சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Formation of new government drags on

ஜேர்மனி: புதிய அரசாங்கம் அமைப்பது இழுபட்டு செல்கின்றது

By Peter Schwarz
12 October 2013

Use this version to printSend feedback

மத்திய தேர்தல் முடிந்து மூன்று வாரங்களாகியும், புதிய கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுக்கள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளன. அக்டோபர் 4, வெள்ளியன்று, கிறிஸ்தவ ஜனநாய ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவை தங்கள் முதல் ஆரம்ப பேச்சுக்களை நடத்தின. இந்த வாரம் வியாழன் அன்று CDU/CSU பசுமைக் கட்சியினரை சந்தித்தன. SPD உடனான மேலதிக பேச்சுக்கள் திங்கள் அன்று திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த விவாதங்களை தொடர்ந்து கட்சிகள் பின்னர் எவற்றுடன் அவை கூட்டணி குறித்து பேச்சுக்கள் நடத்தும் என்பதை முடிவு செய்யும். இது புதிய பாராளுமன்றம் அக்டோபர் 22ல் அமைக்கப்பட்டபின் தொடங்கும். அன்று தற்போதைய மத்திய அரசாங்கம் முறையாகக் கலைக்கப்படும். ஆனால் மேர்க்கெல்லின் அரசாங்கம் ஒரு பாதுகாவலன் என்ற அடிப்படையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை நீடிக்கும். இது அடுத்த பாராளுமன்றத்தில் அதன் நுழைவதற்கான 5% வாக்குப்பதிவு இல்லாததால் தொடர முடியாது என்றாலும் தாராளவாத ஜனநாயக் கட்சியின் (FDP) மந்திரிகளுக்கும் பொருந்தும்.

புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவது பல வாரங்கள் பிடிக்கலாம். கூட்டணிப் பேச்சுக்கள் காலமெடுக்கும். அதுபற்றிய முடிவுகள் கட்சிகளின் பலகுழுக்களிலும் ஒப்புதல் பெறவேண்டும். SPD ஐ பொறுத்தவரை உறுப்பினர்கள் அதுபற்றி வாக்களிப்பர்.

CDU/CSU ஒன்றியத்திற்கு நேரடியான பெரும்பான்மைக்கு போதுமான வாக்குகள் இல்லை. எனவே அது ஒரு கூட்டணிப் பங்காளியை கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது. இதற்கு SPD அல்லது பசுமைக் கட்சியினர் பரிசீலனைக்கு வருகின்றன. SPD, பசுமைக்கட்சியினரும் மற்றும் இடது கட்சி அடங்கிய கூட்டணிக்கும் பெரும்பான்மை உள்ளது. ஆனால் இடது கட்சி அவ்வாறான கூட்டணிக்கு இடைவிடாமல் வலியுறுத்தியும்கூட இதற்கு SPD மற்றும் பசுமைவாதிகள் மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இத்தகைய கூட்டணியை பற்றி பரிசீலிக்க ஆரம்ப பேச்சுக்கள்கூட நடைபெறவில்லை.

அடிப்படையில் CDU/CSU-SPD அரசாங்கம் (கறுப்பு சிவப்பு கூட்டணி எனப்படுவதற்கு) அல்லது கறுப்பு சிவப்பு பசுமைக் கூட்டணி அமைக்க எந்தத் தடையும் இல்லை. ஆரம்பப் பேச்சுக்களுக்கு முன்னரே SPD மற்றும் பசுமைவாதிகள் இருவருமே CDU/CSU உடன் தவிர்க்க முடியாத வேறுபாடுகள் இல்லை என உதறித்தள்ளி விட்டன. தேர்தல் பிரச்சாரத்திலும் அவை இதைக் கூறியுள்ளன. செல்வந்தர்களுக்கு அதிக வரிவிதிப்புக்களை கைவிடும் விருப்பத்தை அவை அடையாளம் காட்டியுள்ளன. இதன்மூலம் வரும் நிதி முன்னதாக கல்வி, உள்கட்டுமானச் செலவுகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தன.

