சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Growing danger of Chinese credit collapse

சீனக் கடன் சரிவினால் பெருகும் ஆபத்து

By Nick Beams 
4 April 2014

Use this version to printSend feedback

ஆரம்பத்தில் சீனாவின் நிதிய நிலைமை குறித்த எச்சரிக்கைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அவற்றின் தாக்கங்கள் பற்றிய கவலை அமைதியாகவே வெளிப்படுத்தப்பட்டது, ஆனால் சமீபத்திய வாரங்களில் அவை அதிரும் முரசொலி போல் மாறிவிட்டன.

ஒரு சிக்கல் வாய்ந்த இடைத்தொடர்புள்ள காரணிகள் இதில் உள்ளடங்கியுள்ளது. அவையாவன, சீனப் பொருளாதாரம் குறைந்தவேகத்தில் வளரும் தன்மையும், குறிப்பாக எஃகு தொழிற்துறை போன்ற அடிப்படை உற்பத்தி தொழிற்துறைக்கு அதனால் உருவாகும் பிரச்சினை; சொத்துத்துறை மற்றும் அபிவிருத்தி ஏற்றத்தில் ஒருசரிவு ஏற்படும் நிலையும், சர்வதேச வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களுடன் தொடர்புடைய நிதிய உடன்பாடுகள் சீனாவின் நாணயத்தின் மதிப்பு சரிவதால் விரைவில் பின்வாங்கப்படும் சாத்தியம்.

2008 உலக நிதிய நெருக்கடி, ஒரு சில மாதங்களில் மட்டும் 23 மில்லியனுக்கும மேலான வேலைகள் இழக்கப்பட்டுவிட்ட சீனப் பொருளாதாரத்தில் அதன் பாதிப்பைத் தொடர்ந்து, அரசாங்கம் பாரிய ஊக்கத் திட்டத்தை ஆரம்பித்தது. அதில் உலகிலேயே மிகப் பெரிய 500 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட ஒரு உதவிப்பொதியும் அடங்கியது.

இத்திட்டத்தின் மிக முக்கியமான கூறுபாடு அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கிகள் வணிகர்களுக்கு, நிதிய நிறுவனங்களுக்கு மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரங்களுக்கு கடன்வசதிகளை வழங்கவேண்டும். இது தொழில்துறை திறனிலும் மற்றும் சொத்து அபிவிருத்தி மற்றும் உள்கட்டுமானத் திட்டங்களில் நிதிய முதலீட்டிற்கு வழி செய்யும் எனப்பட்டது.

உலகப் பொருளாதார வரலாற்றில் முன்னோடியில்லாதளவிலான கடன் விரிவாக்கத்தை சீனா கண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15 டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முழு அமெரிக்க வங்கி முறையின் அளவிற்கு சமமாகும்.

கடன் அதிகரிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தைப் போல் இரு மடங்காக மாறியது. 2013 கடைசிக் காலாண்டில் கடன் அல்லது சமூக நிதியளித்தல் என்று சீன அதிகாரிகள் குறிப்பிடப்படுவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200% அடைந்தது இது உலக நிதிய நெருக்கடி வெடிப்பதற்கு முன் இருந்த 125% இல் இருந்து உயர்ந்துவிட்டது.

இப்பொழுது சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேககுறைவால் முந்தைய வளர்ச்சி விகிதங்களான 10% உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உத்தியோகபூர்வ வளர்ச்சி விகித இலக்கு கிட்டத்தட்ட 7.5%’ ஆக உள்ளது. இது உற்பத்தித் தொழில்துறையின் குறிப்பாக எஃகு துறை உட்பட அனைத்துப்பிரிவுகளையும் பாதிக்கிறது.

இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களில் சீனாவின் இரும்பு மற்றும் எஃகு சங்கம் 490 மில்லியன் டாலர்கள் மொத்த நஷ்டத்தை அடைந்தது இதன் விளைவாக முதல் காலாண்டு புதிய நூற்றாண்டில் மிக மோசமாகச் செயல்பட்ட காலாண்டாக இருக்கலாம், என்று அமைப்பின் துணை இயக்குனர் லியு ஜேன்ஜியாங் தெரிவிக்கிறார்.

