சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US budget and debt talks to focus on cutting Social Security, Medicare

அமெரிக்க வரவு-செலவுத் திட்ட மற்றும் கடன் வரம்பு பற்றிய பேச்சுக்கள் சமூகப் பாதுகாப்பு, மருத்துவ காப்புறுதி வெட்டுக்கள் பற்றி கூடிய கவனம் காட்டுகின்றது

By Patrick Martin
7 October 2013

Use this version to printSend feedback

ஒபாமா நிர்வாகத்தினதும், காங்கிரஸ் குடியரசுக் கட்சியினரினதும் செய்தித் தொடர்பாளர்கள் தாங்கள் தற்பொழுது வாஷிங்டனில் நடக்கும் வரவு-செலவுத் திட்ட மற்றும் கடன் பற்றிய விவாதங்களில் முக்கிய சமூக உரிமைத் திட்டங்களான சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்புறுதி (Social Security, Medicare) ஆகியவற்றிலிருந்து கவனத்தை திருப்பத்தயார் என்று ஞாயிறன்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் மத்திய அரசாங்க செயற்பாடுகள் பாதியளவு மூடப்பட்டதையும் அக்டோபர் 17ல் வரவுள்ள மத்திய அரச கடன் வரம்பை உயர்த்தும் காலக்கெடுவையும் ஒரு நெருக்கடியான சூழலை தோற்றுவிக்க பயன்படுத்தி, பெரும்பான்மையாக அமெரிக்க மக்களால் எதிர்க்கப்படும் வெட்டுக்களை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.

குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதிநிதிகள் மன்றம் மத்திய அரச மூடலை முன்கூட்டிக் கொண்டுவரும் வகையில் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு அக்டோபர் 1 நிதிய ஆண்டு ஆரம்பத்திற்குப் பின் நிதியளிப்பதில் தீர்வு தொடர்வது என்பது ஒபாமாவின் உடல்நல பாதுகாப்புச்  சட்டமான வழங்கக்கூடிய பாதுகாப்புச் சட்டத்திற்கு (Affordable Care Act) நிதியளிக்கப்படாமலிருப்பதுடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மன்றத்தின் தலைவர் ஜோன் போஹ்னர் அந்நிலைப்பாட்டில் இருந்து மாறும் வகையில் ஞாயிறு அன்று ABC News க்கு வழங்கிய  “இந்த வாரம் நேர்காணலில் அடையாளம் காட்டினார்: நேர்காணலை செய்த ஜோர்ஜ் ஸ்டீபனோபௌலோசிடம் மத்திய அரச மூடல் மற்றும் கடன்வரம்பு பிரச்சினைகள் இப்பொழுது இணைக்கப்பட்டுள்ளன என்றும், மத்திய அரச புதிதாக கடன்வாங்குவதற்கு அனுமதிப்பதற்கான விலைபோல் அவர் சமூக உரிமைத் திட்டங்களில் வெட்டுக்களை வலியுறுத்துவார் என்றார்.

Tea Party அமைப்பின் வலதுசாரி ஜனரஞ்சக வார்த்தை ஜாலங்கள் இருந்தபோதிலும், குடியரசுக் கட்சியினரின் உண்மையான விரோதி ஒபாமா இல்லை. மாறாக முழு அமெரிக்க உழைக்கும் மக்களும் பல மில்லியன் ஓய்வு பெற்ற தொழிலாளர்களும்தான் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். இவர்கள் தங்கள் வருமானத்திற்கு சமூக பாதுகாப்பு திட்டத்தையும் (Social Security) மற்றும் உடல்நல பாதுகாப்பிற்கு மருத்துவ காப்புறுதியையும் (Medicare) நம்பியுள்ளனர்.

எது பிரச்சினைக்கு உந்துதல் கொடுக்கிறது எனப் பார்ப்போம் என்றார் அவர். “குழந்தை நிறையப் பிறந்த காலத்தின் 10,000 பேர் ஒவ்வொரு நாளும் ஓய்வு பெறுகின்றனர். இந்த வாரம் 70,000, இந்த ஆண்டு 3.5 மில்லியன் என. சமூகப் பாதுகாப்பிலோ, மருத்துவ காப்புறுதிக்கோ பணம் இல்லை என இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் அரசாங்கங்கள் அவற்றை முழுவதும் செலவழித்துவிட்டன.”

