சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

NATO steps up military pressure on Russia

ரஷ்யா மீது இராணுவ அழுத்தத்தை நேட்டோ முடுக்கி விடுகிறது

By Stefan Steinberg and Peter Schwarz 
31 March 2014

Use this version to printSend feedback

நேட்டோ ரஷ்ய எல்லையில் அதனுடைய இராணுவ குவிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும்போது அமெரிக்க வெளிவிவகார செயலரும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவும் ஞாயிறு அன்று உக்ரேன் மோதல் குறித்து விவாதிக்கப் பாரிசில் சந்தித்தனர். இக்கூட்டத்தில் நான்கு மணி நேர “வெளிப்படையான” பேச்சுக்கள் இருந்தன, முடிவு ஏதும் இல்லை, தனித்தனிச் செய்தியாளர் கூட்டங்கள்தான் வந்தன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சில சலுகைகளைத் தான் கொடுக்கத் தயார் எனக் குறிப்பட்டதை அடுத்து இருவரும் சந்தித்தனர். கடந்த வெள்ளியன்று அவர் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு சௌதி அரேபியாவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “நெருக்கடிக்கு ஒரு இராஜதந்திரத் தீர்வு” விவாதிக்கப்பட வேண்டும் என்றார். லாவ்ரோவின் திட்டமான உக்ரேன் கூட்டமைப்பு, நேட்டோவின் பகுதியாக இல்லாமல் இருப்பது, என்பதை ஞாயிறன்று கெர்ரி நிராகரித்தார்; இழிந்த முறையில் “உக்ரேனியர்கள்தான் – அதாவது வாஷிங்டன் ஆதரவு படைத்த கியேவிலுள்ள பாசிச தலைமைதான்” இது பற்றி முடிவெடுக்க முடியும் என்றார்.

கிரிமிய இணைப்பு “சட்டவிரோதம், நெறியற்றது” என்று கெர்ரி மீண்டும் நிராகரித்து உக்ரேன் எல்லையில் ரஷ்யா துருப்புக்களைக் குவித்துள்ளது என்று குற்றம் சாட்டினார். மேற்கத்தைய அரசாங்கங்கள் ரஷ்யத் துருப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தி பால்டிக் நாடுகளில் தங்களுடைய இராணுவ நிலைப்பாட்டை உறுதியாக ஏற்றம் கொடுத்துள்ளன. முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்த்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா ஆகியவை நேட்டோவில் 2004ல் அனுமதிக்கப்பட்டன, ஆனால் இராணுவ உடன்பாடு முன்பு ரஷ்யாவை ஆத்திரமூட்டக்கூடாது என்பதற்காக துருப்புக்கள் தரையிறக்கல் நிலைப்பாட்டை அனுமதிக்கவில்லை. இந்த மூன்று மிகச் சிறிய அரசுகளின் இராணுவத்தின் எண்ணிக்கையானது 5000 இற்கும் 12000 இற்கும் இடையில் தான் உள்ளது. அத்தோடு அவைகளிடம் போர் விமானங்களோ டாங்கிகளோ இல்லை.

அந்த நிலை இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா ஏற்கனவே ஆறு F-15C போர் விமானங்களை லித்துவேனியாவிற்கு அனுப்பியுள்ளது. பிரித்தானியா நான்கு ஜெட்டுக்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளது. மற்ற நேட்டோ உறுப்பு நாடுகள், ஜேர்மனி உட்பட விமானங்கள் அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளன இவற்றில்  உக்ரேன், ரஷ்யாவிற்குள் ஆழமாக ஊடுருவிச் செல்லக்கூடிய AWACS உளவு விமானங்களும் அடங்கும்.

அதே நேரத்தில் நேட்டோ பால்டிக் கடலில் கடற்படைப் பயிற்சிகளை நடத்த முடிவெடுத்துள்ளது – நோர்வே அல்லது ஜேர்மனி கட்டுப்பாட்டு கப்பலை அளிக்கும்.