கடந்த ஆண்டு எஃகுத் தொழிற்துறை மொத்தத்தில் இலாபத்தோடு நீடிக்க முடிந்தது. விற்பனையில் வெறும் 0.48%ஐ மட்டும் கொண்டு ஓரளவு இலாபமடைந்திருந்தது. இத்தொழிற்துறை அதிகரித்தளவில் கடனை நம்பியிருந்தது. ஏழு பெரிய ஆலைகள் 226 பில்லியன் டாலர்கள் கடன்களை கொண்டிருந்தன. இத்தொகை உலகத்தின் பெரும் சுரங்க நிறுவனமான அவுஸ்திரேலியாவின் BHP Billiton உடைய சந்தை பெறுமதியைவிட இது அதிகமான தொகையாகும்.

Macquarie Commodities Research மார்ச் நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட மதிப்பீடு ஒன்றின்படி, கடந்த ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில் நடுத்தர, சிறிய ஆலைகள் விற்பனைக்கான கோரல்களில் சுருக்கம் ஏற்பட்டதுடன் இலாபங்களும் வரலாற்றுரீதியான மட்டத்திற்கு குறைவாகப்போயின.

மார்ச் மாதம் பொதுவாக சீனாவின் புத்தாண்டு விடுமுறைகளை தொடர்ந்து விற்பனை கோரல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பெருகிய சோர்வுதான் உள்ளது.

பைனான்சியல் டைம்ஸுக்கு  கருத்து தெரிவித்த Macquarie Capital (Europe) அமைப்பின் பகுப்பாய்வாளர் கொலின் ஹாமில்டன் எஃகுத் தொழிலில் கடன்களை திருப்பிச்செலுத்தமுடியாது இருப்பது உறுதியாக ஏற்படும். ஏனெனில் சில துறைகளில் உபரிஉற்பத்தி இருப்பதால் சில நிறுவனங்கள் மூழ்குவதை சீன அரசாங்கம் காணத்தயராக இருப்பதாக அடையாளம் காட்டியுள்ளது.

இதையும் விட பெரிய கவலை கடந்த தசாப்தத்தில் சொத்துச் சந்தையில் பத்து மடங்கு வளர்ச்சிக்குப்பின் சீனாவின் சொத்துத்துறை குமிழியின் சரிவு என்னும் ஆபத்து ஆகும்.

சொத்துக்கள் குமிழி இன்னும் பெய்ஜிங், ஷாங்காயில் தொடர்கையில், சிறுநகரங்களில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. அவைதான் கடந்த ஆண்டு கட்டப்பட்டுக்கொண்டிருந்த அனைத்துச் சொத்துக்களிலும் மூன்றில் இரு பகுதிகளைக் கொண்டிருந்தன.

பெரிய அடுக்கு வீடுகள் கட்டிடங்கள் இப்பொழுது காலியாக உள்ளன அல்லது அரைகுறையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. ஜப்பானிய நிதியப் பெருநிறுவனம் நோமுராவின் தலைமைப் பொருளாதார வல்லுனரின் கருத்துப்படி சீனப் பொருளாதாரத்தில் வீட்டுச் சந்தை இந்த ஆண்டு உயர்மட்ட ஆபத்தாகிவிட்டது.

ஒரு சொத்துச் சந்தையின் சரிவு உடனடியாக சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடனுக்கு முக்கிய மூலாதாரமாக இருக்கின்றனர். 2010ல் இருந்து அவர்கள் சீன சொத்து அபிவிருத்தித்துறையில் இருப்பவர்களுக்கு குறைந்தது 48 பில்லியன் டாலர்கள் கடனை அமெரிக்க டாலர் பத்திரங்களில் கொடுத்துள்ளனர். Credit Suisse கருத்துப்படி, கடல்கடந்த கடன் கணக்குகள் ஆறு முக்கிய கட்டிட நிறுவனங்களின் மொத்தக் கடன்களில் பாதிக்கும் மேலாக உள்ளன.

பெரிய கட்டிட நிறுவனங்களின் பிரச்சினைகள், சொத்துக்களின் விலைகள் சரிவால் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது யுவானின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இவை அதிகமாகிவிட்டன. நாணயத்தின் மதிப்பு ஒவ்வொரு முறை குறைகையிலும், டாலர் தரநிர்ணயிக்கப்பட்ட கடன்களின் சுமை அதிகரிக்கிறது.

