சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French neo-fascists win Brignoles local by-election Brignoles  

உள்ளூர் இடைத் தேர்தலில் பிரெஞ்சு நவ-பாசிஸ்ட்டுக்கள் வெற்றி

By Pierre Mabut and Alex Lantier 
14 October 2013

Use this version to printSend feedback

ஞாயிறன்று நவ-பாசிச தேசிய முன்னணி (FN) வேட்பாளர் லோரன்ட் லோப்பெஸ் (Laurent Lopez) மார்சேயிக்கு 90 கி.மீ. கிழக்கே உள்ள Brignoles தொகுதி உள்ளூர் தேர்தலில் வெற்றிபெற்று, ஒரு அவமானகரமான தாக்குதலை ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிற்கு கொடுத்தார்.

சோசலிஸ்ட் கட்சி, ஹாலண்டின் போர்கள் சிக்கன நடவடிக்கைகளின் செல்வாக்கற்ற தன்மையினால் தொடர்ந்து கருத்துக் கணிப்புக்களில் சரிவைச் சந்திக்கையில், Brignoles இடைத்தேர்தல் அடுத்த வசந்தகால நகராட்சி தேர்தல்களில் PS தோல்வி அடையலாம் என்பதின் முன்நிழலாகக் காணப்படுகிறது.

54% வாக்குகளை லோப்பெஸ் பெற்றார், இது கன்சர்வேட்டிவ் UMP உடைய காத்திரின் டெல்சேர்ஸின் 46%க்கு எதிரானதாகும். இச்சிறுநகரம் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) மேலாதிக்கத்திற்கு உட்பட்டது.

லோப்பெஸ் அக்டோபர் 6 வாக்கெடுப்பில் முதல் சுற்றில் முதலாவதாக வந்து 40.4% வாக்குகளைப் பெற்றார்; இதில் நகரத்தின் 20,728 பதிவு செய்த வாக்காளர்களில் 66.65 வீதத்தினர் வாக்களிக்கவில்லை. PCF இன் வேட்பாளர் லோரன்ட் கரத்தலா (Laurent Carratala), PS மற்றும் குட்டி முதலாளித்துவ “இடதின்” உடைய ஆதரவைப் பெற்றார்; ஆயினும் அவமானகரமான முறையில் 14.6% பெற்று, மூன்றாம் இடத்தை அடைந்து, இரண்டாம் சுற்றில் இருந்து அகற்றப்பட்டார்.

இது முதலாளித்துவ “இடதிற்கு” பெரும் அதிர்ச்சி அலையைக் கொடுத்தது; FN  உடைய பாதையைத் தடுக்க அது அனைத்துக் கட்சிகளின் “குடியரசு முன்னணி” (Front républicain) க்கு முறையிட்டது. இது UMP வேட்பாளருக்கு இசைவு கொடுப்பதாகும். Brignoles வாக்காளர்கள், பிரான்சின் மரபார்ந்த கட்சிகள் ஆழ்ந்த இழிவில் உள்ளன என்பதற்கு தெளிவான அடையாளத்தை தெரிவித்துள்ளனர். சற்றே அதிகமான 45% வாக்குப் பதிவில் வாக்களார்கள் இரண்டாம் சுற்றில் லோப்பெசுக்கு பெரும்பான்மையை கொடுத்துள்ளனர்.

Brignolles இல் லோப்பெசின் வெற்றி, பரந்த முறையில் FN க்கு ஆதரவு என்னும் எழுச்சியின் ஒரு பகுதி என்பது தெளிவு. கடந்த வாரம் Le Nouvel Observateur நடத்திய கருத்துக் கணிப்பு, அடுத்த மார்ச் நகராட்சி தேர்தல்கள் மற்றும் ஜூன் மாத ஐரோப்பிய தேர்தல்களில் FN வாக்குகளை பெறும் என்ற நிலையைக் காட்டியது. இரண்டு தனித்தனி கருத்துக் கணிப்புக்களில் வாக்காளர்களில் 24% தாங்கள் FN க்கு வாக்குப் போடுவதாகக் கூறியுள்ளனர்; இது அக்கட்சிக்கு மற்ற கட்சிகளை விட வாக்கு விருப்பத்தில் முன்னணியைக் கொடுத்துள்ளது.

PS, 21%ல் இருந்து இப்பொழுது 19% எனக் குறைந்துள்ளது. FN உடைய ஆதரவின் பெரும்பகுதி மரபார்ந்த வகையில் அதிருப்தியுற்ற வலதுசாரி UMP வாக்காளர்களிடம் இருந்து வந்துள்ளது என்றாலும், அது இப்பொழுது, PS இன் அதிருப்தியுற்ற வாக்காளர்களிடம் இருந்தும் ஆதரவைப் பெறுகிறது. PS, 2012 ஜனாதிபதித் தேர்தலில் இருந்து அதன் வாக்குகளில் 11 வீதத்தை FN க்கு இழந்துள்ளது என்று இதே கருத்துக் கணிப்பு கூறுகிறது.

PCF உம் அதன் இடது முன்னணிக்குள் இருக்கும் நட்பு அமைப்பான இடது கட்சி (Parti de gauche -PG) இன் தலைவர் ஜோன் லூக் மெலோன்ஷோன் (Jean-Luc Mélenchon) ம் தோல்விக்கான காரணம் அனைத்தையும் ஹாலண்டின் மீது சுமத்தியுள்ளனர். ஒரு தலையங்கத்தில் ஸ்ராலினிச செய்தித்தாள் l”Humanite, கரத்தலாவின் தோல்வி,தொழிலாளர்களின் வாக்குப்போடாத தன்மையுடன் தொடர்பு கொண்டுள்ளதுஇடதில் இது மிக அதிகம்— இது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு, அதாவது ஏழைகளில் இருந்து எடுத்து பணக்காரர்களுக்கு கொடுத்ததற்கு தண்டணை.” என உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.

