சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

France’s new government: A political turning point for Europe

பிரான்சின் புதிய அரசாங்கம்: ஐரோப்பாவில் ஓர் அரசியல் திருப்புமுனை

Peter Schwarz
5 April 2014

Use this version to printSend feedback

புதிய பிரெஞ்சு பிரதம மந்திரியாக மானுவேல் வால்ஸ் நியமிக்கப்பட்டிருப்பது, ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசியல் மேற்தட்டுக்கள் கூர்மையாக வலதிற்கு திரும்பி இருப்பதன் பாகமாகும். ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், தொழிலாள வர்க்கத்தின் மீதான அவரது யுத்தத்தை தீவிரப்படுத்தியும், நவ-பாசிச தேசிய முன்னணியைப் (FN) பலப்படுத்தக்கூடிய பேரினவாத முறையீடுகளை செய்தும், நகராட்சி தேர்தல்களில் ஏற்பட்ட அவரது சோசலிஸ்ட் கட்சியின் (PS) தோல்விக்கு எதிர்வினை காட்டியுள்ளார்.

அதீத சமூக வெட்டுகள் மற்றும் பிரான்சின் வரலாறில் தொழிலாளர் சந்தைக்கு விரோதமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை வால்ஸ் இன் நியமன திட்டம் உட்கொண்டுள்ளது. தஞ்சம் கோரியவர்கள், ரோமாக்கள் மீதான இரக்கமற்ற தாக்குதல்கள் மற்றும் சட்ட-ஒழுங்கு கொள்கைகள் ஆகியவற்றோடு சேர்ந்த தடையற்ற சந்தை நிகழ்முறையை ஊக்குவித்ததன் மூலமாக, வால்ஸ் உள்துறை மந்திரியாக இருந்தபோது இந்த வேலையை நடத்துவதற்கான அவரது நன்சான்றுகளை ஸ்தாபித்திருந்தார். அவர் "பிரெஞ்சு பிளேயர்," (French Blair) பிரெஞ்சு ஷ்ரோடர்" (French Schröder) மற்றும் "இடதுசாரி சார்கோசி" (left-wing Sarkozy) என்றெல்லாம் வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

அவருக்கு முன்னர் அப்பதவியில் இருந்த ஜோன்-மார்க் எய்ரோவால் (Jean-Marc Ayrault) அறிவிக்கப்பட்ட, 2017க்குள் 50 பில்லியன் யூரோ வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது வெறும் ஆரம்பமாகும். நிதியியல் சந்தைகளும், அவற்றின் நிர்வாக அங்கங்களான, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கமிஷனும், மேலதிகமாக ஆழ்ந்த வெட்டுக்களை கோரி வருகின்றன.

ஜேர்மனியின் 45 சதவீதத்தோடு ஒப்பிடுகையில், பொதுச் செலவினங்கள் தற்போது பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56 சதவீதமாக உள்ளன. ஜேர்மன் அளவை எட்ட வேண்டுமானால், பிரான்ஸ் அதன் பொதுச் செலவினங்களை ஆண்டுக்கு 200 பில்லியன் யூரோ அளவிற்கு வெட்ட வேண்டி இருக்கும். அதே சமயத்தில், பெரு வணிகங்கள் கூலிகளில் தீவிர வெட்டுக்களை கோரி வருவதோடு, பிரான்சின் 60 பில்லியன் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வேலையிட நிலைமைகளின் மீது அதிகளவிலான தாக்குதல்களை திணிக்க முறையிட்டு வருகின்றன.

ஒரு PS அரசாங்கத்தால் இதுபோன்றவொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதென்பது, நகராட்சி தேர்தல்களில் கணிசமான அளவிற்கு வெற்றி பெற்ற FNக்கு ஆதாயமளிக்கும் காரியமாகும். வால்ஸின் கொள்கைகளால் FN தலைவர் மரீன் லு பென் இரண்டு விதங்களில் இலாபமடைவார்: ஒன்று வால்ஸின் சமூக தாக்குதல்கள் அந்த பெண்மணியை சாமானிய மக்களின் பிரதிநிதியாக காட்டிக்கொள்ள அனுமதிக்கும், மற்றது புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வால்ஸின் வசைமாரிகளால் லு பென்னின் சொந்த இனவாதம் ஒன்றும் குறிப்பிடத்தக்க பெரிய விடயமில்லை என்றாக்கும்.