நிதிய உறுதியற்ற தன்மைக்கு மூன்றாம் பெரிய காரணம் உள்ளூர் அரசாங்கங்களின் செயற்பாடுகள் ஆகும். 2008 நெருக்கடியை தொடர்ந்த மத்திய அரசின் ஊக்க நடவடிக்கைகளின் விளைவாக அவை பெரிய அளவில் சொத்து, உள்கட்டுமான வளர்ச்சியை அதிகரித்திருந்தன.

உள்ளூர் அரசாங்கங்கள் மொத்த அரசாங்க செலவீனங்களில் 80%க்கு பொறுப்பாக இருக்கையில், அவை 40%தான் வரிமூலம் வருவாயைப் பெறுகின்றன. பிற நிதிய மூலங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உள்ளூர் அரசாங்கங்கள் சட்டப்படி கடன் வாங்க அனுமதி பெற்றிருக்கவில்லை. எனவே அவர்கள் உள்ளூர் அரசாங்க நிதிய அமைப்புகளான LGFVs ஐ நிறுவியுள்ளன. அவை கடன் வாங்கலாம்.

கிட்டத்தட்ட 10,000 LGFVs இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவை முக்கிய வங்கிகள் மற்றும் நிழல் வங்கிகளுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டுள்ளன. அவை பணத்தை நிதியஇருப்புகளில் இருந்து எடுக்காது குறுகிய கால பத்திரங்களை வெளியிடுவதின் மூலமும் பெற்றுக்கொள்கின்றன.

சீன மத்திய அரசாங்கம் கடந்த ஓராண்டு காலமாக கடன் அதிகரிப்பை கட்டுப்படுத்த முயல்கிறது. நீண்டகாலத்திற்கு இப்போக்கு நடைமுறைக்கு ஒவ்வாது என அது கருதுகிறது. ஆனால் உள்ளூராட்சி சபைகள் பிராந்திய சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. அவர்கள் சொத்து, உள்கட்டுமான அபிவிருத்தியில் இருந்து கணிசமாக சொத்தைச் சேர்த்துள்ளனர்.

இதன் அர்த்தம், மத்திய அதிகாரிகளின் கடனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் எதிர்மாறான விளைவுகளையே தோற்றுவிக்கும். உத்தியோகபூர்வ கட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் உள்ளூர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தமது சொத்துக்களை பாதுகாக்க முற்பட்டு இந்த நிழல் வங்கி அமைப்புமுறையை அதிகரித்தளவில் நாடுவதால் நிதிய ஆபத்தை அதிகரிக்கின்றனர். நிதியப் பகுப்பாய்வாளர் சத்தியஜித் டாஸ், அவர் செவ்வாயன்று Independent பத்திரிகையில் எழுதியபடி, பல LGFVs போதுமான பணப்பாய்வை கடன்தேவைகளுக்கு கொண்டிருக்கவில்லை, ஏனெனில் அவை நில விற்பனை மற்றும் உயர்ந்த சொத்து விலையைத்தான் கடன்களை திருப்பிக்கொடுக்க நம்பியுள்ளன. கிட்டத்தட்ட 50%க்கும் மேலான LGFV க்கள் கடன்தரங்களைச் சமாளிக்க முடியவில்லை.

