சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Books withdrawn from circulation after threat from Hindu right

இந்தியா: இந்து வலதின் அச்சுறுத்தலை அடுத்து விற்பனையிலிருந்து புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டன

By Deepal Jayasekera
1 April 2014

Use this version to printSend feedback

இந்தியாவில் இந்து மேலாதிக்கவாதிகளின் எதிர்ப்பு மற்றும் சட்டரீதியிலான அச்சுறுதல்களை முகங்கொடுத்து, இந்துவாத புத்தகங்கள் விற்பனையிலிருந்து திரும்ப பெறப்பட்டமை, இந்திய அரசியல் ஸ்தாபகத்திற்குள் நிலவும் இந்து மேலாதிக்கவாதிகளின் அழிவார்ந்த செல்வாக்கிற்கு ஒரு சமீபத்திய சான்றாக மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது வரவிருக்கின்ற மேலதிக தாக்குதல்களுக்கான ஓர் எச்சரிக்கையாக உள்ளது.

பெப்ரவரி 11இல், பென்குவின் புக்ஸ் இந்தியா பதிப்பகம், கல்வியாளர் வென்டி டோனிகெர் (Wendy Doniger) எழுதிய The Hindus: An Alternative History நூலின் அனைத்து விற்கப்படாத நகல்களைத் திரும்ப பெறவும், அழிக்கவும் சிக்ஷா பசாவோ அந்தோலன் சமிதி (கல்வி பாதுகாப்பு இயக்க குழு - SBAS) எனும் ஒரு சிறிய இந்து அதிதீவிரவாத குழுவோடு நீதிமன்றத்திற்கு வெளியிலான ஒரு உடன்பாட்டை எட்டியது. அந்த நூல் இந்து மதத்தைத் தாக்குவதாக வாதிட்டு, SBAS அந்த நூலுக்கு எதிராக 2011இல் ஒரு உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தது.

பென்குவின் பின்வாங்கியதால் பலம் பெற்ற SBAS, மார்ச் 1இல், டோனிகெரின் மற்றொரு நூலான, அலெஃப் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட On Hinduism என்பதையும் திரும்ப பெற கோரியது. அந்த நூலின் கருத்துக்களும், முந்தையதைப் போலவே, புண்படுத்தும் விதத்தில் மற்றும் அவமதிக்கும் விதத்தில்" இருப்பதாக அது குற்றஞ்சாட்டியது. நூலைத் திரும்ப பெறுவதற்கு அது அழைப்பு விடுத்திருந்தது என்ற செய்திகளை மறுத்தும், நிலைமைக்கு சரியான மறுதீர்வை" மட்டுமே அது பார்த்து வருவதாக கூறியும், அலெஃப் புத்தக நிறுவனம் பல நாட்களுக்குப் பின்னர் ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்து மேலாதிக்கவாத அமைப்புகளும் மற்றும் கட்சிகளும், புத்தகங்கள், திரைப்படங்கள் அல்லது இந்துவாதத்தை "அவமதிக்கும்", அல்லது மிக துல்லியமாக, அவர்களின் இந்துத்துவ வகுப்புவாத கோட்பாட்டுக்கு மற்றும் அது எதை அடிப்படையாக கொண்டிருக்கிறதோ அந்த மொத்த வரலாற்று திரித்தல்களுக்குக் குழிபறிக்கும் எதுவொன்றுக்கு எதிராகவும், சில காலமாக தணிக்கை செய்யும் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.

டோனிகெர் நூல்களுக்கு எதிரான சமீபத்திய பிரச்சாரமானது, அரசியல் மற்றும் வணிக மேற்தட்டின் சக்தி வாய்ந்த பிரிவுகள் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடியின் பக்கம் திரும்பி இருப்பதோடு பிணைந்துள்ளது. ஒரு பரம வகுப்புவாதியான மோடி, இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளை தூண்டுவதில் சம்பந்தப்பட்டிருந்தார். அந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். அப்போது அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

சூரிய கடவுளை ஒரு பாலுணர்ச்சி தூண்டுதலுக்கு உரியவராக அல்லது கற்பழிப்புக்கு உரியவராக அந்த புத்தகம் குறிப்பிடுவதை மேற்கோளிட்டு காட்டி, டோனிகெரின் The Hindus நூல் இந்து கடவுள்களை அவமதிப்பதாக அந்த இந்து பேரினவாதிகள் குற்றஞ்சாட்டினர். மேலும் கடவுள் இராமரின் மனைவியான சீதா, அவரது மைத்துனர் இலட்சுமணனுடன் சிற்றின்ப வேட்கை நிறைந்த உறவு கொண்டிருந்திருக்கலாம் என்று கூறப்படும் கருத்துக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு திருமணமான பெண் கணவனுக்கு விசுவாசமாக இருப்பதற்கு ஒரு முன்மாதிரியாக இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட, புராணக்கதை பாத்திரமான சீதாவை, இந்து அடிப்படைவாதத்தின் ஆதரவாளர்கள் நவீன இந்திய சமூகத்தின் நடைமுறையில் வைக்க விரும்புகின்றனர்.

