக்கு ஆதரவைக் கொடுக்கிறது. ஆஸ்திரியாவில் தீவிர வலது, தேசியவாதக் கட்சிகள் கடந்த ஞாயிறுத் தேர்தலில் 30% வாக்குகளை பெற்றன. ஜேர்மனியில் ஒரு வலதுசாரி ஐரோப்பிய எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனிக்கான மாற்றீடு முதல் தடவையாக அமைக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவம் அதிகாரத்தில் தொடர்ந்து இருந்து அதனுடைய பிற்போக்குத்தன தாக்குதல்களை தொடர முடிவதற்குக் காரணம் அதை எவரும் தொழிலாள வர்க்கத்தின் சார்பாக அரசியல் ரீதியாக எதிர்க்காததாலாகும். “இடது அல்லது வலது என அனைத்து பிரதான கட்சிகளும் மோசமடையும் நெருக்கடியை எதிர்கொள்ள, தம்முடைய மோதல்களை மறந்து இன்னும் வலதுநோக்கி திரும்புகின்றன.

சமூக ஜனநாயகக் கட்சிகள் நீண்ட காலத்திற்கு முன்னரே வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுடனான தங்களுடைய வேறுபாடுகளை களைந்துவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவைக் கொடுக்கின்றன. இதுவே தொழிற்சங்கங்களுக்கும் பொருந்தும். அவை தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதுடன், இணை- நிர்வாகிகள் போலவும் தொழிற்சாலை பொலிஸார் போலவும் செயற்படுகின்றன.

போலி இடது கட்சிகளான ஜேர்மன் இடது கட்சி, சிரிசா என அழைக்கப்படும்கிரேக்க தீவிர இடது கூட்டணி போன்றவைகள் மிகத் தீவிரமாக வலதுபக்கம் நகருகின்றன. அவை தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய சுயாதீன அரசியல் இயக்கத்தையும் விட்டுக்கொடுக்காது எதிர்ப்பதுடன், முதலாளித்துவ ஆட்சியை தக்கவைக்கும் பொறுப்பையும் எடுத்துக்கொண்டுள்ளன.

ஒவ்வொரு சந்தர்ப்பம் கிடைக்கும்போதும், இடது கட்சியானது சமூக ஜனநாயகக் கட்சிக்கும் பசுமைக் கட்சிக்கும் தன்னுடைய முழு ஆதரவை கொடுக்க முன்வருகிறது. அதே நேரத்தில்மனிதாபிமான இராணுவத் தலையீடுகளுக்கு பிரச்சாரம் செய்கின்றது. சிரிசா, அரசாங்கத்தை எடுத்துக் கொள்ள தயாராவதுடன், பாசிச கோல்டன் டோன் அமைப்புடன் நெருக்கமாக பிணைந்து கொண்டுள்ள, ஒரு அரச எந்திரத்தை பாதுகாக்க ஆதரவளிக்கின்றது.

எதிர்வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிக்க போராடும் ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியாகும் (PSG). ஜேர்மன் தேர்தல்களில் பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸின் சிக்கனக் கொள்கைகளுக்கு பரந்த எதிர்ப்புடைய ஒரு அரசியல் நோக்குநிலைக்காக, குரல் கொடுத்த வேலைத்திட்டத்தை PSG ஒன்றுதான் கொண்டிருந்தது.

சமரசத்திற்கு இடமின்றி PSG ஆனது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அனைத்து வகையான தேசியவாதத்தையும் நிராகரித்து ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை நிறுவப் போராடுகின்றது. அதனுடைய தேர்தல் அறிக்கையில் அது பின்வருமாறு விளக்கியது: “ஐரோப்பாவை சோசலிச அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதின் மூலம்தான் தொழிலாள வர்க்கம் தன்னுடைய நலன்களை பாதுகாக்கவும், ஐரோப்பா மீண்டும் தேசியவாதம், யுத்தம் இவைகளில் மூழ்காமல் தடுக்கவும், கண்டத்தின் மாபெரும் செல்வத்தையும் உற்பத்தி சக்திகளையும் முழுச் சமூகத்தின் நலன்களுக்கு பயன்படுத்தவும் முடியும்.”

உலக சோசலிச வலைத் தள வாசகர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் (PSG) இணையுமாறும், ஐரோப்பா முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியெழுப்ப முன்வருமாறும் அழைப்புவிடுக்கின்றோம்.