சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The social counter-revolution accelerates in Detroit

டெட்ராய்டில் சமூக எதிர்புரட்சி தீவிரமடைகிறது

Jerry White
17 April 2014

Use this version to printSend feedback

தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதல்களை கொண்டுள்ளதும், வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள் மற்றும் அவர்களின் அரசியல் சேவகர்களால் வரையப்பட்டதுமான, திவால்நிலைமைக்கான ஒரு மறுசீரமைப்பு திட்டத்தை அடுத்த ஒருசில வாரங்களுக்குள் ஏற்று கொள்ளுமாறு செய்வதில், தொழிலாளர்களை மிரட்ட, அனைத்து முக்கிய அரசியல் சாதனையாளர்களும் டெட்ராய்டில் அணிதிரண்டுள்ளனர்.

அவசரகால நிர்வாகி Kevyn Orrஇன் "சீரமைப்பு திட்டத்திற்கு" சட்டப்பூர்வ சவால் விடுப்பதற்கான இன்றைய இறுதி காலக்கெடு முடிவதற்கு முன்னதாகவே, தொழிற்சங்கத்தோடு இணைந்த இரண்டு ஓய்வூதியதாரர் நல அமைப்புகள் ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ நல உதவிகளில் வெட்டுக்களைச் செய்யும் ஓர் உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கியதோடு, திவால்நிலைமைக்கு எதிரான வழக்குகளைத் திரும்ப பெறவும் உடன்பட்டன. மிச்சிகன் உட்பட பல மாநிலங்களில் அரசுத்துறை பணியாளர்களின் ஓய்வூதியங்களுக்கு அரசியலைப்புரீதியாக பாதுகாப்புகள் இருப்பதால் அமெரிக்க வரலாற்றில், ஒரு நகராட்சியின் மிகப் பெரிய திவால்நிலைமையாக டெட்ராய்ட் திவால்நிலைமைக்கு முன்னர் அதுபோன்ற வெட்டுக்களை நினைத்தும் பார்த்திருக்க முடியாது.

இந்த உடன்படிக்கைகள் அடித்துப்பிடித்து நிறைவேற்றப்பட்டால், சுமார் 6,500 ஓய்வூபெற்ற தீயணைப்பு மற்றும் பொலிஸ் துறையினரின் ஓய்வூதியங்கள் முடக்கப்படும் என்பதோடு, அவர்களுக்கு ஆண்டுக்கு அரை சதவீதம் முதல் ஒரு சதவீதத்திற்கு அதிகமாக வாழ்வாதார செலவுகளுக்கான உதவித்தொகையும் வெட்டப்படும் இவர்கள் சமூக பாதுகாப்பு உதவிகளைப் பெறும் தகுதியின் கீழும் வருவதில்லை. அத்தோடு மாதத்திற்கு சராசரியாக 1,500 டாலர் ஓய்வூதிய தொகையில் பிழைத்து வரும் அந்நகரின் பொது ஓய்வூதிய முறையில் உள்ள மற்றுமொரு 11,000 நகர தொழிலாளர்களும், 4.5 சதவீத வெட்டு மற்றும் பணவீக்க உதவித்தொகைகளின் இழப்பால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவர்.

விடயங்களை இன்னும் மோசமாக்கும் விதத்தில், 65 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பெடரலின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்குள் திணிக்கப்படுவார்கள், அத்தோடு 65 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டு பரிவர்த்தனை மையங்களில் தனியார் காப்பீடுகளைப் பெற நிர்பந்திக்கப்படுவார்கள் — இது தரங்குறைந்த சேவைக்கு தவிர்க்கவியலாதபடிக்கு தங்களின் கையிலிருந்து பணத்தைக் கொடுக்க நிர்பந்திக்கிறது. எதிர்கால மருத்துவ காப்பீடு என்பது ஒரு தொழிற்சங்கத்தின், அதாவது தன்னார்வ பணியாளர் நல அமைப்பின் (Voluntary Employees’ Beneficiary Association - Veba) கட்டுப்பாட்டில் கையாளப்படும், அது குறித்து Detroit Free Press வார்த்தைகளில் கூறுவதானால், “ஓய்வூதியதாரர்களுக்கு கணிசமான அளவிற்கு குறைந்த உதவிகளை வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது."

