சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP candidate in Sri Lanka denounces US war threat

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் அமெரிக்க போர் அச்சுறுத்தலை கண்டனம் செய்கின்றார்

By Paramu Thirugnanasambanthar
4 September 2013

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, சிரியாவுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் மேற்கொள்ளும் யுத்த திட்டங்களை கண்டனம் செய்கின்றது. இந்த சிறிய, ஒடுக்கப்பட்ட மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாட்டின் மீதான திட்டமிடப்பட்ட அமெரிக்க இராணுவத் தாக்குதலை எதிர்க்குமாறு இலங்கை மற்றும் இந்தியா உட்பட தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

சர்வதேச சட்டத்தை மீறி, சிரியா மீது படையெடுக்க அச்சுறுத்துவதன் மூலம், அமெரிக்கா ஒரு சர்வதேச காடையர் போல் செயற்படுகின்றது. போருக்கான உத்தியோகபூர்வ காரணங்களாக முன்வைக்கப்படும் ஒரு தொகை பொய்கள், ஈராக் மீது 2003ல் போர் தொடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட "பேரழிவு ஆயுதங்கள்" பற்றிய போலிக் காரணத்தை எதிரொலிக்கின்றன.

சிரியா மீதான போர், ஈரான் மீதான படையெடுப்புக்கும் மற்றும் ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்குமளவு ரஷ்யா மற்றும் சீனாவும் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த போருக்கும் ஆரம்பமாக இருக்கும். அமெரிக்காவின் குறிக்கோள், உலகின் எரிசக்தி வழங்கல்கள் மீதும் யூரோஏசியன் பெருநிலப்பரப்பின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இலக்காக் கொண்டது. அதன் ஆதிக்கத்துக்கு எந்தவொரு பிராந்திய அல்லது சர்வதேச சவாலையும் தடுப்பதன் மூலமே இந்த இலக்கு அடையப்பட முடியும்.

அமெரிக்கா ஈராக்கின் மீது யுத்தம் செய்யும்போது வெள்ளை பொஸ்பரஸ் மற்றும் செறிவு குறைந்த யுரேனியத்தையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது என்ற உண்மையை எடுத்துக்கொண்டால், இராசயான ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி உலகுக்கு விவுரையாற்றக் கூடிய கடைசி நபர் அமெரிக்க ஜனாதிபதியே. எல்லாவற்றுக்கும் மேலாக, அல்கொய்தா தொடர்புடையவை உட்பட, ஜனாதிபதி பஷிர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் சக்திகளை அமெரிக்கா ஆதரிக்கின்றது. இந்த சக்திகள், அமெரிக்க தலைமையிலான படையெடுப்புக்கு சாக்குப்போக்கை உருவாக்குவதன் பேரில் அத்தகைய ஆயுதங்களை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிரியாவில் புரட்சி என சொல்லப்படுவது உண்மையில் அத்தகையதல்ல. அமெரிக்காவும் அதன் வளைகுடா பங்காளிகளும், லிபியா மற்றும் ஈராக்கில் செய்ய முயற்சித்தது போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மை அரசாங்கத்தால் அசாத் ஆட்சியை பதிலீடு செய்யவதன் பேரில் ஜிஹாத் குழுக்கள், முன்னாள் இராணுவ அலுவலர்கள் மற்றும் சி.ஐ.ஏ. சொத்துக்களுக்கும் நிதி வழங்குகின்றன. அசாத் உடன் கணக்குத் தீர்த்துக்கொள்ள வேண்டிய கடமை சிரியத் தொழிலாள வர்க்கத்துடையதே அன்றி, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களது பணி அல்ல.

அமெரிக்காவுக்குள், ஐந்தாண்டுகால பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை அடுத்து, வெடிக்கும் நிலையை அடைந்துள்ள சமூகப் பதட்ட நிலைமைகளை திசை திருப்ப வேண்டிய தேவையும், மற்றும் அமெரிக்க புலனாய்வு முகவர்களின் சட்டவிரோத ஒற்றுக் கேட்டல்களுக்கு விரோதமான எதிர்ப்பையும் நசுக்க வேண்டிய தேவையும் அமெரிக்காவுக்கு இருக்கின்றது.

