சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Incoming French Prime Minister Valls pledges austerity, appeals to far right

பதவியேற்றிருக்கும் பிரதம மந்திரி வால்ஸ் தீவர வலதிற்கு முறையீடுகளும், சிக்கனத்தற்கு உறுதியுமளிக்கிறார்

By Alex Lantier 
9 April 2014

Use this version to printSend feedback

தன்னுடைய அரசியல் செயற்பட்டியலை நேற்று அவரது உரையில் கோடிட்டுக் காட்டிய பதவியேற்றிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரதம மந்தரி மானுவல் வால்ஸ், ஆழ்ந்த சமூகநலச் செலவு வெட்டுக்களுக்கு திட்டங்களை அளித்து, இராணுவ, சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) வளர்ந்து வரும் அரசியல் தளத்திற்கு முறையீடுகளை செய்தார்.

வால்ஸின் உரை முதலாளித்துவ “இடது” அரசியல் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் சிதைவதற்கும் ஒரு நிரூபணமாக உள்ளது. பரந்த வேலையின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளினால் மக்கள் சீற்றத்தை ஒட்டிக் கடந்த மாத நகரசபை தேர்தல்களில் அதன் முன்னோடியில்லாத தோல்வியை எதிர்கொள்கையில் சோசலிஸ்ட் கட்சியின் பதில், அது மேலும் வேகமாக வலதிற்கு மாற்றத்தைக் கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கு சலுகைகள் அளிப்பது அல்லது FN சார்பு உணர்வை தூண்டி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை குறைப்பது என்ற மாற்றீடுகளிடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில், சோசலிஸ்ட் கட்சி, நவ-பாசிஸ்ட்டுக்களை ஊக்குவிக்க தேர்வு செய்துள்ளது.

உள்துறை மந்திரியாக இவர் இருக்கையில் பெற்ற பொலிஸ் அறிக்கைகளை வெளிப்படையாக படித்திருக்கும் இவர், உத்தியோகபூர்வ அரசியலில் இருந்து தீவிரமாக மக்கள் வெறுப்புற்று ஒதுங்கி இருப்பதைக் குறிப்பிட்டு தனது உரையை ஆரம்பித்தார்: “நான் பல மூடிய முகங்கள், அதிரும் குரல்கள், இறுக்கமான உதடுகளை கண்டுள்ளேன் இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், நம் சகோதரக் குடிமக்களில் பலர் நம்மை இனியும் நம்புவதில்லை. அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை. அவர்களுக்கு பொது வாழ்வு இறந்து விட்ட தன்மையைத்தான் கொண்டிருக்கிறது.”

இதன் பின் வால்ஸ் தீவிர வலதுசாரி உணர்விற்கு தொடர்ச்சியான முறையீடுகளை செய்தார். இனவெறியை இலக்கு வைப்பதாகக் கருதப்படும் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக “தீச்செயல் புரிதல்” மற்றும் “கிறிஸ்துவ எதிர்ப்பு செயல்களை” இலக்கு கொண்டார்.

மாலியில் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் அதன் போர்களுக்காக பிரெஞ்சு இராணுவத்திற்கு மரியாதை செலுத்திய அவர். நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள 1994ம் ஆண்டு டுட்சிஸில் ருவாண்டா ஹூட்டு ஆட்சியின் இனவெறிக் கொலைக்கு ஆதரவு கொடுத்ததை திமிர்த்தனமாக மறுத்தார். “நம் குரல் – நம் நாட்டின் தலைவர், நம் தூதரகம், நம் இராணுவங்கள் – மதிக்கப்படுகின்றன” என்றார் அவர். “பிரான்ஸ் இனவெறிக் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை நான் ஏற்கவில்லை; பிரான்ஸ் எப்பொழுதும் வெறியர்களை பிரிக்கும் பங்கில் தன் பெருமிதத்தை பணயமாக கொண்டுள்ளது.”

பிரெஞ்சு பேரினவாதத்தை பாராட்டினார்: “பிரான்ஸ் ஒரு மறைவான தேசியத்தை கொண்டிருக்கவில்லை; எங்கும் படர்ந்திருப்பதின் ஒளிதான் அது. பிரான்ஸ், ஆம், நாம் இங்கு செய்வதை உலகம் முழுவதும் செய்ய வேண்டும் என்று நம்புவது இறுமாப்பு ஆகிறது.”

இத்தகைய வலதுசாரிக் குப்பைதான் மிகப் பெரிய அளவில் வாழ்க்கைத் தரங்களை தாழ்த்த, சமூகநலச் செலவுகளை குறைக்க மற்றும் செல்வந்தர்களுக்கு பெரும் நிதியை திருப்ப உள்ள பிரச்சாரத்திற்கு போலிக்காரணம் ஆகும். இந்த வாரம் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளிகள் குழுக்களுடன் வணிகத்திற்கு புதிய சலுகைகள் பற்றி வால்ஸ் கூடி விவாதிப்பதாக உறுதியளித்துள்ளார்; மேலும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் “பொறுப்புணர்வு உடன்படிக்கையின்” படி ஆண்டுப் பொதுச் செலவில் 50 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களையும் திட்டமிட்டுள்ளார். இதில் 19 பில்லியன் யூரோக்கள் பொதுத்துறை ஊதியங்களிலும் 10 பில்லியன் யூரோக்கள சுகாதார பாதுகாப்பு வெட்டுக்களிலும் இருக்கும்.