ஹாலண்ட், PS மற்றும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தை பொறுத்த வரையில், FNஐ பலப்படுத்துவதென்பது ஒன்றும் வேண்டாததொரு பக்க விளைவல்ல, மாறாக அது நனவுபூர்வமாக பின்தொடரப்பட்ட ஒரு அரசியல் இலக்காகும். தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்கள் நடத்த வால்ஸ் செய்து வரும் தயாரிப்புகளை, ஜனநாயக முறைகளின் அடித்தளத்தில் நடத்த முடியாது.

ஆளும் வர்க்கம் தன்னை, வர்க்க போராட்டத்தை ஒடுக்க பாசிசவாதிகளுக்கு அழைப்புவிடும் கருத்துக்களுடன் அதிகளவில் இணக்கப்படுத்திக்கொண்டு வருகிறது. பழமைவாத கோலிச UMPக்குள் (Union for a Popular Movement), FN உடன் ஒத்துழைக்க கோரும் ஆதரவாளர்கள் செல்வாக்கு பெற்று வருகிறார்கள், மேலும் PS இன் மட்டத்திற்குள்ளும் மற்றும் அதன் போலி-இடது ஆதரவாளர்களின் மத்தியிலும் இவ்வாறு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு குறைவில்லை.

இந்த நிலைமை பிரான்சில் மட்டுமல்ல. கியேவின் சமீபத்திய சம்பவங்கள், இந்த விவகாரத்தின் ஒரு மாபெரும்-மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. கண்மூடித்தனமான சிக்கன முறைமைகளைத் திணிக்கும் மற்றும் ரஷ்யாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் ஒரு புறச்சாவடியாக உக்ரேனை மாற்றும் மேற்கத்திய சார்பிலான அரசாங்கத்தை நிறுவவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை பதவியிலிருந்து இறக்கவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள அரசாங்க தலைவர்கள், அதி-வலது கட்சியான ஸ்வோபோடா மற்றும் பாசிச போராளிகளுடன் மிக நெருக்கமாக வேலை செய்துள்ளனர்.

PSஐ சுற்றியுள்ள போலி-இடது குழுக்கள், வால்ஸ் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டதை குறை கூறி வருகின்றன. பிரான்சின் முன்னாள் உயர்மட்ட போலிஸ் அதிகாரியால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் சமூக போராட்டங்களுக்கு விரோதமான ஓர் அரசாங்கமாகும், என்று புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) புலம்பியது. நாடு முகங்கொடுத்திருக்கும் நிஜமான சூழலையோ அல்லது எதிர்பார்ப்புகள் மற்றும் அவலங்கள் எந்தளவிற்கு உள்ளன என்பதையோ கருத்தில் கொள்ளாததற்காக" பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) குற்றஞ்சாட்டியது. புதிய அரசாங்கம் "தெளிவாக சிக்கன கொள்கையை ஆதரிப்பதோடு, அது வினியோக-தரப்பில் சாய்ந்துள்ளது, மேலும் பிரான்சின் நலன்புரி அரசில் என்ன மிஞ்சியிருக்கிறதோ அவற்றை அழிக்க முனைகிறது, என்று அது குறை கூறியது.

இந்த முனகல்கள், அவற்றின் சொந்த சுவடுகளை மூடி மறைக்க மட்டுமே சேவை செய்கின்றன. இந்த கட்சிகளும், அவற்றின் முன்னோடி அமைப்புகளும் பல தசாப்தங்களாக PSக்கு ஒத்துழைத்தும், அது தேர்ந்தெடுக்கப்பட உதவியும், அதை ஆதரித்துள்ளனஇப்போதும் அவ்விதத்தில்தான் தொடர்ந்து செய்து வருகின்றன. அவை தற்போது, பாசிசத்திற்கு கதவைத் திறந்துவிட்டு வரும் PSக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு மாற்றீடைக் கட்டமைப்பதை தடுப்பதில் அவற்றின் சக்தியை ஒருமுனைப்படுத்தி உள்ளன.

