சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Provincial elections show growing opposition to government

இலங்கை: மாகாண சபை தேர்தல்கள் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வளர்வதை காட்டுகின்றன

By W. A. Sunil
2 April 2014

Use this version to printSend feedback

இலங்கையில் மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்காக கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தல் முடிவுகள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் மீதான வெகுஜன அதிருப்தியையும், அதேபோல், முழு அரசியல் ஸ்தாபனத்திலிருந்தும் மக்கள் அந்நியப்படுவதையும் வெளிப்படுத்தியுள்ளன.

இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐமசுமு) இரு சபைகளிலும் கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொண்ட போதிலும், ஆசனங்கள் மற்றும் வாக்குகளை இழந்துள்ளது. இந்த அதிருப்தியில் இருந்து எதிர் கட்சிகளால் அதிகம் நன்மை பெற முடியவில்லை. வாக்காளர்களில் சுமார் 35 சதவீதமானவர்கள் புறக்கணித்தமை, ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதை காட்டுகின்றது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, இராஜபக்ஷ தனது அரசாங்கத்தின் கொள்கைகள் மீது பெருகிவரும் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக, தேசியவாத உணர்வுகளை தூண்டிவிட முயன்றார். அவரது அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) கடந்த மாதம் அமெரிக்க ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அவர் கண்டித்தார். தீர்மானத்தின் உண்மையான நோக்கம் மனித உரிமைகள் பற்றியதல்ல. அமெரிக்கா, இராஜபக்ஷவை சீனாவிடம் இருந்து தூர விலகச் செய்யவும் பெய்ஜிங்கை எதிர்கொள்வதற்கான தனது மூலோபாய நகர்வுகளுக்கு பின்னால் அடியெடுத்து வைக்கச் செய்யவும் நெருக்குவதற்கு முயற்சிக்கின்றது.

தேர்தல் கூட்டங்களில், தனது சுதந்திர முன்னணிக்குவியக்கத் தக்க வெற்றியைக் கொடுத்து, மேற்கத்தைய சக்திகளுக்குஒரு செய்தியைஅனுப்புமாறு இராஜபக்ஷ உணர்ச்சிகரமாக வாய்சவடால் விடுத்தார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2009ல் நடந்த முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில், மேல் மாகாண சபையில் 68ல் இருந்து 56 வரை குறைந்து 12 ஆசணங்களை இழந்தது. தென் மாகாண சபையில், இது 5 ஆசனங்கள் குறைவாக 33 ஆசனங்களைப் பெற்றது.

ஆளும் கூட்டணியின் வாக்குத் தொகை சுமார் 11 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது மேல் மாகாணத்தில் 2009 தேர்தலில் பெற்ற 1,506,115 (64.73வீதம்) வாக்குகளில் இருந்து 1,363,675 (53.35 வீதம்) வாக்குகளாக குறைந்துள்ளது. தென் மாகாணத்தில் 804,071 (67.88 வீதம்) வாக்குகளில் இருந்து 699,408 (58.06 வீதம்) வாக்குகள் வரை குறைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பு நகரில் ஐந்து தொகுதிகளிலும், வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சியிடம் (யூஎன்பி) தோல்வியடைந்தது. சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழி வகுக்குப்பதற்காக அரசாங்கம் கொழும்பில் இருந்து 70,000 க்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களை வெளியேற்றி வருகின்றது.

இந்த பெறுபேறுகள் ஒருமாபெரும் வெற்றி, "அரசாங்கத்தின் "மக்கள் நல திட்டங்களுக்கு" மக்களிடம் இருந்து கிடைத்த ஒரு "சான்றிதழ்" மற்றும்தாய் நாட்டுக்குஎதிராக செயற்படும் சக்திகளுக்கு ஒருஒரு சிறந்த பதில்என்று இராஜபக்ஷ கூறிக்கொண்டார். சுதந்திர முன்னணியின் பிரச்சார முகாமையாளர், இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்த ஆண்டு தேர்தல் முடிவுகளை 2009 முடிவுகளுடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று அறிவித்து, வாக்குகள் இழப்பை தட்டிக் கழித்தார்.

