சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India attempts precarious balancing act in Ukraine crisis

உக்ரேனிய நெருக்கடியில் இந்தியா எச்சரிக்கையாக இருதரப்பையும் சமப்படுத்தும் நிலையில் நிற்க முயல்கிறது 

By Deepal Jayasekera and Keith Jones
28 March 2014

Use this version to printSend feedback

உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக கடந்த மாதம் நடத்தப்பட்ட பாசிச-தலைமையிலான ஆட்சி சதி, மற்றும் அதைத் தொடர்ந்து ரஷ்ய எல்லைகளில் ஆக்ரோஷமான நேட்டோ இராணுவ நடவடிக்கைகள், தடை விதிப்புகள் மற்றும் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்கள் என ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியங்களின் மூலோபாய உந்துதல், இந்தியாவின் இராஜாங்க மற்றும் புவிசார்-அரசியல் மூலோபாயத்தைக் குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.    

கடந்த தசாப்தத்திற்கு முன்பிருந்தே, புது டெல்லி அமெரிக்காவுடன் ஒரு "உலகளாவிய மூலோபாய கூட்டுறவை" உருவாக்கிக்கொண்டு, வாஷிங்டனை நோக்கி சாய்ந்துள்ளது. அதேவேளையில், இந்தியாவின் "அனைத்து சூழலுக்கும் உகந்த நண்பனாக" ரஷ்யாவுடன் அது பல தசாப்தங்களாக நெருங்கிய உறவுகளைத் தக்க வைத்துள்ளதன் மூலமாகவும், மற்றும் அதன் பரம-விரோதியான பாகிஸ்தானின் ஒரு நெருங்கிய கூட்டாளியும், நீண்டகாலமாக எல்லை தகராறுகளைக் கொண்டிருக்கும் ஒரு நாடான சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த முனைந்து வருவதன் மூலமாக, இந்தியா ஒரு "மூலோபாய சுயாட்சி" முறைமையை இறுக்கமாக பிடித்து வைத்துள்ளது.

இரண்டாம் உலக யுத்த முடிவுக்குப் பின்னர், தற்போது ஐரோப்பாவின் மிக தீவிர நெருக்கடியில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டுள்ளதால், புது டெல்லி மாஸ்கோவுடனோ அல்லது வாஷிங்டனுடனோ அதன் உறவுகள் ஆழமாக பாதிக்காத விதத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க தடுமாறிக் கொண்டிருக்கிறது.

உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை பதவியிலிருந்து இறக்கிய பெப்ரவரி 22 பதவி கவிழ்ப்பு குறித்தும், அதை அடுத்து ரஷ்யாவிற்கும், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகளுக்கும் இடையில் வேகமாக அதிகரித்த பதட்டங்கள் குறித்தும், ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு இந்திய அரசாங்கம்  கருத்து எதுவும் வெளியிடவில்லை.

இருப்பினும், இருமுக போக்கோடு மற்றும் தெளிவற்ற கருத்துக்கள் நிரம்பிய அறிக்கைகளில் மற்றும் நடவடிக்கைகளில் தயக்கத்தோடு, புது டெல்லி இதுவரையில் தன்னைத்தானே ஓரளவுக்கு வாஷிங்டனிடமிருந்து தூர விலக்கி கொண்டுள்ளது.

ரஷ்யாவை தனிமைப்படுத்தவும், மாஸ்கோவிற்கு எதிராக மேலதிகமாக ஆக்ரோஷமான இராஜாங்க மற்றும் இராணுவ நகர்வுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச "சட்ட ஒப்புதல்" வழங்குவதற்காகவும் அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளால் நேற்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தவிர்ப்பதில், சீனா மற்றும் ஏனைய ஐம்பது நாடுகளோடு இந்தியாவும் சேர்ந்து கொண்டது. ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக பாரிய வாக்குகளை அளித்திருந்த கிரிமியாவின் மார்ச் 16 சர்வஜன வாக்கெடுப்பு, உக்ரேனில் இருந்து பிரிவதற்கும் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்குள் அது இணைவதற்கும் கிரிமியாவின் சுயாட்சி குடியரசுக்கு ஒரு சட்டப்பூர்வ அடித்தளத்தை கொண்டிருக்கவில்லை என்று அந்த தீர்மானம் குறிப்பிட்டது.

இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளால் ரஷ்யா மீது கொண்டு வரப்பட்ட தடைகளுக்கும் மற்றும் உலகளாவிய பதட்டங்களை தீவிரப்படுவதற்கும் கண்டனம் தெரிவிக்கும் ஒரு தீர்மானத்தை அங்கீகரிப்பதில், இந்தியா ஏனைய நான்கு பிரிக்ஸ் நாடுகளோடு (BRICS-பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்கா) இணைந்து கொண்டது. நவம்பரில் ஆஸ்திரேலியாவின் பிஸ்பெனில் நடக்க உள்ள அடுத்த ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ரஷ்யாவைத் தவிர்க்க வேண்டுமென்ற ஆஸ்திரேலிய பிரதம மந்திரியின் பரிந்துரையையும் பிரிக்ஸ் நாடுகள் நேரடியாக எதிர்த்தன.

யானுகோவிச்சிற்கு எதிரான பாசிய-தாக்குமுகப்போடு நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பைத் தூண்டிவிடுவதில் மற்றும் அதை ஒழுங்கமைப்பதில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் பாத்திரத்திற்கு கண்டனம் தெரிவிப்பது ஒருபுறம் இருக்க, இந்தியா அந்த ஆட்சிக் கவிழ்ப்பைக் கூட எந்த விதத்திலும் கண்டிக்க வில்லை. இந்த பிரச்சினையின் குறித்த அதன் ஒரேயொரு அறிவிப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரேனில் "அரசாங்க மாற்றம்" என்று குறிப்பிட்டதோடு, உக்ரேனின் அனைத்து தரப்பு மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்" ஒரு தீர்வை எட்டுவதில் ஒரு "சட்டப்பூர்வமான ஜனநாயக நிகழ்போக்கை" ஸ்தாபிக்க வேண்டியது அவசியமென்று குறிப்பிட்டது.

ஆனால் உக்ரேனில் ரஷ்யாவிற்கு "சட்டப்பூர்வமான நலன்கள்" உள்ளதென்றும் புது டெல்லி வலியுறுத்தி உள்ளது. இந்த கருத்து உக்ரேனின் பதவி கவிழ்ப்பிற்குப் பின்னர் நிறுவப்பட்ட அரசாங்கத்திடமிருந்து ஒரு பலமான கண்டனத்தைத் தூண்டிவிட்டது.  அதேபோல கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்டதையும் அது விமர்சிக்கவில்லை.

கிரிமியா ரஷ்ய கூட்டமைப்பிற்குள் உத்தியோகப்பூர்வமாக இணைக்கப்பட்ட மார்ச் 22இல், அதே நாளில், ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டு அமர்வில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சீனா மற்றும் இந்தியாவை பிரத்தியேகமாக பாராட்டினார். புட்டின் கூறினார், கிரிமியாவில் எங்களின் நடவடிக்கையைப் புரிந்து கொண்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ... இந்தியாவின் பின்னடித்தலையும் மற்றும் பொருளறிந்து செயற்பட்டதையும் நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்," என்றார்.

இந்தியாவின் "ஆதரவுக்காக" இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, மார்ச் 22 அன்று மாலை, புட்டின் அவருடன் தொலைபேசியில் உரையாடினார். அவர்களின் 20-நிமிட உரையாடல் குறித்த இந்திய அரசின் அறிக்கை குறிப்பிட்டதாவது, ரஷ்யாவின் நிலைப்பாட்டை விவரித்தமைக்காக புட்டினுக்கு சிங் நன்றி கூறியதோடு, நாடுகளிடையேயான ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பிரச்சினைகளின் மீது இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தியதாக" குறிப்பிட்டது.

கிரிமியாவை இணைத்துக் கொண்டதை நியாயப்படுத்த ரஷ்யா "சுய நிர்ணய உரிமையைக்" கையிலெடுப்பதானது இறுதியாக அதன் நலன்களுக்கு எதிரான விளைவைக் கொண்டு வருமென, சீனாவைப் போன்றே, இந்தியாவும் அஞ்சுகிறது. இந்தியா அதன் வட-கிழக்கு மாநிலங்களில் நீண்டகாலமாக பல்வேறு இனவாத-தேசியவாத பிரிவினை கிளர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதோடு, இந்தியாவில் முஸ்லீம்-பெரும்பான்மையினர் வாழும் ஒரே மாநிலமான ஜம்மு & காஷ்மீரின் எதிர்காலத்தை தீர்மானிக்க அங்கே ஐ.நா. சபையின் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை அது ஏற்க மறுத்திருந்தது.

