சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

IMF report points to deepening recessionary trends in global economy

சர்வதேச நாணயத்தின் அறிக்கை உலகப் பொருளாதாரத்தில் ஆழமான மந்தநிலை போக்குகளை சுட்டிக்காட்டுகிறது

Nick Beams
10 October 2013

Use this version to printSend feedback

செப்டம்பர் 2008 ஆண்டு உலக நிதிய நெருக்கடி வெடித்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) வெளியிடப்பட்ட சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (World Economic Outlook -WEO) அறிக்கையின்படி, உலகப் பொருளாதாரம், நெருக்கடிக்கு முந்தைய பொருளாதார வளர்ச்சிக்கு திரும்பும் வாய்ப்பு, முன்னைவிட இன்னும் தொலைவில்தான் உள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது.

இந்த அறிக்கையானது, IMF மற்றும் உலக வங்கியின் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் வருடாந்த கூட்டத்திற்காக தயாரிக்கப்பட்டது. இவற்றில் அமெரிக்காவின் செலுத்துமதியின்மை என்னும் அச்சுறுத்தல் விவாதங்களின் முக்கியமாக உள்ளது. அவ்வாறான நிகழ்வு, ஒரு உலக நிதிய நெருக்கடி, அமெரிக்காவையும் உலகப் பொருளாதாரத்தையும் மந்தநிலையில் தள்ளிய லெஹ்மன் பிரதர்ஸ் திவாலை தொடர்ந்து ஏற்பட்டதைவிட ஆழமாக இருக்கும் என்னும் எச்சரிக்கைகளும் உள்ளன.

செலுத்துமதியின்மை நிலை தவிர்க்கப்பட்டாலும்கூட, IMF அறிக்கையானது உலகப் பொருளாதாரத்தின் தொடர்ந்த நிலைமுறிவை சுட்டிக்காட்டுகிறது. உலக வளர்ச்சியானது நலிவடைந்துள்ளது, ஆபத்துக்கள் கீழ்நோக்கி செல்லும் தன்மையைத்தான் கொண்டுள்ளன, எழுச்சி பெற்றுவரும் சந்தைகள் அமெரிக்க வட்டி விகிதங்கள் உயர்ந்தால் நிதியப் பிரச்சனைகளை முகங்கொடுக்கும், உலகப் பொருளாதாரம் முழுவதும் இது இடக்கடரடக்கலாக குறிப்பிடப்படும் தடைப்பட்ட நடுத்தர வளர்ச்சியுடன் திருப்தியடையவேண்டியிருக்கும்”  என குறிப்பிட்டது.

உண்மையில், உலகப் பொருளாதாரம் முழுவதின் நிலைமையின் குறிப்பானது அறிக்கையின்படி, “உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துதல் முக்கியமாக அமெரிக்காவிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.” ஆனால் அமெரிக்க வளர்ச்சி 2013இல் 1.9% ஆக வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய IMF மதிப்பீடுகளிலிருந்து 2014 இல் 2.7% ஆக உயரலாம் என்றாலும் 0.2% கீழ்நோக்கிய திருத்தலாகும். இது வேலையின்மை உயராமல் இருக்க வேண்டும் என்றால் பொதுவாகக் கருதப்படும் தேவையாக இருக்கும் 3% விகிதத்திற்கும் குறைவானதாகும்.

IMF ஆய்வின் மிக முக்கியமான கூறுபாடு எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் எனப்படுபவற்றில் குறிப்பான மெதுவான அதிகரிப்பு இருப்பதுதான்; தமக்கிடையே இவை கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் மொத்த வளர்ச்சியில்  மொத்தத்தில் முக்கால் பகுதியைக் கொண்டிருந்தன.

இப்பிராந்தியங்கள் உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய அடிதளத்தை வழங்க முடியும் என்ற கூற்றுக்களுக்கு இட்டுச்சென்றது. ஆனால் இந்த அறிக்கை அத்தகைய அறிக்கைகளை பயனற்றதாக செய்துள்ளதுதுடன் மற்றும் எழுச்சிபெற்றுவரும் சந்தைகளில் மற்றும் வளர்ச்சியடையும் பொருளாதாரங்களில் வளர்ச்சி இந்த ஆண்டு 4.5% தான் இருக்கும் என குறிப்பிடுகின்றது. இது 2014 இல் 5.1% இருக்கும் என்றும், இது மூன்று மாதங்களுக்கு முன்பு கணிக்கப்பட்டிருந்த வளர்ச்சியிலிருந்து முறையே 0.5% மற்றும் 0.4% கீழ்நோக்கிய சரிவாகும்.