மெலோன்ஷோன் Brignoles தோல்விக்கு ஹாலண்டின் சிக்கனக் கொள்கைகள்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். “இராஜிநாமா, அமைப்புச் சிதைவு இவற்றினால் FN ஆதாயம் அடைகிறது; ஏனெனில் அதன் வாக்குகளின் முக்கிய ஆதாரம், ஜனாதிபதி அரண்மனையாக உள்ளது” என்றார் அவர்.

இது அவர்களுடைய சொந்தப் பொறுப்பை தட்டிக்கழிக்கும் இழிந்த முயற்சியாகும்: PCF, PG இரண்டும் தொடர்ந்து சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவைக் கொடுத்தன, ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுத்தன, அவர் “தீவிரமான” கொள்கைகளை ஏற்க அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற போலித்தோற்றங்களை வளர்த்தன. ஹாலண்டிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் வளர்வதை தடுக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன, முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான தொழிலாளர்களின் இடது நோக்கிய இயக்கத்தின் கழுத்தை நெரித்தன.

Brignoles இடைத்தேர்தல்,குடியரசு முன்னணி” அழைப்பின் அரசியல் திவால் தன்மைக்கு மற்றும் ஒரு நிரூபணம் ஆகும்; இது தொழிலாள வர்க்கத்தை வலதுகளுடனும், முழு முதலாளித்துவ “இடது” களுடனும் பிணைக்க முற்படுகிறது. இது, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் போலி இடது ஆதரவாளர்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ரீதியாக சுயாதீனமான இயக்கம் ஒன்றால்தான் FN இன் எழுச்சியை தடுக்கமுடியும் என்று காட்டுகிறது.

குடியரசு முன்னணி”யின் அழைப்பு வலதுசாரி UMP க்கு ஒப்புதல் என்ற நிலைப்பாட்டைக் கொடுக்கிறது; அதே நேரத்தில் UMP யின் அதிகாரிகள் முன்னாள் பிரதம மந்திரி பிரான்சுவா ஃபியோன் போன்றோர் FN உடன் அரசியல் உன்பாட்டிற்கான வாய்ப்புக்களை ஆராய்கின்றனர். (See: French Gaullist UMP party moves closer to neo-fascist National Front )

முதலாளித்துவ “இடது” கட்சிகளின் பிற்போக்குத்தனக் கொள்கைகள், பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்கு அவற்றை பெருகிய முறையில் FN இடம் இருந்து பிரிக்க முடியாத நிலையில் வைத்துள்ளன. ஹாலண்ட் நிர்வாகம்கிரேக்கப் பிரதமர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ, ஸ்பெயினின் பிரதமர் ஜோஸ் லூயி சபாத்தேரோ, ஜேர்மனிய சான்ஸ்லர் கெராட் ஷ்ரோடர் போல்— ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்த செயல்படுத்தியுள்ளது.

சிரியா மீது போர் வெறித்தன நிலைப்பாட்டை ஹாலண்ட் கொண்டிருந்தார், இதற்கு பல்வேறு அளவுகளில் வெளிப்படையான ஆதரவுகள் PCF மற்றும் குட்டி முதலாளித்துவ, முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியிடம் (NPA) இருந்து கிடைத்தது. மேலும் PS இன் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸின் ரோமாக்கள் எதிர்ப்பு என்னும் நச்சும், முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளும்FN உடைய வாக்காளர்களை ஈர்க்கும் வடிவமைப்பு கொண்டவை— PS உடைய கொள்கைகள் மேலும் வெளிப்படையாக FN வளர்த்த பேரினவாத மற்றும் இனவெறிக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டிருந்தன என்பதை காட்டுகிறது.

உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியினால் உந்தப்பெற்றுள்ள முழு பிரெஞ்சு அரசியல் நடைமுறையும் பெருகிய முறையில் ஒரு நவ-பாசிச தன்மையைத்தான் கொண்டுள்ளது.

சோசலிஸ்ட் கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகுகையிலும், PCF இன் ஸ்ராலினிஸ்ட்டுக்கள், சோசலிஸ்ட் கட்சியுடன் ஒரு கூட்டுப்பட்டியலில் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். PCF அதன் நீண்டகால அரசியல் சரிவில் இருந்து தப்பிப் பிழைக்க சோசலிஸ்ட் கட்சியைத்தான் நம்பியுள்ளது, அதன் 6,000 தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் அதிகாரிகளை காப்பாற்ற அதன் சோசலிஸ்ட் கட்சி உடனான கூட்டணியை நம்பியுள்ளது; சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கிறது, அதே நேரத்தில் நேர்மையற்ற முறையில் இலேசான விமர்சனங்களை அதற்கு எதிராக வெளியிடுகிறது.

NPA செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ முறையாக “குடியரசு முன்னணியில்” சேர்ந்து UMP Brignoles இல் தேர்ந்தெடுக்க மறுத்துவிட்டார்; ஆனால் 2002ல் UMP ஜனாதிபதி சிராக்கிற்கு ஆதரவை அளித்திருந்தார். ஆயினும்கூட அவர் PS உடனும் PCF உடனும் பகிரங்கமாக “ஒற்றுமைக் கூட்டங்களில்” உடன்பாட்டை தொடர்கிறார். FN உடன் நேரடியாக மோதும் இடங்களில் சோசலிஸ்ட் கட்சிக்கு தன்னுடைய ஆதரவு தேர்தல்களில் உண்டு என்பதை பெசன்ஸநோ முற்றிலும் தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.