சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

The significance of the German election

ஜேர்மன் தேர்தலின் முக்கியத்துவம்

By Peter Schwarz
21 September 2013

ஞாயிறன்று ஒரு புதிய பாராளுமன்றம் (Bundestag) ஜேர்மனியில் தேர்ந்தெடுக்கப்படும். கருத்துக் கணிப்புக்களின்படி, அங்கேலா மேர்க்கல் சான்ஸ்லராக தொடரக்கூடும். அவருடைய கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியமும் (CDU) கிறிஸ்துவ சமூக ஒன்றியமும் (CSU) கிட்டத்தட்ட 40% வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இரண்டாம் இடத்தில் 30%க்கும் கீழ் பெறக்கூடும்.

மேர்க்கெலுடைய தற்போதைய கூட்டணிப் பங்காளி தாராளவாத ஜனநாயகக் கட்சி (Free Democratic Party FDP) பாராளுமன்றத்திற்கு நுழையத் தேவையான 5% இனைப் பெறுமா அல்லது போதுமான அளவு தொகுதிகளை பெற்று தற்போதைய CDU-CSU-FDP கூட்டணியில் உள்ள நிலையை தக்கவைக்குமா என்பது தெளிவாக இல்லை.

இந்த இடத்தைப் பெறுவதில் FDP தோற்றால், மாற்றீடுகள் CDU-CSU-SPD உள்ளடக்கிய பெரும் கூட்டணிதான் சாத்தியம். இதுதான் மேர்க்கெலின் தலைமையில் ஜேர்மனியை 2005 முதல் 2009 வரை ஆண்டது. அல்லது CDU-CSU மற்றும் பசுமைவாதிகளின் கூட்டணி. SPD யும் பசுமைவாதிகளும் இடது கட்சியுடன் எத்தகைய ஒத்துழைப்பும் இல்லை என்று கூறிவிட்டனர். இவ்வாறான ஒரு கூட்டணி CDU வை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையை பெற வைத்திருக்கும். யூரோ ஐயுறவான ஜேர்மனிக்கு மாற்றீடு (Euro-skeptical Alternative for Germany) முதல் தடவையாக பாராளுமன்றத்தில் நுழைந்தால், ஒரு புதிய அரசாங்கத்திற்கு ஒரே தளம் பெரும் கூட்டணி ஒன்றுதான் என்று இருக்கும்.

அதன் கூட்டு எப்படி இருந்தாலும், புதிய அரசாங்கம் அதன் முன்னோடியில் இருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும். ஜேர்மனி ஐரோப்பா மீது சுமத்தும் இரக்கமற்ற சிக்கனக் கொள்கைகளை அது தீவிரப்படுத்தும் என்பது  மட்டுமல்லாமல், ஜேர்மனிக்குள்ளேயே தொழிலாள வர்க்கத்தின்மீது போரைத் தொடுக்கும். இராணுவரீதியான சுயதடுப்பையும் அது கைவிட்டு ஆக்கிரோஷத்துடன் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை சர்வதேச அளவில் தொடரும்.

இப்பிரச்சினைகள் அனைத்திலும் CDU-CSU வில் இருந்து FDP, SPD, பசுமைவாதிகள், இடது கட்சி வரை நடைமுறைக் கட்சிகள் உடன்பாடு கொண்டவை. இக்கட்சிகளுக்கு இடையேயுள்ள ஒருமித்த உணர்வு தேர்தல் பிரச்சாரத்தின்போது இப்பிரச்சினைகளை அவை எழுப்ப மறுத்தபோது வெளிப்பட்டது. சிக்கனத்திற்கும் இராணுவவாதத்திற்கும் மக்களிடையே உள்ள எதிர்ப்பை நன்கு அறிந்து அவை மௌனமாக இருக்க ஒப்புக்கொண்டன.

தேர்தல் சுவொரொட்டிகள், பொருளற்ற கோஷங்களான “நாம்தான் முடிவெடுக்கிறோம்”, “ஒன்றாக வெற்றி அடைவோம்” போன்றவற்றை பெரிதும் கொண்டிருந்தன. அரசியல் விவாதங்கள் அங்கேலா மேர்க்கெலின் நெக்லஸ் உடைய நிறத்தை விவாதித்தன. SPD வேட்பாளர் பீர் ஸ்ரைன்ப்ரூக் ஒரு ஆத்திரமூட்டும் தன்மையைக் காட்டும் வகையில் நடந்துகொண்டார், 1980 களின் பசுமைவாதிகளின் சிறுகுழந்தைகளை பாலியல் கொடுமையில் ஆழ்த்திய தவறுகளைப் பற்றி பேச்சுக்கள் எழுந்தன. எந்தக் கட்சியும் கிரேக்கத்தின் சமூகப் பேரழிவு குறித்தோ அல்லது ஜேர்மனியில் உள்ள சமூக சமத்துவமின்மை பற்றியோ அல்லது யூரோவின் தொடர்ந்த நெருக்கடி பற்றியோ அல்லது சிரியாவிற்கு எதிரான போர் அச்சுறுத்தல் பற்றியோ பேசவில்லை.