உக்ரேனில் ஒரு எல்லையை பகிர்ந்துகொள்ளும் போலந்தும் இராணுவக் கட்டமைப்பை அதிரித்துக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஏற்கனவே 300 இராணுவத்தினரையும் 12 போர் விமானங்களையும் அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

செவ்வாயன்று பிரஸ்ஸல்ஸில் கூடும் நேட்டோ வெளியுறவு மந்திரிகள் இன்னும் அதிக நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நேட்டோ செய்தித் தொடர்பாளர் தாங்கள் நடைமுறை ஒத்துழைப்பை ரஷ்ய-நேட்டோ குழுவுடன் நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளனர்; உக்ரேனுடன் இராணுவ ஒத்துழைப்பைப் “பரந்த அளவில்” அதிகப்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

வெளியேறும் நேட்டோ பொதுச் செயலர் ஆண்டெர்ஸ் போக் ராஸ்முசென் ஜேர்மனிய செய்தி ஊடகத்திடம் கூட்டு “இராணுவத் திட்டங்களைத் திருத்துதல், இராணுவத் தந்திரங்களை நடத்துதல், தக்க வகையில் துருப்புக்களை அதிகரித்தல் ஆகியவற்றைப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் கடந்த 15 ஆண்டுகளாக விரிவாக்கப்பட்டது பெரும் வெற்றி என்றும் புதிய நாடுகள் பொஸ்னியா-ஹேர்ஸ்ஸெகோவினா, மசெடோனியா, ஜோர்ஜியா மற்றும் மோன்டநெக்ரோ ஆகியவையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். உக்ரேனை அவர் குறிக்கவில்லை; ஆனால் அந்நாட்டுடன் நேட்டோவின் பங்காளித்தனம் “இன்னும் நெருக்கமாக” வளர்ந்துள்ளது என்றார்.

இப்போக்குகள் அமெரிக்கா, ஜேர்மனி இன்னும் அவற்றின் ஐரோப்பிய நட்பு நாடுகளால் தூண்டப்பட்ட உக்ரேனிய நெருக்கடி ரஷ்யாவைச் சூழ்ந்து கொள்ளவும் அதை மிரட்டவும், மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் ஆணைகளுக்கு அதைத் தாழ்த்தவும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன.

உக்ரேனுக்குள் மே 25ல் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஒரு இழுபறி வடப் போட்டி ஏற்பட்டுள்ளது. மைதான் எதிர்ப்புக்களில் ஒரு செய்தித் தொடர்பாளரும் UDAR கட்சித் தலைவருமான கிளிட்ஸ்ஷ்கோ தன் வேட்பாளர் தன்மையை விலக்கிக் கொண்டு தான் பில்லியனர் வணிகர் பெட்ரோ போரோஷெங்கோவிற்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார்; இதற்குப் பதிலாக மற்றொரு செல்வாக்கான பதவியான கியேவ் மேயர் பதவிக்கு அவர் போட்டியிடுவார்; அதே தினத்தில்தான் அத்தேர்தலும் நடக்கிறது.

1.8 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் போரோஷெங்கோ உக்ரேனிய தன்னலக்குழுக்கள் என்று Forbes தயாரித்துள்ள பட்டியலில் ஏழாவதாக உள்ளார். அவர் மிட்டாய் வகைகள், சாக்லேட்டுக்கள், கப்பல்கட்டும் துறை, ஆயுதங்கள் தயாரிப்புத்துறை ஆகியவற்றில் நிதியைக் குவித்தார்,

தன்னுடைய அரசியல் வாழ்க்கையை 1990களின் கடைசியில் போரோஷெங்கோ தொடங்கினார்; பலமுறை கட்சிகளை மாற்றிக் கொண்டார். முதலில் அவர் ஜனாதிபதி லியோனிட் குச்மாவின் ஆதரவாளராக இருந்தார். பின் சமீபத்தில் அகற்றப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சுடன் அவர் பிராந்தியக் கட்சியை நிறுவினார். அதற்குப்பின் அவர் யானுகோவிச்சின் போட்டியாளர் யெஷ்செங்கோவுடன் சேர்ந்து “ஆரஞ்சுப் புரட்சியை” ஆதரித்தார். யெஷ்செங்கோ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், போரோஷெங்கோ வெளியுறவு மந்திரியாக இருந்தார். யானுகோவிச் அதிகாரத்திற்கு வந்தபின், போரோஷெங்கோ குறுகிய காலத்திற்கு நாட்டின் பொருளாதார அமைச்சரகத்திற்கு தலைமை தாங்கினார்.