கடந்த மாதம் ஐ.நாவின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி மாநாட்டில் (UN Conference on Trade and Development - UNCTAD) வெளியிடப்பட்ட அறிக்கை செயற்பாட்டின் அடித்தளத்திலுள்ள நீண்டகால காரணிகளை சுட்டிக்காட்டியுள்ளது. எழுச்சி பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்கள் வளர்ச்சிக்கு உந்துதலழிக்க ஏற்றுமதிகளில் விரிவினை நம்பியுள்ளன. ஆனால் UNCTAD அறிக்கைப்படி, சர்வதேச வணிகம் 2008 இல் சாதிக்கப்பட்ட வளர்ச்சி விகிதங்களுக்கு இன்னும் திரும்பவில்லை, அதிகரிப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கும் எனத் தெரிகிறது.

நெருக்கடிக்கு முந்தைய ஏற்றுமதி வளர்ச்சியில் அதிகரிப்பு, “நிலையற்ற உலகத் தேவை மற்றும் நிதிய வடிவமைப்பில் தங்கியிருந்தது என இது எச்சரிக்கிறது. மேலும் இப்பொழுதுஉலகப் பொருளாதாரத்தில் கட்டுமான மாற்றம் ஏற்பட்டுள்ளது”, இது முந்தைய விருப்பத் தேர்வுகளை ஒதுக்கிவிட்டது என்றும் எச்சரித்துள்ளது.

இந்தக் கட்டுமான மாற்றத்தின் தன்மை உலக வணிகத்தின் நீண்டக்காலப் போக்குகளால் குறிப்பிடப்படுகிறது. போருக்கும் பிந்திய காலம் முழுவதும் உலக வணிகத்தின் வளர்ச்சி உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியை போல் இரு மடங்கு இருந்தது. ஆனால் 2008ம் ஆண்டிலிருந்து உலக வணிகம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சற்றே குறைவான விகிதத்தில்தான் வளர்ந்துள்ளது; இது எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள் முகங்கொடுக்கும் சவால்களை, ஏற்றுமதி வணிகத்தின் விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது.

இப்போக்குகள் IMF உடைய வளர்ச்சிக் கணிப்புக்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. முன்னேறிய பொருளாதாரங்களில் வளர்ச்சி இந்த ஆண்டு 1.2% தான் இருக்கும், 2014ல் 2% தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோப் பகுதி 2014ல் 1% வளர்ச்சியை மட்டுமே கொள்ளும் எனக் கணிக்கப்பட்டுள்ளது; இந்த ஆண்டு 0.4% சுருக்கம் அடையும்.

IMF கணிப்புக்களான உலகப் பொருளாதார வளர்ச்சி 2013 இல் 2.9% இருக்கும் என்பது நான்கு ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவாகும்.

இது எழுச்சி பெற்றுவரும் சந்தைகளினதும் அபிவிருத்தியடைந்துவரும்  நாடுகளின் வளர்ச்சி விகித சரிவு ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவை 2010 அளவிலிருந்து மூன்று சதவிகிதப் புள்ளிகள் குறைந்துவிட்டன; சீனா, இந்தியா, பிரேசில் ஆகியவை சரிவிற்கு மூன்றில் இரு பகுதி கொடுத்துள்ளன. இந்நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கணிக்கப்பட்டதைவிட 2016ல் 8 முதல் 14% குறைந்ததன்மை உடையதாக இருக்கும் என கருதப்படுகின்றது.

IMF இன் தலைமைப் பொருளாதார வல்லுனர் ஒலிவியே புளோஞ்சார்ட்நம்பிக்கையுடன் இருக்கக் காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளபோதிலும், உண்மையானது IMF மீண்டும் அதனுடைய உலகக் கணிப்புக்களை கீழ்நோக்கி திருத்தியுள்ளது என்பதுதான். இது கடந்த பல ஆண்டுகளாக இருக்கும் வடிவமைப்பின் தொடர்ச்சிதான்; உலகப் பொருளாதாரத்தின் ஆழமான மந்தப் போக்குகளை சுட்டிக்காட்டுகிறது.

