சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

International gangsterism and Washington’s war drive against Syria

சர்வதேச காடைத்தனமும் சிரியாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலும்

By Barry Grey and Tom Carter
7 September 2013

Use this version to printSend feedback

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் G20 உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, உலகின் தார்மீக மனச்சாட்சி மற்றும் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துபவர் போல காட்டிக் கொண்டார். பெரிதும் தோல்வியற்ற முயற்சியில், சர்வதேச ஆதரவைத் திரட்டவும் சிரியாவிற்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பு போரை நியாயப்படுத்தவும் அவர் அவ்வாறு செய்தார்.

வெள்ளியன்று உச்சி மாநாடு முடிந்த பின் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா வெளிப்படையாக, அமெரிக்க எந்த நாட்டையும் தாக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும், அதுவோ அல்லது அதன் நட்பு நாடுகளோ தவிர்க்க முடியாத தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்றாலும், ஐ.நா.வால் இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்றாலும் இப்படித்தான் என்றார். இது ஐ.நா. சாசனத்தை நேரடியாக நிராகரித்தல் என்று ஆகிறது; அது இராணுவ ஆக்கிரமிப்பின் ஒருதலைப்பட்ச, ஆத்திமூட்டலற்ற நடவடிக்கைகளை குற்றம் சார்ந்த செயல்கள் என வரையறுக்கிறது. தான் விரும்பினால் எந்த நாட்டையும் தாக்கலாம் என்று அமெரிக்கா கூறுவது, முழு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தையை சர்வதேச சட்டத்தின் வடிவமைப்பையும் மீறும் உறுதிப்பாட்டு பேச்சாகும்.

அமெரிக்க காங்கிரசிடம் இருந்து சிரியாவிற்கு எதிரான இராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் கேட்ட தன் முடிவை விளக்குகையில், ஒபாமா கூறினார், “நிரபராதியான குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான அசாத்தின் இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு அமெரிக்காமீது ஒரு தவிர்க்க முடியாத நேரடித் தாக்குதல் என்று நேர்மையாக நான் கூற இயலாது... அது உடனடியாக நம் நட்பு நாடுகளையும் தாக்கத்திற்கு உள்ளாக்கும் என்றும் கூறுவதற்கு இல்லை.”

மற்றொரு கட்டத்தில் அவர் கூறினார், “இது என் கருத்து.... இப்பிரச்சினையில் பாதுகாப்புக் குழுவின் முடக்கம் இருக்கையில், இரசாயன ஆயுதங்கள் குறித்த தடையை நிலைநிறுத்துவது குறித்து நாம் தீவிரமாக இருந்தால், பின் ஒரு சர்வதேச விடையிறுப்பு தேவை, அது பாதுகாப்புக்குழு நடவடக்கை மூலம் வராது.”
மிகச் சமீபத்தில் மார்ச்-அக்டோபர் 2011ல் லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ தாக்குதல் உட்பட ஐ.நா. பாதுகாப்பு சபை தன் பங்கிற்கு பல கறைபடிந்த போர்களுக்கு ஒப்புதல் முத்திரையைக் குத்தியுள்ளது, ஆனால் இன்னும் அதன் உறுப்பினர்கள் சிரியப் பிச்சனை குறித்து பிளவுற்றுத்தான் உள்ளனர்.

வாஷிங்டனின் திமிர்த்தனமான இராணுவவாத உறுதிப்பாட்டுடன் சேர்ந்துவரும் ஒழுக்கநெறி சார்ந்த பேச்சுக்கள், இத்தகைய பிரச்சினைகளில் எப்பொழுதும் அப்பட்டமான பொய்களை அடிப்படையாகக் கொண்டவை. சிரிய ஆட்சிக்கு எதிராக, அது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க எச்சான்றும் அளிக்கப்படவில்லை. அதுவும் வாஷிங்டனின் பினாமிப் படைகளுக்கு எதிராக போரில் அது தளத்தில் வெற்றி பெற்று வருகையில், அத்தகைய தாக்குதலால் அதற்கு ஆதாயம் ஏதும் இல்லை. ஐ.நா. ஆய்வாளர்கள் டமாஸ்கஸில் அப்பொழுதுதான் சிரியாவின் அழைப்பின் பேரில், இரசாயன ஆயுதங்கள் தாக்குதல் பற்றிய முந்தைய கூற்றை விசாரிக்க வந்துள்ளனர்.

