சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Lessons of the Bay Area transit strike

Bay Area போக்குவரத்து வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்

Joseph Kishore
23 October 2013

Use this version to printSend feedback

Bay Areav கடுகதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் (BART) 2,300 பேர் நான்கு நாட்கள் வடக்கு கலிபோர்னியாவில் நடத்திய வேலைநிறுத்தம் திங்கள் இரவு கைவிடப்பட்டதுடன், நாட்டின் ஐந்தாம் மிகப் பெரிய பொதுப்போக்குவரத்து முறை நேற்று மீண்டும் செயற்பட ஆரம்பித்தது.

சேவை ஊழியர்கள் சர்வதேச தொழிற்சங்கம் (SEIU) மற்றும்  ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கம் (ATU) என இதில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தமது உடன்பாட்டின் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், கிடைத்துள்ள தகவல் இவை BART நிர்வாகத்தின் அனைத்துக் அடிப்படைக் கோரிக்கைகளையும் ஏற்கிறது என்பதை தெளிவாக்குகின்றது. இதில் ஓய்வூதியங்களிலும் உடல்நல பாதுகாப்பிலும் விட்டுக்கொடுப்புகளை வழங்குதல், பணி விதிகளில் மாறங்களை கொண்டுவந்து வேலை நிலைமைகளை மோசமாக்குதல் ஆகியவையும் அடங்கும். புதிய ஒப்பந்தம் 2009ல் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடரும். அதில் 100 மில்லியன் டாலர்கள் விட்டுக்கொடுப்புகளும் நான்கு ஆண்டு காலம் ஊதிய அதிகரிப்பின்மையும் அடங்கியிருந்தது.

தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். கடந்த 30 ஆண்டுகளாக பலமுறை செய்யப்பட்ட வழிமுறையைத்தான் இப்போதும் பின்பற்றியுள்ளன.

ஒரு தொழிற்சங்கம் அழைப்புவிடுக்கும் வேலைநிறுத்தம் வெற்றிபெறும் நோக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. மாறாக, சலுகைகளை விட்டுக் கொடுப்பதை எளிதாக்குவதற்காக, எதிர்ப்புகளை இல்லாதொழிக்கும் செயற்பாடாகத்தான் உள்ளது. பரந்த மக்கள் ஆதரவைத் திரட்ட முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படுவதில்லை. தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றதுடன், செய்தி ஊடகம் அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. சாத்தியமானபோது எந்த வெற்றியையும் பெறாமல் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை முடித்துவிடுகிறது. தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்திற்கு வாக்களிப்பது ஒரு புறம் இருக்க, அவர்களுக்கு அதைப்  படிக்கக் கூட நேரம் கிடைக்கமுன் வேலைக்கு திரும்ப கட்டளையிடப்படுகின்றனர்.

தொழிற்சங்கங்கள் பெரும் கூட்டங்களை நடத்தி இன்றே ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப் போவதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது என்ன வாக்களிக்கப்போகிறோம் என்பது குறித்து அறிவதற்கு  தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்த அவகாசத்தைத்தான் கொடுக்கும். தொழிலாளர்களிடையே தக்க காரணத்துடன் பரந்த எதிர்ப்பு இருக்கிறதுஇதுதான் விளைவு என்றால் வேலைநிறுத்தம் நடத்தியதன் நோக்கம் என்ன என்று பலரும் சந்தேகத்திற்கு இடமின்றி கேட்பர்.

BART வேலைநிறுத்தம் செய்யப்பட்டவிதம் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது என்பது BART தொழிலாளர்களின் அனுபவம், ஒரு பரந்த நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பகுதி என்னும் உண்மையை சுட்டிக்காட்டுகிறது. ஒரு நிறுவனம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவு ஊழல்மிக்க தொழிற் சங்கங்களின் அதிகாரிகளுடனான மோதல் என்ற சாதாரண பிரச்சனை அல்ல. ஒரு போராட்டத்தை முன்னேற்றுவிக்க, என்ன நடந்தது என்பதை கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

அமெரிக்காவில் பிற சமூக மோதல்களில் வெடிப்பதைப்போலவே, BART வேலைநிறுத்தம், விரைவில் அமெரிக்காவில் வர்க்க உறவுகளில் இருக்கும் வன்முறையை அம்பலப்படுத்தியது. முக்கியமாக போராட்டத்தின் அரசியல் குணாதிசயத்தை எடுத்துக்காட்டியது. தங்கள் உரிமைகளை பாதுகாக்கும்போது, போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசாங்கம் மற்றும் அதன் நிறுவனங்களின் சீற்றமிகு எதிர்ப்பை முகங்கொடுத்தனர். ஜனநாயக, குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய நட்பு அமைப்புக்களான செய்தி ஊடகங்களும், தொழிலாளர்களை தாக்கினர்.

