சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

In talks with Saudi monarch, Obama prepares escalation of US-backed war in Syria

சவுதி மன்னருடன் பேச்சு நடத்துகையில், ஒபாமா சிரியாவில் அமெரிக்க ஆதரவு போர் விரிவாக்கத்திற்கு தயாரிக்கிறார்

By Patrick Martin 
29 March 2014

Use this version to printSend feedback

வாஷிங்டன் செய்தி ஊடகங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் அதன் சிரிய உள்நாட்டுப்போரில் தலையீட்டை விரிவாக்க முடிவெடுத்துள்ளதை பற்றிய கசியவிட்ட தகவல்கள் பின்தொடர அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளியன்று சவுதி அரேபியாவை சென்றடைந்தார். ரஷ்யாவுடன் உக்ரேனில் நடக்கும் தற்போதைய மோதல் வெள்ளை மாளிகை ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடான சிரியா மீது தாக்குவதற்கான அதன் போக்கை மாற்றத் தூண்டுவதில் ஒரு முக்கிய காரணி என செய்தி அறிக்கைகள் மேற்கோளிட்டுள்ளன.

சவுதி தலைநகரான ரியாத்திற்கான வருகை, அவருடைய நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் பரந்த மக்கள் எதிர்ப்பு மற்றும் அமெரிக்க அரசியல் ஆளும்பிரிவுகளுக்குள்ளும், முக்கிய அமெரிக்க நட்பு நாடுகளிடையேயும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் சிரியா மீது குண்டுத் தாக்குதல் நடத்துவது என்பதில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டபின் மத்திய கிழக்கிற்கான ஒபாமாவின் முதல் வருகை ஆகும்.

அப்பொழுதில் இருந்து சிரியப் போர் மற்றும் ஈரானுடன் நடத்தும் அணுசக்தி பற்றிய பேச்சுக்கள் பற்றி சவுதி அரச குடும்பம் அமெரிக்க கொள்கைகளைக் குறித்து அப்பட்டமாக, பகிரங்கமான விமர்சனங்களை தெரிவித்துள்ளது. ஒபாமாவின் வருகை இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளைச் சீராக்கும் தொடர்ச்சியான அமெரிக்க முயற்சிகளில் சமீபத்தியதும், வளைகுடாப் பகுதியில் எண்ணெய் செழிப்பு உடைய முடியரசுகளின் மத்தியில் அமெரிக்க மேலாதிக்க நிலையை உயர்த்துவதும் ஆகும்.

ஒபாமாவின் விமானம் ரியாத்தில் இறங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக, வாஷிங்டன் போஸ்ட் அரசாங்கத்துடனான அதன் நல்ல தொடர்புடைய வெளியுறவுக் கொள்கை கட்டுரையாளர் டேவிட் இக்னேஷியஸ் கருத்து ஒன்றை, சிரிய எதிர்த்தரப்பிற்கு இரகசிய உதவியை விரிவாக்க ஒபாமா தயார் எனத் தோன்றுகிறது என்ற தலைப்பில் வெளியிட்டது. வியட்நாம் சகாப்த காலத்திய கடற்படை செயலரின் மகனான இக்னேஷியஸ் உயர்மட்ட CIA அதிகாரிகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளதுடன், இராணுவ உளவுத்துறை அமைப்பிலிருந்து அடிக்கடி தகவல்களை வெளியிடுபவராவர்.

அவருடைய கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது: ஒபாமா நிர்வாகம், உக்ரேனிலும் சிரியாவிலும் பின்வாங்கல்களால் அதிர்ச்சியுற்று, தன் இரகசியத் திட்டமான சிரிய எதிர்த்தரப்பிற்குப் பயிற்சி, உதவியளித்தல் ஆகியவற்றை விரிவாக்க முடிவெடுத்துள்ளதுடன், அந்த மிருகத்தனமான, தேக்கம் அடைந்துள்ள உள்நாட்டுப்போரில் அமெரிக்க ஈடுபாட்டை ஆழப்படுத்த முற்படுகின்றது போல் தோன்றுகின்றது. இந்த அதிகரிக்கப்படும் உதவித் திட்டம் வெள்ளியன்று ஜனாதிபதி ஒபாமாவிற்கும் சவுதி மன்னர் அப்துல்லாவிற்கும் இடையேயான பேச்சுக்களில் விவாதிக்கப்படலாம்.