மக்கள் மாட்டிறைச்சி உண்பதற்கு மகாத்மா காந்தி உடன்பட்டிருந்தார் என்பதன் மீதான டோனிகெரின் குறிப்புகளையும் SBAS மற்றும் அதை சுற்றியிருப்பவை எதிர்க்கின்றன. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இந்து வலது, காந்தியைக் கடுமையாக எதிர்த்தது, ஆனால் மாட்டிறைச்சி உண்ணக் கூடாதென்ற அவர்களின் அதிகார எச்சரிக்கையைக் கடந்து செல்லும் எந்தவொரு முறையீட்டையும் அவர்கள் எதிர்க்கின்றனர். பசு பாதுகாப்பை" அவர்கள் ஊக்குவிப்பதற்கான காரணம், மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லீம்கள் மீதான அவர்களின் நச்சார்ந்த வகுப்புவாத தாக்குதல்களில் அதுவொரு உட்கூறாக உள்ளது.

பல இந்திய ஊடக விமர்சகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புத்திஜீவிகள், SBAS மற்றும் ஏனைய இந்து அதிதீவிரவாதிகள் எந்த வகுப்புவாத தணிக்கை நெறிமுறைகளைத் திணித்து வருகின்றனரோ அதே வழியில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பென்குவின் போன்ற முன்னணி பதிப்பகங்கள் ஒதுங்கி போயுள்ளன.

பென்குவின் பதிப்பகத்திற்கு இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ஒரு கடிதத்தில், இதிலிருந்து நாங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? இந்துத்துவாவிற்கு ஆதரவான புத்தகங்களை மட்டும் தான் நாங்கள் எழுத வேண்டுமா? அல்லது (உங்கள் 'சமரசம்' காட்டுவதைப் போல) 'பாரதத்தின்' [இந்தியாவின்] புத்தக அலமாரிகளில் இருந்து அவை அகற்றப்பட்டு, அழிக்கப்படும் அபாயம் உள்ளதா? பென்குவினில் பிரசுரிக்கும் எழுத்தாளர்களுக்கென, ஒருவேளை அங்கே ஏதாவது எழுதுவதற்கான நெறிமுறைகள் இருக்கிறதா? அங்கே ஏதாவது ஒரு கொள்கை அறிக்கை உள்ளதா? என்று கேள்வி எழுப்புகிறார்.

பெங்களூரை மையமாக கொண்ட Alternative Law Forum என்பதில் ஒரு வழக்கறிஞரான லாரன்ஸ் லியான்ங், பென்குவின் The Hindus நூலைத் திரும்ப பெற்றமை மீது ஒரு சட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அலெஃப் பதிப்பகம் டோனிகெரின் புத்தகத்தை திரும்ப பெற்றது என்ற செய்திகளைக் குறித்து கூறுகையில், அது முற்றிலும் வெட்கக்கேடானதும், கேலிக்குரியதுமாகும். ஒரு பதிப்பகம் ஒரு நூலைத் திரும்ப பெற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், நீங்கள் பொலிஸில் புகார் பதிவு செய்ய வேண்டும். இந்நாட்டில் வாசிப்பிற்கு எதிர்காலம் இல்லை," என்றார்.

பார்த்தா சாட்டர்ஜி மற்றும் ரோமிலா தாபார் உட்பட முன்னணி இந்திய மற்றும் சர்வதேச கல்வியாளர்களின் ஒரு குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆன்லைன் மனு, கருத்து சுதந்திரத்தை ஸ்தாபிப்பதற்கு முன்பிருந்ததைப் போல பலமாக தூக்கிப்பிடிப்பதை உறுதிப்படுத்த, பென்குவின்The Hindusக்கு எதிரான விவகாரத்தை உயர் நீதிமன்றங்களுக்கு எடுத்துக் செல்ல வேண்டுமென" வலியுறுத்தியது.

மதசார்பற்றது" என்ற அதன் வாதங்களுக்கு இடையில் ஆளும் காங்கிரஸ் கட்சி இந்து வலதைக் கண்டுங்காணாதது போல் இருக்கும் நிலைமைகளின் கீழ், இந்து அதிதீவிரவாதிகளின் கரங்கள் உயர்ந்துள்ளன. இப்போதிருந்து ஒரு தசாப்தத்திற்கு அண்மித்தளவில் புது டெல்லியில் அதிகாரத்தில் இருந்துள்ள காங்கிரஸ், 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளில் மோடி அரசாங்கத்தின் பாத்திரம் மீது அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் புறநகர் அபிவிருத்தி மந்திரி ஜெய்ராம் ரமேஷ், டோனிகெரின் புத்தகங்களை பென்குவின் திரும்ப பெற்றமையை "மிக கொடுமையானதென" முத்திரை குத்தியதோடு, SBAS "தாலிபான் பாணியிலான குழு என்றும், நமது [இந்தியாவின்] தாராளவாத பாரம்பரியத்தைத் திரித்து, அழிக்கிறது" என்றும் வர்ணித்தார். எவ்வாறிருந்த போதினும், ஒரு வகுப்புவாத இரத்த ஆறை கட்டவிழ்த்துவிட்ட பிரிட்டிஷின் 1947 இந்திய பிரிவினைக்கு அது உடன்பட்ட போதிருந்தே, காங்கிரஸ் இந்து வலதோடு இணங்கி உள்ளது.

