சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU tightens barriers against migrants after Lampedusa tragedy

லம்பேடுசா சோகத்திற்குப்பின் ஐரோப்பிய ஒன்றியம் புலம்பெயர்வோர்களுக்கு எதிரான தடைகளை இறுக்குகிறது

By Martin Kreikenbaum 
16 October 2013

Use this version to printSend feedback

300 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்ட லம்பேடுசா கடலோரப் பகுதியில் மூழ்கிய படகின் சிதைவுகளிலிருந்து எல்லா சடலங்களும் அகற்றப்படுவதற்கு முன்பே, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதனுடைய வெளிப்புற எல்லைகளிலிருந்து வருபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இறுக்குவதற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழனன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெரிய பெரும்பான்மை ஒன்று ஐரோப்பிய எல்லைக் கண்காணிப்பு முறை (Eurosur) திட்டத்தை ஏற்றது. இதில் உயர் தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் ஐரோப்பாவில் நுழையும் புலம்பெயர்வோர்களை தடுக்கும் பிற நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன.

கடந்த செவ்வாயன்று உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரிகளின் மாநாடு ஒன்று ஜேர்மனியின் உள்துறை மந்திரி Hans-Peter Friedrich  உடைய கோரிக்கையான ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கொள்கையில் மாற்றம் ஏதும் கூடாது என்பதை ஏற்றது. சில செய்தி ஊடகங்கள் சட்டபூர்வ வாய்ப்புக்கள் ஆப்கானிஸ்தான், சிரியா, ஆபிரிக்கா, பாக்கிஸ்தான் போர்களிலிருந்து வரும் அகதிகளுக்கு அளிக்கப்படலாம் என்னும் கருத்துக்களை உதறித்தள்ளியதுடன், டப்ளின் II உடன்படிக்கையில் மாற்றங்களையும் நிராகரித்தது.

டப்ளின் II உடன்பாடானது அகதிகள் அவர்கள் எந்த நாட்டிற்கு முதலில் வருகிறார்களோ அங்குத்தான் தஞ்சத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புலம்பெயர்ந்தோரை பெரிய அளவில் வெளியேற்றுவதற்கு வழிகாட்டுகிறது; இது தஞ்சம் கோருவோருக்கு தங்கள் விண்ணப்பத்தை பற்றி ஒரு பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பும் இல்லாமல் போகிறது.

வெள்ளியன்று மற்றொரு கப்பல் லம்பேடுசாவிற்கு அருகில் கவிழ்ந்து, 50 க்கும் மேற்பட்ட இறப்புக்களை ஏற்படுத்தியது. சில முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகள் 400 அகதிகளுக்கும் மேல் மூழ்கியது குறித்து முதலைக்கண்ணீர் வடித்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடைய தஞ்சக் கொள்கையை தளர்த்துவது குறித்த கருத்துக்களை நிராகரித்துவிட்டது.

Eurosur திட்டமானது ஐரோப்பிய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது, அதன் செயற்பாட்டை டிசம்பரில் ஆரம்பிக்கவுள்ளது. இது ஐரோப்பாவின் வெளிப்புற எல்லைகளை டிரோன்கள், செய்மதி தேடல் முறைகள், கடலோரத்திற்கு அப்பால் தடைகள், உடல்முறை அடையாள பரிசோதனைகளை “சட்டவிரோதமாக” பயணிப்பவர்களுக்கு எதிராக நடத்துதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Eurosur இடமிருந்து கிடைக்கும் தகவலானது Frontex எல்லைப் பாதுகாப்பு அமைப்பிற்கு அனுப்பப்படும்; இது நடவடிக்கைகளை புலம்பெயர்வோர் படகுகளை, அவைகள் ஐரோப்பாவை அடையும் முன்னர் தடுத்து நிறுத்தி ஆபிரிக்காவிற்கும் மீண்டும் அனுப்பும் வகையில் செயற்படும்.

