சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Rajapakse government bans Sri Lankan Tamil groups operating abroad

இராஜபக்ஷ அரசாங்கம் வெளிநாடுகளில் செயற்படும் இலங்கை தமிழ் குழுக்களை தடைசெய்கிறது

By Wasantha Rupasinghe
3 April 2014

Use this version to printSend feedback

இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் செயல்படும் 16 தமிழ் அமைப்புக்களை திடீரென தடை செய்துள்ளது. செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட இந்த அப்பட்டமான ஜனநாயக விரோத முடிவுக்கு, 2009 மே மாதம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தக் குழுக்கள் புதுப்பிக்க முயல்கின்றன என்று காரணம் காட்டப்பட்டுள்ளது.

"பயங்கரவாதத்திற்கு" எதிரான போராட்டம் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த தடை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை அதிகரிக்க மட்டும் பயன்படுத்தப்பட போவதில்லை. மாறாக, மிகவும் பரந்த அளவில் அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளுக்கும் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக பயன்படுத்தப்படும்.
"வெளிநாட்டு பயங்கரவாதிகள்
என முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ள இந்த குழுக்களில், பிரிட்டிஷ் தமிழ் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு மற்றும் உலக தமிழ் இயக்கம், மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் போன்றவையும் அடங்கும். இந்த குழுக்கள் பிரதானமாக மேற்கத்திய நாடுகளில் இருந்து செயல்படுகின்றன.

செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட 1373 தீர்மானத்தின் கீழேயே இந்த கட்டளை விடுக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த தீர்மானம், “பயங்கரவாதம் என முத்திரை குத்துவதன் மூலம் பல அமைப்புக்களை ஒடுக்குவதற்கு உலகளாவிய ரீதியில் அரசாங்கங்களுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கையை செயற்படுத்துவதற்கு விரும்புவதாக, செயற்படுத்துவதற்கு முயற்சிப்பதாக, உதவுவதாக அல்லது அதில் ஈடுபடுவதாக நியாயமான காரணங்களின் அடிப்படையில் நம்பப்படும் நபர்களை, குழுக்களை மற்றும் அமைப்புக்களை அடையாளம் காண்பது சம்பந்தப்பட்ட விடயத்துக்கு தகுதிவாய்ந்த அதிகாரி என்ற வகையில், பாதுகாப்புச் செயலாளரின் சிபாரிசின் அடிப்படையிலேயே இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்-விரோத போரை மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் முன்னெடுத்தவர்களில் ஒருவராவார். இராணுவ நடவடிக்கைகளின் இறுதி மாதங்களில் மட்டும் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த கட்டளையின் படி, இந்த குழுக்கள் மற்றும் இவை தொடர்புடைய நபர்கள் "சார்ந்த அல்லது அவற்றுக்கு சொந்தமான அனைத்து நிதி, சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள்" முடக்கப்பட்டுள்ளது. எவரும் இதற்கு அடிபணிய தவறினால் "கடும் தண்டனை பெறவேண்டியவராவார்."

இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய, "இந்த அமைப்புகளுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்திருப்பது சட்டவிரோதமாகும்," என்று வலியுறுத்தினார். இந்த அறிவிப்பானது பரந்த அரசியல் தடைகளை சுமத்த இந்த கட்டளை பயன்படுத்தப்படும் என்பதை குறிக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை பிரஜைகளும் இந்த தடை செய்யப்பட்ட நிறுவனங்களுடன் எந்தவிதமான தொடர்பும் கொள்வதில் இருந்து தடுக்கப்படுவர்.

அரசாங்கம், இந்த குழுக்கள் இயங்கும் நாடுகளிடம், அவற்றைப் பற்றி விசாரிக்க, அவற்றின் நிதி தோற்றுவாயை அடையாளம் காண மற்றும் அவற்றின் உறுப்பினர்களை பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்காக தேடப்படுபவர்களின் இன்டர்போல் பட்டியலில் சேர்க்குமாறும் கேட்டுக்கொள்ளும்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இராணுவமும் பிற அரசாங்க அதிகாரிகளும் செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்து முன்வைக்கப்பட்ட அமெரிக்க ஆதரவுடைய தீர்மானம், ஜெனீவாவில் கடந்த மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே இராஜபக்ஷ அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கம், தமிழ் புலம்பெயர் குழுக்களின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக மேற்கத்தைய ஆதரவுடைய "வெளிநாட்டு சதி" ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது என்று கூறுவதன் மூலம், தேசிய உணர்வையும் சிங்கள பேரினவாதத்தையும் கிளறிவிட மீண்டும் மீண்டும் முயன்று வருகின்றது.