தான் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை வெட்டும் நோக்கத்தை கொண்டுள்ளதாக வால்ஸ் வெளிப்படையாக தெரிவித்தார். இதை அவர் “தொழிலாளர் செலவுகள்” என்றார். “முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது. முதலில் தொழிலாளர் செலவிலும் உள்ளது. இது கட்டாயம் குறையவேண்டும். போட்டித்தன்மைக்கு அது நம் முக்கிய நெம்புகோல்களில் ஒன்றாகும் – ஒன்று மட்டும் அல்ல, முக்கியமானதும் ஆகும்.”

தொழிலாளர்களை குறைந்தப்பட்ச விகிதத்தில் 100 முதல் 130% வரை ஊதியம் கொடுத்து நியமிக்கும் வணிகங்களுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இவற்றுள் வணிகங்கள் தாங்கள் கொடுக்கும் ஊதியங்களில் சுகாதார பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கு கொடுக்கும் வரிகள் அகற்றப்படுதல் இருக்கும். இக்கொள்கையின் நோக்கம் பிரான்ஸ் ஒரு குறைவூதிய ஏற்றுமதிப் பொருளாதாரமாக வளர வேண்டும்  -- இதில் சமூகநல திட்டங்கள் முறையாக நிதியற்றுப் போகும், தேசிய சுகாதாரத் திட்டத்துடன் தொழிலாளர்கள் ஏற்கனவே பரந்த முறையில் இருக்கும் தனியார் சுகாதார காப்பீட்டை வாங்குவதை அதிகரிக்க நேரிடும்.

மகத்தான மறுசீரமைப்பு மற்றும் பிரெஞ்சு உள்ளூர் அரசாங்கத்தில் அதிகாரிகள் பல மட்டங்களில் செலவுகளை குறைத்தலுக்கு திட்டங்களை வால்ஸ் முன்வைத்தார் – இது பிராந்தியங்கள், டிபார்ட்மென்ட்டுகள், கம்யூன்கள் அல்லது நகராட்சிகள் துறைககளில் இருக்கும்.

இவர் பிரான்சில் பிராந்திய எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கவும் 2021க்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களை அகற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இவர் “பொது திறன் பிரிவு” அகற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்; அப் பொறுப்பு குறிப்பாக மற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றால், உள்ளூர் அரசாங்கங்கள் பொது நலத்தின் எப்பிரிவையும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது.

வால்ஸின் முன்னோடி PS ன் பிரதம மந்திரி Jean-Marc Ayrault  ஏற்கனவே இந்த நடவடிக்கையை “குறைத்து அதிர்ச்சி தரும்” நடவடிக்கையின் ஒரு பகுதி என்று அழைத்துள்ளார்; இதன்படி உள்ளூர் அரசாங்கச் செலவு குறைக்கப்படும், அது நேரடியாக மத்திய அரசாங்கம் மற்றும் வங்கிகளுக்கு தாழ்த்தப்படும்.

பொறுப்புணர்வு உடன்படிக்கை மற்றும் தேசிய முறையீடுகளைப்போல், வால்ஸின் உள்ளூர் அரசாங்க செலவுகள் வெட்டப்பட வேண்டும் என்னும் அழைப்பும், நிதியப் பிரபுத்துவத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி உள்ளது. இவை முதலீட்டு வங்கி ஜேபி மோர்கனுடைய கடந்த ஆண்டு அழைப்புக்களான “அரசியல் சீர்திருத்தங்கள்” ஐரோப்பா முழுவதும் சமூக வெட்டுக்களுக்கு எதிர்ப்பை அடக்கத் தேவை என்று கூறியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. (See: JPMorgan calls for authoritarian regimes in Europe).

ஐரோப்பிய அரசியல் அமைப்பு முறைகள் “சர்வாதிகாரத்திற்குப் பின் நிறுவப்பட்டவை, அந்த அனுபவத்தை ஒட்டி வரையறுக்கப்பட்டன” என்று ஜேபி மோர்கன் எழுதியது.

