சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு 


US, UK and France stress threat of force against Syria

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் சிரியாவிற்கு எதிராக வலிமை என்னும் அச்சுறுத்தலை வலியுறுத்துகின்றன

By Bill Van Auken
17 September 2013

Use this version to printSend feedback

திங்களன்று அமெரிக்காவும் அதன் இரு முக்கிய நட்பு நாடுகளான பிரித்தானியாவும் பிரான்ஸும், சனிக்கிழமை அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவிற்கும் இடையே ஏற்பட்டள்ள இரசாயன ஆயுதங்கள் பற்றிய உடன்பாட்டில் உள்ள கோரிக்கைகளை ஜனாதிபதி பஷர் அல்-அசாத் கடைப்பிடிக்கத் தவறினால் சிரியாவிற்கு எதிராக இராணுவத் தாக்குதல் இருக்கும் என்பதை வலியுறுத்தின.

இத்தகைய மிரட்டும் வனப்புரை, கெர்ரி, பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ் மற்றும் பிரித்தானியாவின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் ஆகியோரிடையே  பாரிசில் நடந்த பேச்சுக்களுக்கு பின் வந்துள்ளது, இது ரஷ்யாவுடனான தீவிர கூர்மையான வேறுபாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது; ரஷ்யாவோ மேற்கில் இருந்த வரும் அச்சுறுத்தல்கள் சிரியாவின் இரண்டரை ஆண்டு உள்நாட்டுப்போருக்குப் பேச்சுக்கள் மூலம் முடிவு காண்பதை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

“அசாத் உரிய காலத்திற்குள் இந்த வடிவமைப்பன்படி நடக்கவில்லை என்றால், விளைவுகள் ஏற்படும் என்பதில் நாங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளோம்—அதில் ரஷ்யாவும் உள்ளது—தவறு காணாதீர்கள்.” என்றார் கெர்ரி. ரஷ்யா ஐ.நா. சாசனம் ஏழாம் அத்தியாயத்தின்படி, பாதுகாப்புக் குழுத் தீர்மானம் ஒன்றிற்கு, அது சொன்னபடி சிரியா நடந்துகொள்ளவில்லை என்றால் இராணுவ சக்திக்கு இசைவு கொடுக்கும் என கெர்ரி தெரிவித்தார் .

வார இறுதியில் பாரிஸ் கூட்டத்தில் இருந்து வந்துள்ள இத்தகவல், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் விடுத்த எச்சரிக்கைகளைத்தான் எதிரொலிக்கிறது; ஹாலண்டின் அரசாங்கம் ஒன்றுதான் உலகில் சிரியாவிற்கு எதிரான திட்டமிட்ட அதன் ஆக்கிரமிப்பில் அமெரிக்காவுடன் சேர உறுதி கொண்டுள்ளது.

“இராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்கா செயல்பட தயாராக உள்ளது” என்று ஒபாமா ஞாயிறு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் எச்சரித்தார்.

அதே தினத்தில் நிகழ்த்திய உரை ஒன்றில், பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் அறிவித்தார்: “இராணுவ நடவடிக்கை என்னும் விருப்பத் தேர்வு இருக்க வேண்டும்; இல்லாவிடின் அழுத்தம் ஏதும் இருக்காது.”