CDU/CSU மற்றும் SPD க்கு இடையே முதல் ஆரம்ப கலந்துரையாடலுக்குப்பின், இரு பிரிவினருமே ஒரு உடன்பாடு பற்றி அடையாளம் காணப்பட்டுள்ளது என்று வலியுறுத்தின. CDU  பொதுச்செயலர் ஹேர்மான க்ரோகே SPD உடன் கணிசமான உடன்பாடு உண்டு என்று கூறினார். தேர்தலில் குறைந்த வாக்கினை பெற்றதை தொடர்ந்து பசுமைவாதிகள் அனைத்து சமூக சீர்திருத்தக் கொள்கைகளில் இருந்தும் தம்மை ஒதுக்கி வைத்து தங்கள் வணிகச் சார்பு நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றனர். பழைமைவாத Franckfurter Allgemeine Zeitung (FAZ) பத்திரிகைகூட பசுமைவாதிகளுக்கும் ஒன்றியத்திற்கும் இடையே உள்ள பிளவு கடக்க முடியாதது அல்ல என்ற முடிவிற்கு வந்தது.

பசுமைவாதிகளின் பிரதிநிதிக்குழுவின் ஆரம்ப பேச்சுவார்த்தை உறுப்பினர்களில் பாடன் வூர்ட்டம்பேர்க் மாநிலப் பிரதமர் வின்பிரைட் கிரெட்ஸ்மான் அடங்கியுள்ளார். இவர் நீண்ட காலமாக CDU உடன் கூடியுழைக்க ஆதரவானவர். பொதுத் தேர்தலுக்குப்பின் அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பகிர்ந்து கொடுக்கப்படும் நீதி மீதான போட்டி -அது எங்கள் நிலைப்பாடாக இருக்க முடியாது. எனக் கூறினார்.

ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் உள்ள சிக்கல்கள் எனவே இரு கட்சிகளுக்கும் இடையேயான கணிசமான வேறுபாடுகளின் விளைவல்ல. மாறாக இவை அடுத்த நிர்வாகத்தை எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து எழுகின்றன. இது ஒரு புதிய சுற்று பாரிய சமூக வெட்டுக்கள் மற்றும் ஆக்கிரோஷமான இராணுவத்தை அடித்தளமாக உடைய வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். அது மக்களில் பெரும்பான்மை பிரிவுகளுடன் மோதலுக்கு இட்டுச்செல்லும்.

மத்திய அரசு குறித்த பேச்சுக்களில் அழுத்தங்கள், வேறுபாடுகள், தந்திர உத்திகள் ஆகியவை எழுந்துள்ளன. ஆனால் தேடப்படுவது எதிர்வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களை சமாளிக்கும் ஒரு அரசியல் பொறியமைப்பாகும்.

தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததைப் போலவே, மக்களுக்கு கிடைக்காமல் மறைக்கப்பட்ட முக்கிய அரசியல் பிரச்சினைகள் இப்பொழுதும் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. அல்லது குறைந்தப்பட்சம் இரண்டாம் நிலை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுத்தான் பேசப்படுகின்றன. மாறாக வாழ்க்கை முறைப் பிரச்சினைகளான ஓரினச் சேர்க்கை பங்காளிகளுக்கு சமத்துவம், மகளிருக்கு நிறுவனங்களின் மேல்மட்ட குழுக்களில் தனி ஒதுக்கீடு அல்லது எரிசக்தி கொள்கை போன்றவையே முன்னுக்கு வந்துள்ளன.

உண்மையில் யூரோ நெருக்கடியின் தீவிரம் மற்றும் தற்பொழுது மத்திய கிழக்கில் நடப்பவை போன்ற முறையான ஏகாதிபத்திய மோதல்கள்  அடுத்த அரசாங்கத்தின் செயற்பட்டியலை நிர்ணயிக்கும். செய்தி ஊடகம் பொதுவாக யூரோ நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறது. பைனான்சியல் டைம்ஸில் சமீபத்திய தலையங்கம் ஒன்று இதை ஒரு ஹைட்ராவுடன் ஒப்பிட்டுள்ளது; அது ஒரு தலை வெட்டப்பட்டால் உடனே இரு புதிய தலைகளைக் கொள்ளும். இந்நெருக்கடியை தீர்ப்பது மிக கடுமையான பணி என்று கூறியுள்ளது.

கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் விரைவில் ஒருவேள ஸ்லோவேனியா ஆகியவை புதிய பில்லியன்களை உதவியாக நாடும். ஸ்பெயினின் வங்கிகள் இன்னும் திவால்தன்மையை எதிர்நோக்கியுள்ளன. இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகியவை தங்கள் வரவு-செலவுத் திட்ட இலக்குகளை பூர்த்தி செய்வதில் இருந்து தொலைவில்தான் உள்ளன. சிறிது காலத்திற்குள் அரசாங்கப் பத்திரங்களின் வட்டிவிகிதங்கள் மீண்டும் உயரும், நெருக்கடியை அதிகரிக்கும். இதைத்தவிர, ஐரோப்பிய அரசியல்வாதிகள் அமெரிக்க வரவு-செலவுத் திட்ட நெருக்கடி குறித்து பதட்டத்துடன் திகைத்துப்பார்க்கின்றனர். அதன் பாதிப்பு ஐரோப்பிய நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

யூரோவைக் காப்பாற்றுவதற்கு CDU/CSU, SPD பசுமைக் கட்சியினர்  அனைவரும் உடன்பட்டுள்ள நோக்கம் நிதியச் சந்தைகளின் தீராத்தாகத்திற்கு புதிய பல பில்லியன் பிணையெடுப்புக்கள் தேவை. ஆனால் இம்முறை இது கடன்கள், உத்தரவாதங்கள் மூலம் சாதிக்கப்பட முடியாது. புதிய உதவித் தொகுப்புக்கள் ஜேர்மனியின் மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் நேரடி பாதிப்பைக் கொண்டிருக்கும். இதன் விளைவு புதிய சிக்கன நடவடிக்கைகளை சுமத்துதல் என்று வரும். இது நெருக்கடியுடன் தொடர்புடைய நாடுகளில் மட்டும் இன்றி ஜேர்மனியிலும்கூட.

ஜேர்மனியின் மாநில, உள்ளூராட்சி வரவு-செலவுத்திட்ட நெருக்கடியால் இந்நிலைமை இன்னும் மோசமாகிறது. அவை பெரும்பாலான சமூகநல, கல்விப் பிரச்சினைகளுக்கு நிதியளிக்கின்றன. அவற்றில் சில மோசமான கடனிலும் உள்ளன. கடன் வரம்பு அவற்றை இன்னும் சேமிக்குமாறு கட்டாயத்திற்கு உட்படுத்தி அவற்றை 2020ல் இருந்து புதிய கடன்கள் வாங்குவதையும் தடுக்கிறது. அதே நேரத்தில் ஜேர்மனியின் மாநிலங்களுக்கு இடையே நிதியளிப்பதில் சமப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் முன்னாள் கிழக்கு ஜேர்மனி மாநிலங்களுடன் ஒற்றுமை உடன்பாடு என அழைக்கப்படுவதும் விரைவில் முடியும். இதன் விளைவுகள் மாநில வரவு-செலவுத் திட்டங்களில் பில்லியன் கணக்கான யூரோக்கள் என பெரும் ஓட்டைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே இதையொட்டி நிதியப் பகிர்வில் கடுமையான மோதல்களும் மற்றும் புதிய வெட்டுக்களும் உள்ளன.

ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கு மிக்க பிரிவுகள் CDU/CSU மற்றும் SPD உடைய பெரும் கூட்டணிதான் வரவிருக்கும் சமூகப் புயல்களை எதிர்த்து நிற்க முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளன.

உதாரணமாக முதலாளிகளின் சங்கத் தலைவர் டீட்டர் குண்ட் ஏற்கனவே பகிரங்கமாக ஒரு பெரும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் உள்ள உண்மையான பெரும் சவால்களைக் காண்கையில், ஒரு பெரும் கூட்டணிதான் தேவை என நான் நம்புகிறேன் என்றார் அவர். CDU/CSU, SPD ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் பொது யூரோ உறுதிப்பாட்டு கொள்கைக்குத்தான் ஆதரவைகொடுக்கின்றன. என் கருத்தில் இக்கொள்கை வாக்காளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் தொடரப்படவேண்டும். என்றார்.