மறுபுறமோ, சிரியாவில் வாஷிங்டனின் “எழுச்சியாளர்” படையின் முதுகெலும்பாக இருக்கும் அல்-குவேடா பிணைப்பு உடைய பயங்கரவாதிகள், இதில் அதிக ஆதாயம் பெறுவர்; ஏனெனில் அவர்கள் தோல்வியின் விளிம்பில் இருந்தனர், தங்களுக்காக அமெரிக்கா நேரடியாக தலையீடு செய்ய ஒரு போலிக் காரணத்தை அளித்து தூண்ட இது உதவும். அவர்களுடைய படுகொலைகள், தலையை துண்டித்தல், பீதியளிக்கும் குண்டுவீச்சுக்கள் மற்றும் சிரிய இராணுவப் படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிரான அவர்களுடைய பிற கொடூரங்கள், இணைய தள பதிவுகள் உட்பட நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் இரசாயன ஆயுதங்கள் வைத்துள்ளதாக பெருமை பேசிவந்தனர், அவற்றை பயன்படுத்த தயாராக உள்ளனர் எனவும் கூறிவந்தனர்.

சிரியாவிற்கு எதிரான போரை தொடக்குவதை நியாயப்படுத்துவதில் அவர்கள் அதிகம் பேசிய மற்றொரு பொய், இது “மட்டுப்படுத்தப்பட்து மற்றும் விகித அளவிலானது” என்று ஒபாமா வெள்ளியன்று மீண்டும் கூறியது போல்தான். இது தொடர்பாக, செப்டம்பர் 3 ம் திகதி Foreign Policy  வலைத் தளத்தில் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் புகழ் பெற்ற மற்றும் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசியராக உள்ள ப்ரூஸ் அக்கர்மானுடைய கட்டுரை மேற்கோளிடத் தகுந்ததாகும்.

ஒபாமா நிர்வாகம் கடந்த வார இறுதியில் இராணுவ பலத்தை பயன்படுத்துவதற்கு இசைவு கொடுக்க காங்கிரசிற்கு அளித்த வரைவு ஒன்றைப் பற்றி விவாதிக்கையில், அவர் எழுதினார்: “ஆனால் உண்மையில் அவருடைய [ஒபாமாவின்] முறையான திட்டம் பாரிய தூண்டில் போட்டு செயல்படுத்தும் நடவடிக்கை ஆகும். இது ஜனாதிபதியை “அமெரிக்காவின் ஆயுதப் படைகளை’, தரையில் சப்பாத்து கால் பதிவது உட்பட பயன்படுத்தவும், இராணுவ வலிமையை ‘சிரியாவிற்குள், சிரியாவிற்கு, சிரியாவில் இருந்து வெளியே” பயன்படுத்த அனுமதிக்கிறது. இதையும் விட அதிகமானது ஜனாதிபதி “இரசாயன ஆயுதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள்’ பயன்படுத்தப்படுவது, அதிகமாக்கப்படுவதை நிறுத்தும் வகையிலும் செயல்படலாம்; “அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் பங்காளிகளையும் இத்தகைய ஆயுதங்கள் காட்டும் அச்சுறுத்தலில் இருந்து காக்கத் தலையிடலாம்.’ இது மத்திய கிழக்கு, அதற்கு அப்பாலும் இராணுவத் தலையீட்டிற்கு தடையற்ற ஒப்புதல் ஆகும்.

