சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP campaign team discusses socialist program in Jaffna

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சார குழு யாழ்பாணத்தில் சோசலிச வேலைத்திட்டம் தொடார்பாக கலந்துரையாடுகிறது

By our correspondents
4 September 2013

Use this version to printSend feedback

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) பிரச்சாரக் குழுக்கள், அண்மையில் காரைநகார் தீவு பகுதியிலும் யாழ்ப்பாண நகரத்தை அண்டிய கிராமங்களான கோண்டாவில் கிழக்கு, சுண்டிக்குழி மற்றும் கச்சேரியடியிலும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடின.

சோசலிச சமத்துவக் கட்சி எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறவிருக்ககும் வட மகாணசபை தேர்தலில் யாழ்மாவட்டத்தில் 19 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

இந்த பிரச்சாரக் குழுகள், சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பல்லாயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்து, கட்சியின் சர்வதேச சோசலிச முன்நோக்கு தொடர்பாக தொழிலாளர்கள் இளைஞர்கள் விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடின.

காரைநகர் தீவும் அதை அண்டிய கிராமங்களும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 26 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட கொடூர யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவையாகும். சாதாரண தமிழ் மக்கள் போரின் வடுக்களை சுமந்திருப்பதோடு இலங்கை பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களாலும் ஷெல் தாக்குதல்களாலும் சேதமாக்கப்பட்ட கட்டிடங்களின் மிச்ச சொச்சங்கள் இன்றும் காணக்கூயவையாக உள்ளன.

யுத்தத்தின் போது தனது பயங்கரமான அனுபவத்தை விளக்கிய கோண்டாவில் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி கூறுகையில், “ஆயிரகணக்கான மக்கள் தமது உயிரை இழந்தனர். உயிர் தப்பியவர்கள் பல தலைமுறைகளாக அல்லது பல வருடங்களாக உழைத்து சம்பாதித்த அனைத்தையும் இழந்தனர். இந்த கிராமத்தில் மாத்திரம் சுமார் 60 வீடுகள் விமான தாக்குதலால் அழிக்கப்பட்டன. பழைய வாழ்க்கையை மீளமைப்பது எவ்வாறு என கற்பனையும் செய்யமுடியாது. சிலவற்றை ஒருபோதும் மீளப்பெறமுடியாது. ஷெல் தாக்குதலில் நான் ஒரு காலை இழந்துவிட்டேன்,” என்றார்.

அதே கிராமத்தை சேர்ந்த இன்னுமொரு விவசாயி, தாம் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக விளக்கினார். குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கான வருமானம் அவருக்கு இல்லை. விவசாய உபகரணங்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. “ஒரு சிறிய துண்டு காணியில் விவசாயம் செய்ய பெரும் தொகையான பணம் தேவை. எமக்கு எமது உற்பத்தி செலவினை மிளப்பெற்று கடனை கூட செலுத்த முடியாது”, என அவர் விளக்கினார். அவருக்கு பிரதான தமிழ் முதலாளித்துவ கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எந்த அரசியல் கட்சியிலும் நம்பிக்கை இல்லை என்றும், வாக்களிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தனது அனுபவத்தை குறிப்பிட்ட ஒரு தச்சுத் தொழிலாளி, அங்கு இலங்கை அரசாங்கத்தில் இருக்கும் ஜனநாயகத்துக்கு மேலாக ஒன்றும் இல்லை, என்றார். “எனது கல்வி புலிகளால் பாழாக்கப்பட்டது. அவர்களது பாதுகாப்பு அரண்களில் சேவை ஆற்றுமாறு நாம் நிர்பந்திக்கப்பட்டோம். நாங்கள் மறுத்தால் அவர்கள் அடிப்பார்கள். இதனால் எனது க.பொ.த சாதாரணதர பாரீட்சையை பூர்த்தி செய்ய முடியவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து மக்கள் வெளியில் வர அனுமதியின்றி பெரும் சிரமப்பட்டனர். சிலர் சுட்டும் கொல்லப்பட்டனர்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அடக்குமுறையால் பலர் புலிகளின் கொள்கைகளுக்கு எதிராக இருந்த போதிலும் வெளிப்படையாக பேச முடியாமல் இருந்தனர், என அவர் கூறினார். அவர்கள் தோல்வியடைவதற்கு இதுவும் ஒரு காரணம் என குறிப்பிட்ட அவர், “புலிகளின் தோல்வியானது அவர்களது இராணுவ பலவீனத்தால் நேர்ந்தது அல்ல, அவர்களது பிரிவினைவாத அரசியலால் நேர்ந்ததே என்ற உங்களது நிலைப்பாட்டினை நான் எற்றுக்கொள்கின்றேன்,” என்றார்.

