சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: The editor of Sunday Leader flee the country facing death threat

இலங்கை: மரண அச்சுறுத்தல் காரணமாக சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் நாட்டைவிட்டு வெளியேறினார்

By Chanaka Silva and Panini Wijesiriwardane
23 September 2013

Use this version to printSend feedback

அண்மையில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த குண்டர் கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான சண்டேலீடர் பத்திரிகையின் துணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம, தனது உயிரை காத்துக்கொள்வதற்காக கடந்த வாரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அந்த தாக்குதலின் பின்னர் இடைவிடாமல் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலின் காரணமாக, தனது ஊடகவியலாளர் கணவர் மற்றும் 12 வயது மகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்ததாக சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐந்து பேர் அடங்கிய ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று ஆகஸ்ட் 24 அன்று விடியற் காலை 2 மணியளவில் அபேவிக்கிரமவின் வீட்டுக்குள் நுழைந்து, பணம் உட்பட ஏனைய பெறுமதியான பொருட்களை கொள்ளையிட வந்தது போல் பாசாங்கு செய்து, வீட்டில் இருந்த கோப்புகளை சேகரித்துக்கொண்டு சென்றுள்ளது. அபேவிக்கிரவுக்கு கத்தியை நீட்டிய கும்பல், அவரை கொலை செய்வதாக அச்சுறுத்தியதோடு கிட்டத்தட்ட மூன்று மணித்தியலங்கள், அதாவது பொலிசார் வீட்டுக்குள் நுழையும் வரை, அங்கிருந்த ஆவணங்கள் போன்றவற்றை தேடிக்கொண்டிருந்தனர்.

தனது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த அபேவிக்கிரமவின் கணவர் ரொமேஷ் அபேவிக்கிரம விடுத்த தொலைபேசி அழைப்பை அடுத்து, வீட்டுக்கு வந்த பொலிசாருடன் நடந்த மோதலில், குண்டர் கும்பலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் காயமடைந்தனர். இதற்கிடையில், கும்பலில் இருந்த இருவர் இராணுவத்தை விட்டு தப்பி ஓடியவர்கள் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். எவ்வாறெனினும், இரு வாரங்களின் பின்னர், செப்டெம்பர் 8 அன்று, மீண்டும் அவரது வீட்டுக்குள் பாய்ந்த இன்னொரு குண்டர் கும்பல், வீட்டில் இருந்த கனிணியை எடுத்துச் செல்ல முற்பட்டதாக அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். அப்போது அவர் வீட்டைவிட்டுச் சென்றிருந்தார்.

அபேவிக்கிரம சண்டேலீடர் பத்திரிகைக்கு அரசாங்கத்தின் தலைவர்கள் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் அடங்கிய அரசியல் கட்டுரைகளை எழுதியிருந்தார். பணம் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளயடிக்கவன்றி, தனது ஆவணங்களை கடத்திச் செல்வதற்காகவே குண்டர் கும்பல் வீட்டுக்குள் நுழைந்தது என தான் சந்தேகிப்பதாக அபேவிக்கிரம பகிரங்கமாக தெரிவித்ததை அடுத்து, இத்தகைய தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், அவர் தனது குடும்ப அங்கத்தவர்களுடன் அப்போதிருந்து தனது உயிரைக் காத்துக்கொள்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் மாறி மாறி ஒழிந்திருக் வேண்டி நேர்ந்ததாகவும் ஊடக செய்திகள் மூலம் தெளிவாகின்றது.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூஎன்பீ) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் பிரமாண்டமான கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக, அரசாங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவர் செய்த முறையற்ற கொடுக்கல் வாங்கல் பற்றிய தகவல்கள் அவரிடம் இருப்பதாக சந்தேகப்பட்டதாலேயே அபேவிக்கிரமவின் வீட்டுக்குள் குண்டர்கள் வந்துள்ளனர், என தெரிவித்தார். ஆயினும் அவர் நிச்சயமான ஆதாரங்களை முன்வைக்கவில்லை.

2006ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மீண்டும் யுத்தத்தை தொடங்கிய பின்னரான காலம் பூராவும், இராஜபக்ஷ நிர்வாகம் சம்பந்தமாக விமர்சனங்களை செய்த ஊடகவியலாளர்கள், குறைந்தபட்சம் 15 பேராவது கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்தோடு 80க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், தமக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறுகின்றது. இதற்கும் மேலாக, அரசாங்கத்தைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்த ஊடக நிறுவனங்கள் பலவற்றுக்கும் தொடுக்கப்பட்ட குண்டர் தாக்குதல்களினால், அவற்றின் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களும் நாசமாக்கப்பட்டதோடு இவை இடைவிடாமல் இடம்பெறுகின்றன. கொழும்பு அரசாங்கம் பற்றி விமர்சனபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கும் உதயன் பத்திரிகைக்கு யாழ்ப்பாணத்தில் இடைவிடாமல் தொடுக்கப்படும் தாக்குதல்கள் இதற்கான பலம்வாய்ந்த சாட்சியாகும்.

“இந்த படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் தீ மூட்டும் நடவடிக்கைகள் சம்பந்தமாக எந்தவொரு விசாரணையும் நடாத்தப்பட்டிருக்காததோடு அது தொடர்பான பொறுப்பாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை” என தெரிவிக்கும் சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பாளர் சுனில் ஜயசேகர, “இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடைவிடாமல் முன்னெடுக்கப்படும் போரின் புதிய இறை” அபேவிக்கிரமதான் என குறிப்பிட்டுள்ளார்.

உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்திவரும் சர்வதேச ஆளும் வர்க்க கூட்டாளிகளைப் பின்பற்றி, சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்திவரும் இராஜபக்ஷ அரசாங்கம், சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட சமூக நலன்புரி சேவைகளை வெட்டிக் குறைத்து, மக்கள் மீது பெரும் வரிகளை சுமத்தி, அவர்களது வாழ்க்கைத் தரங்களை நசுக்கிவருகின்றது. இந்த நிலைமையின் கீழ், வளர்ச்சியடையும் வெகுஜன எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் இராணுவ ஆட்சியை நோக்கி வேகமாக அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கும் அரசாங்கம், தம்மீதான மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களுக்குக் கூட இடம் கொடுக்காமல் இருக்க முடிவு செய்துள்ளது.

அரசாங்கத்தின் தாக்குதல் வெறுமனே ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மட்டும் இலக்காகக் கொண்டது அல்ல. அது தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாகும். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த வெலிவேரிய ரதுபஸ்வல மக்களுக்கு எதிராக இராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் செய்தி சேகரித்துக்கொண்ருந்த ஊடகவியலாளர்களை இராணுவம் தொந்தரவு செய்து, அச்சுறுத்தல் விடுத்ததோடு சரீர தாக்குதலையும் நடத்தியது.

சண்டேலீடர் பத்திரிகையையே கூட எடுத்துக்கொண்டால், அதற்கும் மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. 2007 நவம்பர் மாதத்தில் அதன் அச்சகத்துக்கு தீ மூட்டப்பட்டதோடு, 2009 ஜனவரி மாதம், அதன் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது வாகனத்தில் அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பில் மிகப்பெரும் பாதுகாப்பு வலையமைப்பு இருந்தாலும், அவரைக் கொன்றவர்கள் தப்பிச் சென்றதோடு பொலிசார் அவர்களைக் கண்டுபிடிப்பதில் முற்றிலும் தோல்விகண்டுள்ளனர். இதில் இருந்து கொலைகாரர்களுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பது தெளிவாகின்றது.

முதலில் எழுதப்பட்டு, கொல்லப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பில், விக்கிரமதுங்க தனது சாவுக்கு இராஜபக்ஷவை குற்றம் சாட்டியிருந்தார். “எனது சாவின் பின்னர் தாங்கள் (இராஜபக்ஷ) வழமை போல் உரத்த குரலில் பேசுவீர்கள். உடனடியான கடுமையான விசாரணையை நடத்துமாறு பொலிசுக்கு கட்டளையிடுவீர்கள். ஆனால், முன்னர் நீங்கள் கட்டளையிட்ட விசாரணைகளைப் போன்றே, இதிலும் எதுவும் நடக்கப் போவதில்லை,” என அவர் அதில் எழுதியிருந்தார்.

பாதுகாப்பு ஆயுதங்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஊழல் பற்றி அம்பலப்படுத்தி கட்டுரை ஒன்றை எழுதியமைக்கு எதிராக, ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, 2008ல் சண்டேலீடருக்கு எதிராக மானநட்ட வழக்கு ஒன்றைத் தொடுத்ததுடன், கடந்த ஆண்டு பாதுகாப்புச் செயலருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவருக்கு 250 மில்லியன் செலுத்துமாறு சண்டேலீடர் நிறுவனத்துக்கு கட்டளையிட்டது. இராஜபக்ஷவுக்கு (பாதுகாப்பு செயலாளருக்கு) அவமரியாதை ஏற்படும் வகையில், எந்தவொரு கட்டுரையையும் வெளியிட வேண்டாம் என உறுதியான தீர்ப்பும் நீதிமன்றத்தால் பத்திரிகை நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டது.

லீடர் வெளியீட்டை அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒருவர் கடந்த ஆண்டு விலை கொடுத்து வாங்கிக்கொண்ட போதும், அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்த மறுத்தமையால் அதன் முன்னாள் ஆசிரியை ஃபெட்ரிகா ஜேன்ஸ் சேவையில் இருந்து அகற்றப்பட்டார். பாதுகாப்புச் செயலர் இராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் குண்டர்களால் அவருக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலால் ஜேன் செப்டெம்பர் மாதம் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் சண்டேலீடர் நிருபர் ஃபராஷ் சவ்கட்டலியை, கல்கிசையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கி நபர்கள் சுட்டனர்.

அடுத்த நாள் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல, இதை வெறுமனே கொள்ளைக் கூட்டத்தின் செயற்பாடாக தரம் குறைத்ததோடு, இராணுவத்தை விட்டு ஓடிய அநேகமானவர்கள் இன்னமும் பொது மன்னிப்பின் கீழ் வந்து சேராததோடு இதில் பலர் இத்தகைய கும்பல்களில் இருக்க முடியும் என்றும் தெரிவித்தார். அதற்கு முண்டு கொடுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன, இன்னொரு ஊடகவியலாளர் மாநாட்டில், “அவர்கள் அச்சுறுத்தல் விடுக்க வந்திருந்தால், இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாக வீட்டில் தங்கியிருந்தது ஏன்?” என கேள்வியெழுப்பினார்.

அரசாங்கமும் பொலிசும் விடுக்கின்ற அறிக்கைகளில், இந்த தாக்குதலை நியாயப்படுத்துவதையே செய்துள்ளன. கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட எல்லா தாக்குதல்களின் போதும், அரசாங்கமும் பொலிசும் விசாரணை என்ற பெயரில் மூடிமறைப்புக்களையே செய்துள்ளன. இதற்கான காரணம், இந்த தாக்குதல்கள் அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் இருப்பவர்களால் தூண்டிவிடப்படுவதே ஆகும்.

சண்டேலீடர் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் தொழிலாள வர்க்கத்துக்கு இன்னொரு எச்சரிக்கையாகும்.