PSஇன் வரலாறை அறிந்தவர்கள் எவரும், ஹாலாண்ட் அரசாங்கத்தின் தலைமையில் வால்ஸை நியமிப்பது குறித்து, ஆச்சரியமடைய மாட்டார்கள். PS எப்போதுமே பிரெஞ்சு நிதி மூலதனத்தின் நலன்களுக்கு பொறுப்பேற்று இருந்துள்ளது. சில வேளைகளில் அது இடது வனப்புரைகளைப் பயன்படுத்தியதென்றால், அது பிரெஞ்சு தொழிலாளர்களை இன்னும் செயலூக்கத்தோடு ஏமாற்றவும், அவர்களின் போர்குணமிக்க பாரம்பரியங்களுக்கு குழி பறிக்கவும் மற்றும் அவர்களை கட்டுப்படுத்தி வைக்கவும் மட்டும் தான் அவ்வாறு செய்தது.

முதலாளித்துவ ஆட்சியை அதன் அஸ்திவாரங்களிலேயே ஆட்டங்காணச் செய்த 1968 மே-ஜூன் மாத பொது வேலைநிறுத்தத்திற்கு விடையிறுப்பாக 1969இல் PS ஸ்தாபிக்கப்பட்டது. 1971இல் அதன் தலைமைக்கு வந்த பிரான்சுவா மித்திரோன், ஒரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ அரசியல்வாதியாவார். அவர் இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜி ஆதரவிலான விச்சி ஆட்சியில் (Vichy regime) சேவை புரிந்திருந்ததோடு, சுதந்திரத்திற்கான அல்ஜீரிய யுத்தத்தின் போது பிரெஞ்சுக் காலனி மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர போராடிய அல்ஜீரியர்களுக்கு எதிராக மரணதண்டனை உத்தரவுகளில் கையெழுத்திட்டு, உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரியாகவும் இழிவார்ந்த பாத்திரம் வகித்திருந்தார். மித்திரோன் ஜனாதிபதியாக இருப்பதன் மீது பிரமைகளை பேணி வளர்க்க, PCF தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்த அதன் செல்வாக்கை பயன்படுத்தி, PSஇன் தலைவராக இருந்த அவரை ஆதரித்தது.

1981இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மித்திரோன் அவரது உண்மையான சுயரூபத்தைக் காட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆனது. நிதியியல் சந்தைகளின் அழுத்தத்தின் கீழ், அவர் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு திரும்பினார். அவரது இரண்டாவது பதவிக் கால இறுதியில், PSஇன் செல்வாக்கை சிதைந்திருந்ததோடு, 1995இல் கோலிச ஜாக் சிராக் ஜனாதிபதி பதவியை வென்றார். இருந்த போதினும், அந்த குளிர்காலத்தில் வாரக் கணக்கிலான வேலைநிறுத்தங்களோடு நாட்டை ஸ்தம்பிக்க செய்த தொழிலாள வர்க்கதோடு, சிராக் கணக்கைத் தீர்த்து கொள்ளவில்லை.

நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர, சிராக் முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார், அது PSஐ மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஐந்து ஆண்டுகளில், சிராக்கும் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி லியோனெல் ஜோஸ்பனும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்த ஒன்று சேர்ந்து வேலை செய்தனர். 2002 ஜனாதிபதி தேர்தலில், சிராக் மற்றும் FN தலைவர் ஜோன் மரி லு பென்னுக்கு அடுத்து மூன்றாவது இடத்திற்கு வருமளவிற்கு ஜோஸ்பன் மதிப்பிழந்திருந்தார்.

பிரான்சில் "தீவிர இடது" என்று தவறாக வர்ணிக்கப்பபடும் குட்டி-முதலாளித்துவ குழுக்களின் ஆதரவில்லாமல் சோசலிஸ்ட் கட்சியால் இந்த பாத்திரம் வகித்திருக்க முடியாது. 1970களில், அவை சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் கூட்டணியை ஆதரித்தன. மித்திரோன் ஜனாதிபதியாக இருந்தபோது, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமாறும், ஒன்றுக்கும் பிரயோசனமின்றி போகுமாறு செய்வதையும் உறுதிப்படுத்தி வைத்தன.