இந்த வெட்டுக்கள் ஒரு பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் பாகமாக உள்ளன, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக டெட்ராய்ட் மக்களுக்கு சொந்தமாக இருந்த டெட்ராய்ட் கலைக்கூடத்தின் விலை மதிப்பில்லா சேகரிப்புகளை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பதும் அதில் உள்ளடங்கும். தண்ணீர் மற்றும் கழிவுநீர் அமைப்புமுறை, பொது விளக்கு பராமரிப்பு, நகராட்சியின் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் மற்றும் நகரத்திற்கு சொந்தமான விமானநிலையம் மற்றும் மக்கள் கூடங்கள் உட்பட ஏனைய பொதுச் சொத்துக்கள் மற்றும் நகர சேவைகளைத் தனியார்மயமாக்குவதும் பிரதானமாக உள்ளன.

பில்லியனர் கட்டிடத்துறையினருக்கு ஆதாயமளிக்கக்கூடிய வகையில் பெரிய பெரிய வீட்டு கட்டுமானங்கள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளுக்கு இடமளிக்கும் விதத்தில் குறைந்த-ஊதிய குடியிருப்போர் நகரத்திற்கு வெளியே துரத்தப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், ஆயிரக் கணக்கான குடியிருப்போருக்கு இரக்கமின்றி தண்ணீர் வினியோகமும் துண்டிக்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியங்கள் "மிக குறைவாகவே" வெட்டப்படுவதாகவும், விட்டுக்கொடுப்பதில் அதேயளவிற்கு கடன் பத்திரதாரர்களும், வங்கிகளும், ஓய்வூதியதாரர்களும் "சமமான தியாகங்களைச்" செய்வதாகவும் உள்ளூர் மற்றும் தேசிய செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன. இதுவொரு மோசடியாகும். தொழிலாளர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்தவையும், அரசியலமைப்புரீதியாக உத்திரவாதம் வழங்கப்பட்ட சலுகைகளும் அவர்களிடமிருந்து பிடிக்கப்படுகின்றன, இது அவர்களை வறுமையில் தள்ளும்.

இதற்கிடையே, அந்நகரை பல ஆண்டுகளாக உறிஞ்சியுள்ள பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு டாலருக்கு 74 சென்டுகள் என்றளவிற்கு இழப்பீடு வழங்க திவால்நிலைமை நீதிமன்றம் உடன்பட்டுள்ளது. முற்றிலும் குற்றத்தன்மையானதல்ல எனினும் ஓரளவிற்கு சட்டவிரோதமான, வட்டிவிகித மோசடியை (swap deal) முடிவுக்குக் கொண்டு வர, அந்த நீதிமன்றம் அமெரிக்க மத்திய வங்கி மற்றும் சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட UBS ஆகியவற்றிற்கு 85 மில்லியன் டாலர் இழப்பீட்டு நிதி வழங்கி உள்ளது.

ஆரம்பத்திலிருந்தே, பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டானது இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உதவ — மாநில, கவுன்டி மற்றும் முனிசிப்பல் பணியாளர்களின் அமெரிக்க கூட்டமைப்பு (AFSCME) மற்றும் ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர்களின் சங்கம் (UAW) உட்பட — தொழிற்சங்களின் ஆதரவில் தங்கி உள்ளது. ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய பொது சொத்துக்களைக் கொள்ளையடிக்க யார் திட்டமிட்டு அந்நகரை திவால்நிலைமைக்குள் வீசினார்களோ, அந்த அரசியல் சதிகாரர்களுக்கு எதிராக சமூக எதிர்ப்பு எதுவும் வெடித்துவிடாமல் தடுக்க தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்றன.