இத்திட்டங்கள் பல மில்லியன் அமெரிக்கர்களுக்கு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம் அவர் தொடர்ந்தார். “ஆனால் அதற்கான அடிப்படை பிரச்சினைகளை நாம் தீர்க்கவில்லை; அவை தொடர்ந்து இருக்க முடியாது.”

வாஷிங்டனில் பெரிதும் ஆதரவு கொடுக்கப்படும் ஓர்வெலிய சொல்லாட்சியில், திட்டங்கள்தொடர்ந்து இருத்தல் என்பதின் பொருள், உறுதியளிக்கப்பட்ட நல்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்குதல் என்பது இல்லாமல், நலன்களைக் குறைத்தல், அவற்றை பெறும் தகுதிகளை குறைத்தல், ஓய்வூதிய வயதை உயர்த்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்புறுதியை காப்பாற்றுதல் என்னும் பெயரில் அழித்தல் என்பதாக உள்ளது.

அதே நேரத்தில் போஹ்னர், பில்லியனர்களிடம் செல்வக்குவிப்பு முன்னோடியிலாத அளவுகளுக்கு சென்றுவிட்டபோதிலும், பெரும் செல்வந்தர்களுக்கு ஒரு பென்னி கூடுதல் வரிவிதிப்பை கூட நிராகரித்துவிட்டார். “மிகச் சாதாரணம், நாம் வரிகளை உயர்த்தவில்லை என்று அவர் அறிவித்தார்.

நிதி மந்திரி ஜாக் லூ ஞாயிறன்று, ஐந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி ஒபாமா நிர்வாகத்திற்கு வரவு-செலவுத் திட்டம் மற்றும் கடன் வரம்பு மோதல்கள் பற்றிய காட்சியை முன்வைத்தார். அவர், இது காங்கிரஸ் அரசாங்கத்திற்கு நிதியளிப்பது தொடரும் என்று தீர்மானம் இயற்றிய பின்னரும், திறைசேரி வாடிக்கையான கடன்களை வாங்க அனுமதிக்கும் கடன் வரம்பை உயர்த்தியபின் ஒபாமா சமூகஉரிமைச் செலவுகளில் விட்டுக்கொடுப்புகளுக்கு தயார் என்பதை வலியுறுத்தினார்.

வெள்ளை மாளிகை அதிகாரிகளும், காங்கிரசின் ஜனநாயகவாதிகளும், பலமுறை தாங்கள் குடியரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் மன்றம் நிர்ணயிக்கும் செலவின் அளவை ஏற்றுள்ளதாக அறிவித்தனர். இது செனட் முன்வைத்த அளவைவிடக் 70 பில்லியன் டாலர்கள் குறைவாகும். ஆனால் அவர்கள் Obamacare என்பதைத் தள்ளிவிடத் தயாராக இல்லை. அத்திட்டம் மருந்து தயாரிப்பு, காப்புறுதி நிறுவனங்களுடன் ஒத்துழைத்து அமெரிக்க பெருநிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் செலவுகளைக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும்.

NBC உடைய “Meet the Press,” நிகழ்ச்சியில் லூ கூறினார்: “ஜனாதிபதி நிதியக்கொள்கை குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்த தயாராக இருந்தார், இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் அதிக நேரம் நியாயமான நடுவழியை கண்டுபிடிக்க செலவழித்துள்ளார். அவர் விட்டுக்கொடுப்புகளுக்கு மேல் விட்டுக்கொடுப்புகளையும் பேச்சுவார்த்தைக்கு மேல் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளார்.”

சமூகஉரிமைச் சீர்திருத்தம், வரிச்சீர்திருத்தம் என்று ஓட்டைகளை அடைப்பவை குறித்து நியாயமான கொள்கைகளை மகிழ்ச்சியுடன் பேசத்தயார். அதைத்தான் செய்ய விரும்புகிறோம் என்று லூ சேர்த்துக் கொண்டார்.

பெருநிறுவன ஆதரவுடைய அரசியல் வாதிகளின் அடையாள மொழியில்சமூகஉரிமைச் சீர்திருத்தம் என்பது மருத்துவக் காப்புறுதி, சமூகப் பாதுகாப்பு பெறுவோரின் நலன்களில் வெட்டுக்கள் என்பது பொருளாகும். அதே நேரத்தில்ஓட்டைகளை மூடும் வரிச்சீர்திருத்தங்கள் என்பது பெரும் செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பு அதிகம் என்ற பொருளைத்தராது, மாறாக செல்வந்தர்களுக்கு உண்மையில் வரிகளைக் குறைக்கும் செயல்தான் இருக்கும். ஓட்டைகளை அடைத்தல் என்பது நடைமுறையில் பில்லியனர்களுக்கும் அவர்கள் கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்களுக்கும் புதிய சுற்று வரிக்குறைப்புக்கள் ஆகும்.