நிர்வாகத்தின் ஆதரவைக் கொண்ட, புதன் அன்று செனட் வெளியுறவுக்குழு இயற்றிய இராணுவ வலிமை பயன்படுத்தலாம் என்னும் தீர்மானம், ஒரு சிறிய அளவிலான தலையீடு என்ற பாசாங்குத்தனத்தை இன்னும் வெளிப்படையாக வெடித்துச்சிதற வைத்துள்ளது. இது தாக்குதலின் நோக்கம் இஸ்லாமியவாத ஆதிக்கம் கொண்ட எதிர்த்தரப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருதல் என்பதை தெளிவாக்குகிறது. இது ஈரான், ரஷ்யா அல்லது சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு உதவுகிறது என்று அமெரிக்கா கருதும் எந்த நாட்டிற்கு எதிராகவும் போர் தொடுக்கவும் வழி அமைக்கிறது.

தயாரிக்கப்படுவது மத்திய கிழக்கின் வரைப்படத்தை மறுபடி எழுதுவதற்கான ஒரு பிராந்தியப் போர், அமெரிக்க மேலாதிக்கத்தை இப்பிராந்தியத்திலும் அதன் பரந்த எண்ணெய் வளங்கள்மீதும் உறுதிப்படுத்தும். இந்த முன்னோக்கு தவிர்க்க முடியாமல் –சிலவேளை பின்னர் என்பதைவிட முன்கூட்டியே— ரஷ்யா, சீனாவுடன் நேரடி மோதலுக்கும் மற்றொரு உலகப் போருக்கும் இட்டுச் செல்லும்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சிரியா மீது அமெரிக்க தாக்குதலுக்கு பொதுமக்கள் கொண்டுள்ள எதிர்ப்பு பரந்து ஆழ்ந்துள்ளது. பொய்களின் அடிப்படையில் ஒரு தசாப்தத்திற்குள் ஈராக்கிலும், லிபியாவிலும் நடத்தப்பட்ட முந்தைய இரு போர்களின் அனுபவம், மக்களுடைய முழு நனவில் அவற்றின் பாதிப்பைக் கொண்டுள்ளது.  மேலும் வாஷிங்டன், ஒபாமா காப்பதாகக் கூறும் “சர்வதேச நெறிகளை” மீறிய அதன் சான்றுகளை மறைப்பதாகும் —ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுப் பேரழிவில் இருந்து, நாபாம், ஆரஞ்சு முறை இவற்றை வியட்நாமில் பயன்படுத்தியது, சதாம் ஹுசைன் ஈரானுக்கு எதிராக 1980களில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு ஆதரவைக் கொடுத்தது, ஆகியவற்றில் இருந்து ஈராக்கில் குறைந்த அடர்த்தியுடைய யுரேனியம் மற்றும் வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தியது ஆகியவை அடங்கும்.

“பயங்கரவாதத்தின்மீதான போர்” என்று அழைக்கப்பட்டதில் கைப்பற்றப்பட்ட கைதிகிளைப் பொருத்தவரை புஷ் நிர்வாகம் ஜேனீவா மரபுகளை நிராகரித்தது: இது சித்திரவதை, காலவரையற்ற காவல், கடத்தல் மற்றும் டிரோன் மூலம் படுகொலைகள் ஆகியவற்றிற்கு வழி அமைத்தது; இவை அனைத்தும் ஒபாமாவின் கீழ் தொடர்ந்தன, விரிவாக்கப்பட்டன.

போருக்கு எதிரான பரந்த மக்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகத்தின் பொய் கூறல்களை இன்னும் புதுமையாகவும் ஆற்றொணா வகையிலும் அதிகப்படுத்திவிட்டது.

