சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds meeting in Jaffna—No to war against Syria

இலங்கை சோசக யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டம்சிரியாவுக்கு எதிரான யுத்தம் வேண்டாம்

By Rohantha De Silva
17 September 2013

Use this version to printSend feedback

செப்டெம்பர் 21 நடக்கவுள்ள வட மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சரத்தின் மைய அங்கமாக, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், சிரியாவுக்கு எதிரான அமெரிக்க யுத்தத்தை எதிர்க்க கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தின. யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வட மாகாணத்தில் நடந்த முக்கியமான கூட்டத்துக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் வருகை தந்திருந்தனர்.

சோசக/ஐவைஎஸ்எஸ்இ, கொழும்பில் இதே விவகாரம் தொடர்பாக இன்றும் ஒரு கூட்டத்தை நடத்தின. தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலக போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலகசோசலிசவலைத்தளமும் முன்னெடுத்துள்ள சர்வதேச பிரச்சாரத்தின் பாகமே இந்த கூட்டங்களாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சோசக தலைமை வேட்பாளரான பரமு திருஞானசம்பந்தர் யாழ்ப்பாண கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சோசக பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தை விளக்கி திருஞானசம்பந்தர் தெரிவித்ததாவது: “இந்த தேர்தலில் இந்த யுத்தப் பிரச்சினையை எழுப்பும் ஒரே கட்சி சோசக மட்டுமே. இதற்குக் காரணம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே இயக்கம் நாம் மட்டுமே.

யாழ்ப்பாண கூட்டத்தில் பரமு திருஞானசம்பந்தர் உரையாற்றுகிறார்

“இலங்கையின் வடக்கில் உள்ள வெகுஜனங்கள் கடுமையான பரிச்சினைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், எமது பிரச்சாரத்தின் மையமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பை நாம் எழுப்புவது ஏன் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்,” என திருஞானசம்பந்தர் தெரிவித்தார். வடக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உள்ளூர் அல்லது தேசிய தீர்வுகள் கிடையாது என பேச்சாளர் விளக்கினார். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சீனவை நோக்கி நகர்வதையிட்டு கவலை கொண்டுள்ள, தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி அக்கறைகொள்ளாத இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே, கொழும்பு அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்துகிறது என அவர் சுட்டிக் காட்டினார். “யாழ்பாணத்திலான அரசியல் நிலைமை, வெறுமனே கொழும்பில் தீர்மாணிக்கப்படுவதில்லை, மாறாக பிரதானமாக வாஷிங்டன், லண்டன் மற்றும் புது டில்லியிலேயே தீர்மாணிக்கப்படுகிறது,” என திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.

சிரிய யுத்தத்தின் நீண்ட விளைவுகள் கொண்ட அழிவுகரமான தாக்கத்தைப் பற்றி பேச்சாளர் எச்சரித்தார். சிரியா மீதான ஒரு அமெரிக்கத் தாக்குதல், ரஷ்யாவையும் ஈரானையும் யுத்தத்துக்குள் இழுத்து, ஒரு பிராந்திய யுத்தத்துக்குள் திருப்பிவிடுவதோடு மூன்றாம் உலக யுத்தத்தின் சாத்தியத்தையும் ஏற்படுத்தும். “அணுவாயுதங்களோடு இது மிகவும் அழிவுகரமானதாக இருக்கும்” என திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் வாஷிங்டனின் பின்னால் அணிதிரண்டுள்ளன என பேச்சாளர் விளக்கினார். “சிரியா மீதான அமெரிக்க யுத்த முயற்சிகளையிட்டு அனைத்து தமிழ் கட்சிகளும் மௌனம் காக்கின்றன, ஏனெனில் அவை அதை ஆதரிக்கின்றன. அவர்கள் இங்கும் அத்தகைய தலையீட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தை பற்றி குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், “மேற்கத்தைய சக்திகளின், குறிப்பாக வாஷிங்டனின் ஆதரவினால் மட்டுமே, அழிவுகரமான விளைவுகளுடன் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடிந்தது. இப்போது, தமிழ் வெகுஜனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டுவரும் பெயரில், இதே மேற்கத்தைய சக்திகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அணிசேர்ந்துள்ளது,” என்றார்.

இனவாத ஒடுக்குமுறை உட்பட தமிழ் வெகுஜனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரே பதில், சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டமே. “தமிழ் தேசியவாதம் வெகுஜனங்களுக்கு அழிவுகளை மட்டுமே கொண்டு வந்தது. தமிழ் தொழிலாளர்கள், தமது பொது எதிரியான முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராடுவதற்கு, தமிழ் தொழிலாளர்கள் தமது சிங்கள சகோதர சகோதரிகளுடனும் மற்றும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியத் தொழிலாளர்களுடனும் ஐக்கியப்பட வேண்டும்,” என திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.

சோசக அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, அமெரிக்காவிலும் உலகம் பூராவும் உள்ள ஜனத்தொகையில் பெரும்பான்மையினரால் எதிர்க்கப்படும் யுத்தத்துக்கு, இன்னொரு சாக்குப் போக்கை தயார் செய்வதின் பேரிலேயே, சிரியாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை ஒபாமா நிர்வாகம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என விளக்கினார்.