யானுகோவிச் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ரஷ்யா அதன் சாக்லேட் இறக்குமதியைத் தடைசெய்தபின் போரோஷெங்கோ மைதான் எதிர்ப்புக்களுக்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்திருக்க வேண்டும்; இத்தடை அவருக்கு மில்லியன் கணக்கான இலாபங்களை இழக்க வைத்துவிட்டது. அவருடைய சானல் 5 தொலைக்காட்சி நிலையம் எதிர்ப்புக்களுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை வெளிப்படுத்திய வகையில் தொடர்ச்சியாக மைதான் சதுக்கத்தில் இருந்தது.

ஜேர்மனி இன்னும் பிற ஐரோப்பிய அரசாங்கங்களின ஆதரவை போரோஷெங்கோ கொண்டுள்ளார். பேர்லின் ஆதரவை மிகவும் பெற்றிருந்த கிளிட்ஷ்கோவுடன் அவர் மூனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு பெப்ருவரி மாதம் அழைக்கப்பட்டிருந்தார்.  போரோஷெங்கோவும் கிளிட்ஷ்கோவும் சமீபத்திய வாரங்களில் பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டை சந்தித்தனர்.

உக்ரேனிய கருத்துக் கணிப்புக்களின்படி, போரோஷெங்கோ 25% வாக்காளர்களிடம் ஆதரவைக் கொண்டுள்ளார்; வேறு எந்த வேட்பாளரையும் விட இது அதிகம் ஆகும். அவருடைய முக்கிய போட்டியாளர் யூலியா திமோஷெங்கோவைவிட அதிக சமரசப் போக்கு உடையவர் என்று கருதப்படுகிறார்; திமோஷெங்கோவின் வெற்று உக்ரேனியத் தேசியவாதம் நாட்டைப் பிளக்கும் அச்சறுத்தலைக் கொண்டு, உள்நாட்டுப் போரில் ஆழ்த்தும் அபாயத்தையும் கொண்டுள்ளது.

பசுமைக் கட்சியுடன் தொடர்புடைய Böll Foundation இன் கிரில் சவின்  கியேவில் Deutsche Welle இடம் கூறினார்: “அவர் ஒன்றும் தீவிர தேசியவாதக் கருத்தை வெளியிடப்போவதில்லை என்று நினைக்கிறேன். மாறாக, அவர் எப்படியும் நாட்டை ஒன்றாக வைத்திருக்க முயல்வார்.”

ஐரோப்பிய அரசாங்கங்கள் திமோஷெங்கோ அதிக வெடிப்புத் தன்மை கொண்டவர், தங்கள் நலன்களை கியேவில் உறுதி செய்ய இன்னும் பாதுகாப்பான கரங்கள் தேவை என்ற முடிவெடுத்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை. அவர்கள், பில்லியனர் வணிகர் போரோஷெங்கோவை சிறந்த வேட்பாளராக கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொதுப்பணி நீக்கங்கள் என சர்வதேச நாணய நிதியம் கோரும் நடவடிக்கைகளை செயற்படுத்தக்கூடியவர் என்று கண்டிருக்க வேண்டும்.

மைதான் மற்றும் மேற்கத்தைய அதிகாரிகள் உக்ரேனின் அடுத்த ஜனாதிபதியாக பெரும் செல்வம் படைத்த தன்னலக் குழுக்காரரை வளர்க்க முற்படுகின்றனர் என்பது கியேவில் நடந்த எதிர்ப்புக்கள் ஜனநாயகத்திற்காகவும், ஊழலுக்கு எதிராகவும் நடந்த போராட்டத்தை பிரதிபலிக்கிறது என்ற கூற்றுக்களை சிதறடிக்கிறது. பாசிசத் தலைமையில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றத்தின் விளைவாக இருத்தப்பட்ட புதிய அரசாங்கத்தின் நோக்கம் அதிகாரத்திற்கு மேற்கத்தைய சார்புடைய அரசாங்கத்தைக் கொண்டுவருவதாகும்; மேலும் நாட்டை உக்ரேனிய தன்னலக் குழுக்கள் மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தின் ஆணைகளுக்கு தாழ்ந்து நிற்க வைப்பதும், மேற்கத்தைய ஏகாதிபத்தியங்களின் முயற்சியான ரஷ்யாவை வலிமை இழக்கச்செய்து தனிமைப்படுத்துவதற்கு தளம் அமைப்பதுமாகும்.