A US கடற்படைக் கப்பல்கள், கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் சிரியாவை தாக்க தயாராக உள்ளன. பென்டகன் அது அங்கு காலவரையற்று நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த மாதம் போருக்கு விரைவான தயாரிப்புக்கள் நடந்தபின் — டமாஸ்கஸுக்கு அருகே ஆகஸ்ட் 21 நடந்த இரசாயன ஆயுதங்கள் தாக்குதலுக்கு அசாத் அரசாங்கம்தான் காரணம் என்னும் ஆதாரமற்ற போலிக்காரணத்தை பயன்படுத்தி— வாஷிங்டனின் சிரியா மீதான ஒருதலைப்பட்ச, சட்டவிரோத தாக்குதல் திட்டங்கள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பொதுமக்களின் விரோதத் தன்மையை ஒட்டி நின்று போயின. ஆகஸ்ட் 29 பிரித்தானிய பாராளுமன்றம் முன்னோடியில்லாத வகையில் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் தீர்மானத்தை நிராகரித்ததில் இருந்து அதிர்ச்சி அடைந்த ஒபாமா, அமெரிக்க காங்கிரஸை AUMF எனப்படும் இராணுவ சக்தி பயன்பாட்டிற்கு ஒப்புதல் என்னும் தீர்மானத்தை நாடினார்.
இங்கும் மற்றொரு மத்திய கிழக்குப் போருக்கு, அமெரிக்க ஜனாதிபதியின் பொய்கள் அடிப்படையிலான திட்டங்கள் அமெரிக்க மக்களின் எதிர்ப்பினால் செயலற்றப்போயின. காங்கிரஸின் உறுப்பினர்கள், ஏராளமான தொகுதி மக்களுடைய விருப்பதை எதிர்கொண்டனர், அதாவது சிரியாவில் போர் கூடாது, AUMF க்கு ஒப்புதல் கொடுப்பது ஆபத்தானது என்பதை. ஒபாமா ஒரு போரைத் துவக்குவதற்கு காங்கிரசின் ஒப்புதல் மறக்கப்படக்கூடிய வாய்ப்பு என்னும் அவமானகரமான முன்னோடியில்லாத நிலையை எதிர்கொண்டார்.

இச்சூழலில்தான், நிர்வாகம் ரஷ்யாவுடனான சிரிய ஆட்சி இரசாயன ஆயுதங்களை களைதல் என்னும் திட்டம் குறித்த பேச்சுக்களில் தடுமாறி விழுந்தது. சனிக்கிழமை ஜெனீவாவில் அடையப்பட்ட ஒப்பந்தம் சிரியா மீதான உடனடித்தாக்குதலை வெளிப்படையாக ஒத்தி வைத்துள்ளது என்றாலும், வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளில் இரந்தம் வெளிவரும் அச்சுறுத்தல்கள் ஆயதங்களை களையும் வழிவகை —இராஜதந்திரப் பாதை என அழைக்கப்படுவது— விரைவில் ஒரு பெரும் போருக்கு வகை செய்யலாம் எனத் தெரிவிக்கிறது.

ஆயுதங்கள் குறித்த வல்லுனர்கள், அமெரிக்க ரஷ்ய உடன்பாடு சுமத்தியுள்ள மிக விரைவான கால அட்டவணை, அனைத்து சிரிய இராசயன ஆயுதங்களும் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் களையப்பட வேண்டும் என்பது எச்சூழலிலும் நடைமுறையில் இயலாதது; அதுவும் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் என்று எச்சரித்துள்ளனர்.

மூன்று மேற்கத்தைய சக்திகளும் ஐ.நா. ஆயுதங்கள் ஆய்வாளர்களும் ஆகஸ்ட் 21 அறிக்கையை பற்றிய நிகழ்வுகளை பற்றியுள்ளன; இது, திங்களன்று ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி-மூனினால் போர்ப்பிரச்சாரத்திற்கு கூடுதல் இரை கொடுக்கப்படுகிறது.
இந்த அறிக்கை, பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஃபியுஸ் கருத்துப்படி, “தாக்குதலின் தொடக்கம் பற்றி ஐயத்திற்கு இடமின்றிக் கூறுகிறது”, ஐ.நா.விற்கு அமெரிக்க தூதர் சமன்தா பவர்ஸ் அறிக்கையில் உள்ள விவரங்கள் “ஆட்சிதான் இதைச் செய்திருக்க முடியும் என்பதை தெளிவாக்குகிறது” என்றார்.

