சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Social Democrats, conservatives agree on talks to form coalition government

ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகளும் பழைமைவாதிகளும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படுகின்றனர்

By Christoph Dreier 
21 October 2013

Use this version to printSend feedback

கடந்த வாரம் ஆரம்ப பேச்சுவார்த்தைகளின் மூன்றாம் சுற்றுக்குப்பின், சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியமும் (CDU/CSU) ஒரு பெரும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உடன்பட்டன. CDU இன் உயர்நிர்வாகப்பிரிவு இதை வெள்ளியன்று உறுதி செய்தது. SPD ஞாயிறன்று கட்சி மாநாடு ஒன்றை நடத்தியது. இதில் பெரும்பான்மையானோர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பேச்சுவார்தைகள் மீண்டும் புதன் அன்று ஆரம்பமாகும்.

அங்கேலா மேர்க்கெல் (CDU), சிக்மார் காப்ரியேல் (SPD) மற்றும் ஹோர்ஸ்ட் ஸீகோவர் (CSU) ஆகிய மூன்று கட்சித் தலைவர்களுடைய கூட்டம், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் இருந்த கடைசித் தடைகளையும் நீக்கியது. ஆரம்ப பேச்சுவார்த்தைகளின்போது மத்திய அரசமைப்பு முறையை சீர்திருத்தம் செய்வது பற்றிய பிரச்சினைகள் இருந்தன. அதேபோல் ஜேர்மனியின் மாநிலங்களுக்கு இடையே நிதியச் சமப்படுத்தல் முறை காலாவதியாவது குறித்த பிரச்சினையும் இருந்தது. இறுதியில் இரு குழுக்களும் ஒருமனதாக கூட்டரசு பற்றிய பேச்சுவார்த்தைகள் நடத்த ஒப்புக் கொண்டன.

இதுவரை குறைந்தபட்ச தகவல்கள்தான் பேச்சுவார்தைகளைப் பற்றி வெளிவந்துள்ளது. SPD மாநாடு, செல்வந்தர்களுக்கு வரி அதிகரிப்பிற்கான எவ்விதமான கோரிக்கையும் கைவிடப்பட வேண்டும் என்னும் தீர்மானம் ஒன்றை இயற்றியது. CDU தேர்தலில் பலத்தை பெற்றுள்ளதால் சமூக ஜனநாயகக் கொள்கைகளை செயல்படுத்துவது கடினம் என்றார் காப்ரியேல். இது நிலைமையை மிகவும் கடினமாக்கியுள்ளது என்ற உண்மையை நான் மறைக்கமாட்டேன் என்று SPD தலைவர் சுரங்க, இரசாயன மற்றும் எரிசக்தி துறைகளின் IG BCE தொழிற்சங்க மாநாட்டில் கூறினார்.

SPD இத்தகைய கருத்துக்களை தன் சொந்த சமூக எதிர்ப்பு வேலைத்திட்டத்தை மூடிமறைக்க பயன்படுத்துகிறது. இதன் தேர்தல் பிரச்சாரக் கோரிக்கைகள் வெற்றுச் சொற்றொடர்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதன் செயற்பட்டியல் 2010 இன் மூலம்  அரசாங்கத்தில் இருந்தபோது சமூகநலன்கள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள்மீது தாக்குதலை நடத்தியபின், SPD இரண்டாம் உலகப் போருக்குப்பின் மிக அதிகமான சமூகநல வெட்டுக்களுக்குப் பொறுப்பாகின்றது. செய்தி ஊடகத் தகவல்கள்படி, SPD நிதி மற்றும் தொழிலாளர்துறை அமைச்சரகங்களுக்கு தலைமை தாங்கும். இப்பகுதிகளில் புதிய வெட்டுக்களை நடாத்துவதில் அவை முக்கிய பங்கை வகிக்கும்.

CSU இன் பொதுச் செயலாளர் அலெக்சாந்தர் டொப்ரின்ட் இத்நிலைப்பாட்டை வலியுறுத்தினார். அபிவிருத்தி, நிதிய உறுதித்தன்மை மற்றும் வேலைகள் அடுத்த நான்கு ஆண்டுகளில் அரசாங்கப் பணியின் இதயத்தானத்தில் இருக்கும் என்றார் அவர். இப்பெரும் பிரச்சினைகளுக்கு கூட்டணி அரசாங்கத்தில் பொதுத் தீர்வுகளை காணமுடியும் என்ற உணர்வு எங்களிடம் உள்ளது. இது ஊதிய வெட்டுக்கள் மற்றும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு அலங்காரச் சொற்றொடர் ஆகும். இந்த வேலைத்திட்டத்தைத்தான் பெரும் கூட்டணி செயல்படுத்தும்.

அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பு இன்படி 2016ல் இருந்து மத்திய அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.35%க்கு மேல் அதன் அப்பொழுதைய வரவு-செலவுத் திட்டத்தில் புதிய கடன்களை வாங்கக் கூடாது. 2020ல் இருந்து மத்திய அரசு மாநிலங்கள் எந்த நிகரக் கடன் வாங்குவதும் தடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஜேர்மனிய மாநிலங்கள் திவால்தன்மையை எதிர்நோக்குகின்றன.