நூற்றுக்கணக்கான புலம்பெயர்வோர் மத்தியதரைக்கடலில் இறந்தபின், ஐரோப்பிய ஒன்றிய குடிவரவு ஆணையாளரான செசிலியா மாம்ஸ்ட்ரோம் Eurosur என்பது கடலில் உயிர்களைக் காப்பாற்ற ஒரு முன்னேற்றகரமான முறை என்று அதை விற்க முயன்றார். இது ஒரு வெட்ககரமானதாகும். ஏற்கப்பட்ட ஒழுங்குமுறையின் பொருளுரை Eurosur இன் நோக்கம் சட்டவிரோதக் குடியேற்றத்தையும் எல்லை கடந்த குற்றங்களையும் கண்டுபிடித்துத் தடுத்தல் என்று கூறுகிறது.

Eurosur ஐரோப்பிய ஒன்றியத்துடன் நின்றுவிடவில்லை. இதற்கு வெளியேயுள்ள நாடுகளும் தீவிரமாக அகதிகளைத் துரத்துவதில் ஈடுபடுத்தப்படும். ஏற்கனவே லிபிய அரசாங்கத்துடன் டிரோன்கள், செய்மதிகள் கண்காணிப்பிற்குப் பயன்படுத்துவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தலின் பேரில் துனிசியா, அல்ஜீரியா மற்றும் எகிப்தும் Eurosur பங்குபெறும்.

Eurosur இனால் 2020 ஐ ஒட்டி 340 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது; திறனாய்வாளர்கள் 1 பில்லியன் யூரோக்கள் என மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். மனித சமூக அறிவியலாளர் ஹான்ஸ் லுக் கண்காணிப்புத் திட்டத்தை நியூ யோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரையில் பாதுகாப்பு வெறியர்கள் மற்றும் சர்வதேச ஆயுதத் தயாரிப்பு பெருநிறுவனங்களின் கனவு எனப் பொருத்தமாக விவரித்துள்ளார்.

ஆனால் Eurosur புலம்பெயர்பவர்களுக்கு ஒரு கெட்ட கனவு போல் இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளை கட்டமைத்தல் என்பதற்கு இவை சிறிய, அதிக கடலில் மிதக்க முடியாத படகுகள் பயன்பாடு என்று பொருள், இவை ஆபத்தான, சுற்றுப் பாதையைப் பயன்படுத்துபவை. ஐரோப்பாவிற்கு உயிருடன் மறைவாக சென்றுவிடுவதிலுள்ள ஆபத்து அதிகமாகும். ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஆபிரிக்காவில் போரில் பங்கு பெறுவதின் மூலம் மக்களை பலவந்தமாக வெளியேறச் செய்தாலும் கூட, ஒருவருடைய வாழ்க்கை விரைவாக உயருவதற்கு ஐரோப்பாவிற்கு தப்பிக்கும் ஒரு முயற்சி அதிக விலையைக் கொடுக்கிறது.

புலம்பெயர்வோருக்கு எதிரான மற்றும் சட்டவிரோதமாக குடியேறுவோர் என்று அழைக்கப்படுவோருக்கு எதிரான போராட்டம் என்பதற்கு அனைத்து ஐரோப்பிய முக்கியக் கட்சிகளின் பரந்த ஆதரவுள்ளது. கடின உள்ளம் படைத்த ஜேர்மனியின் உள்துறை மந்திரி Friedrich போன்றோர் மட்டும் படகு நிறைந்துள்ளது என்னும் கோஷத்தை மீண்டும் மீண்டும் கூறவில்லை. பிரித்தானியாவில் தொழிற் கட்சித் தலைவர் மிலிபாண்ட் குடியேற்ற எதிர்ப்பு உணர்விற்கு ஊக்கம் கொடுத்துள்ளார்; பிரான்ஸில் சோசலிஸ்ட் கட்சியின் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் ரோமா குடியிருப்புக்களை அவர்களை கட்டாயமாக வெளியேற்றுவதின் மூலம் அகற்ற முற்படுகிறார்.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில், சமூக ஜனநாயகவாதிகள் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளுடனும் கன்சர்வேடிவ்களுடனும் இணைந்து Eurosur திட்டத்திற்கு வாக்களித்தனர். ஜேர்மனிய SPD உடைய பிரதிநிதியான Birgit Sippel, Eurosur தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் புலம்பெயர்பவர்கள் ஐரோப்பாவை பாதுகாப்பாக நுழையவைக்கும் ஒரு வாய்ப்பு என்று புகழ்ந்தார். ஏனெனில் கடலில் உயிர்கள் மடிவதைத் தடுப்பது Eurosur இன் கூடுதல் நோக்கங்களில் ஒன்றாகும்.