2002 ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில், பத்து சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று (பொய்யாக) கூறிக் கொண்ட, Lutte Ouvrièreஇன் (தொழிலாளர் போராட்டம், LO) Arlette Laguiller, Ligue Communiste Révolutionnaireஇன் (புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், LCR) Olivier Besancenot மற்றும் Parti des Travailleursஇன் (தொழிலாளர் கட்சி, PT) Daniel Gluckstein ஆகிய வேட்பாளர்களுக்கு சென்றது. அவர்கள் அனைவரும் அவர்களுக்கு கிடைத்த பெரும் எண்ணிக்கையிலான எதிர்பாரா வாக்குகளால் மற்றும் PSஇன் வாக்குகள் பொறிந்து போனதைக் கண்டு மலைப்போடு எதிர்வினை காட்டினார்கள்.

வலதுசாரி கோலிச சிராக்கிற்கும், நவ-பாசிச லு பென்னுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்குமாறு தொழிலாள வர்க்கத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்தனர். ICFI விவரித்ததைப் போல, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன தலையீடைச் செய்யவும், இரண்டாம் சுற்றில் எந்த முதலாளித்துவ வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவரால் நடத்தப்பட இருந்த வலதுசாரி கொள்கைகளை எதிர்க்க தொழிலாள வர்க்கம் அதன் சக்திகளை தயாரிப்பு செய்ய அந்த கொள்கை உதவி இருக்கும். ஆனால் அதற்கு மாறாக, போலி-இடது அமைப்புகள் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ சிராக்கிற்கு ஆதரவளித்தன, அவரை அவை குடியரசு மற்றும் ஜனநாயக மதிப்புகளை பாதுகாக்கும் ஒரு பாதுகாவலராகவும், லு பென் மற்றும் FNஇன் வளர்ச்சிக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாகவும் சித்தரித்தன.

அப்போதிருந்து, இந்தக் குழுக்கள் வலது பக்கத்திற்கு மேலும் நகர்ந்துள்ளன. LCR, தன்னைத்தானே புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சிக்குள் கரைத்துக் கொண்டு, ட்ரொட்ஸ்கிசத்தோடு அதற்கிருந்த முந்தைய அதன் உறவுகளை பகிரங்கமாக துறந்தது. அது லிபியாவில் பிரெஞ்சு நவ-காலனித்துவ யுத்தத்தை ஆதரித்துள்ளதோடு, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான பிரெஞ்சு ஏகாதிபத்திய பிரச்சாரத்தையும் மற்றும் உக்ரேனில் மேற்கத்திய ஆதரவில் பாசிசவாத தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பையும் ஆதரித்தது. அது வால்ஸ் உடன் ஒத்துழைக்கும் என்பதோடு லு பென் உடன் ஒத்துழைக்கவும் தயாராக இருக்கும்.

LO மற்றும் PT இரண்டும் தொழிற்சங்கங்களுள் ஆழமாக உள்வாங்கப்பட்டுள்ளன, அவை வேலையிட நிலைமைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல்களில், அரசாங்கத்தின் மிக முக்கிய தூணாக சேவை செய்கின்றன.

பாரீசில் ஏப்ரல் 12இல் நடக்க உள்ள "சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தேசிய பேரணிக்கு" அழைப்பு விடுப்பதன் மூலம், ஒட்டுமொத்த பிரெஞ்சு போலி-இடதும் வால்ஸின் நியமனத்திற்கு எதிர்வினை காட்டியுள்ளன. இதுவும் முந்தைய பேரணிகளைப் போலவே பலனற்ற ஒன்றாக நிரூபணமாகும். கடந்த படிப்பினைகளை மறைப்பதும், வால்ஸ் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக அரசியல்ரீதியில் சுயாதீனப்பட்ட ஒரு தொழிலாள வர்க்க இயக்கம் அபிவிருத்தி ஆவதைத் தடுப்பதுமே இந்த சமூக-அரசியல் அடுக்கின் நோக்கமாகும்.

பாசிச அபாயத்தை எதிர்க்க, ஆளும் வர்க்கத்தின் மீதும் மற்றும் PS உட்பட அதன் அனைத்து கட்சிகளின் மீதும் அரசியல் யுத்தத்தை பிரகடனப்படுத்தும், மற்றும் ஒரு தெளிவான சோசலிச மற்றும் சர்வதேச நிலைநோக்கை தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கும் ஒரு புதிய கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும். அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவை கட்டியெழுப்புவதே இதன் அர்த்தமாகும்.