சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Public meeting in Paris marks the 15th Anniversary of the WSWS

பாரிஸ் பொதுக் கூட்டம் உலக சோசலிச வலைத் தளத்தின் 15வது ஆண்டு நிறைவை குறிக்கிறது

By our reporter
7 October 2013

Use this version to printSend feedback

உலக சோசலிச வலைத் தளம்  மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஆதரவாளர்கள், உலக சோசலிச வலைத் தளத்தின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பலர் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தை பாரிசில் செப்டம்பர் 29 அன்று நடாத்தியது. இதில் சிறப்புப் பேச்சாளர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளரான பீட்டர் சுவார்ட்ஸ் ஆவார். பிரெஞ்சு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரிவினரும் மாணவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கு பெற்றதும் அதைச் சிறப்பாக எதிர்கொண்டதும், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பிற்போக்குத்தன சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்திற்கும் அதனது போலி இடது ஆதரவாளர்களான, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்றவற்றிற்கும் எதிராக எழுச்சி பெற்றுள்ள மக்களின் எதிர்ப்பை பிரதிபலித்தது. மேலும் பிரான்சின் திவாலாகிவிட்ட உத்தியோகபூர்வ “இடதிற்கு” ஒரு சோசலிச மாற்றீடு குறித்து, தொழிலாள வர்க்கத்தின் தட்டுக்களில் ஆர்வம் பெருகி உள்ளதையும் எடுத்துக் காட்டியது.

சுவார்ட்ஸ் கூறினார்: “உலக சோசலிச வலைத் தளம்  நாம் பெருமிதம் கொள்ளும் ஒரு வரலாற்று வெற்றியாகும். 15 ஆண்டுகளுக்கு முன் நாம் அதை ஆரம்பித்தபோது அதில் ஒரு சில நூறு வாசகர்களே இருந்தனர். இப்பொழுது அன்றாடம் உலகம் முழுவதும் நமக்கு 40,000 முதல் 50,000 வாசகர்கள் உள்ளனர்.”

உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீடு, ஒரு தீர்மானகரமான முறையினை அடித்தளமாக கொண்டிருக்கின்றது. அது வரலாற்று சடவாத வாத முறையாகும் என்று சுவார்ட்ஸ் விளக்கினார். உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதானமான பணி, முதலாளித்துவ சமூக அமைப்பு முறையின் நெருக்கடியின் வளர்ச்சிப் போக்கினைப் பற்றிய புறநிலையான மார்க்சிச ஆய்வினை தினசரி மேற்கொள்வதில் இருக்கின்றது.... எங்களது வழிமுறை, “தற்போதைய நிகழ்வுகளை வரலாற்றில் தங்கியிருந்து மட்டும் தான் விளங்கிக்கொள்ள முடியும் என்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது. சர்வதேச புரட்சிகர வர்க்கம்  என்ற அடித்தளத்தில், தொழிலாள வர்க்கத்தின் முழுமையான வரலாற்று அனுபவங்களூடாக மட்டும் தான், நிகழ்காலத்தினை பரிசீலனை செய்ய முடியும்என கருதுகிறது.



பாரிசில் நடைபெற்ற கூட்டத்தின் ஒரு பகுதியினர்

சுவார்ட்ஸ் இந்த வழிவகை, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு இரண்டையும் நடைமுறையில் இருக்கும் கருத்தியல் சூழலுக்கு எதிரான அரசியல், தத்துவார்த்த எதிர்ப்பில் இருத்துகிறது, நிகழ்காலத்தினை விஞ்ஞான ரீதியில் விளங்கிகொள்வதற்கு வரலாறு ஒரு மத்தியமான பாத்திரத்தினை வகிக்கின்றது. “முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ தத்துவாசிரியர்கள் அதிலும் விசேடமாக பின்நவீனத்துவத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள் வரலாற்றினை முழுமையாக நிராகரிக்கின்றனர்.

இந்த கருத்தின் எடுத்துக்காட்டான ஒரு பிரதிநிதி, பிரெஞ்சு தத்துவாசிரியர் Alain Badiou, இவர் முன்னாள் மாவோவாதியும் ஒரு பின்நவீனத்துவ பிரதிநிதியுமாவார். "மார்க்சிசம், தொழிளாளர் இயக்கம், மக்கள் ஜனநாயகம், லெனினிசம், தொழிலாளர் கட்சி, சோசலிச அரசு - இருபதாம் நூற்றாண்டின் இந்த கண்டு பிடிப்புக்கள் - சந்தேகமில்லாமல் இனி எங்களுக்கு உதவப் போவதில்லை என்பது வெளிப்படை."