நகரசபைகளும் குறிப்பிடத்தக்க வகையில் சமூகநல வெட்டுக்களால் மத்திய அரச மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை வணிக வரிகளின் மீதான வெட்டுக்களினால் வருமானத்தை இழந்துள்ளன. 2007 முதல் 2011 வரை, நகரசபைக்கடன்கள் 111ல் இருந்து 130 பில்லியன் யூரோக்களாக உயர்ந்தன. கிட்டத்தட்ட 48 பில்லியன் யூரோக்கள் இவற்றில் ரொக்க முற்கடன் என அழைக்கப்படுகின்றன. இவை குறுகிய கால நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கத்திற்காக வாங்கப்பட்டன. இதனால் குறிப்பிடத்தக்க வகையில் அதிக வட்டிக்கு வாங்கப்பட்டவை.

இந்த இறுக்கமான வரவு-செலவுத் திட்ட நிலைமையில், வங்கி பிணையெடுப்புக்கள் மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் புதிய ஓட்டைகளை உருவாக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. 2008, 2009 இல் ஜேர்மன் வங்கிகளுக்கு மீட்பு நிதியாக ஒதுக்கப்பட்ட 290 பில்லியன் யூரோக்களில் 15%தான் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு சமீபத்திய சர்வதேச நாணய நிதிய அறிக்கை கூறுகிறது.

இதைத்தவிர குறைந்தப்பட்சம் 300 முதல் 400 பில்லியன் யூரோக்கள் வரை யூரோ மீட்பிற்கான உத்திரவாதமாக வழங்கப்பட்டதும் விரைவில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டியுள்ளது. கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினின் வேண்டுகோளில், இத்தாலிய அரசாங்கம் ஒரு மிருகத்தனமான வரவு-செலவுத் திட்ட வெட்டிற்கு ஒப்புதல் கொடுத்தது. அது நாட்டில் ஏற்கனவே அனுபவிக்கப்படும் இரண்டு ஆண்டு மந்த நிலையை ஆழப்படுத்தும். கிரேக்கத்தை பொறுத்தவரை, வல்லுனர்கள் நீண்டகாலமாகவே ஒரு கடன் சலுகைகளை செய்யவேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளனர். இதற்கு மற்ற அவசரகாலக் கடன்களும் தேசிய திவாலை தவிர்க்க தேவைப்படும். அது ஜேர்மன் வரவு-செலவுத் திட்டத்தில் குறைந்தப்பட்சம் 10 பில்லியன் யூரோக்கள் வரை நேரடியாகப் பாதிக்கும்.

இந்த நிலைமையின் கீழ் ஒரு பெரும் கூட்டணி, பில்லியன் கணக்கில் மக்களிடம் இருந்து எடுத்து ஜேர்மனியிலும் கிரேக்கச் சூழ்நிலையை தோற்றுவிக்கும் பணியில் ஈடுபடும். கூட்டணிப் பேச்சுக்களில் முக்கியமான பிரச்சினை எப்படி இச்செயற்பட்டியலை மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படுத்தப்பட முடியும் என்பதுதான்.

இத்திட்டத்தின் மத்திய அச்சு ஒரு குறைந்தப்பட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துவதாக இருக்கும். SPD தன் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு மணிக்கு 8.50 யூரோ குறைந்தப்பட்சம் எனக் கோரியது. CDU நாடுதழுவிய குறைந்தப்பட்ச ஊதியம் என்பதை நிராகரித்துள்ளது.

சமீபத்திய நாட்களில் பல ஒன்றியக் கட்சி அரசியல்வாதிகள் (CDU/CSU) ஏற்கனவே இப்பிரச்சினையில் உடன்பாட்டிற்கு அடையாளம் காட்டியுள்ளனர். Süddeutsche Zeitung பத்திரிகையிடம் ஸீஹோவர் தான் SPD புதிய கடன் வாங்குவதையும், வரி அதிகரிப்பிற்கு வலியுறுத்தவில்லை என்றால், குறைந்தப்பட்ச 8.50 யூரோ ஊதியத்தை ஏற்க இருப்பதாகத் தெரிவித்தார். ஹெஸ்ஸ மாநில பிரதமர் வோக்கர் போஃபியரும் (CDU) குறைந்தப்பட்ச ஊதியத்திற்கு உடன்பட்டுள்ளார். இது தொழிற்துறை மந்திரி ஊர்சுலா வான் டெர் லையெனுக்கும் (CDU) பொருந்தும். அவர் IG BCD மாநாட்டில் நாடு தழுவிய குறைந்தப்பட்ச ஊதியத்திற்கு சாதகமாக பேசினார்.