பிரதான அரசியல் கட்சிகள் தொடர்பாக பெரும்பான்மையான மக்கள் தமது விரக்தியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணம் சுண்டிக்குழியை சேர்ந்த ஒரு இளைஞன், “அரசியல்வாதிகள் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வருவார்கள் பின்னர் காணாமல் போய் விடுவார்கள்” என்றார். பிரச்சார குழுவினர், சோசலிச சமத்துவக் கட்சி இதற்கு மாறானது என்பதையும், அது தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு புதிய முன்னோக்ககிலும் புரட்சிகர கட்சியிலும் அணிதிரட்டி அவர்களை அரசியல் ரீதியாக ஆயுதபாணிகளாக்க போராடுகிறது என தெளிவுபடுத்தினர். அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்ததை வாசிப்பதற்கு உடன்பட்டார்.

பூச்சாடி உற்பத்தி செய்யும் இளைஞன் றீகன், அவருடைய மனைவிக்கு வேறு ஒரு பிரதேசத்தில் சொந்த நிலமும் வீடும் இருந்தாலும், தாம் 4,500 ரூபா வாடகையில் இங்கு குடி இருப்பதாக குறிப்பிட்டார். அவருடைய மனைவியின் வீடு, இராணுவம் வரையறுத்துக்கொண்டுள்ள “உயர் பாதுகாப்பு வலயத்தில்” அமைந்துள்ளது.

அவர் அமெரிக்காவின் “ஆசியாவுக்கு மீண்டும் திரும்பும்” திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதில் அக்கறை காட்டினார். ஆமெரிக்காவின் சிரியாவிற்கு எதிரான யுத்தத்துக்கும் சீனாவிற்கு எதிரான அச்சுறுத்தலுக்கும் எதிராக பேசிய அவர், “அமெரிக்கா அதன் சொந்த நலனுக்காக செயற்படுகிறது. இலங்கையிலும் துறைமுகங்களையும் மற்றைய வசதிகளையும் பயன்படுத்தும் தேவை அதற்கு உள்ளது”, என்றார்.

ஒரு தற்காலிக தொழிலாளி சோசலிச சமத்துவக் கட்சியின், சோசலிச கொள்கைகளை ஏற்றுக்கொண்டாலும், மக்களால் சோசலிசம் வரும் வரை காத்திருக்க முடியுமா என கேட்டார். சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்கள், வளர்ச்சியடைந்து வரும் முதலாளித்துவத்தின் உலக பொருளாதார நெருக்கடியானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வரலாற்று சவால் என தெளிவு படுத்தினர். தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்பி, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்காகப் போராடுவதைத் தவிர வேறு மாற்றிடு இல்லை என விளக்கினர்.

“நீங்கள் சொல்வது சரி, ஆனால் அது உடனடி சாத்தியப்பாடில்லை” என அந்த தொழிலாளி கூறினார்.  பதிலாக தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சில சலுகைகளை கொண்டுவரும் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஒரு தமிழ் முதலாளித்துவ கட்சி என்றும், அது தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் தேவைகளை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, அது தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது, என சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் விளக்கினர். சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கம் அதனுடைய கையில் ஆட்சி அதிகாரத்தை பெறவும், சர்வதேச சோசலிச மூலோபாயத்துக்காகவும் போராடுகிறது என அவர்கள் விளக்கினர்.

யாழ் பல்கலைகழகத்ததிற்கு பிரச்சார குழுவினர் சென்றபோது, மாணவர்கள் அங்குள்ள நிலைமைகளை அம்பலபடுத்தினர். “விரிவுரை அறைகளில் போதிய இடவசதி இல்லை. நூலகத்தில் இட வசதி இல்லை. ஊடகப் பிரிவில் போதிய அளவு கணனிகள் இல்லை” என ஒருவர் குறிப்பிட்டார். “கதிரைகளும் மேசைகளும் உடைந்துள்ளன. பல்கலைகழகத்திற்கு 150 அறைகளை கொண்ட நான்கு விடுதிகள் மட்டுமே உள்ளன. அவைகள் ஒழுங்காக பராமரிக்கப்படுவதில்லை. அங்கு தண்ணீர் வசதி ஒழுங்காக இல்லை,” என இன்னொருவர் கூறினார்.