இந்து வலதிற்கு பாதை அமைத்து அளிப்பதில் இந்திய ஸ்ராலினிஸ்டுகள் மிகவும் துரோகத்தனமான பாத்திரம் வகித்துள்ளனர். பிரதான ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ), தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக இந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கு, காங்கிரஸில் இருந்து பல்வேறு பிராந்தியவாத மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகளுக்கு, அடிபணிய செய்ய அயராது வேலை செய்துள்ளன. வாழ்க்கை தரங்களின் பாதுகாப்புக்கான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் தடுத்ததன் மூலமாக, ஸ்ராலினிஸ்டுகள் உழைக்கும் மக்களின் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டு இந்து வலதிற்கு கதவைத் திறந்து விட்டுள்ளனர்.

பென்குவினுக்கு எதிராக வழக்கு தொடுக்க SBASஆல் பயன்படுத்தப்பட்ட சட்டம், வகுப்புவாத அரசியல் எந்தளவிற்கு பலமாக வேரோடியுள்ளதென்பதைக் காட்டுகிறது. SBASஆல் மேற்கோளிட்டு காட்டப்படும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் ஷரத்து 295 (A), எந்தவொரு மதத்தையோ அல்லது மத நம்பிக்கையையோ அவமதித்து, எந்தவொரு பிரிவினரின் மத உணர்வுகளை தூண்டிவிட நோக்கம் கொண்ட திட்டமிட்ட மற்றும் கொடிய நடவடிக்கைகளுக்கு, சிறைத்தண்டனை அல்லது அபராத தண்டனை, அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்," என்று குறிப்பிடுகிறது.

டோனிகெரின் நூலைத் திரும்ப பெறுவதற்கான அதன் முடிவை விவரிக்கையில், பென்குவின் கூறியதாவது, ஷரத்து 295 (A) அதிகளவில் பயன்படுத்தப்படுவதானது "எந்தவொரு பதிப்பகமும், தன்னைத்தானே திட்டமிட்டு சட்டத்திற்கு வெளியே நிறுத்திக் கொள்ளாமல், கருத்து சுதந்திரத்திற்குரிய சர்வதேச தரமுறைகளைத் தூக்கி பிடித்தால் அதனை அதிகளவில் சிக்கலுக்கு உள்ளாக்கும்," என்று தெரிவித்தது.

பென்குவின் முடிவிற்கு விடையிறுப்பாக, இந்தியாவின் பலம் பொருந்திய அவமதிப்பு சட்டத்தை விமர்சித்து டோனிகெர் ஓர் அறிக்கை வெளியிட்டார், அதில் அவர், அந்த சட்டம் "எந்தவொரு இந்துவையும் காயப்படுத்தும் ஒரு நூலை பிரசுரித்தால், அது உரிமையியல் மீறல் என்பதை விட ஒரு குற்றமாக ஆக்குகிறது. எந்தவொரு பதிப்பகத்தின் ஸ்தூலமான பாதுகாப்பையும் ஆபத்திற்குள்ளாக்கும் ஒரு சட்டம், ஒரு நூலுக்கு எதிராக என்ன அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதைக் குறித்து கவலைப்படுவதில்லை," என்று குறிப்பிட்டார்.

வகுப்புவாதத்தைத் தடுப்பதற்கு அல்லாமல், ஷரத்து 295 (A) கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை ஜனநாயக உரிமையை ஒடுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பரந்து விரிந்த அவமதிப்பு சட்டங்கள், அரசியல் மற்றும் பெருநிறுவன ஸ்தாபகத்தின் மேலிடத்தில் உள்ள ஊழல் நடைமுறைகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக ஒரு சட்ட ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜிதேந்திரா பார்கவாவின் The Descent of Air India எனும் நூலில், முன்னாள் விமான போக்குவரத்துத்துறை மந்திரியும், தற்போதைய கனரக தொழில்துறை மற்றும் பொது நிறுவனங்களுக்கான மந்திரியாக உள்ள பிரஃபூல் படேலின் பெயர் இருந்தமைக்காக, அவர் ஒரு இந்திய நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்ததற்கு விடையிறுப்பாக, ஜனவரியில், இலண்டனை மையமாக கொண்ட புளூம்ஸ்பரி பதிப்பகம் அந்நூலை சந்தையிலிருந்து திரும்ப பெறவும், அதன் நகல்களை அழிக்கவும் முடிவெடுத்தது.