இரண்டாம், மூன்றாம் பட்ச பிரச்சினைகளைப்பற்றி கடுமையான வன்முறைப் பேச்சுக்கள் இருந்த நிலையில், அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கட்சிகளிடையே இருந்த வேறுபாடுகளைக் காண்பது கடினமாக இருந்தது. SPD யின் முக்கிய வேட்பாளர் ஸ்ரைன்ப்ரூக் நிதி மந்திரியாக 2005 முதல் 2009 வரை மேர்க்கெல் தலைமையில் இருந்த பெரும் கூட்டணியில் இருந்தார். அவருடைய கட்சி உறுப்பினர்களைவிட மேர்க்கெலுடன் தான் நெருக்கம் உடையவராய் இருந்தார்.  பசுமைவாதிகள் “மனிதாபிமானப் போருக்கும்” கடுமையான வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாட்டிற்கும் வலுவாக வாதிடுபவர்கள். அவர்கள் மேர்க்கெலை இப்பிரச்சினைகளில் ஆரம்பத்தில் இருந்து குறைகூறுகின்றனர். தன் பங்கிற்கு இடது கட்சி, அதன் முற்போக்கான சமூகச் சீர்திருத்தம் பற்றிய பேச்சை முழுப் பாசாங்குத்தனமாக ஆக்கி, SPD மற்றும் பசுமைவாதிகளுடன் ஒத்துழைக்க தொடர்ச்சியாக முன்வந்தது.

வாக்குகளை இழந்துவிடுவோமோ என்னும் அச்சத்தில் கட்சிகள் அதிகம் கூறாத நிலையில், வருங்கால அரசாங்கத் திட்டத்தை இயற்றுவது குறித்து செய்தி ஊடகத்தினால்தான் பேச முடிந்தது. செய்தி ஊடக வர்ணனைகளின் பொதுக் கருத்து, தற்போதைய அரசாங்கம் மிகவும் தயக்கம் காட்டியது மற்றும் செல்வாக்கற்ற நடவடிக்கைகளை எடுக்கத் தைரியம் அற்று இருந்தது என்பதாகும்.

ஆகஸ்ட் ஆரம்பத்தில் Der Spiegel இதழ் கட்சிகளின் “அரசியல் கோழைத்தனத்தை” இகழ்ந்து, அவற்றை “சீர்திருத்த விருப்பமற்ற” குடிமக்களுக்க ஏற்ப நடந்து கொள்வதற்குக் கண்டித்தது. 84 வயது மெய்யியலாளர் Jürgen Habermas, உயரடுக்கு செல்வாக்கற்ற முடிவுகளை எடுத்து, ஐரோப்பாவில் ஜேர்மனியின் முக்கிய பங்கை உறுதிப்படுத்துவதில் தோல்வியுற்றதற்கு வருந்தினார்.

சமீபத்திய Die Zeit பதிப்பு ஜேர்மனியக் குடியரசு “இன்று எத்தகைய உள்நாட்டுச் சீர்திருத்த சட்டத்தையும் இயற்றத் தவறியுள்ள, சர்வதேச பொறுப்பை எடுக்கத் தயங்கும் கூட்டணியால் ஆளப்படுகிறது” என்று குறைகூறியுள்ளது. அது, ஜேர்மனி இப்பொழுது தொழில்ரீதியான இராணுவத்தை வைத்திருக்கின்றது, ஆனால் “அதே நேரத்தில் அதை ஒருபோதும் பயன்படுத்த விரும்பாத ஒரு வெளிநாட்டுக் கொள்கையையும் கொண்டுள்ளது.”

ஜனாதிபதி ஒபாமா, சிரியா மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தியபோது, போருக்கான ஆர்வம் மிக்க போராட்டம் அனைத்துச் செய்தித்தாட்களிலும் நிறைந்திருந்தது. முக்கிய ஏடுகளான taz, Süddeutsche, Tagesspiegel, Die Welt, Die Zeit அனைத்தும் போருக்காக ஒரேகுரலில் சேர்ந்து கொண்டன. ஜேர்மனியின் பங்குடன் இராணுவத் தாக்குதலை கோரின. Die Zeit உடைய ஆசிரியர் ஜோசப், ஒபாமாவின் “சிறிய அளவு போர்” குறித்து கடிந்து கொண்டு “கால வரம்பற்ற ஒரு போரை”, பாரிய இராணுவத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று கோரினார். மேலும் அவர்: “மக்களின் நலன்களைக் பாதுகாக்க எவர் விரும்பினாலும், அடுத்த தலையீட்டிற்கு தயாராக இருக்க வேண்டும். அ என்ற எழுத்தில் ஆரம்பித்தவர்கள் அகரவரிசையையும் முடிக்க வேண்டும்.” என அறிவித்தார்.