யுத்தம் முடிவடைந்த போதிலும், அரச படைகள் பல்கலைகழகத்தினை இன்னமும் ஆழ்ந்த கண்காணிப்பில் வைத்துள்ளன என அவர்கள் குறிப்பிட்டனர். “பல்கலைகழகத்தில் எமக்கு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிமை இல்லை. புலனாய்வு பிரிவினரும் மாணவர்களின் நடவடிக்கை தொடர்பாக தகவல் சேகரிக்கின்றனர். ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு எமக்கு உரிமையில்லை. இந்த நாட்களில் பல்கலைகழகத்திலிருந்தும் யாழ்ப்பாண நகரிலிருந்தும் பாதுகாப்பு படையினர் தற்காலிகமாக வெளியேறியுள்ளனர். ஏனெனில் இது மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக முறையிலும் அமைதியான சூழ்நிலையிலும் நடைபெறுகிறது என காட்டுவதற்கான பாசாங்காகும்.”

யாழ் பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பிரிவை சேர்ந்த ஒரு மாணவன், “யார் பிரச்சாரம் செய்தாலும் தமிழ் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெறும். யுத்தம் முடிந்து நான்கு வருடம் ஆகியும் நிலைமைகள் அவ்வாறே இருக்கின்றன. ஒரு காலத்தில் புலிகள் ஒரு சக்திமிக்க இராணுவ அமைப்பாக இருந்தனர். பின்னர் அவர்களுடைய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளால் பலர் அவர்களை எதிர்க்கத் தொடங்கினர். சாதாரண சிங்கள மக்கள் மீதான அவர்களது தாக்குதல்கள் அரசாங்கதையே பலப்படுத்தியது. அரசாங்கத்தை தோற்கடிக்க சிங்கள தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது ஒரு சிறந்த சிந்தனை” என அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டத்தை சுட்டிக் காட்டி கூறினார்.

யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பரந்துபட்ட எதிர்ப்பு இருக்கின்றது. எனினும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு தொடர்பாக ஒரு குழப்பம் நிலவுகிறது. யாழ்ப்பாணத்ததில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும், இந்த முதலாளித்துவ கட்சி மாற்றத்தை கொண்டு வரும் அரசாங்கத்தை சவால் செய்யும் என்று கூறிக்கொள்கின்றன.

உண்மையில் தமிழ் கூட்டமைப்பு கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரப் பங்கீட்டு உடன்படிக்கையை எதிர்பார்க்கின்றது. அத்தகைய ஒரு ஒப்பந்தத்திற்கு வர ராஜபக்ஷவை நிர்பந்திக்குமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியாவிற்கும் அழைப்பு விடுக்கிறது. இவ்விரு அரசாங்கங்களும் ராஜபக்ஷ அரசாங்கதை பெய்ஜிங்கிடம் இருந்து தூரவிலக்க விரும்புகின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டில் பாரிய எதிர்ப்பு நிலவுவதால் தமிழ் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை தொடர்பாகவும் இந்திய அரசு கருத்தில் கொண்டுள்ளது.

ஒரு இறுதி வருட கலைப்பிரிவு மாணவன், நாட்டை அபிவிருத்தி செய்வதாக அரசு கூறுவதை சவால் செய்தார். “அவர்கள் யுத்தத்திற்கு பின்னர் வீதிகளையும் கட்டிடங்களையும் நிறுவுகின்றனர். ஆனால் இந்த அபிவிருத்தி எமது நன்மைக்கு அல்ல. நாங்கள் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்தது போலவே இன்றும் வாழ்கின்றோம். எங்களால் சுதந்திரமாக பேச முடியாது. அவர்கள் பல்கலைகழகத்தினுள் இலங்கை பொலிஸ் புலனாய்வுத் துறையினரை திணித்துள்ளனர். நாங்கள் எமது கல்வி பிரச்சினை தொடர்பாகவோ அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவோ பேசினால், நாங்கள் விசாரிக்கப்படுவதோடு அச்சுறுத்தலுக்கும் உள்ளாவோம்.”