உண்மையில் அறிக்கை அப்படி ஏதும் கூறவில்லை. எவர் மீதும் அது குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை; சிரிய அரபுக் குடியரசில் இருதரப்பினருக்கும் இடையே நடைபெறும் மோதலில் இராசயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இது மருத்துவ சாட்சியங்கள், தப்பிப் பிழைத்தவர்களுடன் நடத்திய பேட்டிகள் மற்றும் சரின் சுவடு உடைய ராக்கெட் ஒன்று மீட்கப்பட்டது ஆகியவற்றில் இருந்து தெரிகிறது.” என முடிவுரை கூறப்பட்டுள்ளது.

சிரியா மீதான ஐ.நா. விசாரணைக் குழு என்னும் ஒரு தனிக்குழு, எவர் பொறுப்பு என்பதை நிர்ணயிக்கும் நிலைப்பாட்டை ஒட்டி, இரசாயன ஆயுதங்கள் குறித்த 14 தாக்குதல்களை விசாரிக்க தயாராக உள்ளது. சிரிய ஆட்சியை அகற்ற போரிடும் CIA ஆதரவு பெற்ற போராளிகள் இரசாயன வெடிமருந்துகளை, தன் படைகளுக்கும், குடிமக்களுக்கும் பயன்படுத்தினர் என்று சிரிய ஆட்சி கூறுகிறது.

ஐ.நா.போர்க்குற்ற நீதிமன்றங்கள் இரண்டில் முன்னாள் தலைமை வக்கீலாக இருந்த, ஐ.நா. குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கார்லா டெல் போன்டே, கடந்த மே மாத சாட்சியங்கள், எழுச்சியாளர்கள் எனப்படுவோரால் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, அவற்றில் சரினும் உள்ளது என்றார்.

கடந்த வாரம் துருக்கிய வக்கீல்கள், அல் குவேடாவுடன் பிணைந்துள்ள அல் நுஸ்ரா முன்னணியில் உள்ள சிரிய உறுப்பினர் மற்றும் அவருடை துருக்கிய உடந்தையாளர்கள் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து, அவர்கள் சரின் வாயு உற்பத்தி செய்வதற்கு துருக்கியில் இரசாயன பொருட்கள் வாங்க முயன்றனர் எனக் கூறினர்.

அமெரிக்காவின் சிரியா மீதான தாக்குதல் என்னும் அச்சுறுத்தல், இரசாயன ஆயுதங்கள் குறித்த கவலையினால் உந்துதல் பெறவில்லை—இத ஒரு வெறும் போலிக்காரணம்தான். வாஷிங்டனின் உண்மையான நோக்கம் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்து, அதையொட்டி மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை அதிகப்படுத்துவது, இன்னும் பரந்த போரை ஈரானுக்கு எதிராகத் தயாரிப்பது என்பதாகும்; ஈரானைத்தான் அமெரிக்கா அப்பிராந்தியத்தில் முக்கிய போட்டி நாடாகக் காண்கிறது.

இந்த இலக்குகளக்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பாரிஸில் கூடி “எழுச்சியாளர்களக்கு”த் தங்கள் ஆதரவை முடுக்கிவிடுகின்றன; அவர்கள் 1,000 தனித்தனி போராளிகள் மற்றும் அல் குவேடா பிற இஸ்லாமியவாதக் கூறுபாடுகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட மரணக் குழுக்கள் ஆவர். சௌதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கியுடன் அமெரிக்காவும் நேட்டோ நட்பு நாடுகளும் இணைந்து பில்லியன் டாலர்கள் கணக்கான ஆயுதங்களையும் நிதியையும் சிரியாவிற்கு அனுப்பி, உள்நாட்டுப் போர் ஒன்றைத் தூண்டிவிட்டன; அது 100,000 உயிர்களுக்கும் மேலாக பறித்து விட்டது. சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின்படி, சிரியத் துருப்புக்களும் அசாத் ஆதரவு போராளிகளும் இந்த இறப்புக்களில் 40%க்கும் மேலானவர்கள்.