“சிரிய மக்களுக்கு எதிராக சிரியாவின் அஸாத் அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது எனக் கருதுவதனால் சிரியாவுக்கு எதிரான யுத்தத்துக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தயார் செய்யவில்லை. மாறாக, வாஷிங்டனின் மூலோபாய நலன்களுக்காக, குறிப்பாக தனது பொருளாதார சரிவில் இருந்து தலை தப்புவதற்காக எண்ணெய் வளம் கொண்ட மத்திய கிழக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான உந்துதலின் காரணமாகவே யுத்தத்தை தயார் செய்கின்றது,” என தேவராஜா தெரிவித்தார். 2003ல் ஈராக்குக்கு எதிரான அமெரிக்க யுத்தத்தை பெயரளவில் எதிர்த்த உலகம் பூராவும் உள்ள போலி-இடது கட்சிகள், இப்போது மனித உரிமைகளை பாதுகாக்கும் சாக்குப் போக்கின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்ந்துள்ளன என அவர் சுட்டிக் காட்டினார்.

கடைசியாக உரையாற்றிய, சோசக அரசியல் குழு உறுப்பினர் பானிணி விஜேசிறிவர்தன, தற்போதைய உலக நிலைமைகளை இரண்டாம் உலக யுத்தத்துக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிட்டார். ஜேர்மன் துருப்புக்களை போலிஷ் இராணுவம் தாக்கியதாக பொய்யாக குற்றம் சாட்டிய பின்னர், ஹிட்லர் போலாந்தை ஆக்கிரமித்த அதே வழியில், சிரியா மீதான யுத்தத்தை நியாயப்படுத்த இராசாயன ஆயுதங்களை அஸாத் அரசு பயன்படுத்தியுள்ளது என்ற பொய்யை வாஷிங்டன் பயன்படுத்துகின்றது. ஜேர்மன் முதலாளித்துவத்தின் நெருக்கடியில் இருந்து ஹிட்லரும் ஜேர்மன் இராணுவவாதமும் எழுந்ததைப் போல், அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் சீரழிவு நிலைமையின் ஒரு விளைவே ஆகும்.

தொழிலாள வர்க்கத் தலைமைத்துவத்தின் நெருக்கடியை தீர்க்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்திய  விஜேசிறிவர்தன, மண்டபத்தில் இருந்தவர்களை சோசகவில் இணையுமாறும் அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்பப் போராடுமாறும் அழைப்பு விடுத்து உரையை முடித்தார்.

கலந்துரையாடல் சமயத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. “இந்த வருடங்களில்” தமிழ் வெகுஜனங்களுக்கு சோசலிஸ்டுகள் என்ன செய்தார்கள் என கேட்டு, ஒரு தமிழ் தேசியவாதி அந்த முன்னோக்கை நியாயப்படுத்த முயன்றார். அதற்குப் பதிலளித்த தேவராஜா, தெற்காசியப் பிராந்தியத்தில் மார்க்சியத்துக்கான போராட்டத்தின் படிப்பினைகள் சிலவற்றை கலந்துரையாடியதோடு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை இடைவிடாமல் பாதுகாத்தவர்கள் மார்க்சிஸ்டுகள் மட்டுமே என்பதை ஸ்தாபித்தார்.

பின்னர் உள்நாட்டு யுத்தமாக மாறிய தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பாகுபாடுகளுக்கு அடித்தளத்தை அமைத்த, இலங்கையின் 1948 சுதந்திரம் என சொல்லப்படுவதை, ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி மட்டுமே எதிர்த்தது என தேவராஜா சுட்டிக் காட்டினார். சோசகவும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (புகக) வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை துருப்புக்களை திருப்பியழைக்குமாறு இடைவிடாமல் போராடியதோடு யுத்தத்துக்கு ஒரு ஆளோ ஒரு சதமோ கொடுக்க வேண்டாம் எனவும் போராடியது.

புகக/சோசகவின் கொள்கை ரீதியான போராட்டத்துக்கு கொழும்பு அரசாங்கமும் புலிகளும் முன்னெடுத்த திட்டமிட்ட எதிர்நடவடிக்கைகளை விஜேசிரிவர்தன மீண்டும் கணக்கிட்டார். 1998ல் திருஞானசம்பந்தர் உட்பட பல சோசக உறுப்பினர்களை இலங்கையின் வடக்கில் புலிகள் தடுத்து வைத்திருந்தனர். அவர்கள் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுத்த சளைக்காத சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தின் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 2007ல் ஊர்காவற்துறையில் சோசக உறுப்பினர் என். விமலேஸ்வரன் காணாமல் போனமைக்கும் கிழக்கு இலங்கையில் சோசக ஆதரவாளர் எஸ். மரியதாஸ் 2006ல் கொல்லப்பட்டமைக்கும் இராஜபக்ஷ அரசாங்கமே பொறுப்பு.

பேச்சாளர்கள் சிரிய நெருக்கடியை பகுப்பாய்வு செய்த முறையையும் தமிழ் சிங்கள உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் திட்டத்தை அபிவிருத்தி செய்ததையும் ஒலிபெருக்கியில் கேட்ட ஒருவர் கூட்டத்துக்கு வந்து உரைகளுக்கு செவிமடுக்க முடிவெடுத்தார். கூட்டத்துக்கு வந்திருந்த இன்னொருவர் தெரிவித்ததாவது: “முதலாவது வளைகுடா யுத்தத்தின் போது நான் குவைத்தில் வேலை செய்தேன். அமெரிக்கர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை நான் அனுபவித்தேன். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒட்டு மொத்த மத்திய கிழக்கையும் அதன் எண்ணெயையும் கட்டுப்படுத்துவதே. இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக சிரியா மீது குற்றம் சாட்டப்படுகின்றமை நாட்டுக்குள் நுழைவதற்கான சாக்குப் போக்கே அன்றி வேறில்லை.”