இந்த குழுக்கள், சர்வதேச யுத்த குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கு அமெரிக்க மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளை இணங்க வைக்கின்றன என அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. இந்த அமைப்புகள் அனைத்தும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் முதலாளித்துவ தட்டுடன் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாட்டுக்கு செல்ல கொழும்பு அரசாங்கத்தை நெருக்குவதற்காக பிரதான பூகோள வல்லரசுகளின் ஆதரவை நாடுவதோடு, அவை அரசியல் ரீதியில் ஏகாதிபத்திய சார்பு  அமைப்புகளாகும்.

அதே பெரும் வல்லரசுகள், புலிகளை தடைசெய்து, அதன் நிதி திரட்டலை முடக்கி, மற்றும் முக்கிய பிரமுகர்களை கைது செய்து சிறையிலடைத்து, அத்துடன் இராணுவ தளவாடங்கள் மற்றும் உளவு தகவல்களை கொழும்புக்கு வழங்குவதன் மூலம், புலிகளை நசுக்க அரசாங்கத்துக்கு உதவி செய்தன.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக காலங்கடந்து அக்கறை காட்டுவதற்கும் அப்பால், இராஜபக்ஷ அரசாங்கத்தை அது பெய்ஜிங் உடன் கொண்டுள்ள நெருக்கமான அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை கைவிட வைப்பதன் பேரில் அதை நெருக்கும் ஒரு வழிமுறையாகவே கடந்த மாதம் இந்த தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்தது. இது, குறிப்பாக ஆசியாவில் சீனாவின் செல்வாக்குக்கு குழிபறிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவிற்கு மீண்டும் திரும்புதல்" என்ற இராஜதந்திர மற்றும் இராணுவ உந்துதலின் ஒரு பாகமாகும். இராஜபக்ஷ வாஷிங்டனின் பாதையில் அடியெடுத்து வைத்தால், அமெரிக்கா உடனடியாக கொழும்புக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிட்டு விடும்.

தமிழ் அமைப்புக்கள் மீதான தடை, குறிப்பாக வட மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது கொடூரமான பாய்ச்சலுடன் கைகோர்த்து முன்செல்கிறது. சென்ற மாத தொடக்கத்தில் இருந்தே, இராணுவம் வீட்டுக்கு வீடு தேடல்களை நடத்தியதோடு, குறிப்பாக இளைஞர்களை விசாரணைக்கு உட்படுத்தியது. வீதி தடைகள் மீண்டும் தலைநீட்டியதோடு மக்களதும் வாகனங்களதும் நடமாட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இராணுவத்தினர் கடற்கரைகளில் ரோந்து சென்று, பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தபட உள்ளதாக மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர். "பயங்கரவாதிகள்" இலங்கையின் வடக்கு கரை மற்றும் இந்தியாவின் தென் கடலோர பகுதிக்கும் இடையே கடல் வழியாக வந்து போகலாம் என்றும் படையினர் கூறியுள்ளனர். நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் போது, ஆழ்கடல் மீன்பிடி தடை செய்யப்பட்டிருந்ததுடன் மீனவர்கள் சில பகுதிகளுக்கு செல்ல முடியாமல் கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டிருந்தன.

ஒரு தமிழ் தினசரியான வீரகேசரி, 40 க்கும் மேற்பட்ட மக்கள் சென்ற மாத தொடக்கத்தில் இருந்து வடக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்த வாரம் தெரிவித்துள்ளது. போர் காலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வழிமுறைக்கு திரும்பும் வகையில், பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அவர்களை காவலில் வைத்துள்ளது. சில கைதிகள் கொடூரமான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இராஜபக்ஷ அரசாங்கம், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆரம்பித்த இராஜதந்திர தாக்குதலை எதிர்கொள்வதற்கு தீவிரமாக முயற்சிக்கின்ற அதேவேளை, அதன் முக்கிய நோக்கம் தமிழர்-விரோத உணர்வுகளை தூண்டிவிடுவதே ஆகும். ஆட்சியில் இருந்துவந்த இலங்கை அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை தடுக்கவும், 1983ல் உள்நாட்டு போர் தொடங்குவதற்கு வழிவகுத்த தமிழர்களுக்கு எதிரான இனவாத அரசியலை பயன்படுத்தி வந்துள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புலிகளை தோற்கடித்த போதிலும், சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள சிக்கன நடவடிக்கைகள் வழியாக தங்கள் வாழ்க்கை நிலைமைகள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களையிட்டு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் குவிந்து வரும் அரசியல் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக, அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் இன்னும் வகுப்புவாதத்தை தூண்டிவிடுவதில் தங்கியிருக்கின்றன.

கடந்த வார இறுதியில் நடந்த மேற்கு மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில், தேர்தல்கள் வரை வெடித்த சமூக போராட்டங்களின் தொடர்ச்சியாக, இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் வாக்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன. சகல இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை கட்டியெழுப்ப, இன வேறுபாடுகளை கடந்து, இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த போராட்டமானது அரசாங்கத்தின் முதலாளித்துவ வேலைத் திட்டத்திற்கு எதிராக, சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.