இதுபற்றி நன்கறிந்துள்ள அதிகாரிகளை மேற்கோளிட்டு இக்னேஷியஸ் திட்டத்தைக் கீழ்க்கண்டவாறு கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஜோர்டான், வடக்கு சவுதி அரேபியா மற்றும் கட்டாரில் உள்ள அமெரிக்கா நடத்தும் முகாம்களில் பயிற்சி பெறும் சிரிய கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்துவது.

இராணுவத்திற்கு பதிலாக CIA இனை பயிற்சி முகாம் நடத்த நிர்ணயித்து, அதற்கு ஒரு பயங்கரவாத எதிர்ப்பு கவனத்தை கொடுத்து, சிரியாவில் உள்ள அசாத் ஆட்சி மற்றும் அல் குவேடா தொடர்புடைய ஈராக்கிய இஸ்லாமிய நாடு-Islamic State of Iraq- லெவன்ட்-Levant-  அமைப்புக்கு எதிராக இயக்குதல்.

சவுதி அரேபியாவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஹெலிகாப்டர்கள், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களுக்கு எதிராக பயன்படுத்தும் manpads எனப்படும் தொலைவில் இருந்து இயங்காது செய்யும் தொழில்நுட்பத்தை பொருத்தியுள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஒரு பரிசோதனை அடிப்படையில் வழங்க அமெரிக்காவை அனுமதித்தல்.

மூன்று கிளர்ச்சிக் குழுக்களான இஸ்லாமிய ஈராக்கிய அரசு மற்றும் லெவன்ட், ஜபாத் அல் நுஸ்ரா மற்றும் அஹ்ரர் அல் ஷாம் ஆகியவற்றிற்கு உதவியை தடுத்தல். இக்குழுக்களுக்கு உதவிய கட்டார் அமெரிக்க-சவுதி அழுத்தத்தை ஒட்டி உதவுவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் அசாத் ஆட்சியை அகற்றிய இடங்களில் உள்ளூர் பொலிஸ் மறுகட்டமைக்கப்படவும், எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு உதவியை வழிப்படுத்தல்.

இக்னேஷியஸ் முடிவாகக் கூறுகிறார்: அப்பட்டமாக கூறினால் அடிப்படையில், சிரியாவில் இராஜதந்திர தீர்வை அடைவதற்கு, மோதலை இராணுவரீதியாக விரிவாக்கம் செய்வதுதான்.

இக்கட்டுரை வெள்ளியன்று செய்திக் குறிப்புக்களில் பரந்த அளவில் மேற்கோளிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் அசோசியேடட் பிரஸ்ஸிடம் பேசிய பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவரால் உறுதி செய்யப்பட்டது. அசோசியேடட் பிரஸ் அறிக்கை ஒபாமா புதிய வான் பாதுகாப்பு முறைகளை சிரிய எதிர்த்தரப்பிற்கு அனுமதிப்பதை பரிசீலிக்கின்றார், மற்றும் சிரியாவிற்குள் கையடக்கமான தூக்கிச்செல்லக்கூடிய ஏவுகணைகளை இயக்கும் கருவிகளை அனுமதிக்கும் ஒபாமாவின் ஒரு தீர்மானத்தை சவுதி அரேபியா பாராட்டும் என்று கூறுகிறது.

அமெரிக்க நிலைப்பாட்டில் இது குறிப்பிடத்தக்க மாற்றம் என்று அசோசியேடட் பிரஸ் கூறுகிறது: பெப்ருவரியில் கூட ஒபாமா சிரிய எதிர்ப்பிற்கு manpads இனை அனுப்புவதை எதிர்த்திருந்ததாக நிர்வாகம் வலியுறுத்தியிருந்தது. இந்த ஆயுதங்கள் தவறான இடங்களை அடையக்கூடும் மற்றும் ஒரு போக்குவரத்து விமானத்தை சுட்டு வீழ்த்தவும் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா அஞ்சுகின்றது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் manpads இற்கு ஒப்புதல் கிடைக்கும் என சவுதி நம்புவதாகவும் மற்றும் பெயரிடப்படாத மூத்த நிர்வாக அதிகாரி எதிர்த்தரப்பிற்கு உதவியை பகிர்ந்து கொடுப்பதற்கு கடந்த சில மாதங்களாக சவுதிகளுடன் நாம் ஒருங்கிணைப்பை அதிகப்படுத்துவதற்கு உழைக்கிறோம். ஜனாதிபதியின் பயணம் இந்த நெருக்கமான ஒத்துழைப்பின் பின்னணியில் வந்துள்ளது என்றார்.