திங்களன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில், கொழும்பை தளமாகக் கொண்ட டெயிலி மிரர் பத்திரிகை, தேர்தல் முடிவு "அரசாங்கத்துக்கு ஒரு சிவப்பு விளக்குஎன்று தெரிவித்துள்ளது. ஐலண்ட் பத்திரிகை, தேர்தல் முடிவுகள்அரசாங்கத்துக்கான ஆதரவு தளம் சுருங்கி வருவதை சமிக்ஞை செய்யும், அதை விழிப்படையச் செய்வதற்கான ஒரு அழைப்புஎன தெரிவித்துள்ளது.

இராஜபக்ஷவும் அவரது கூட்டணியும் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் தங்கள் மீதான எதிர்ப்பை திசை திருப்பவும் தீவிர சிங்கள பேரினவாத துரும்புச் சீட்டை பயன்படுத்த முயன்றனர். ஆனால், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும் இனவாத அரசியலுக்கு அப்பால் வர்க்கப் பிரச்சினைகள் முன்னணிக்கு வருவதை காணத் தொடங்கியுள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் சமிக்ஞை செய்கின்றன.

இரக்கமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்த பின்னர், அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்தும் ஒடுக்குவதோடு, அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகள் மீது மேலும் மேலும் தாக்குதல் தொடுக்கின்றது. அது அற்ப உணவு மற்றும் எரிபொருள் மானியங்களை வெட்டியுள்ளதுடன் ஜனநாயக உரிமைகளையும் மீறுகின்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளும் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகப் போராட வீதிக்கிறங்கினர்.

எனினும், எதிர்க்கட்சிகளான யூஎன்பீ, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்சியும் (டி.பீ) குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறத் தவறிவிட்டன. அவர்களது பிரச்சாரங்கள் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பில் குவிமையப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் கூட்டணியின் வணிக சார்பு கொள்கைகளை பகிர்ந்து கொண்டதோடு அரசாங்கத்துடன் தந்திரோபாய வேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளன. இந்த கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள், பிரதானமாக அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவே வாக்களித்தார்களே அன்றி, வேறெந்த ஆர்வத்தினாலும் அல்ல.

மேல் மாகாணத்தில், யூஎன்பீ இரு ஆசனங்களை இழந்துள்ளது. அதற்கான ஆதரவு 679,682 (29.58 சதவீதம்) வரை 10,000 வாக்குகளால் குறைந்துள்ளது. யூஎன்பீ தெற்கில் 40,000 ஆளவில் தனது வாக்குகளை அதிகரித்துக்கொண்டுள்ள போதிலும், 14 ஆசனங்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது.

ஜேவிபீ ஒவ்வொரு சபையிலும் மூன்று ஆசனங்களை அதிகரித்துக்கொண்டுள்ளது. அது மேல் மாகாணத்தில் ஆறு ஆசனங்களையும் தென் மாகாணத்தில் ஐந்து ஆசனங்களையும் கொண்டுள்ளது. ஜேவிபீயின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, "மக்கள் ஜேவிபீக்கு ஒரு சிறப்பு வெற்றியை கொடுத்துள்ளனர்" என்றும் "கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் எமது கட்சியின் தேர்தல் சரிவு மாற்றமடைந்து வருகிறது," என்றும் கூறினார்.

உண்மையில், ஜேவிபீ கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் முற்றிலும் இணைக்கப்பட்டிருந்ததோடு தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்தது. இது, 2004ல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் சேர்ந்தும், 2005ல் இராஜபக்ஷவின் வெற்றிக்கு ஒத்துழைத்தும் மதிப்பிழந்து போயிருந்தது. இந்த கட்சி, புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கும் ஆதரவு வழங்கியது. தேர்தல்களுக்கு சற்று முன்னர் தான், ஜே.விபீ " புதிய நோக்கு" (பார்க்க: "இலங்கை: ஜே.வி.பீ பெருவணிக நலன்களை பாதுகாக்க வாக்குறுதியளிக்கின்றது") என்ற தலைப்பில் ஒரு பெருவணிக வேலைத் திட்டத்தை வெளியிட்டது.

