சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

Asylum seekers set up camps in German cities

Berlin: “Refugees continue to die due to the NATO war in Libya”

தஞ்சம் கோருவோர் ஜேர்மனிய நகரங்களில் முகாம்களை அமைக்கின்றனர்

பேர்லின்: “லிபியாவில் நேட்டோப் போரினால் அகதிகள் தொடர்ந்து இறக்கின்றனர்”

By Sven Heymanns and Stefan Steinberg 
18 October 2013

Use this version to printSend feedback


எதிர்ப்பாளர்கள் பேர்லினில் உள்ள
தங்கள் முகாம் முன்பு ஒரு பதாகையை ஏந்துகின்றனர்
.

நூற்றுக்கணக்கான அகதிகள் இத்தாலிய மத்தியதரைக்கடல் தீவான லம்பேடுசாவிற்கு அருகே மூழ்கி இறந்த இரண்டு வாரங்களுக்குப்பின், ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான தன்மை அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. அனைத்து அரசியல்வாதிகளும் மத்தியதரைக் கடலை கடக்கையில் தங்கள் உயிர்களை இழந்துவிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி குறித்துப் போலிக் கொடூர உணர்ச்சியை காட்டுகின்றனர். அதே நேரத்தில், அகதிகளையும் மற்றும் தொழிலாள வர்க்கம் முழுவதையும் மிரட்டும் விதத்தில், அவர்கள் “ஐரோப்பியக் கோட்டையின்” எல்லைக்கு வந்துவிட்ட தப்பியவர்களை கொடுமையுடன் துன்புறுத்துகின்றனர்.

அகதிகளுடைய நிலைமை, குறிப்பாக ஜேர்மனியில் அதிர்ச்சி அளிக்கிறது. பல ஜேர்மனிய நகரங்களில் அகதிகள் முகாம்களை அமைத்துள்ளனர்; அவற்றில் டஜன் கணக்கில், சில சமயம் நூற்றுக்கணக்கான அகதிகள், பேரழிவு நிலைமையில் உள்ளனர். ஹம்பேர்க்கில் கிட்டத்தட்ட 80 அகதிகள், பலர் லிபியா முதல் லம்பேடுசா வரை ஆபத்தாக பயணித்து வந்தவர்கள்,ஹம்பேர்க்கில் லம்பேடுசா” என்று அறியப்பட்டவர்கள், St. Pauli திருச்சபையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று, திருச்சபை அதிகாரிகள் உஷ்ணப்படுத்தும் மற்றும் கழிப்பறைகள் கொள்கலன்களை திருச்சபை நிலத்தில் குளிர்காலத்திற்கு அகதிகளுக்கு பயன்பட வைக்க இருப்பதாக அறிவித்ததை, சமூக ஜனநாயகக் கட்சி ஆதிக்கத்தில் உள்ள செனட் சபையினர் முகங்கொடுத்தனர். செனட், பொலிசைத் திரட்டி அகதிகளை துன்புறுத்தும் நடவடிக்கையை தொடங்கியது. பொலிஸ் ஹெலிகாப்டர்கள் திருச்சபைக்கு மேலே பறந்தன, அகதிகளை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்கு சீருடையில் இல்லாத பொலிசார் அப்பகுதியை சுற்றிவந்தனர். "இன விவரக்குறிப்பு" நடைமுறை அடிப்படையில், பொலிசார் அனைத்து கறுப்புத் தோல் உடையவர்களின் ஆவணங்களையும் நகரத்தின் மையத்தில் சோதிக்கின்றனர்.

பேர்லினில் 30 அகதிகள் பட்டினிப் போராட்டம் ஒன்றை நகரத்தின் புகழ்பெற்ற பிராண்டன்பேர்கர் வாயிலுக்கு வெளியே நடத்துகின்றனர். (பார்க்க, “பேர்லினில் தஞ்சம் கோருவோர் பட்டினிப் போராட்டம்). 100க்கும் மேற்பட்ட பிற அகதிகள், முக்கியமாக ஆபிரிக்காவில் இருந்து ஓராண்டிற்கு முன் ஒரு கூடார முகாமை Kreuzberg புறநகரில் நிறுவினர். இவர்களுடைய முகாமில் அடிப்படை வசதிகள் கூடக் கிடையாது. அவர்கள் கடும் குளிர்காலத்தில் வசதியின்றி உறங்க வேண்டியுள்ளது, மருத்துவப் பாதுகாப்பை அணுக முடியாது. 2011ல் அந்நாட்டை நேட்டோ குண்டால் தாக்கியதில் பல அகதிகள் லிபியாவை விட்டு வெளியேறினர்.