இப்பயணம் ஒரு தொடர் முந்தைய கூட்டங்களில் தயாரிக்கப்பட்டது. அவற்றுள் வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி, பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் ஆகியோர் ரியாத்திற்கு சென்றது, சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கு  பொறுப்பு கொண்டுள்ள சவுதி பாதுகாப்பு துணை மந்திரி இளவரசர் சால்மன் பின் சுல்தான் கடந்தவாரம் ஹேகலுடனும் CIA இயக்குனர் ஜோன் பிரென்னன் ஆகியோரை சந்திக்க வாஷிங்டன் வந்திருந்ததும் அடங்கும்.

அதே நேரத்தில் வாஷிங்டனுக்கு வருகை புரிந்த சிரிய கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் ஹடி அல் பஹ்ரா ஜேர்னலிடம் mandpads கொடுப்பது குறித்து இறுதி முடிவு ஏற்படவில்லை என்றாலும், நாங்கள் அனைவரும் கிளர்ச்சியாளர்களின் திறன்களை அதிகரிக்க ஆதரவு கொடுக்க ஜனாதிபதி சவுதி அரேபியாவிற்கு வருகை புரிந்த பின் ஒரு முடிவை எதிர்பார்க்கிறோம் என்றார்.

வாஷிங்டன் தளமுடைய ஏடான Foreign Policy  மார்ச் 24 அன்று வெளிவிவகாரத்துறை பல மில்லியன் டாலர்கள் உதவியை கிளர்ச்சியாளர்களுக்கு உதவியாக வழங்க உள்ளது. இதில் முதலுதவி வாகனம், டிரக்குகள் மற்றும் தொடர்பு சாதனங்கள்இராணுவ உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்களும் அடங்கும்வளைகுடா முடியரசுகள் வழங்கிய கனரக ஆயுதங்கள் மற்றும் தவிர CIA  மூலம் வழங்கிய சிறிய ஆயுதங்கள், வெடிமருந்துகளுக்கு மேலதிகமாக இவை வழங்கப்படும்.

இப்படி ஆயுதமற்ற உதவி என அழைக்கப்படுபவை டிசம்பர் மாதம் ஈராக்கிய இஸ்லாமிய அரசு மற்றும் லெவன்ட் விநியோகங்கள் சேமிக்கப்பட்டுள்ள கிடங்குகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றியபின் நிறுத்தப்பட்டது. Foreign Policy  கருத்துப்படி கிளர்ச்சிசக்திகளின் குடைக்குழுவான தலைமை இராணுவக் குழுக்குள் -Supreme Military Council- நிகழ்ந்த தலைமை மற்றும் அமைப்புரீதியான மாற்றங்கள் வாஷிங்டனை மீண்டும் உதவியை அளிக்க வகை செய்துள்ளன.

இந்த உதவி புதுப்பிக்கப்படும் நேரம் உக்ரேனில் அமெரிக்க ஆதரவு ஆட்சிசதி மற்றும் அதை எதிர்கொள்ளும் வகையில் ரஷ்யா கிரிமியாவை இணைத்துள்ளதுடன் பொருந்திவருவது, ஒபாமா நிர்வாகம் சிரியாவை ரஷ்யா நலன்களுக்கு மேலதிக சேதத்தை கொடுக்கும் பகுதியாகக் காண்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அதாவது கடந்த செப்டம்பரில் மௌனமாக ஏற்பட்ட அமெரிக்க ரஷ்ய உடன்பாட்டை குழப்புவதாகும். அப்பொழுது ஒபாமா அச்சுறுத்தப்பட்ட வான் தாக்குதல்களை நிறுத்தினார். இதற்கு ஈடாக ரஷ்யா தரகராக இருந்து கொண்டுவந்த  ஒரு திட்டமான சிரிய இரசாயன ஆயுதங்கள் தொகுப்பு மேற்பார்வையுடன் அழிக்கப்படும்.