IMF அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளபடி, “உலக வளர்ச்சி குறைந்த வேகத்தில்தான் உள்ளது”, இந்தகீழ்நோக்குக் காட்சிக்குக் காரணம் கீழ்க்கண்ட நிகழ்வுகளாக இருக்கலாம்: ஐரோப்பாவில் தொடர்ந்து நலிந்த முதலீடு; எழுச்சி பெற்றுவரும் சந்தைகள் மற்றும் சீனாவில் இன்னும் வளர்ச்சிக் குறைவு. ஏபே இன் அரசாங்கத்தின் நிதியக் கொள்கைகள் ஜப்பானிய பொருளாதாரத்திற்கு ஒரு நீண்டகால ஏற்றம் கொடுப்பதில் தோல்வியுற்றுள்ளது; கூட்டரசு மத்திய வங்கிக் குழு தன்னுடைய சொத்துக்கள் வாங்குவதை வெட்டத் தொடங்குகையில், அமெரிக்காவில் நிதி நிலைமை இறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி கருவூலப் பத்திரங்கள் வாங்குவதை குறைக்கும் முடிவின் உலகப் பொருளாதாரப் பாதிப்பு திங்களன்று IMF வெளியிட்ட கொள்கை வெள்ளை அறிக்கையின் பொருளாக இருந்தது. “அதிக பணத்தை அச்சடித்துவிடும் திட்டத்தின் கீழ் நிதிய ஊகத்தினர் அமெரிக்காவில் கிடைத்த குறைந்த வட்டி நிதிகளை எழுச்சி பெற்றுவரும் சந்தைகளில் முதலீடு செய்து அதிக இலாபத்தை அடைய முயன்றனர். ஆனால் இதுபடிப்படியாக குறைவது அமெரிக்காவில் வட்டி விகிதங்களை உயர்த்தும். அது இந்நிதிகள் சந்தைகளிலிருந்து வெளியேற வகை செய்யக்கூடும். “இச்சிக்கலுக்கு மறுவிலை என்பது முதலீட்டாளர்கள் ஊக நிலைப்பாடுகளை மேற்கொள்ளத் தூண்டும், அதுவும் குறிப்பாக இவை குறுகிய கால நிதியத்திற்கு ஆதாயம் கொடுக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டால் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

இது முக்கிய மூலதனப் வெளிப்பாய்வுகளுக்கு வகை செய்வதுடன், சர்வதேச அளவில் விரைவில் பரவக்கூடிய நிதிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

WEO அறிக்கையானது பாதகமான பின்னூட்டக் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளது, குறிப்பாக கடன் உந்துதல் கொண்ட வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநிதியை அதிகம் நம்பிய பொருளாதாரங்களில். மத்திய வங்கித் தலைவர் பென் பெர்னன்கே மே மற்றும் ஜூன் மாதங்களில் கொடுத்த அறிக்கைகளின்படி, மத்திய வங்கி அதிக பணத்தை அச்சடித்துவிடுவதை குறைப்பது என்பதை பரிசீலிக்கிறது; இதையொட்டி இந்தோனேசியா 4.3 சதவிகித புள்ளி ஏற்றத்தை வட்டி விகிதங்களில் கண்டது, துருக்கி 2.2, பிரேசில் 1.2 எனக் கண்டன. இத்தகைய புள்ளிவிவரங்கள் உலகப் பொருளாதாரத்திற்கு உறுதியான அடிதளத்தை வழங்குவதற்கு பதிலாக வளர்ச்சியின் பெரும் பகுதி எழுச்சி பெற்றுவரும் சந்தைகளில் மிக அதிக அளவு உலக நிதியச் சந்தைகளின் கொந்தளிப்பு, பண பாய்வுகளைத்தான் நம்பியிருந்தது என்பது தெரியவருகிறது.

இந்த அறிக்கையானது ஆளும் உயரடுக்குகளும் அவற்றின் ஒருதொகை நிதிய வல்லுனர்கள், மத்திய வங்கியாளர்கள் மற்றும் பலவித பொருளாதார ஆலோசகர்களும் இலாப அமைப்புமுறையில் தற்போதைய முறிவிற்கு பொருளாதாரத் தீர்வு எதையும் கொடுக்கவில்லை என்ற உண்மையைத்தான் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.

பெருகிய இரக்கமற்ற முறையில் உலகம் முழுவதும் செயற்படுத்துவதற்கு, இவர்களிடத்தில் ஒரே ஒரு வேலைத்திட்டம்தான் உள்ளது: வேலைகள், சமூக நிலைமைகள் மீது என்றுமில்லாதவாறு ஆழமான தாக்குதல்களை நடத்துவதுவதாகும். சுருங்கக்கூறின், ஒரு சமூக எதிர்ப் புரட்சியை நடத்துவதாகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கமும் தன்னுடைய சொந்த மூலோபாயத்தின் மூலம்தான் இதை எதிர்கொள்ள வேண்டும். அதாவது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, அவைகளை மனித சமுதாயத்தின் தேவையை பூர்த்திசெய்ய உலகப் பொருளாதாரத்தை மறுகட்டமைக்கும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான ஆரம்பமாக இது இருக்க வேண்டும்.