சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military harasses SEP candidates for northern provincial election

வட மாகாணசபை தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை இலங்கை இராணுவம் மிரட்டுகிறது

By W. A. Sunil
26 August 2013

Use this version to printSend feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “சுதந்திரமானதும் நியாயமானதும் தேர்தல்” என வெளிப்படையாக பிதற்றிய போதிலும், எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவிருக்கும் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி உட்பட எதிர்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக இராணுவம் அச்சுறுத்தும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

தீவின் நீண்டகால யுத்தத்தின் பின்னர், 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, வடமாகாணம் இன்னும் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளது.

யாழ் குடாநாட்டின் மேற்கே அமைந்துள்ள புங்குடுதீவில் வசிக்கும், சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் ஆ. முருகானந்தத்தின் வீட்டிற்கு சாதாரண உடையணிந்த இரு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் ஆகஸ்ட் 6ம் திகதி சென்றுள்ளனர். அவர்கள் தம்மை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு கட்சியை பற்றி வினாவியுள்ளனர். மெல்லிய பாணியிலான பயமுறுத்தலை விடுத்த அதிகாரிகள், தீவில் உள்ளவர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை என குறிப்பிட்டனர். முருகானந்தம் சுருக்கமாக கட்சியை பற்றி கூறி, தன்னை விசாரிப்பதற்கு இராணுவத்திற்கு அதிகாரமில்லை எனக் குறிப்பிட்டார்.

வேட்பாளர் யாழ்ப்பாணத்தில் உள்ள உதவி தேர்தல் ஆணையாளாரிடம் முறைப்பாடு செய்தபோது, அவர் பொலிஸிற்கு செல்லுமாறு கூறினார். இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக முருகானந்தம் உத்தியோகபூர்வமாக பொலிசில் முறைப்பாடு செய்தார். பொலிஸ் கடந்தவாரம் விசாரணை செய்யவிருந்த போதிலும், இராணுவ அதிகாரிகள் வரவில்லை.

ஆகஸ் 8ம் திகதி, பல சீருடையணிந்த இராணுவத்தினர், யாழ்ப்பாணம் காட்டுக்கந்தோர் வீதியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் எஸ். பவானந்தனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஒருவரும் வீட்டில் இல்லாமையினால், அருகில் உளள்வர்களிடம் அவரை பற்றியும் ஏனைய வேட்பாளர்களான அவரது மனைவி ஆர். பாலகௌரி மற்றும் அவாரது சகோதரர் திருஞானவேல் தொடர்பாகவும் விசாரித்துள்ளனர். அந்த இராணுவத்தினர் வேட்பாளர்களுக்கு “உதவி” செய்ய வந்ததாக கூறிக்கொண்டனர்.

இந்த அச்சுறுத்தல் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் வேட்பாளர்களினதும் ஜனநாயக உரிமைகளை மீறுகிறது. தேர்தல் சட்டத்தின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி  19 வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியுள்ளது. சர்வதேச சோசலிச கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடும் ஓரே ஒரு அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். மாறிமாறி கொழும்பில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை எதிர்ப்பதிலும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதிலும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அதன் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவத்திற்கு வகை தொகையின்றி ஜனநாயக உரிமைகளை மீறிய வரலாற்று பதிவுகள் உண்டு. 2007 மார்ச் மாதத்தில் புங்குடுதீவில் இருந்து ஊர்காவற்துறைக்கு திரும்பிக்கொண்டிருந்த சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயினர். இந்த குற்றச் செயலில் இலங்கை கடற்படை மற்றும் அவர்களுடன் செயற்படும் இராணுவ துணைக்குக்களின் தொடர்பினை சோசலிச சமத்துவக் கட்சி அம்பலத்திற்கு கொண்டுவந்த போதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் மீதான இராணுவ பயமுறுத்தல் இராணுவத்தின் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய கட்சிகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் மன்னார் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது சொந்த விபரங்களை சேகாரித்ததாக கூட்டமைப்பினர் தேர்தல் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். வேட்பாளர்கள் எங்கு படித்தார்கள், கடந்த காலத்தில் என்ன வேலை செய்தார்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது உட்பட குடும்ப விபரங்கள் போன்றவற்றை தருமாறு அந்த அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவஞானம், அண்மையில் நிதி சேகரிப்பதற்காக கனடா சென்றிருந்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக, ஆகஸ்ட் 15 அன்று, யாழ்ப்பாண பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினர் அவரை விசாரணைக்கு அழைந்திருந்தனர்.