அமெரிக்க சவுதி பேச்சுக்களில் மற்றொரு முக்கிய பிரச்சினை ஈரானுடன் அதன் அணுசக்தி மின்சாரத் திட்டம் பற்றி நடக்கும் பேச்சுக்கள் ஆகும். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ரோட்ஸ் செய்தியாளர்களிடம் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஒபாமா ஈரானுடனான அணுசக்தி உடன்பாடு பாரசீக வளைகுடாவில் ஈரானிய நடவடிக்கைகளுக்கும் மற்றும் அசாத், லெபனானில் ஹிஸ்போல்லா இயக்கத்திற்கு ஈரானிய ஆதரவு குறித்த அமெரிக்க எதிர்ப்பு என்பதை மாற்றாது என்றும் கூறினார். இந்த அக்கறைகள் நிரந்தரமாக உள்ளன, அணுசக்தி பேச்சுக்கள் நடத்துகையில் இவற்றை பற்றி பேசவில்லை என்றார்.

பிரஸ்ஸல்ஸ், ஹேக் மற்றும் வத்திக்கானில் ஒரு தொடர் உரைகள், கருத்துக்களுக்கு பின் ஜனநாயகம், மனித உரிமைகள் பொருளாதார சமத்துவம் ஆகியவற்றிற்காக வாதாடுபவர் என்று காட்டிக் கொண்டபின், இத்தகைய போலித்தனங்கள் 89 வயது சவுதி மன்னருடனான பேச்சுக்களின்போது கைவிடப்படும். அவர் உலகில் எஞ்சியுள்ள ஒரு சில முழு சர்வாதிகார நாடுகளில் ஒன்றிற்கு தலைமை தாங்குபவராவார். அவருடைய ஆளும் குடும்பத்தைத்தவிர வேறு எவருக்கும் எவ்வித உரிமைகளும் இல்லை.

சவுதி முடியாட்சி நிர்வகிக்கும் ஒடுக்குமுறையான அந்தரங்கமான ஆட்சி பற்றி எவ்வித விவாதமும் இராது. 2011இல் பஹ்ரைனின் அரசாட்சிக்கு எதிரான ஜனநாயக சார்பு எதிர்ப்புக்கள் வந்தபோது அதை அடக்க 1,000 துருப்புக்கள் அனுப்பப்பட்ட அதன் இராணுவ ஊடுருவல்கள் குறித்தும் இராது.

இம்மாதம் முன்னதாக ஒரு தகவல்படி, சவுதி அரசாங்கம் ஆணையொன்றை வெளியிட்டு எந்த வடிவத்திலும் எந்த நோக்கத்திலும் கூட்டு அறிக்கைகளோ, கூட்டங்களோ, எதிர்ப்புக்களோ, உள்ளிருப்பு நடவடக்கைகளோ, அழைப்புவிடுதலோ, ஆதரித்தலோ, தூண்டுதலோ அல்லது முடியரசின் ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டிற்கு எந்த வகையிலும் பாதிக்கும் செயலோ குற்றம் ஆகும் என்று அதில் கூறியுள்ளது.

சவுதி அரசாங்கம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பில் உறுப்பினராவதையும் குற்றமாக்கியுள்ளது, அதை அல் குவேடாவிற்கு ஒப்பானதாக வைத்துள்ளது. சிரியாவில் அமெரிக்க-சவுதிக் கொள்கையில் இருக்கும் முரண்பாடுகளை எடுத்துக்காட்டும் நடவடிக்கை ஒன்றில், உள்துறை அமைச்சரகம் ஆணை ஒன்றை வெளியிட்டு சிரிய கிளர்ச்சிக் குழுக்களின் பகுதியாக போரிட விரும்புவோருக்கு கடுமையான அபராதங்களை சுமத்துகிறது. இக்கவலை இக்கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவிற்கு திரும்பி முடியாட்சிக்கு எதிராக ஆயுதங்களை எடுக்கலாம் என்பதாலாகும்.