அது தொடர்ந்து கூறியது: “அரசியலமைப்புக்கள் வலுவான சோசலிச செல்வாக்கை காட்டுகின்றன, இது பாசிசத்தின் தோல்விக்குப்பின் இடதுசாரிக் கட்சிகள் கொண்ட அரசியல் வலிமையை பிரதிபலிக்கிறது. அரசியல் முறைகள் சுற்றியுள்ள தன்மையில் காணப்படுபவை கீழே உள்ள கூறுபாடுகள் பலவற்றை முறையே காட்டுகின்றன: வலுவற்ற நிர்வாகிகள்; பிராந்தியத்துடன் ஒப்பிடுகையில் நலிந்த மத்திய மாநிலங்கள், தொழிலாளர்கள் உரிமைகள் அரசியலமைப்பின்படி பாதுகாக்கப்படல்; அரசியலில் வாடிக்கைத் தன்மையை வளர்க்கும் ஒருமித்த உணர்வை வளர்க்கும் முறைகள்; மற்றும் வரவேற்பு இல்லாத மாற்றங்கள் அரசியலில் இருக்கும் நிலையை மாற்ற முற்பட்டால் எதிர்க்கும் உரிமை. இத்தகைய அரசியல் மரபியத்தின் குறைகள் நெருக்கடியால் வெளிப்பட்டுள்ளன.”

தொழிலாளர்கள் உரிமைகள், ஊதியங்கள் மற்றும் பொதுச் செலவுகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் PS ன் நடவடிக்கைகள்,  நேரடியாக ஜேபி மோர்கனின் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கம் வெற்றி கொண்ட நலன்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்னும் தீவிர வலது கருத்தை அதே நேரத்தில் வளர்க்கின்றன. இது ஜேபி மோர்கன் “இடது சாரி” என்று அழைக்கும் PS, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவற்றின் அரசியல் பின்தோன்றல்களால் செயல்படுத்தப்படுகின்றன என்னும் உண்மை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் இவற்றிற்கு எதிரான போராட்டத்தின் சரியான வரலாற்றுத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சோசலிஸ்ட் கட்சி, ஊதியக் குறைவு, சமூகப் பிற்போக்குத்தனத்தை வெளிப்படையாக தீவிர வலதுசாரி உணர்வுக்கு முறையீடுகள் மூலம் நியாயப்படுத்தியிருப்பது என்பது ஐரோப்பிய முதலாளித்துவ “இடது” அரசியலின் சிதைவில் மற்றொரு படியாகும். இழிவுபடுத்தப்பட்டுவிட்ட கிரேக்க PASOK கட்சியைப் போலவே PSம் தொழிலாள வர்க்கத்துக்கும் விரைவாக வலது நோக்கி நகரும்முதலாளித்துவ உயரடுக்குக்கும் இடையே மோதலை அமைக்கிறது.

வால்ஸின் கொள்கை உரைக்கு ஆதரவாக தேசிய சட்ட மன்றத்தில் வாக்களித்த 306 பேரில் 236 பேர் ஆதரவு வாக்கை அளித்தனர்; எதிர்த்தரப்பில் பலரும் வலதுசாரி கோலிச UMP இனர். பதினொரு PS, ஆறு பசுமைவாதிகள், மூன்று இடது தீவிர பிரதிநிதிகள் வரவில்லை, பெரும்பான்மையான முதலாளித்துவ “இடது” பிரதிநிதிகள் உரைக்கு ஆதரவு கொடுத்தனர்.

இது 100 சட்ட மன்ற உறுப்பினர்கள் வால்ஸுடன் “ஒப்பந்தம்” ஒன்றை அவர் அரசாங்கத்திறகு இசைவு கொடுக்கு முன் பெறவேண்டும் என்பதின் வெற்றுப் பாசாங்குத்தனத்தை காட்டுகிறது. அதேபோல் பசுமை வாதிகளின் முடிவான PS அரசாங்கத்திற்குத் தேர்தல் தோல்வியை அடுத்து ஆதரவை விலக்கிக் கொள்ளுதல் என்பதின் பாசாங்குத்தனத்தையும் காட்டுகிறது. வால்ஸினை விமர்சிப்பவர்கள் என்னும் இவர்களின் நலிந்த முயற்சிகளைத்தவிர, PS மற்றும் அதன் பல அரசியல் அமைப்புக்கள் அனைத்தும் வால்ஸின் செயற்பட்டியலுக்கு ஆதரவு கொடுத்துள்ளன.

இடது முன்னணியைப் பொறுத்தவரை, நீண்ட காலம் உடன்பாடு கொண்டுள்ள PS ன் நட்பு அமைப்புக்கள், PCF மற்றும் முன்னாள் PS மந்திரி Jean-Luc Mélenchon தலைமையில், வால்ஸிற்கு எதிரான அவற்றின் வாக்குகள் வெற்றுச் செயல் ஆகும்; அவ்வாறுதான் காணப்படும். வால்ஸ் தன் உரையில் தெளிவாக்கியுள்ளபடி, தொழிற்சங்க அதிகாரத்தில் இருக்கும் அவற்றின் உறுப்பினர்கள் எப்படியும் அடுத்த சுற்று சமூக வெட்டுக்களுக்கு பேச்சுக்களை நடத்துவர்.

மக்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரே விரோதி என்று காட்டிக் கொள்வதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தன செயற்பட்டிலுக்கு மக்கள் ஆழ்ந்த எதிர்ப்பை காட்டுவதை அடக்கும் குட்டி முதலாளித்துவ சக்திகளான இடது முன்னணி மற்றும் NPA போன்றவைதான் FN ஏற்றம்பெற அனுமதிக்கின்றது.