உள்நாட்டில் சர்வாதிகார கொள்கை, வெளிநாட்டில் ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையுடன் இணைதல் என்பதுதான் இரண்டாம் உலகப் போருக்கு முன் முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியை ஆளும் வர்க்கம் எதிர்கொண்ட விதமாகும். 2008 நிதிய நெருக்கடியை தொடர்ந்து, ஜேர்மனிய அரசாங்கமும் இரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளை ஐரோப்பா முழுவதும் சுமத்தியுள்ளது; இதனால் வங்கிகளுக்கு 1.6 டிரில்லியன் யூரோக்கள் கிடைத்தன. இவ்வாறு செய்கையில், அது முன்னோடியில்லாத சமூகப்பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நான்கு ஐரோப்பியர்களில் ஒருவர் வறுமைக்கோட்டில் அல்லது அதற்கு கீழேயே வாழ்ந்துள்ளார். அதாவது 121 மில்லியன் மக்கள்.
மக்களின் பரந்த பிரிவுகள் வறுமையில் தள்ளப்பட்டபோது, சமூகத்தின் உயர்மட்டத்தினர் தங்களை தடையின்றி செல்வக்கொழிப்புடையவர்களாக ஆக்கிக் கொண்டனர். சந்தைகள் ஊகத்திருவிழாக்களையே கொண்டாடுகின்றன; அவற்றை ஒட்டி அடுத்த நிதிய சிக்கலுக்கு தயாரிக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய வாரம் ஜேர்மனிய பொருளாதாரம் இந்த ஆண்டு 0.3% தான் வளர்ச்சி அடையும் என்றாலும் DAX பங்குச் சந்தைக் குறியீடு வரலாற்றளவு உயர்ந்த தன்மையை அடைந்தது.

சிக்கன நடவடிக்கைகள் முதலாளித்துவ நெருக்கடியை தீர்க்கவில்லை, ஆழப்படுத்தித்தான் உள்ளன. கிரேக்கமும் போர்த்துக்கல்லும் தேர்தலுக்குப்பின் புதிய பிணையெடுப்புக்களை நாடும் என்பது ஒரு வெளிப்படையான இரகசியம். இது அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரவு-செலவுத் திட்டங்களிலும் ஆழ்ந்த ஓட்டைகளை ஏற்படுத்தும், இன்னும் அதிக சமூகநலச் செலவுக் குறைப்புக்களைக் கொண்டுவரும்.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் ஆளும் வர்க்கம் அதன் அமைப்புமுறைக்கு வந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் தயாரிப்புக்களை நடத்துகிறது. அதன் பிரதிநிதிகள் பலரும், பெரும் கூட்டணி அத்தகைய கொள்கையை முன்னேற்றுவிக்க சிறந்த மாதிரி என நினைக்கின்றனர். பாராளுமன்றத்தில் அதற்குப் பாதுகாப்பான பெரும்பான்மை இருக்கும், ஜேர்மனியின் SPD தலைமையிலான மாநிலங்கள் பெரும்பான்மையில் உள்ள இரண்டாம் மன்றத்திலும் -Bundesrat- ஆதரவு இருக்கும். இத்தகைய கூட்டணிக்கு பசுமைவாதிகள், இடது கட்சி ஆகியவற்றின் ஒரு விசுவாசமான எதிர்ப்பை நம்பலாம்.

ஒரு பெரும் கூட்டணி வாக்காளர்களின் விருப்பத்தில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக செயல்பட்டு, சர்வாதிகாரத் தன்மையுடன் விளங்கும். ஆனால் அதுவும் ஒரு நெருக்கடியின் அரசாங்கமாகத்தான் இருக்கும். அரசியல் கட்சிகளுக்கும் பரந்த மக்களுக்கும் இடையே உள்ள பிளவு தற்பொழுது இருப்தைவிட இன்னும் ஆழமாகும். இது செயற்பட்டியலில் வெளிப்படையாக வர்க்கப் போரை கொண்டுவரும்.

சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit—PSG) ஒன்றுதான் பாராளுமன்றத் தேர்தல்களில் அத்தகைய போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்யும் பொருட்டுத் தலையிட்டது, இது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை கவனம் செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்வைக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனிய பகுதி என்னும் முறையில் அது ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடுகிறது. இதன் நோக்கம், வங்கிகள், பெருவணிகங்களுடைய இலாப நலன்களுக்கு என்று இல்லாமல் சமூகத்தின் தேவைக்கு என்னும் வகையில், ஒரு சோசலிச அடிப்படையில் வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் உடமைகளை பறித்தெடுக்கும் தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவுவதாகும்.
பேர்லின், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் ஹெஸ்ஸவில் உள்ள WSWS வாசகர்களை சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுகிறோம். நாங்கள் நிற்காத இடங்களில் உள்ள வாக்காளர்களை எமது கட்சியின் பெயரை உங்கள் வாக்குச்சீட்டில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை எங்களுடன் சேர்ந்து சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியமைக்க முன்வருமாறு அழைக்கிறோம்.