அது தவிர்த்து, இந்திய அரசாங்க அறிக்கை அதன் சமாதான மற்றும் சமரச தொனிக்காக குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அதேவேளையில், மேற்கத்திய தலைவர்கள் புட்டினை ஒரு "ஆக்கிரமிப்பாளராக", ஒரு புதிய ஹிட்லராக கூட, பூதாகரமாக சித்தரிக்க வரிசை கட்டி நிற்கையில், இந்திய-ரஷ்ய மூலோபாய கூட்டுறவை மேலதிகமாக ஆழப்படுத்துவதில் மற்றும் பலப்படுத்துவதில் அவரது தனிப்பட்ட தலைமைக்காக" ரஷ்ய ஜனாதிபதிக்கு சிங் நன்றி கூறினார். "அவ்விரு நாடுகளின் சிறப்பார்ந்த மற்றும் தனித்துவம் மிக்க மூலோபாய கூட்டுறவில் அவை இணைந்து நிற்பதற்கான முக்கியத்துவத்தை புட்டினும், சிங்கும் மீண்டும் உறுதிப்படுத்தி இருந்ததாகவும்" அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த நூற்றாண்டில் வாஷிங்டனுடன் இந்தியா உருவாக்கியிருந்த மூலோபாய கூட்டுறவை இந்திய ஆளும் மேற்தட்டு, இந்தியாவை ஒரு பிராந்திய மற்றும் உலக சக்தியாக மாற்றுவதற்கான அதன் அபிலாஷைகளுக்கு முக்கியமானதாக பார்க்கிறது. 2008 இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கை இந்தோ-அமெரிக்க கூட்டுறவைப் பலப்படுத்தி இருப்பதாகவும், பத்தாண்டு காலம் பிரதம மந்திரியாக இருந்த போது செய்யப்பட்ட அவரது பெருமைமிக்க சாதனையாகவும் மன்மோகன் சிங் அதை மீண்டும் மீண்டும் புகழ்ந்துரைத்துள்ளார்.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் கீழும் சரி, தற்போதைய பராக் ஒபாமாவின் கீழும் சரி, சீனாவிற்கு ஒரு மூலோபாய எதிர்பலமாக இந்தியா சேவை செய்ய முடியும் என்றும், சீனாவைத் தனிமைப்படுத்தும் அதன் திட்டங்களுக்கும் மற்றும் அவசியமானால் சீனாவுடன் இராணுவரீதியில் குறுக்கிடூ செய்யவும் இந்தியா முக்கியமாக சேவை செய்ய முடியுமென்றும் அமெரிக்கா கணக்கிடுவதாலேயே, அது இந்தியாவின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது என்பதை இந்திய அரசாங்கமும், இந்திய ஆளும் வர்க்கம் நன்கு அறிந்தே தான் வாஷிங்டனை நோக்கி திரும்புவதைத் தேர்ந்தெடுத்தன.

இந்தோ-அமெரிக்க இராணுவ உறவுகள் துளிர்விடுவதையும் மற்றும் இந்தியா ஒரு நீலக்கடல் கடற்படையை ஸ்தாபிப்பதன் மீதும், மற்றும் இந்திய பெருங்கடலில் "பொலிஸ்" வேலை செய்வதில் இந்தியா ஒரு முன்னணி பாத்திரம் வகிப்பதில் அமெரிக்காவின் ஆதரவின் மீதும் அவை ஆர்வங்காட்டுகின்றன.

இருந்த போதினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள், யுத்த அச்சுறுத்தல்கள், மற்றும் யுரேஷியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு யுத்தங்கள் ஆகியவற்றால் அதாவது, அவற்றின் எரியூட்டும் தாக்கங்களால் மற்றும் வாஷிங்டனின் சர்வதேச சட்டமீறல்களால் மற்றும் தனது விருப்பப்படி தேசிய இறையாண்மையை மீறுவது பற்றி புதுடெல்லி எச்சரிக்கை அடைந்துள்ளது.

ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் பயமூட்டல்களுக்கு ஆதரவளிக்க, அணுசக்தி பிரச்சினை மீது ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக சர்வதேச அணுசக்தி அமைப்பில் (International Atomic Energy Agency) வாக்களிக்க மற்றும் பாகிஸ்தான் வழியாக ஈரானில் இருந்து இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் ஒரு குழாய் பாதை அமைக்கும் திட்டத்தைக் கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவளிக்க இந்தியா தொடர்ச்சியாக அமெரிக்காவின் அழுத்தத்திற்குள் வந்திருந்தது. இந்த மாத தொடக்கத்தில், ஒரு இந்தோ-அமெரிக்க எரிசக்தி மாநாட்டில், 2013இல் குறைக்கப்பட்ட அதன் தடை வரம்புகளை மீறாதபடிக்கு ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிகளை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டுமென வாஷிங்டன் கோரியது, புது டெல்லியும் அதன் சம்மதத்தை குறிப்பிட்டு காட்டியது.

இருந்தபோதினும், அதன் சூறையாடும் மூலோபாய நோக்கங்களை எட்டுவதில் அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தம் இந்திய அரசாங்கத்திற்கும், ஆளும்தட்டிற்கும் அதிகளவில் சீற்றத்தை உண்டாக்கி உள்ளது.

இந்தியா அதன் உறுதியான கூட்டாளிகளில் ஒன்றாக மதிக்கும் ஒரு சக்திக்கு எதிராக, அதன் இராணுவத்தை ஆயுத பலம் வாய்ந்ததாக ஆக்குவதில் அது அதிகளவில் எதனைச் சார்ந்துள்ளதோ, மற்றும் அதன் அணுசக்தி எரிபொருள் திட்டங்களின் வளர்ச்சியில் எது ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறதோ அதற்கு எதிராக, உக்ரேனிய நெருக்கடியில், அமெரிக்கா ஆக்ரோஷமாக நகர்ந்து வருகின்றது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா அதன் ஆயுத படைகளில் பெரும் நவீனமயமாக்கலைச் செய்து வருகின்ற நிலையில் அதன் இராணுவ தளவாட வினியோகஸ்தர்களை மாற்ற முனைந்துள்ளது. இருந்தபோதினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவ இறக்குமதிகளில் மூன்று கால்பகுதிகளுக்கும் அதிகமாக ரஷ்யாவிலிருந்து வந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, ஏறத்தாழ 40 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய இராணுவ உத்தரவாணைகள் ரஷ்யாவிடம் நிலுவையில் உள்ளன. இந்திய ரஷ்ய தூதரகத்தின் வலைத்தள குறிப்புகளின்படி, இந்திய-ரஷ்ய இராணுவ தொழில்நுட்ப கூட்டுறவானது வெறுமனே வாங்குவோர்-விற்போர் கட்டமைப்பு என்பதிலிருந்து நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டு ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் உற்பத்தி என்றளவிற்கு விரிவடைந்துள்ளது. ஐந்தாம் தலைமுறை போர் விமானம் மற்றும் பன்முக-போக்குவரத்து விமானத்தின் கூட்டு அபிவிருத்தியான பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பும், அத்தோடு SU-30 விமானம் மற்றும் T-90 டாங்கிகளை இந்தியாவில் உரிமத்தோடு உற்பத்தி செய்வது ஆகியவை இத்தகைய கூட்டுறவிற்கான முன்னோடி சான்றுகளாகும், என்று குறிப்பிடுகிறது.

1974இல் மற்றும் மீண்டும் 1998இல் அதன் அணு ஆயுத சோதனைகளுக்கு விடையிறுப்பாக அமெரிக்காவினாலும், ஏனைய உலக சக்திகளாலும் இந்தியா தனிமைப்படுத்தப்பட்ட போது, ரஷ்யாவும் மற்றும் அதற்கு முந்தைய சோவியத் ஒன்றியமும் புது டெல்லியின் தரப்பில் நின்றன என்பதில் இந்திய மேற்தட்டு துல்லியமாக நனவுபூர்வமாக உள்ளது.

