சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :  செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

It is up to us to decide whether the future will be one of peace and equality, or of military holocaust”

 ‘’எதிர்காலம் அமைதி மற்றும் சமத்துவத்தைக் கொண்டிருக்குமா அல்லது இராணுவப் பெரும் படுகொலைகளாக இருக்குமா என்பதை நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.’’

IYSSE இன் தேசியச் செயலாளர் ஆண்ட்ரே டாமன் டெட்ரோயிட்டில் போருக்கு எதிரான அணிவகுப்பு நிகழ்வின் கருத்துரைகள்

By Andre Damon 
10 September 2013

Use this version to printSend feedback

கீழ்க்காணும் கருத்துக்கள், சர்வதேச சமூக சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) தேசிய செயலாளரான ஆண்ட்ரே டாமோனால் வேய்ன் பல்கலைக்கழகத்தின் IYSSE பிரிவு அழைப்பு விடுத்திருந்த சிரியப் போர் முனைப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கூறப்பட்டன. (பார்க்க, “SEP and IYSSE hold demonstration in Detroit against war in Syria”)

அடுத்த ஆண்டு முதலாம் உலகப் போர் வெடித்த நூறாண்டு முடிவைக் குறிக்கிறது. அந்த மோதல் ஐரோப்பாவில் ஒரு தொலை மூலையில் ஜூன் 1914ல், ஆஸ்திரியாவில் ஆர்ச்டியூக் பிரான்ஸ் பெர்டினான்ட் படுகொலையுடன் தொடங்கியது; அது அன்றைய கட்டத்தில் மனித வரலாற்றில் பெரும் இறப்புக்களை ஏற்படுத்திய கொடூரப் போராக அமைந்தது. கிட்டத்தட்ட 10 மில்லியன் (1 கோடி) மக்களுக்கும் மேலானோர்கள் அந்தக் கொடூர படுகொலையில் கொல்லப்பட்டனர்; இது எதையும் சாதிக்கவில்லை, இரண்டாம் உலகப் போருக்குத்தான் அரங்கு அமைத்தது, அது இன்னும் 60 மில்லியனுக்கும் (6 கோடிகள்) மேலான இறப்புக்களுக்கு வழிவகுத்தது.

ஒரு நூறாண்டுகளுக்குப் பின், அமெரிக்கா ஒரு சட்டவிரோத, நியாயமற்ற, குற்றம் நிறைந்த தாக்குதலை சிரியா மீது நடத்த தயாரிப்பை செய்கையில் பீதியுடன் உலகம் பார்க்கிறது. இது ஒரு “மட்டுப்படுத்தப்பட்ட” போர் என்று அமெரிக்க அரசாங்கம் கூறுவது குறித்து எவரும் போலித் தோற்றத்தைக் கொள்ள வேண்டியதில்லை. சிரியா மீது தாக்குதல் என்பது அதனுடைய இராணுவத்தை அழித்தல், உள்நாட்டுப் போரின் போக்கை மாற்றுதல் மற்றும் ஈரான், ரஷ்யா, சீனா ஆகியவைகளுக்கு எதிரான போருக்கு வழியமைத்தல் என்ற நோக்கங்களைக் கொண்டிருக்கும், இது சிந்தித்தும் பார்க்க முடியாத கொடூரமான விளைவுகளை கொண்டது.

ஆண்ட்ரே டாமோன் தன்னுடைய கருத்துக்களை வழங்குகிறார்

இதற்கு என்ன உகந்த காரணத்தை அமெரிக்கா அளித்துள்ளது? அல் குவேடாவின் மேலாதிக்கத்திற்குட்பட்டுள்ள ஒரு பினாமிப் படைக்கு அமெரிக்க அரசாங்க உளவுத்துறை அமைப்புக்கள் நிதி கொடுக்கின்றன; இனப்படுகொலைகளை நடத்தியுள்ளதுடன், இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுமுள்ளது, அத்தோடு சிரிய மக்களிடையே செல்வாக்கையும் இது கொண்டிருக்கவில்லை. அமெரிக்க அரசாங்கம், சிரிய இராணுவம்தான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்பதற்கு சிறிய சான்றையும் முன்வைக்காமல் கூறுகிறது.

வார இறுதியில் வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவர் மக்டோன்னோ NBC யின் “செய்தி ஊடகத்தை சந்திக்கவும்” நிகழ்ச்சியில், சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை “சந்தேகத்திற்கு இடமின்றி பயன்படுத்தியது என்பதற்கு குறிப்பான சான்றை அமெரிக்கா கொண்டிராவிட்டாலும்கூட, பொது அபிப்பிராயச் சோதனை அசாத் அரசாங்கம்தான் பொறுப்பு என்று கூறுகிறது என்றார்.

அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு முழு நியாயமும் முற்றிலும் ஆதாரமற்ற கூற்றுக்களை அடிப்படையாக கொண்டவை. இது ஒரு அரசியல், சட்டபூர்வ, அறநெறித் திவால்தன்மையின் வெளிப்பாடாகும். சர்வதேச சட்டத்தின் பார்வையில், அமெரிக்கா சிறிதும் ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை.