ஜனநாயக கட்சி மேல் மற்றும் தென் மாகாணங்களில் முறையே 9 மற்றும் 3 இடங்களை வென்றது. ஜெனரல் சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு யூஎன்பீ, ஜேவிபீ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ஆதரவிலான பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். அவர் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுப்பதற்கு பொறுப்பாக இருந்தார். தேர்தல் முடிந்த பின்னர், பொன்சேகா அரசாங்கத்திற்கு எதிராக மற்ற எதிர் கட்சிகளுடன் ஒரு பொது கூட்டணியில் சேர தனது விருப்பத்தை  அறிவித்தார்.

ஆளும் கூட்டணியில் ஒரு பங்காளியான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC ), அரசாங்கத்தில் இருந்து விலகி இருக்கும் முயற்சியில் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. பேரினவாத பெளத்த குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க ஆதரவிலான தாக்குதல்களால், அநேக முஸ்லிம்கள் ஆளும் கூட்டணிக்கு விரோதமாக உள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 2009ல் போல் இரண்டு ஆசனங்களை மட்டுமே வென்றது.

கொழும்பில் தமிழர்கள் மத்தியில் தளங்கொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி (ஜமமு), கடந்த தேர்தலில் யூஎன்பீ பட்டியலில் போட்டியிட்டது. இது, யூஎன்பீ மற்றும் ஆளும் கூட்டணி மீது வெறுப்படைந்துள்ள தமிழர்களின் வாக்குகளை கறந்துகொள்ளும் முயற்சியாக தனித்தனியாக இந்த நேரத்தில் போட்டியிட்டது. ஜனநாயக மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்துக் கொண்ட போலி இடது குழுக்களான நவ சம சமாஜ கட்சி (நசசக) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் (USP), வாக்குகளை இழந்தன. 2009ல் இடதுசாரி முன்னணியில் போட்டியிட்ட நவசமசமாஜ கட்சியின் வாக்குகள், மேல் மாகாணத்தில் 3.997ல் இருந்து 1,290 வரை சரிந்துள்ள அதேவேளை, தென் மாகாணத்தில் 5 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. ஐக்கிய சோசலிச கட்சி வாக்குகள் மேல் மாகாணத்தில் 1,688ல் இருந்து 739 ஆக குறைந்துள்ளதுடன் தென் மாகாணத்தில் 805ல் இருந்து 604 வரை சரிந்தன. கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக பெருவணிக மற்றும் மேற்கத்திய சார்பு யூஎன்பீ உடன் இணைந்து நின்ற இந்த கட்சிகள், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் எதிர்க்கின்றன.

இந்த தேர்தல் முடிவுகள், மீண்டும் ஒரு புரட்சிகர கட்சியின் அவசியத்தையும் அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றின் போலி இடது அரசியல் கைக்கூலிகளுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் முன்கொணர்ந்துள்ளது. இந்த வழியில் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் கிராமப்புற மக்களையும் அணிதிரட்டிக்கொண்டு இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து போராட முடியும் .

ஒரு அனைத்துலகவாத மற்றும் சோசலிச முன்னோக்கை அபிவிருத்தி செய்த ஒரே கட்சியான சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில், அதன் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் தலைமையில் 43 வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு- போராட வேண்டியதன் அவசியத்தை நாம் விளக்கினோம்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், இந்த முன்னோக்கை கலந்துரையாடுவதற்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் மத்தியில் தேர்தல் அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தன. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் சம்பந்தமாக கொழும்பு ஊடகம் முழு இருட்டடிப்புச் செய்தன. சோசலிச சமத்துவக் கட்சியின் வாக்குகள் 181ல் இருந்து 220 ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு சிறிய எண்ணிக்கையிலானதாக இருந்தாலும் வர்க்க நனவான வாக்களிப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றது.

இராஜபக்ஷ அரசாங்கம், பெருகிய முறையில் உலக பொருளாதார மந்தநிலைக்குள்ளும் அமெரிக்க மற்றும் சீனா இடையேயான மோதல் நீர்ச்சுழிக்குள்ளும் இழுபட்டு வரும் நிலையில், அது உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மட்டுமே தீவிரப்படுத்தும். எதிரில் சமூக வெடிப்புகள் தோன்றவுள்ளன. நாம் எமது முன்நோக்கை படிக்குமாறும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக எங்கள் கட்சியை கட்டியெழுப்பு அதில் இணைந்துகொள்ளுமாறும் வர்க்க உணர்வுடைய அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.