இந்தக் கருத்தாய்வுதான் 2009ல் இங்கே பிரான்சில் நாலரை வருடங்களுக்கு முன்னர் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை (Ligue communiste révolutionnaire -LCR) ஐ கலைத்து விட்டு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (Nouveu parti anticapitaliste -NPA) இனை உருவாக்குவதற்கு இதே கருத்துத்தான் அடித்தளமாக அமைந்தது என்றார் சுவார்ட்ஸ்.LCR, தமது அரசியல் பல தசாப்தங்களாக நான்காம் அகிலத்தின் கொள்கைகளுடன் ஒரு விதமான உறவினையும் கொண்டிராதபோதிலும், தங்களை பெயரளவில்  ட்ரொட்ஸ்கிசத்துடன் அடையாளப்படுத்தினார்கள். மாறாக NPA தங்களை ட்ரொட்ஸ்கிசம் என்று வரையறுப்பதனை வெளிப்படையாக நிராகரித்து, அராஜகவாத, ஸ்ராலினிச, சீர்திருத்தவாத போக்குகள் அனைத்தும் சமஉரிமை கொண்டவைஎன தெரிவித்தது என மேலும் சேர்த்துக் கொண்டார்.

ட்ரொட்ஸ்கி எப்பொழுதும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான தன்னுடைய போராட்டத்தில் மையமாக கொண்டிருந்த பூகோளமயமாக்கத்தின் வளர்ச்சியுடன்,  தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டமைப்பதின் இயலாமை இப்பொழுது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பூகோளமயமாக்கம் முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீர்த்துவிடவில்லை. ஆனால் கணிசமாக அதை மோசமாக்கியுள்ளது” என்றார் அவர். 2008 நிதிய நெருக்கடி உலகப் பொருளாதாரத்தை 1930களுக்குப்பின் ஆழ்ந்த மந்த நிலையில் தள்ளிவிட்டது; இது சர்வதேச ரீதியாக ஒழுங்கமைக்கப்படும் உற்பத்தி சக்திகள், தனிசொத்து உடமை மற்றும் தேசிய அரசு அமைப்பு முறையுடன் இயைந்திராத தன்மையைத்தான் நிரூபிக்கிறது.

அவர், “அக்டோபர் புரட்சியின் காலத்தில் தொழிலாளர்கள் மத்தியில் பரந்து வளர்ந்திருந்த சோசலிச நனவு, பல பத்து வருடங்களாக ஸ்ராலினிச அதிகாரத்தின் தொழிலாளர்களுக்கு மேலான அடக்குமுறையினாலும், 1930களில் ஒரு முழுத் தலைமுறை புரட்சிகர மார்க்ஸ்சிஸ்ட்டுக்கள் ஸ்ராலினிச பயங்கரத்தால் படுகொலை செய்யப்பட்டதாலும் குழிபறிக்கப்பட்டது.” இங்கே மேற்கத்தைய நாடுகளில், “தொழிலாள வர்க்க இயக்கத்தின் மேல், பல தசாப்தங்களான சீர்திருத்தவாத, ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் ஆளுமை சோசலிச நனவினை ஒடுக்கித் தள்ளியுள்ளதுஎன்றார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, “தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோசலிச நனவிற்கான போராட்டம் என்பதை, மிகவும் பரந்தளவில் விளங்கிக்கொள்ள வேண்டும், இது தொழிலாளர் போராட்டங்களில் ஒரு சில தந்திரோபாய ரீதியான கோரிக்கைகளுடன் மட்டுப்படுத்திவிட முடியாததுஎன்ற முடிவிற்கு வந்தது என்றார்.  இங்குத்தான் உலக சோசலிச வலைத் தளத்தின் பணி உள்ளது: ஒரு புதிய சர்வதேச புரட்சிகர இயக்கத்தை கட்டமைப்பதற்கான முக்கிய புத்திஜிவித, சிந்தனா ரீதியான முன்னிபந்தனையாக இருப்பது தொழிலாள வர்க்கத்தினுள் மார்க்சிச கலாச்சாரத்திற்கு புத்துயிர்ப்பு அளிப்பதாகும். இந்த ஒரு அஸ்திவாரத்தில்தான் உண்மையான புரட்சிகர தொழிலாளர் இயக்கம் கட்டமைக்கப்பட முடியும்.”

பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியானது ஸ்ராலினிசத்தின் தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற முன்னோக்கை மட்டும் காலாவதியாகிப்போக செய்தது மட்டுமல்லாது தொழிற்சங்கங்களினதும் சமூக ஜனநாயக கட்சிகளினதும் அனைத்து தேசியரீதியான வேலைத்திட்டங்களுக்கும் குழிபறித்துவிட்டது. என்று சுவார்ட்ஸ் சுட்டிக்காட்டினார். சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் போலவே, “இவை முதலாளித்துவத்தின் வெளிப்படையான முகவர்களாகிவிட்டன, மிகத் தோராயமாகக் கூட இவற்றை தொழிலாளர் அமைப்புகள் எனக் கூறமுடியாது.”

ஜேர்மனியின் வளர்ந்து வரும் பொருளாதார மேலாதிக்கம் ஐரோப்பாவில் இருப்பதற்கு எதிர்க்கனமாக, பிரெஞ்சு ஆளும் வர்க்கம் இராணுவ வகையில் இன்னும் கூடுதலான வன்முறைக் கொள்கையான ஏகாதிபத்தியத் தலையீட்டை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் மேற்கொண்டுள்ளது என்று சுவார்ட்ஸ் குறிப்பிட்டார். பிரான்சுவா ஹாலன்ட் இந்தக் கொள்கையை எவ்வித தடையுமின்றி நூறு சதவிகிதம் பின்பற்றுகிறார், இதற்கு தீவிர இடதுகள் உட்பட அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவருக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்என்றார்.

லிபியப் போர் மற்றும் சிரியாவில் NPA இன் அரசியல் நிலைப்பாடு, PS ஐ விடச் சற்றும் மாறுபட்டதில்லை. இரண்டிலுமே அது ஏகாதிபத்திய சார்பு எதிர்த்தரப்பிற்கு ஆட்சி மாற்றத்தை செய்வதற்கு ஆயுதம் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

சுவார்ட்ஸ் தனது பேச்சை, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை பிரான்சில் கட்டமைக்க வேண்டும் என்னும் அழைப்புடன் முடித்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஆர்வமிக்க விவாதம் நடைபெற்றது. போலி இடது Lutte Ouvriere (LO)  அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சிரியாவில் ஏகாதிபத்திய ஆதரவு எதிர்ப்பு, அரபு வசந்தத்தைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார். அசாத் ஆட்சியின் மிருகத்தனம், ஊழல் பற்றியவற்றை அதன் மைய வலியுறுத்தலாக வைக்காததற்கு உலக சோசலிச வலைத் தளத்தை தாக்கினார்.

பார்வையாளர்களில் ஒரு பெண்மணி இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக வலுவாக முகங்கொடுத்து, செய்தி ஊடகம் இக்கருத்துக்களைப்பற்றி அதிகம் பேசி, ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தன நோக்கங்களை மூடி மறைக்கிறது என்றும், இவை “அடிப்படைவாதிகளை முதலாளித்துவத்தின் இராணுவ சக்திகளாக பயன்படுத்துகின்றன” என்றும் கூறினார். அப்பெண்மணி 1930களில் ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடுகளை குறிப்பிட்டார்: அப்பொழுது ட்ரொட்ஸ்கி, பிரேசிலிய Getúlio Vargas  இன் சர்வாதிகாரத்திற்கு எதிரான "ஜனநாயக" பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆயுதத் தலையீடை எதிர்க்க வேண்டும் என்றார்.

துனிசியா, எகிப்து ஆகியவற்றில் இருந்த வெகுஜன இயக்கத்திற்கு முற்றிலும் மாறாக, லிபியாவிலும் சிரியாவிலும் ஏகாதிபத்திய வாதிகள் தங்கள் சொந்த எதிர்ப்பு இயக்கங்களை வளர்த்தனர், சொந்த முதலாளித்துவத்திற்கு NPA உடைய ஆதரவு உறுதியானது என்று சுவார்ட்ஸ் சுட்டிக் காட்டினார். “அசாத் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அசாத் ஆட்சியை மாற்றும் பணி பிராந்தியத்தில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்குத்தான் உண்டு” என எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்,

நீண்ட பொதுவான கலந்துரையாடலுடனும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை பிரான்சில் கட்டமைக்க உதவும் வெற்றிகரமான நிதி சேகரிப்புடனும் கூட்டம் நிறைவுபெற்றது.