சிரியா மீது நீண்ட திட்டமிட்ட இராணுவத் தாக்குதலுக்கு அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன: வெள்ளை மாளிகை தயார், இராணுவம் தயார், செய்தி ஊடகம் தயார் ஆனால் மக்கள் தயாராக இல்லை. இடைவிடாத 12 ஆண்டுகள் நடைபெறும் போருக்குப் பின்னர், அமெரிக்க மக்கள் போதும் என்ற நிலையில்தான் உள்ளனர். “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஒரு தசாப்தத்திற்கு கறைபடிந்த போர்களை நியாயப்படுத்தியது, அமெரிக்காவில் அரசியல் சுதந்திரங்களை அடக்கியது, அப்படி இருந்தும் இப்பொழுது அல் குவேடா, அமெரிக்காவிற்கு சிரிய மக்களுக்கு எதிரான நட்பு அமைப்பாக போயுள்ளது.

மக்களுடைய போர் எதிர்ப்பு உணர்வின் வலிமை அரசாங்கத்தை பின்வாங்கச் செய்துள்ளது. பொதுமக்களிடமிருந்து ஒப்புதலைப் பெறுவது போல் காட்டிக் கொள்வதற்காக ஒபாமா காங்கிரசில் போர் நடத்த ஒப்புதல் கேட்டு வாக்களிப்பை நாடியுள்ளார்; அவருடைய நிர்வாகம் வாக்களிப்புக்கு ஆதரவாக இல்லாவிடினும் அது புறக்கணிக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

சிரியப் போருக்கான முனைப்பு, ஈராக் போருக்கு எதிராக இயக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பின் வந்துள்ளது. ஆனால் ஆர்ப்பாட்டங்களை வழிநடத்திய குழுக்கள் அப்பொழுது மக்கள் எதிர்ப்பை முதலில் 2004லும் பின் 2006லும் கடைசியாக ஒபாமா தேர்தலில் 2008ல் ஜனநாயகக் கட்சிக்குப் பின் திருப்பியது. ஆயினும் ஒவ்வொரு வாக்களிப்பிற்குப் பின்னும் போர் கூடுதலாகத்தான் விரிவாக்கம் அடைந்துள்ளது.

“மாற்றம்” குறித்த அவருடைய வனப்புரையைத் தவிர, ஒபாமா அமெரிக்க இராணுவ நடவடிக்கையை உலகம் முழுவதும் விரிவாக்கி, வரலாற்றில் எந்த ஜனாதிபதியும் செய்யாத அளவிற்கு ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்களையும் சுமத்தியுள்ளார். அமெரிக்காவில் அனைத்துத் தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளும் பதிவு செய்யப்பட்டு, படிக்கப்படுகின்றன என்பதை நாம் இப்பொழுது அறிவோம்; அமெரிக்க அரசாங்கம் அமெரிக்கக் குடிமக்களை விசாரணையின்றி கொல்லும் உரிமை கொண்டுள்ளது என உறுதியாகக் கூறுகிறது.

எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் ஒபாமா நிர்வாகம் உண்மையில் என்ன என்பதைக் காட்டுகின்றன; இது இராணுவ/உளவுத்துறைக் கருவிகள், மற்றும் வங்கிகளுக்கான ஒரு முகவர்தான்; அரச அதிகாரத்தை விரிவாக்கம் செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஜனநாயக உரிமைகளையும் அழிக்கிறது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த அனுபவத்தில் இருந்து படிப்பினைகளைப் பற்றி எடுக்க வேண்டும். ஜனநாயகக் கட்சி ஒரு போர் எதிர்ப்புக் கட்சி அல்ல; ஒரு போர் ஆதரவுக் கட்சியாகும். காங்கிரஸ் அல்லது ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் எந்தப் பிரிவின் மீதும் நம்பிக்கை வைக்கக் கூடாது. முழு அரசியல் ஸ்தாபனமும் செய்தி ஊடகத்துடன் சேர்ந்து, நிதியத் தன்னலக் குழுவின் சார்பில் பேசுகிறது; அதுதான் உத்தியோகபூர்வ அரசியலின் அனைத்துக் கூறுபாடுகளிலும் மேலாதிக்கம் கொண்டுள்ளது.

போரிலிருந்து யார் ஆதாயம் அடைகின்றனர்? சிரிய மக்களா? –அவர்களில் இரண்டு மில்லியன் பேர் அமெரிக்கா தூண்டிவிட்ட உள்நாட்டுப் போரால் ஏற்கனவே இடம் பெயர்ந்துள்ளனர்; இப்பொழுது பாரிய குண்டுத் தாக்குதல்களையும் எதிர்நோக்குகின்றனர்? மத்திய கிழக்கில் இருக்கும் மக்களா? அவர்களோ இப் பிராந்தியப் போரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலிருக்கும் தொழிலாள வர்க்கத்தினரா? – அவர்களுக்கு சமூகநலச் சேவைகளும், கல்வியும் வெட்டப்பட்டு அந்த நிதி போர் உந்துதலுக்கு செல்லுகிறது.