அமெரிக்காவின் போர் உந்துதல், முசோலினி, ஹிட்லர், டோஜோ போன்றோருடைய 1930களின் இராணுவ சர்வாதிகாரங்கள் பாசிச ஆட்சிகளின் உச்சக்கட்ட காலத்திற்குப் பின் காணப்படாத சர்வதேச காடைத்தன காட்சியைத்தான் அளிக்கிறது. உலக விவாகரங்களில், அமெரிக்க அரசாங்கத்தின் இன்றைய செயற்பாடுகள், அடிப்படையில் அபிசீனியா, போலந்து, மஞ்சூரிய சூறையாடல்களில் பயன்படுத்த அடிப்படைகளில் இருந்து வேறுபட்டவை அல்ல.

நூரெம்பேர்க் வக்கீல் மற்றும் தலைமை நீதிமன்ற நீதிபதி ரோபர்ட் எச். ஜாக்சன், நாஜி போர்க் குற்றவாளிகளை விவரிக்கப் பயன்படுத்திய சொற்கள் அமெரிக்க அரசாங்கத்தில் இன்று இருக்கும் அரசியல் காடையர்களுக்கு முற்றிலும் பொருந்தும். ஜாக்சன் கூறினார்: “இந்த நபர்கள் சட்டம் என ஒன்று இருக்கிறதா என வியக்கின்றனர். [அவர்கள்] எந்தச் சட்டத்தையும் நம்பவில்லை. அவர்களுடைய திட்டம் அனைத்துச் சட்டங்களையும் புறக்கணித்தது, மீறியது... சர்வதேசச் சட்டம், இயற்கை சட்டம், ஜேர்மனிய சட்டம், எந்தச் சட்டமாயினும், இவர்களுக்கு அவை பிரச்சாரக் கருவிதான், தேவைப்படும்போது கூறப்பட வேண்டும், தாங்கள் விரும்புவதை அது கண்டிக்கும்போது புறக்கணிக்கப்பட வேண்டும்.”

அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்தை மீறுவது அமெரிக்காவிற்குள் ஜனநாயகத்தின் சரிவுடன் இணைந்துள்ளது. சிரியாவிற்கு எதிரான போர், அமெரிக்க மக்களுக்கு எதிராக அரசாங்க ஒற்றாடல் வெளிவந்தபின் தொடர்ந்து வெளிப்படும் பல நிகழ்வுகளுக்குப் பின் தயாரிக்கப்படுகிறது,  பிரமாண்டமான மற்றும் முன்னோடியில்லாத அளவிலான ஒற்றாடல், அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாகும். இந்த சமாந்திரமான போக்குகள், நாட்டிற்கு வெளியே ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் நாட்டிற்குள்ளே சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புக்களுக்கும் இடையே தவிர்க்க முடியாத தொடர்பை கொண்டுள்ளது.

அமெரிக்க செய்தி ஊடகம் நாள் முழுவதும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் குருதி கொட்டக் கூவுகையில், அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள் சிரியாவிற்கு எதிரான இராணுவத் தாக்குதலை எதிர்க்கின்றனர். “ஆட்சி மாற்றத்திற்கான” தேவையை அதிகம் கொண்டுள்ள நாடு சிரியா அல்ல அமெரிக்காதான் என்ற உணர்வும் பெருகிவருகிறது.

ஆனால் அமெரிக்காவிற்குள் இந்த மக்கள் எதிர்ப்பு வெளிப்பாடு காண்பதற்கு, அது அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அரசியல் அமைப்பின் முழு அழுகிய தன்மையில் இருந்தும் உடைக்க வேண்டும், அனைத்துப் பிரிவுகளும் போர் உந்துதல், சிக்கன நடவடிக்கை மற்றும் ஜனநாயக உரிமைகள் அழித்தல் இவற்றை இலக்காக கொடுள்ளன. போருக்கான எதிர்ப்பு என்பது, ஜனநாயகக் கட்சிக்கு அல்லது காங்கிரசிற்கு முறையீடு எனத் திருப்பப்பட்டுவிடக்கூடாது, ஆனால் அதற்கு பதிலாக ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பணியிடங்கள், பள்ளிகள், புறநகர்ப்பகுதிகள் அனைத்திலும் அரசியல் அணிதிரள்வு வடிவத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.