பசுமைக் கட்சிப் பிரிவானது Eurosur கட்டுப்பாட்டிற்கு எதிராக வாக்களித்தாலும், இது கொள்கை அடிப்படையில் அல்ல; மாறாக அவர்கள் தங்களுடைய வரைவு திட்டத்தில் தோற்றுவிட்டனர்; அதில் அவர்கள் புலம்பெயர்வோரை மீட்பதற்கான பொருளுரையில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். பசுமைவாதிகள் ஐரோப்பிய எல்லைகளில் இராணுவக் கட்டமைப்பை மறைக்க மனிதாபிமான அத்தி இலையைப் பயன்படுத்துகின்றனர்; இது ஐரோப்பிய ஒன்றியத்தின் புலம்பெயர்வோருக்கு எதிரான வன்முறையிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகும்.

பசுமைவாதிகளின் பிரதிநிதியான Franziska Keller, Frontex  கூடுதலாக மனித உரிமைகளை நிலைநிறுத்தும் என நம்புவதாகக் கூறினார்; ஏனெனில் 2011ல் ஒரு மனித உரிமை ஆணையாளர் கொண்டுவரப்பட்டுள்ளார். இவர் ஐரோப்பிய எல்லை ஆணையம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்; இது எல்லைப் பாதுகாப்புப் பொறுப்புக்களை நல்லமுறையில் ஒருங்கிணைக்கும்.

உண்மையில் சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைவாதிகளும் அகதிகளை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்துவதற்குக் கணிசமான பொறுப்பை உடையவை. 2004ம் ஆண்டில் Frontex நிறுவப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; அந்த ஆண்டில்தான் சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைவாதிகளும் பேர்லினில் அரசாங்கத்தில் இருந்தனர்.

SPD இன் உள்துறை மந்திரியான Otto Schily பசுமைக் கட்சியின் ஆதரவுடன் இன்று Frontex இற்கு நடைமுறைத் தளத்தைக் கொடுத்துள்ள பொருளுரையைக் கிட்டத்தட்ட ஆணையிட்டார். அப்பொழுது முதல் நம்பிக்கையான ஆதாரங்கள் 10,000 புலம்பெயர்ந்தோர் மத்தியதரைக்கடலில் மூழ்கிவிட்டனர் என மதிப்பிட்டுள்ளன. தகவல் அறிவிக்கப்படாத எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

 பாதுகாப்பான மூன்றாவது அரச ஒழுங்குமுறை புலம்பெயர்வோரை அவர்களுடைய நாட்டிற்கு கட்டாயமாகத் திருப்பு அனுப்புவதும் சமூக ஜனநாயகவாதிகளால் கொண்டுவரப்பட்டதாகும். அவர்கள் ஜேர்மனியில் 1993ம் ஆண்டு அரசியலமைப்பில் அத்தகைய திருத்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர்; இது தஞ்சம் கோருவோர் வீடுகள் வலதுசாரிக் குண்டர்களால் தீ வைக்கப்பட்டபின் நடைபெற்றது.

 பாதுகாப்பான மூன்றாவது அரச ஒழுங்குமுறையானது டப்ளின் II உடன்பாட்டையும் ஆதரித்து ஒரு முன்மாதிரி போல் விளங்கி ஐரோப்பா முழுவதும் புலம்பெயர்வோரை மட்டமாக நடத்த ஊக்கம் கொடுக்கிறது. புலம்பெயர்வோர் பொருளாதாரக் குடியேறுவோர் என முத்திரையிடப்படுவதுடன் போலியாகத் தஞ்சம் நாடுவோர் என்றும் கூறப்படுகின்றனர். இவ்வகையில் குடியேற்ற எதிர்ப்புக் கருத்துக்களும் வலதுசாரி நிலைப்பாடுகளும் ஊக்கம் பெறுகின்றன; இவைகள் நவ-நாசிச குழுக்களுக்கு ஏற்றம் கொடுத்து அரசியல் சூழலை வலதிற்கு நகர உந்துதல் கொடுக்கின்றன.