பதாகை
:
பேர்லினில் லம்பேடுசா கிராமம்

பசுமைக் கட்சி மேயர் மோனிக்கா ஹேர்மான் தலைமையில் உள்ள மாநில சபை, அகதிகள் வசிக்க ஒரு வீட்டை அளிக்க முன்வந்தது, ஆனால் முகாம் உறுப்பினர்கள் அவநம்பிக்கையுடன் உள்ளனர். சிலர் இதை பேர்லினில் அவர்கள் கட்டமைத்துள்ள அரசியல் மையத்தைப் பிரிக்கும் முயற்சியாகக் காண்கின்றனர். புதன் அன்று பேர்லின் அகதிகள் குழு ஒன்று தங்கள் நிலைமை குறித்து கவனத்தை ஈர்க்க சாலை ஒன்றை மரப்பலகையால் தடுப்பு போட்டனர்.



பேர்லின் பொலிஸின்
பாரிய அணிதிரள்வு

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் Kreuzberg முகாமில் லிபியாவிற்கு செல்வதற்கு முன் நைஜீரியாவில் இருந்து வந்த விக்டருடன் பேசினர்:

நேட்டோ குண்டுவீச்சிற்கு முன் நான் லிபியாவில் 12 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அந்நாட்டில் வேலையை தேடி வந்த பல ஆபிரிக்க தொழிலாளர்களில் நானும் ஒருவன். கட்டமைப்புத் துறையில் நான் தீவிரமாக இருந்தேன்மிஸ்ரடாவில் வசித்து வந்தேன், கடுமையாக உழைத்தேன், அங்கு இருக்கும் வரை நல்ல முறையில் வாழ முடிந்தது. இவை அனைத்தும் 2011ல் நேட்டோ, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை நாட்டின்மீது குண்டு வீசத் தொடங்கியுடன் மாறின. எனக்கும் நான் அறிந்தவர்கள் பலருக்கும் இது கொடூரமான அனுபவம் ஆகும். நேட்டோ நிரபராதிக் குடிமக்களின் குருதியைத் தன் கைகளில் கொண்டுள்ளது. அவர்கள் சாதாரண குடிமக்கள், குழந்தைகளைக்கூட தங்கள் குண்டுகளால் கொன்றனர். குண்டுவீச்சு பாதிப்பு பெற்ற பல நண்பர்களையும் சக ஊழியர்களையும் நான் கொண்டுள்ளேன். நேரடியாக பல இறப்புக்களை பார்த்துள்ளேன்.

நேட்டோ உள்நாட்டுப் போரைத் தூண்டி, பின் நாட்டை நாசமாக்கியது, அது இன்றளவும் தொடர்கிறது. மேற்கத்தை சக்திகள், ஆயுதமேந்திய எழுச்சியாளர்களுக்கு ஊக்கம் கொடுத்தன; அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொல்லுதல் என்னும் திட்டங்களை தொடக்கினர். நீங்கள் கண்ணில்பட்டால் எழுச்சியாளர்கள் உங்கள் தலையைத் துண்டித்துவிடுவர். மிஸ்ரடாவும் பாதுகாப்பற்றுப் போய், நான் என் மனைவியுடன் திரிப்போலிக்குச் சென்றேன். என் வீட்டையும் என் பொருட்களை பலவற்றையும் விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. எழுச்சியாளர்கள் திரிப்போலிக்குள் முன்னேறியபோது லிபிய வீரர்கள் எங்களை துறைமுகத்திற்கு அனுப்பினர்; நாங்கள் நாட்டை விட்டு நீங்கினால்தான் பாதுகாப்பாக இருப்போம் என்றனர்.

இதன்பின் மே இறுதியில் நான் ஒரு கப்பல் மூலம் ஏழு நாள் பயணத்தை மேற்கொண்டு மத்தியதரைக் கடலை கடக்க தொடங்கினேன். என்னுடைய மனைவியை விட்டுவிட்டு வரும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். அவளுக்கு என்ன ஆயிற்று என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. கப்பலில் 800 பேர் இருந்தோம். முழுப்பயணத்தின்போதும் எங்களுக்கு உணவோ, குடிநீரோ கிடையாது. எங்கள் பொருட்கள் அனைத்தையும் விட்டு நீங்கி வரவேண்டியதாயிற்று. ஆறு நாட்களுக்குப்பின் கப்பல் கவிழ்ந்தது, நூற்றுக்கணக்காக அதில் இருந்தவர்கள் முழ்கிப்போயினர். மீட்கப்பட்டவர்களில் நானும் ஒருவன், லம்பேடுசாவிற்கு அழைத்துவரப்பட்டேன். அங்கு இருந்த மக்கள் தங்களால் இயன்றதை எங்களுக்கு செய்ய முயன்றனர்.