ஆண்டு ஒன்றிற்கு 60,000 டாலர் உழைக்கும் தொழிலாளர்கள் அதிகமான ஊதியத்தை பெறுபவர்கள் மற்றும் பேராசைக்காரர்கள் என்று கண்டிக்கப்பட்டனர். இது நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் மிக அதிகமாக இருக்கும் பகுதியில், உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் வாழும் ஒரு பிராந்தியத்தில் நிகழ்கின்றது. பெருநிறுவனங்கள் மிக அதிக இலாபங்களை ஈட்டுவதுடன், பங்குச்சந்தை பெரும் இலாபத்தில் செயல்படுகிறது, இதன்போது தலைமை நிர்வாக அதிகாரிகளும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களும் எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் அதிக செல்வத்தை பெறுகின்றனர் என கருதப்படுகின்றது. ஆனால் தொழிலாளர்கள் ஒரு கௌரவமான வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி ஒரு சீற்றத்திற்குரிய செயலாகக் கருதப்படுகிறது.

வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக நேரடி அரசாங்க நடவடிக்கை உடனடியாகத் தேவை என்ற அழைப்புக்கள் எழுந்தன. ஜனநாயக, குடியரசுக் கட்சியினர் இருவருமே போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்க சட்டம் தேவை என்றனர். தாராளவாத ஏடு எனக் கருதப்படும் San Francisco Chronicle இக்கருத்தை வழிநடத்தியது. வேலைநிறுத்தம் முடிந்தபின் வெளியிடப்பட்ட தலையங்கம் ஒன்று பின்வருமாறு சீறியது: “Bay Area இற்கு முக்கியமான ஒரு வாழ்க்கைக்கும் மற்றும் பாதுகாப்பிற்குத் தேவையாக இருக்கும் ஒரு சேவையில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய எப்படி அனுமதிக்கப்படலாம்?” சமூக எதிர்ப்பின் எவ்விதமான வடிவமைப்பையும் சட்டவிரோதமாக்குவது நல்லது போலுள்ளது.

இந்த அச்சுறுத்தல்கள் கலிபோர்னியாவின் துணை ஆளுனர் கெவின் நியூசம் உடைய கருத்துக்களில் எதிரொலித்தன. இவர் சான் பிரான்ஸிஸ்கோவின் முன்னாள் நகரசபை தலைவரும், “இடது ஜனநாயகவாதிகளின் அபிமானியுமாவார். அவர் உடன்பாடு பற்றி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கையில் கூறியபோதுஇவ்வாறு மீண்டும் நாங்கள் அனுமதியோம்.” என்றார்.

ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் வேலைநிறுத்தத்தை தோற்கடிக்கும் உறுதி, வார இறுதியில் இரண்டு பராமரிப்பு தொழிலாளர்கள் கொலைக்கு வழிசெய்தது. முதலில் தொழிலாளர்களை தாக்கிய இரயில் வண்டி ஒரு அனுபவமிக்க இயக்குனரால் இயக்கப்பட்டது என்று BART கூறியது. ஆனால் பின்னர் இந்த இரயில் வேலைநிறுத்தத்தை முறிப்பவர் ஒருவரால் செலுத்தப்பட்டதும், அவருக்கு அதிக அனுபவம் கிடையாது, ஒரு நீண்ட வேலைநிறுத்தம் வந்தால் சமாளிக்க அவர் தயாரிக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான தாக்குதலை ஆளும் வர்க்கம் அதன் மொத்த வர்க்கக் கொள்கையின் முக்கிய கூறுபாடு எனக் காண்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு உரிமையும் தாக்கப்படுகிறது. செல்வந்தர்கள் கூடுதலாக தனிச் சொத்துக்குவிப்புக்கு தடையாக இருக்கும் உடல்நலப்பாதுகாப்பு, ஓய்வூதியங்கள், பொதுக்கல்வி, கௌரவமான ஊதியங்கள் என்பவை அகற்றப்பட வேண்டும் என்கின்றன. அமெரிக்க அரசாங்க மூடலுக்குப்பின் ஒபாமா நிர்வாகம், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பில்லியன் கணக்கான டாலர்களை மருத்துவப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றில் இருந்து குறைக்கும் திட்டங்களை விவாதிக்கிறது.