வியாழன் பேச்சுவார்த்தைகளை அடுத்து காப்ரியேல் பின்வருமாறு கூறினார்: நாடுதழுவிய ஒரு குறைந்தப்பட்ச ஊதியமான 8.50 யூரோக்கள் என்பது ஒரு மத்திய பிரச்சினை என்பது ஒன்றிய கட்சிகளுக்கு தெரியும். இது இல்லாவிடின் SPD இன் பார்வையில் ஒரு கூட்டணி என்பது அர்த்தமற்றது.

இத்தகைய ஒரு குறைந்தப்பட்ச ஊதியம் என்பது ஏற்கனவே குறைந்த ஊதியம் பெறும் பெரும்பாலான தொழிலாளர்களின் வருமானங்களை அதிகரிக்காது. அவர்களில் பலர் அரசாங்க உதவிகளைத்தான் நம்பியுள்ளனர். தொழில்வழங்கு அமைப்புக்கூட 8.5 யூரோக்களை குறைந்தப்பட்ச ஊதியம் என்றுதான் கருதுகிறது.

எனவேதான் SPD உடைய திட்டங்கள், பெரும்பாலான ஜேர்மன் நிறுவனங்களின் ஆதரவைக் கொண்டுள்ளன. கருத்துக்கணிப்பு அமைப்பு போர்சா ஜேர்மனிய நிர்வாகிகளிடையே ஜூலை மாதம் நடாத்திய மதிப்பீடுகளில் 57% நிர்வாகிகள் குறைந்தப்பட்ச சட்டபூர்வ ஊதியத்திற்கு ஆதரவு கொடுத்தனர் என்று காட்டுகிறது. சராசரியாக அவர்கள் 8.88 யூரோக்கள் வேண்டும் என வாதிடுகின்றனர்.

வறுமையை ஒழிப்பதற்கு போராடுவது என்பதற்கு முற்றிலும் மாறாக அத்தகைய குறைந்தப்பட்ச ஊதியம் என்பது எதிர்வரவிருக்கும் சமூகத் தாக்குதல்களை செயல்படுத்துவதற்குத்தான் உதவும். அது வழமையான ஊதிய மட்டமாக்கப்பட்டு பொது ஊதியத் தரம் ஒரு மந்தநிலைக்குப் போகும். இது ஒரு பரந்த சமூக வெட்டுக்களை தோற்றுவிக்கும் ஒரு அரசியல் வழிமுறையாகச் செயற்படும். இவ்விதத்தில், இது தொழிற்சங்கங்களுக்கும், இடது கட்சி மற்றும் அதன் போலி இடது ஆதரவாளர்களுக்கும் அவை அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுப்பதை எளிதாக்கும்.

இடது கட்சி ஏற்கனவே அத்தகைய திட்டத்திற்கு அதன் ஆதரவை குறிப்பிட்டு, அது முன்புகோரியபடி ஒரு குறைந்தபட்ச ஊதியமான 10 யூரோக்களுக்கு குறைந்த ஒரு அளவிற்கும் வாக்களிக்கும் என்று அறிவித்தது. மேர்க்கெலின் அழைப்போடு, காப்ரியேல் மற்றும் வான் டெர் லையென் தொழிற்சங்க கூட்டத்தில் பங்கு பெற்றனர். IG BCE அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பாக பெரும் கூட்டணிக்கு அமைப்பதற்கான ஆதரவிற்கு சைகை காட்டியுள்ளது.

பசுமைவாதிகளும் இக்கொள்கைக்கு ஆதரவு கொடுக்கத்தயாராக உள்ளனர். கடந்த வாரம் ஆரம்ப பேச்சுவார்த்தை கூட்டத்தை CDU உடன் முறித்துக் கொண்டபின், அவர்கள் ஒருவேளை CDU-SPD பேச்சுக்கள் தோல்வி அடைந்தால் CDU/CSU-பசுமைக் கட்சிக் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு திறந்து வைக்க விரும்புகின்றர். அடுத்த வார பசுமைக் கட்சி மாநாட்டில் முக்கிய தீர்மானம் இந்த தேர்வை வேண்டுமேன்றே முடிவெடுக்காது திறந்து வைத்திருக்கிறது.

ஆனால் ஒரு பெரும் கூட்டணி ஏற்படவில்லை என்றால், பசுமை வாதிகளும் இடது கட்சியும் விசுவாசமான எதிர்ப்புக் கட்சிகள் என்ற விதத்தில் முக்கிய பங்கை வகிக்கும். SPD, CDU இரண்டும் பாராளுமன்ற கீழ்ப் பிரிவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றாலும் ஹெஸ்ஸ மாநில சட்டமன்றத்தில் பெரும் கூட்டணி என்ற நிலை வந்தால் அவற்றிற்கு மேல் மன்றத்தில் (Bundesrat) பெரும்பான்மை இல்லை. CDU மற்றும் SPD இதன்பின் குறைந்தப்பட்சம் மேல் மன்றத்தில் உள்ள ஒரு எதிர்க்கட்சியின் ஆதரவை நம்பியிருக்க வேண்டும்.