ஒபாமாவின் ஆசியாவுக்கு "மீண்டும் திரும்புதலின்" கீழ், அமெரிக்கா திட்டமிட்டு சீனாவை சுற்றி வளைக்க செயற்படுவதோடு அதை அமெரிக்க பூகோள மேலாதிக்கத்துக்கு தடையாக வளர்வதில் இருந்து தடுக்கின்றது. அத்தகைய சூழ்நிலையில், சிரியாவுக்கு எதிரான போர், மத்திய கிழக்கில் மட்டுமன்றி, உலகம் பூராவும் மோதலை வெடிக்கச் செய்வதற்கு அச்சுறுத்துகிறது.

ஏகாதிபத்திய சக்திகள் மனிதகுலத்தை முதலாம் உலக யுத்தத்துக்குள் தள்ளி கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளும், இரண்டாம் உலக யுத்தம் வெடித்து சுமார் 75 ஆண்டுகளும் ஆகியுள்ள நிலையில், மனிதகுலம் ஆழம் காணமுடியாத விளைவுகளுடன் மூன்றாம் உலக யுத்த ஆபத்தை நேருக்கு நேர் சதந்திக்கின்றது.
ஒரு தசாப்தத்துக்கும் மேலான இரத்தக்களரி யுத்தங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆளில்லா விமானக் கொலைகளின் பின்னர், அமெரிக்கா மற்றும் பெரிய பிரித்தானியா உட்பட உலக வெகுஜனங்கள் இன்னொரு ஏகாதிபத்திய யுத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். பிரிட்டிஷ் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கும் ஏற்கனவே யுத்தத்துக்கு முடிவெடுத்துள்ள ஒபாமா நிர்வாகத்தின் குழப்பத்துக்கும் பின்னால் இருப்பது இதுவே. ஆனால் உலக மக்களால் யுத்தத்தை தடுப்பதற்கு பாராளுமன்றங்கள், அமெரிக்க காங்கிரஸ் அல்லது ஐக்கிய நாடுகள் சபை மீதோ நம்பிக்கை வைக்க முடியாது.

சாதாரண மக்களின் முதுகுக்குப் பின்னால், தெற்காசிய பிராந்தியமும் இப்போது தவிர்க்க முடியாமல் மையங்கொள்ளும் ஏகாதிபத்திய போருக்குள் இழுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷ, சீனாவுடனான தனது உறவுகளை கைவிடுமாறு கோரும் அமெரிக்கத் தலைமையிலான மேற்கத்தைய சக்திகளின் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு ஆதரவளித்த பின்னர், அவர்கள் இராஜபக்ஷ மீது அழுத்தத்தை திணிப்பதற்காக யுத்தக் குற்ற விவகாரங்களை போலியாக பற்றிக்கொண்டுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கின், இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும், சீனாவுக்கு எதிரான அமெரிக்க-இந்திய மூலோபாய பங்கிணைப்பின் பாகமாக சிரியாவுக்கு எதிராக வாஷிங்டனுடன் அணிசேர வேண்டிய அழுத்தத்தின் கீழ் உள்ளது.

ஏகாதிபத்திய போரை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமே. சிரியாவுக்கு எதிரான அமெரிக்க யுத்த உந்துதலுக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்கள் மற்றும் ஏனைய வடிவிலான எதிர்ப்புக்களையும் ஏற்பாடு செய்யுமாறு இலங்கையிலும் தெற்காசியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

யுத்தத்துக்கு எதிரான போராட்டமானது தொழில் மற்றும் வாழ்க்கைத் தரங்களை அழிப்பதற்கு, முதலாளித்துவ அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு மற்றும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்குவதற்கும் எதிரான போராட்டத்துடன் பிணைக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளித்துவ அமைப்பு முறையை சோசலிசத்தால் மாற்றீடு செய்வதையும் வர்க்க சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டுவதையும் இலக்காகக் கொண்ட ஒரு வெகுஜன அரசியல் கட்சி தொழிலாள வர்க்கத்துக்கு அவசியம்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதன் சகோதரக் கட்சிகள் உட்பட, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளும், இந்த போராட்டத்திற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடிக்கொண்டிருக்கின்றன.