இரசாயன ஆயுதங்கள் ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிடப்பட்ட அன்றே, லிபியப் பொருளாதாரத் தடைகள் குறித்த குழுவும் பாதுகாப்புக் குழுவிற்கு அறிக்கை ஒன்றைக் கொடுத்தது; அந்த அறிக்கை பெருகிய எண்ணிக்கையில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் லிபியாவில் இருந்து சிரிய அரபுக் குடியரசிற்கு கடல், வான்வழியே வருகின்றன என்று கூறியுள்ளது. இது அமெரிக்க நேட்டோ ஆட்சிமாற்றத்திற்கான போரை அடுத்து நிகழ்ந்துள்ளது; அப்போர் கேர்னல் முயம்மர் கடாபி கொலையுண்ட வகையில் முடிவிற்கு வந்தது.

இந்த ஆயுத அளிப்பு, கட்டார் நிதியளித்து CIA ன் ஒருங்கிணைப்பிற்கு உட்பட்டது —இது ஒரு பெரிய நிலையத்தை லிபிய நகரமான பெங்காசியில் நிறுவியது; அது இஸ்லாமிய போராளிகளால் சென்ற ஆண்டு தாக்கப்பட்டது. இது அசாத் விரோதப் போராளிகளுக்கு நவீன ஆயுதங்களை ஏராளமாகக் கொடுத்துள்ளது.

கடந்த வாரம் CIA, சௌதி அரேபியா மற்றும் கட்டாரில் இருந்து ஆயுதங்களை அளிக்க ஏற்பாடு செய்தது, இப்பொழுது நேரடியாக “எழுச்சியாளர்களுக்கு” ஆயுதம் அளிக்கிறது.
ரஷ்ய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ், கெர்ரியின் கூற்றான ரஷ்யா மேற்குடன் சிரியாவிற்கு எதிராக இராணுவ சக்திப் பயன்பாட்டிற்கு உடன்படுகிறது என்பதை உதறித் தள்ளினார். “ஆம்.. நம்முடைய அமெரிக்க சகாக்கள் ஏழாம் அத்தியாய தீர்மானம் ஒன்றை பெரிதும் விரும்புவர்” என்றார். “நாம் உடன்பாடு கொண்டுள்ள இறுதி அறிக்கை, எப்படி மேலே நடப்பது, நம் பரஸ்பர கடமைகள் என்ன என்று கூறும் வழிகாட்டிக் கொள்கைகளை கொண்டதில், அது பற்றிக் குறிப்பு ஏதும் இல்லை.”
“சிலருக்கு எப்பொழுதும் அச்சுறுத்துதல்தான் மிகவும் முக்கியம் என்றால்.... அது ஜெனீவா 2 மாநாடு கூட்டப்படும் வாய்ப்பை முற்றிலும் தகர்க்கும் மற்றொரு பாதைதான்”, லாவ்ரோவ் மேலும் குறிப்பிடுகையில், சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஒரு அரசியல் உடன்பாடு குறித்த பேச்சுக்களுக்கான திட்டமிடப்பட்டுள்ள மாநாடு பற்றிய குறிப்பாகும் இது.

உண்மை என்ன என்றால், வாஷிங்டனுக்கு அத்தகைய மாநாட்டை “எழுச்சியாளர்கள்” பெரும் தோல்விகளை சந்திக்கும் சூழலில் கூட்ட விருப்பம் இல்லை; பல தகவல்கள்படி எழுச்சி சிதைவில் உள்ளது. மாறாக அமெரிக்கா களத்தின் நிலைமையை மாற்ற விரும்புகிறது—கூடுதல் ஆயுதங்கள் அளித்தல் மூலமும்; தற்பொழுது ஒத்தி வைக்கப்பட்டாலும்கூட, நேரடி இராணுவத் தாக்குதல் மூலமும்.

சிரிய இரத்தக் களரியை நீடிக்க வைப்பதையும் தவிர, இந்த கொள்ளையடித்தல் கொள்கை ஒரு பிராந்திய போரைத் தூண்டும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது; அது அண்டை நாடுகளையும் ஈரானையும் ரஷ்யாவையும் ஈர்க்கும்.