லம்பேடுசாவில் குறுகிய காலம் இருந்த பின், தப்பிப்பிழைத்தவர்கள் இத்தாலிய நாட்டில் பல முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். நான் மிலானுக்கு அருகில் காரிடஸ் நடத்தும் முகாமில் இருந்தேன்; அங்கு ஓராண்டு காலம் வசித்தேன். இந்நேரத்தில் எங்கள் தஞ்சம் கோரிய விண்ணப்பங்கள் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டன. எங்கள் தலைக்கு மேல் கூரை மட்டுந்தான் இருந்தது; எங்களிடம் வேறு எதுவும் கிடையாது. நாங்கள் உயிருடன் இல்லாதது போன்ற நிலைமைதான் மிஞ்சியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இத்தாலிய அதிகாரிகள் வட ஆபிரிக்காவில் நெருக்கடி நிலைமை முடிந்துவிட்டது என அறிவித்து இத்தாலி முழுவதும் இருந்த அகதிகள் முகாம்களைக் கலைத்தனர். ஒரே நாளில் 30,000 அகதிகள் தெருக்களுக்கு அனுப்பப்பட்டனர். நடைதெருவில் எப்பாதுகாப்பும் இன்றி நாங்கள் உறங்கினோம். ஆறு மாத காலம் தங்க ஆவணம் கொடுக்கப்பட்டோம். பல அகதிகள் மற்ற நாடுகளுக்குச் செல்ல முயன்றனர், ஆனால் இத்தாலிக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஐரோப்பிய சட்டத்தின்படி இத்தாலிய கடலோரத்தில் நாங்கள் இறங்கியதால் இத்தாலிதான் எங்களுக்குப் பொறுப்பு என்று கூறப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நான் பேர்லினுக்கு வந்தேன், என் நிலைமை ஒன்றும் நன்கு மாறிவிடவில்லை. நாங்கள் இங்கு உழைக்க வந்தோம். நீங்கள் உழைத்தால்தான் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். எங்களுக்கு நன்கொடைகள் வேண்டாம், சமூகத்திற்கு ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்யும் வாய்ப்பை விரும்புகிறோம். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் எங்களைப் புறக்கணிக்கின்றனர். நாங்கள் முகாம்களில் குளிரில் தூங்குகிறோம். களைப்பாக உள்ளோம், பசியில் உள்ளோம். நாங்கள் செய்யக்கூடியது எல்லாம் போராடுவதுதான், எங்கள் உரிமையை நிரூபிப்பதுதான்.”

நான் விக்டரை அகதிகளின் பதாகையில் இருந்த கோஷத்தின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டேன்: அதில் “2011-2013-லிபியா-லம்பேடுசா-பேர்லின்—இன்னும் நேட்டோ குண்டுத்தாக்குதலில்” என இருந்தது.

விக்டர் கூறினார்: “நேட்டோ குண்டுத்தாக்குதலால் மக்கள் இன்னும் இறந்து கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்தை மக்களுக்குத் தெரிவிக்க விரும்பினோம். அவர்கள் லிபியாவில் இறக்கின்றனர்; நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அகதிகள் இங்கு ஐரோப்பாவில், ஜேர்மனியில் பட்டினி, புறக்கணிப்பு ஆகியவற்றால் இறக்கின்றனர். எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை.



பேர்லின் முகாம்
நுழைவாயிலில் பெரிய சுவர் சித்திரம்
:
ஐரோப்பாவில் வதிவிட சட்டங்களுக்கு எதிராக

மேற்கத்தைய நாடுகள் மனிதகுலத்தை பற்றிப் பேசுகின்றன. லிபியாவில் அவர்கள் மனிதகுலத்தைக் காப்பற்ற விரும்பவில்லை, ஆனால் அதை அழிக்கின்றனர். போருக்கான உண்மைக் காரணம் எண்ணெய் மற்றும் லிபியா கொண்டிருக்கும் சொத்துக்கள்தான். நேட்டோவினால் நாடு மீண்டும் அமைதியைப் பெறாது. இப்பொழுது அமெரிக்கர்களும் பிரெஞ்சுக்காரர்களும் லிபியாவில் கொள்ளை அடித்த பணத்தை சிரியாவில் இருக்கும் எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வாங்கச் செலவழிக்கின்றனர். அங்கும் இதேதான், இதே விளைவுகள்தான் நிகழ்கின்றன. உள்நாட்டுப்போர், ஏராளமான மக்கள் வெளியேறுதல். ஐரோப்பா அதன் குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.”