அன்றைய தினமே, ஒன்பது பேர் அடங்கிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பீ.டி.பீ) குண்டர்கள் குழு, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரச்சார குழுவின் வீடுகளுக்குள் புகுந்து, அவர்களை இரும்புக் கம்பிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளனர். ஈ.பீ.டி.பீ, ராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளி கட்சியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜே.வி.பீ. வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக ஜே.வி.பீ. பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்ரெத்தி ஜாலை 29ம் திகதி ஊடகங்களுக்கு கூறினார். இராணுவ புலனாய்வு அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கு வந்து ஏன் அவர்கள் ஜே.வி.பீ.  பட்டியலில் போட்டியிடுகிறார்கள், என வினவியுள்ளனர். தாம் கிளிநொச்சிக்கு செல்லுபோது ஜே.வி.பீ.யின்  வாகனங்கள் திட்டமிடப்பட்ட முறையில் இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் ஒமந்தை இராணுவ காவலரணில் சோதனை செய்யப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வட்டுகோட்டையில் அமைந்துள்ள ஜே.வி.பீ. யாழ்மாவட்ட தலைமை வேட்பாளர் நடராஜாவின் காரியாலயத்திற்கு வந்த புலனாய்வு அதிகாரிகள் தேர்தல் துண்டுபிரசுரங்களை எடுத்துச் சென்றதாக அவர் எமது நிருபர்களிடம் கூறினார். ஜே.வி.பீ. வேட்பாளர் சசிகலாவின் வீட்டிற்கு சென்ற புலனாய்வு அதிகாரிகள் ஏன் நீங்கள் ஜே.வி.பீ. பட்டியலில் போட்டியிடுகின்றீர்கள் என விசாரித்துள்ளனர்.

தீவின் தமிழ் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் 26 ஆண்டு காலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த யுத்தத்துக்கும் ஆதரவளித்த ஜே.வி.பீ., ஒரு சிங்கள பேரினவாத கட்சியாகும். 1948ம் ஆண்டு உத்தியோகபூர்வ சுதந்திரத்திலிருந்தே, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தனது ஆட்சியை கொண்டுநடத்தவும், இனவாத அரசியலை நாடுகின்றமை கொழும்பு ஸ்தாபனத்தின் ஒரு அங்கமாகும்.

புலிகள் தோற்கடிக்கப்படும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்டது. இன்று தமிழ் கூட்டமைப்பு, தமிழ் முதலாளித்துவ கும்பல்களின் சிறப்புரிமைகளை உத்தரவாதம் செய்யக் கூடிய ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குக்காக இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியாவினதும் பிரதான ஏகாதபத்திய சக்திகளதும் ஆதரவை எதிர்பார்த்துள்ளது. இந்தியாவினதும் அமொரிக்காவினதும் அழுத்தத்தின் பேரிலேயே, இரண்டு தசாப்தங்களில் முதற் தடவையாக வட மாகாணசபை தேர்தலுக்கு தயக்கத்துடன் இராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பீ.யுடன் அடிப்படையில் அரசியல் எதிர்ப்பைக் கொண்டிருந்த போதிலும், சோசலிச சமத்துவக் கட்சி அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் நடந்தது போலவே, இராணுவம் எதிர்க் கட்சியினரையும் அவர்களது வேட்பாளர்களையும் அச்சுறுத்தும் அதேவேளை, ஈ.பீ.டி.பீ. உட்பட அரசாங்க கட்சிகளுக்காக ஆதரவு பிரச்சாரம் செய்கிறது. தேர்தலுக்கு பின்னர் மாகாணசபையில் எத்தகைய அலங்கரிப்புகள் நடந்தாதலும், மகாணத்தினுள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இராணுவம் விளைபயனுள்ள வகையில் கட்டுப்பாட்டினை கொண்டிருக்கும்.