பனிப்போரின் பெரும்பாலான காலப்பகுதியில், அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கமாக இணைந்திருந்தபோது, சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டிற்கும் எதிராக சோவியத் ஒன்றியம் இந்தியாவிற்கு முக்கிய ஆதரவை வழங்கியது. 1971இல் பாகிஸ்தானுடனான இந்தியாவின் வெற்றியில் சோவியத்தின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது, தலையீடு செய்வதற்கான அச்சுறுத்தலை அமெரிக்கா முன்னெடுக்காமல் இருப்பதை அது உறுதிப்படுத்தியது. அந்த யுத்த போக்கில், புது டெல்லியும், மாஸ்கோவும் "இந்தோ-சோவியத் நட்பு உடன்படிக்கையில்" கையெழுத்திட்டு இருந்தன. அதன்படி இரண்டு நாடுகளும் ஒரு தாக்குதல் சம்பவத்தின் போது ஒன்றுக்கொன்று பாதுகாப்பிற்கு வர ஒப்புக் கொண்டன.

1979இல் ஆப்கானிஸ்தானுக்கு முட்டு கொடுக்க அந்த ஆண்டின் பிற்பகுதியில் செம்படை ஆப்கானிஸ்தானில் தலையீடு செய்ததும், அங்கே சோவியத் ஆதரவிலான அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்த ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. பின்னர் தாலிபானுக்கு எதிரான வடக்கு கூட்டணியை (Northern Alliance) இரண்டு நாடுகளும் கூட்டாக ஆதரித்தன. மேலும் அவை அவற்றின் ஆப்கான் கொள்கைகளை தொடர்ந்து நெருக்கமாக ஒருங்கிணைத்து வந்தன.

இந்தோ-ரஷ்ய உறவுகளின் ஆழம் மற்றும் பரப்பளவு இவ்வாறு இருக்கின்ற நிலையில், அமெரிக்க-ஜேர்மன் மேலாதிக்கத்திற்கு உக்ரேனை அடிபணிய செய்யும் வாஷிங்டனின் உந்துதலில் இருந்து தன்னைத்தானே விலக்கிவைக்க அதிகளவு புது டெல்லி நிர்பந்திக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் ரஷ்யாவிற்கான இந்தியாவின் ஆதரவு எந்தளவிற்கு மட்டுப்பட்டும், முடங்கியும் இருக்கின்றது என்பதை குறிப்பிடுவது பிரயோசனமானது.

அனைத்திற்கும் மேலாக, எந்தவொரு இடத்திலும் அமெரிக்க மூலோபாய நலன்களுக்கான அதன் ஆதரவை அதிகரிப்பதிலோ அல்லது ஆதரிப்பதிலோ எவ்வாறு அது அமெரிக்காவை சமாதானப்படுத்துவது என்பதை புது டெல்லி ஏற்கனவே கணக்கிட்டு வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது வாஷிங்டன் உடனான அதன் கூட்டணியைத் தக்க வைக்க மற்றும் பலப்படுத்த ஆர்வமாக உள்ளது.

வாஷிங்டனைப் பொறுத்த வரையில், இது வரையில் உக்ரேனிய நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அது பகிரங்கமாக எதுவும் கூறவில்லை. ஆனால் அது அதனுடைய முக்கியமான பங்கை கோரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உக்ரேன் மீதான அமெரிக்க-ரஷ்ய மோதலுக்கு முன்னரே கூட, அமெரிக்க நலன்களுக்கு இந்தியாவிடமிருந்து போதியளவிற்கு ஒத்துழைப்பு இல்லை என்றும், அதனது "மூலோபாய சுயாட்சிக்கு" கூடுதலாக கட்டுப்பட்டிருக்கின்றது என்றும் அமெரிக்க அரசியல் மேற்தட்டு மற்றும் இராணுவ-மூலோபாய அமைப்புகளிடம் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் இருந்தன.

வாஷிங்டனை நோக்கி சாய்கின்ற அதேவேளையில், உலக புவிசார் அரசியலின் வரம்புகளில் முன்பில்லாத வகையில் பிளவு ஏற்பட்டு வருவதால் இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் என்ற நிலைப்பாட்டை எடுக்க முனைந்துள்ளது. அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை மறுஸ்திரப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதல், சாத்தியமான அளவிற்கு, இந்தியாவை இன்னும் அதிகளவில் எச்சரிக்கையோடு இருதரப்பையும் சமப்படுத்தும் நிலையில் நிற்க செய்து வருகிறது என்பதை உக்ரேனிய நெருக்கடி எடுத்துக்காட்டி உள்ளது.