தங்கள் உரிமைகளைக் காக்கும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் இந்தப் பரந்த சமூக, அரசியல் வடிவமைப்பிற்குள்தான் உள்ளடங்கியுள்ளது. தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் திட்டமிடப்பட்ட மூலோபாயத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் தன் நலன்களை பாதுகாப்பதற்காக அதன் சொந்த திட்டமிடப்பட்ட மூலோபாயத்தை முன்வைக்க வேண்டும்.

தொழிற்சங்கங்கள் போராட்டத்தின் கருவிகளாகச் செயல்படவில்லை, மாறாக போராட்டத்தை அடக்கும் கருவிகளாகத்தான் செயல்பட்டன. அவற்றின் முதல் நோக்கம் எத்தகைய எதிர்ப்பும் வெளிவருவதைத் தடுப்பதாகும். முன்பு அமெரிக்க வாழ்வில் நிரந்தரக் கூறுபாடாக இருந்த வேலைநிறுத்தங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிதும் மறைந்துவிட்டதுடன், அதே நேரத்தில் சமூக சமத்துவமின்மை பெருமந்தநிலைக்கு முன்பு இருந்த மட்டத்திற்கு அதிகமாக அதிகரித்துள்ளது.

வேலைநிறுத்தங்கள் எழுகையில், தொழிற்சங்கங்கள் அவற்றைத் தனிமைப்படுத்தி தோற்கடிக்க முயல்கின்றன. இதுதான் 1980ல் இருந்து எந்தவித விதிவிலக்கும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த முழு காலகட்டத்திலும் போலிஇடது குழுக்களால் --தொழிலாள வர்க்கத்தின் ஒரேயொரு நியாயபூர்வமான பிரதிநிதிகள் எனக் தம்மை காட்டிய இந்த அமைப்புக்களால்-- எடுத்துக்காட்டாக ஒரு தடவைகூட போராட்டத்தை வெற்றிக்கு இட்டுச்சென்றது என சுட்டிக்காட்ட இயலாது.

தொழிற்சங்கங்களின் திவால்தன்மை இலாப அமைப்புமுறையுடன் அவை கொண்டுள்ள சமூக மற்றும் அரசியல் உறவுகளால்  நிர்ணயிக்கப்படுகின்றன. மத்தியதர வகுப்பின் சலுகைகள் பெற்ற நிர்வாகிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ அமைப்புமுறையை ஏற்றுக்கொண்டு அதை பாதுகாப்பதுடன், ஜனநாயகக் கட்சியுடன் அரசியல்ரீதியான கூட்டினை வெளிப்படுத்துகின்றன. அவை தொழிலாள வர்க்கம் போராடுவதற்கு உந்தப்பட்டுள்ள அனைத்திலும் தங்களை அடித்தளமாக கொண்டுள்ளன.

தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் அடைந்துள்ள உடன்பாடு மீது இனிமேல்தான் வாக்களிக்கப்படவுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி காட்டிக்கொடுப்பை நிராகரிக்குமாறு தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறது.

எவ்வாறாயினும் இது முதல் அடியாகும். போராட்டத்திற்கான புதிய  அமைப்புக்கள் கட்டமைக்கப்பட வேண்டும். புதிய தலைமையைக் கட்டியக்கும் பணி BART தொழிலாளர்களிடையேயும், ஒவ்வொரு தொழிலாள வர்க்கப் பிரிவிலும், நாடெங்கும் மற்றும் சர்வதேச அளவிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இத்தலைமை ஜனநாயக, குடியரசுக் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து நிறுவனங்களுக்கும் எதிரான எதிர்ப்பினால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

போராடுவதற்கு, எதை எதிர்த்துப் போராடுகிறோம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர்களின் ஒவ்வொரு அடிப்படை உரிமையின் பாதுகாப்பும் ஆளும் வர்க்கம், அதன் அரசாங்கம், முதலாளித்துவ அமைப்புமுறை இவற்றுடன் மோதலை ஏற்படுத்தும். பரந்துபட்ட மக்களிடையே வளர்ச்சியடையும் தீவிரமயமாதலுக்கு ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு, சோசலிச நிலைநோக்கு வழங்கப்பட வேண்டும், இது தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு இலாபத்திற்காக இல்லாமல் சமூகத் தேவைக்கு ஏற்ப சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான பரந்த இயக்கத்தை கட்டிமைப்பதை நோக்கி இயக்கப்பட வேண்டும்.