CDU வின் முதலாளிகளின் பிரிவின் தலைவரும் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவருமானகார்ல் ஜோஸப் லௌமான் பெரும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். முக்கிய பிரச்சினைகள் மற்றும் பாராளுமன்ற மேல்பிரிவில் (Bundesrat)  பெரும்பான்மை இருக்கையில், இவ்வாறான கூட்டணிக்கு தக்க காரணங்கள் உள்ளன என்று அவர் தொலைக்காட்சி நிலையமான WDR  இடம் கூறினார்.

தங்கள் பங்கிற்கு பசுமைவாதிகள் சமூகநலச் செலவுகளில் கடுமையான வெட்டுக்களை ஏற்கத் தயாராக உள்ளனர். ஆனால் SPD இற்கு இன்னும் பெரிய அமைப்பு உள்ளது. இது ஜேர்மனியில் 16 மாநிலங்களில் 9 அரசாங்கங்களுக்கு தலைமை தாங்குகிறது; தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. எனவே பசுமைவாதிகளைவிட அது சமூக எதிர்ப்பை ஒடுக்க நல்ல திறனைக் கொண்டுள்ளது.

ஆனால் பெரும் கூட்டணி ஓர் ஆபத்து நிறைந்த நிலைப்பாடு என்று கருதுவோரும் உண்டு: ஏனெனில் அதன் கொள்கைகளுக்கு எதிரான எழுச்சி என்பது புதிய பாதைகளைக் காண முற்படும். அச்சூழலில் பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சியின் உத்தியோகபூர்வ எதிர்த்தரப்பு என்பது பாராளுமன்ற உறுப்பினர்களில் 17% எனக் குறைந்துள்ளதால் இது எதிர்ப்பை பாதிப்பில்லாத திசையில் திசைதிருப்ப இயலாதுபோய்விடும். பசுமைவாதிகளும் இடது கட்சியும் பரந்தளவில் SPD உடனும் ஒன்றிய கட்சிகளுடனும் அரசியல்ரீதியாக ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கும்போது இது இன்னும் உண்மையாகிறது.

எனவே FAZ ஐ பொறுத்தவரை கறுப்பு-பசுமைவாதக் கூட்டணி ஓர் உறுதியான கவனத்தை காட்டுகிறது. ஒன்றிய கட்சிளை பொறுத்தவரை அத்தகைய கூட்டு ஒரு பெரும் கூட்டணிக்கு நிரந்தர மாற்றீடாக இருக்கும்... இதையொட்டி பசுமைவாதிகள் ஒரு வலுவற்று இருக்கும் SPD  உடன் பிணைந்திருக்க வேண்டியதில்லை... பாராளுமன்றத்தில் முற்றிலும் செயல்திறனற்ற 17% எதிர்த்தரப்பு என்பது முற்றிலும் இயங்கு தன்மையை கொண்டிருக்காது என்று செய்தித்தாள் கூறியுள்ளது.

எதிர்கால ஜேர்மனிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்து ஒரு சொல்கூட வெளிப்படவில்லை. இங்கு முறையாக ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கவேண்டிய தலைப்புக்களின் பட்டியலில் பெரிய இடைவெளி உள்ளது.

இதுவரை Zeit, taz, Süddeutsche Zeitung, Welt போன்ற செய்தி ஊடகங்கள்தான் சிரியா இன்னும் பிற நாடுகள்மீது ஏகாதிபத்திய போர்களுக்கு கடுமையான ஆதரவிற்கு முரசு கொட்டியுள்ளன. ஜேர்மனிய மறுஐக்கிய தினத்தன்று, கூட்டாட்சி ஜனாதிபதி ஜோகாயிம் கௌவ்க் ஜேர்மனி அதன் அளவு, செல்வாக்கிற்கு ஏற்ப மீண்டும் ஐரோப்பாவிலும் உலகிலும் ஒரு பாத்திரத்தை வகிக்கவேண்டும் என்று கோரியுள்ளார். எதிர்கால அரசாங்கம், அது பெரும் கூட்டணியானாலும் கறுப்பு-பசுமை கூட்டணியானாலும் இந்த அழைப்பை பின்பற்றும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.