சீனாவின் பெரும் நாணய இருப்புகள் மற்றும் பொருளாதாரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்பவற்றால், சில வர்ணனையாளர்கள் பெரிய நெருக்கடி வரும் என்பதை உதறித்தள்ளியுள்ளனர். ஆனால், உலகில் பெரிய வங்கிகள், அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவான வட்டிவிகிதங்கள் உயர்த்தப்படும் முடிவின் பாதிப்பை சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு பெடரல் முதலில் தன் விருப்பமான அதன் சொத்துக்களை வாங்கும் திட்டத்தைக் குறைத்தல் என்பதை அடையாளம் காட்டியுவுடன், எழுச்சியடையும் சந்தைகள் ஒரு பெரும் மூலதன வெளிப்பாய்வை கண்டன. இந்த சூடான நிதியில் பெரும்பகுதி ஏனைய எழுச்சியடையும் சந்தைகளில் நாணய மதிப்புக்கள் சரிவது போல் இல்லாமல், யுவான் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் அடையும் என்ற நம்பிக்கையில் சீனாவிற்கு சென்றது.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை நாணயத்தின் மதிப்பு 2.5% ஐவிட அதிகம் குறைந்துவிட்டது. இது ஓரளவு சீன நிதிய அதிகாரிகள் ஊகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியால் வந்துள்ளது. இதனால் carry trade எனப்படும் டாலர்களை கடன் எடுத்து சீன சொத்துக்களை வாங்கிய நிறுவனங்கள் 5.5 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை அடைந்துள்ளன. இது ஒப்புமையில் குறைவான தொகை என்றாலும், எதிர்வரவிருப்பவற்றின் அடையாளம் ஆகும்.

இப்பொழுது கவலைகள் பெடரலின் குறைப்புடைய விளைவின் இரண்டாம் கட்டம் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதாகும். சமீபத்திய சிட்டிக்ரூப் அறிக்கை குறிக்கிறது: ஒரு ஆபத்தான நிலை தெரிகிறது. இதில் உயரும் அமெரிக்க குறுகிய கால வட்டிவிகிதங்களும் அதிக பலமற்ற யுவானும் சீனாவில் இருந்து பெருமளவு மூலதன வெளிப்பாய்வுக்கு வகை செய்யக்கூடும் என்பதே அது.

நோமுரா கடந்த வாரம் ஒரு குறிப்பை வெளியிட்டு carry trade பின்பக்கமாக போகின்றது, அச்சூழலில் சீன முதலீட்டாளர்கள், வணிக வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என்று தொடர்புடையவர்கள் அனைவரும் டாலர் கடன்வாங்குவதில் ஈடுபடுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

நோமுரா சீனாவின் பகுப்பாய்வாளர் வெண்டி லியு, முதலீட்டாளர்கள் ஒரு புதிய ஊக்கமுதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு திட்டத்தின் சாத்தியம் பற்றிய அதிக நம்பிக்கையை கொண்டுள்ளனர் மற்றும் நாணயத்தின் ஆபத்துக்களை புறக்கணிக்கின்றனர் என்று கூறினார். யுவானின் வீழ்ச்சி சீனாவின் கடன் குமிழி தவிர்க்கமுடியாமல் உள்வெடிப்பைக் காணும் என்பதின் முன்கூட்டிய எச்சரிக்கையாக இருக்கலாம்.

Credit Suisse கருத்துப்படி, ஊகவாணிப carry trade இன் அளவு 200 பில்லியன் டாலர்களை அடைந்துவிட்டது. இதில் ஹாங்காங்கில் சிக்கல் வாய்ந்த உத்திகள் மற்றும் பல அடையாளங்கள் இவ்வமைப்பு முறையில் அழுத்தத்தை சுட்டிக் காட்டுவதுடன், ஒரு தவறான தப்படி ஆபத்தை அதிகரிக்கின்றன என்றது.

சீனக்கடன் நெருக்கடி பெருகுவது 2008 நெருக்கடிக்கு வழிவகுத்த எந்த முரண்பாடுகளும் தீர்க்கப்படவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவை வெறுமே புதிய வடிவங்களை எடுக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பெரும் சீன கடன் விரிவாக்கம் அமெரிக்க நிதிய முறையின் கிட்டத்தட்ட கரைப்பு நெருக்கடியால் தூண்டப்பட்டதாகும். அதைத்தொடர்ந்த பொருளாதார ஊக்க முதலீட்டுத்திட்டம் உலகப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதல் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

எழுச்சி பெறும் சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் உலக வளர்ச்சியின் முக்கால் பகுதி பொறுப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி சீனாவில் இருந்து தோன்றியது. ஆனால் இந்த சீன வளர்ச்சி ஒரு கடன் குமிழின் விளைவாகும். அது இப்பொழுது உலக நிதிய முறை முழுவதிற்குமான பேரழிவான விளைவுகளின் சாத்தியத்தைகொண்ட வெடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.