இல்லை! சமூகத்தை நடத்தும் ஒரு சிறிய அளவு பில்லியனர்களுக்குத்தான் இதில் ஆதாயம். நிதியத் தன்னலக் குழுக்கள், அமெரிக்காவில் தொழிலாளர்களை கொள்ளையடிப்பதில் மட்டும் திருப்தி அடைந்துவிடுவதோடு இல்லாமல், உலகம் முழுவதையும் வெற்றிகொண்டு, கொள்ளையடிக்க விழைக்கின்றனர்.

ஒரு புதிய சகாப்தத்தின் நுழைவாயிலில் நாம் நிற்கிறோம். தொழிலாளர்களும் இளைஞர்களும்தான், எதிர்காலம் சமாதானம் மற்றும் சமத்துவம் நிறைந்ததாக இருக்குமா அல்லது ஒரு இராணுவப் பெரும் படுகொலைக் களமாக இருக்குமா என்பதை முடிவெடுக்க வேண்டும். மக்களை வெறுமனே போரை எதிர்க்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்ள வைப்பது மட்டும் நோக்கமல்ல; தேவையானது என்னவென்றால் ஒரு அரசியல் முன்னோக்கும் மற்றும் மூலோபாயமுமாகும்.
போருக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான சமூகத்தளம் தொழிலாள வர்க்கத்தில் தான் கட்டமைக்கப்பட வேண்டும். போருக்கு எதிராகப் போராட விழையும் மாணவர்கள் தொழிலாளர்களை நோக்கி திரும்ப வேண்டும். அனைத்து பெரிய ஆலைகள், பணியிடங்களுக்கும் நாம் குழுக்களை அனுப்ப வேண்டும்.

போருக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

டெட்ரோயிட்டில், போருக்கு எதிரான போராட்டம், திவாலுக்கு எதிரான போராட்டம் மற்றும் அவசரக்கால மேலாளர் கெவின் ஓரிடம் உருவகம் கொண்ட பெரிய வங்கிகளின் கோரிக்கைகளுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும், அவர்கள் இப்பொழுது ஓய்வூதியங்களும் டெட்ரோயிட் நகரவைத் தொழிலாளர்களின் நலன்களும் அழிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றனர்; ஏனெனில் அவர்களிடத்தில் கொடுப்பதற்குப் பணம் இல்லையாம்.

ஈடுசெய்யமுடியாத வரலாற்றுக் கட்டிடங்கள், பழங்கால நினைவுச் சின்னங்கள் மீது அமெரிக்கா க்ரூஸ் ஏவுகணைகளை சிரியாவில் பொழியத் தயாராகுகையில், நிதியக் காட்டுமிராண்டிகள் டெட்ரோயிட் கலைக் கூடத்தின் மீது தாக்குதல் நடத்தி அவர்களால் முடிந்த அளவிற்கு திருடக்கூடியதை திருடிச்செல்ல முயற்சிக்கின்றனர்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்: நாகரீகம், கலாச்சாரம், அமைதி ஆகியவற்றை உளவுத்துறைப் பிரிவுக் குழுக்கள், நிதிய மோசடி செய்வோரிடமிருந்து பாதுகாக்க வேண்டும்; அவர்கள்தான் அமெரிக்காவையும் உலகையும் மற்றொரு போரில் தள்ள முற்படுகின்றனர்.
போர் முனைப்புக்கு மூலக் காரணம் முதலாளித்துவ அமைப்புமுறை ஆகும்; இதுதான் சமூகம் முழுவதையும் சமூகத்தை நடத்தும் நிதியத் தன்னலக் குழுவின் செழிப்பிற்குத் தாழ்த்துகிறது. இந்த அமைப்புமுறை அகற்றப்பட வேண்டும்; சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய, தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல், சமூகம் மீள்ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

போருக்கு செலவழிக்கப்படும் பணம் பொதுக் கல்வியைப் பரந்த முறையில் விரிவாக்கவும் இலவச உயர்கல்வி அளிக்கவும் அனைத்து மாணவர் கடன்களையும் தள்ளுபடி செய்யவும் பயன்படுத்தப்பட முடியும். இலவச, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு என்பது ஒரு சமூக உரிமை, அதேபோல்தான் ஒழுங்கான ஓய்வு பெறுதலும் இருக்க வேண்டும். மிகவும் முக்கியமானது, கெளரவமான ஊதியத்தில் நல்ல வேலை என்பதும் ஓர் உரிமையாகும்.

இக்கோரிக்கைகளையும் இத்திட்டங்களையும் செயற்படுத்த, சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் (IYSSE) இணையுமாறு அனைத்து இளைஞர்களையும் அழைக்கிறோம்.