பிடிவாத எதிர்ப்பு, பெருகிய முறையில் ஒருவரையொருவர் தாக்குதல் என்ற வெளிப்படையான காட்சி இருந்தாலும், ஜனநாயக, குடியரசுக் கட்சியினர் ஒரு பொது வர்க்க செயற்பட்டியலை பகிர்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முதலாளித்துவத்தின் நிதியத் திவால், சுமையை உழைக்கும் மக்களின் முதுகுகளில் சுமத்துவது என்பதே அது.

இரு கட்சிகளில் எதுவும் நிதியப் பிரபுத்துவத்தின் செல்வத்தில் சிறிதும் ஊடுருவும் கருத்தை முன்வைப்பதில்லை. இரண்டுமே மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தின் இழிந்த நிதிய கணிப்புக்களை,மக்கள் தொகை காரணிகளாக குற்றம் சாட்டுகின்றன. வேறுவிதமாக சொன்னால், தொழிலாளர்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர்,இப்பிரச்சினை ஓய்வுதிய வயதை உயர்த்துவதின் மூலம்தான் தீர்க்கப்பட முடியும், அல்லது உடன்நலப் பாதுகாப்பு மற்றும் பொதுவாக வாழ்க்கைத் தரங்களில் வெட்டுக்களை ஏற்படுத்துவதின் மூலம்தான் தீர்க்கப்படமுடியும். இது வாழ்க்கை எதிர்பார்ப்பு காலத்தை குறைத்துவிடும்.

வரவு-செலவுத் திட்டத்தின் நெருக்கடியை அரசாங்கம் நடத்தும்விதம் பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் பெரும்பாலான பென்டகன் பொது தொழிலாளர்களை திருப்பி அழைத்ததில் நிரூபிக்கப்பட்டுள்ளது; இதனால் பரந்த அமெரிக்க இராணுவ உளவுத்துறைக் அமைப்பு  மூடலுக்கு முந்தைய தரங்களில் கிட்டத்தட்ட தமது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்.

ஹேகல் காங்கிரஸ் இயற்றி, ஒபாமாவால் செப்டம்பர் 30 கையெழுத்திடப்பட்ட சட்டவரைவை மேற்கோளிட்டுள்ளார்: இது சீருடையிலுள்ள இராணுவப் படையினரின் ஊதியக் காசோலைகள் தொடர்வதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

பென்டகன் வக்கீல்கள் சட்டம் அவர்களை உறுதிப்பாடு, நலன், திறனகள் மற்றும் தயார்நிலையிலுள்ள பணி உறுப்பினர்கள் அனைவருக்கும் நிறுத்தங்கள் இல்லாமல் பணி செய்ய சட்டம் அனுமதிக்கிறது என்று கூறியுள்ளனர் என்றார்.

400,000 நிறுத்தப்பட்ட அரசாங்க ஊழியர்களில் கிட்டத்தட்ட 350,000 பென்டகன் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் படையின் உணவுப்பிரிவு, ஊதியப் பிரிவு, நிர்வாகம், சுகாதாரப்பாதுகாப்பு, விநியோக தொடர், ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் உளவுத்துறை செயல்கள் ஆகியவை அடங்கும்.

காங்கிரசில் குடியரசு மற்றும் ஜனநாயக உறுப்பினர்கள் இருவரும் ஹேகலின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தனர். இடைக்கால உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் ராண்ட் பீர்ஸும் இதைப் பின்பற்றி தானும் கடலோர பாதுகாப்புப்படையின் அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் பிற DHS நிறுவனங்களின் ஊழியர்களை சட்டத்தின் இதே விளக்கப்படி மீண்டும் வேலைக்கு அழைப்பதாக தெரிவித்தார்.

இதன் விளைவு மத்திய அரசின் மூடல் என்பது இராணுவம், பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் உள்நாட்டு ஒற்றுவேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சமூகநலப்பணிகளிலும் மற்றும் நிதியச் சந்தைகளில் இருந்து கொலைக்கூடங்கள் வரை அவற்றின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் அதன் அமைப்புக்களில் பேரழிவான விளைவுகளை கொண்டிருக்கும்.