இந்த சமூக குற்றத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒன்றுதிரட்டுவதிலிருந்து தூர விலகிய தொழிற்சங்கங்கள், DIA மற்றும் ஏனைய பொதுச் சொத்துக்களின் அபாயகரமாக விற்பனையிலிருந்து கிடைக்கும் எச்சசொச்சங்களில் ஒரு பெரிய பங்கைப் பெறுவதற்கு அழுத்தமளிக்கும் விதத்தில் சட்ட வழக்குகளை பதிவு செய்ததோடு, திவால்நிலை விடயத்தில் போட்டியிலிருந்த வசூலிப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டன.

AFSCME மற்றும் UAWஐ நடத்தும் ஊழல் வியாபார நிர்வாகிகளுக்கேற்ற விதத்தில் முறைமைகளை முன்னெடுத்த பெடரல் மத்தியஸ்தர்கள், மறுசீரமைப்பு திட்டத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க ஒரு "மாபெரும் பேரத்தை" வடிவமைத்தனர். பல பில்லியன் டாலர் மதிப்பிலான VEBA அறக்கட்டளையின் கட்டுப்பாட்டை தொழிற்சங்க நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து அவர்களின் ஆதரவை விலைக்கு வாங்குவது மற்றும் செய்திகளின்படி ஓய்வூதிய நிதிகளில் முதலீடு செய்வதில் ஓரளவிற்கு அவர்களின் செல்வாக்கை தக்க வைக்க அனுமதிப்பது ஆகியவை அதில் உள்ளடங்கி இருந்தது.

தொழிற்சங்கங்களோடு எந்தவொரு உடன்படிக்கையும் எட்டப்படாமல் இருந்திருந்தால், நீதியரசர் ஸ்டீபன் ரோட்ஸ் அல்லது Orr, அவர்களின் மறுசீரமைப்பு திட்டத்தைத் திரும்ப பெற அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள். அதுபோன்றவொரு தூண்டிவிடும் நடவடிக்கையை "மிதமாக கூறினாலும் கூட, அது மிகவும் சமூகரீதியில் பிளவுபடுத்தி இருக்கும்," என்று Detroit Newsஇன் கட்டுரையாளர் டானியல் ஹோவெஸ் எச்சரித்தார். அதனால் தான் இறுதியில், பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டும், அதன் அரசியல் முன்னணியாளர்களும் எதிர்ப்பை ஒடுக்கவும், தங்களின் கட்டளைகளைத் திணிக்கவும் தொழிற்சங்கங்களை சார்ந்திருந்தனர்.

டெட்ராய்டில் என்ன நடந்து வருகிறதோ அது ஒபாமா நிர்வாகத்தாலும், பெரு வணிக கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினாலும் முன்னெடுக்கப்படும் சமூக எதிர்புரட்சியின் ஒரு பாகமாக உள்ளது. டெட்ராய்டிற்கு எந்தவொரு பிணையெடுப்பும் வழங்குவதை நிராகரித்து, அதேவேளையில் வோல் ஸ்ட்ரீட்டிற்கு ட்ரில்லியன்களை வழங்கியதோடு, ஒபாமா, நாடு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆசிரியர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் ஏனைய பொதுத்துறை தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துநல உதவிகளை வெட்ட, அந்நகரை ஒரு முன்மாதிரியாக பயன்படுத்தி வருகிறார்.

டெட்ராய்டை உதாரணமாக கொண்டு, இலினோய், பென்சில்வேனியா, கலிபோர்னியா மாநிலங்களும், அவற்றின் நகராட்சிகளும் மற்றும் ஏனையவைகளும் அரசு பணியாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவநல சலுகைகளை வெட்டுவதற்குரிய பகுதிக்குள் கொண்டு வந்துள்ளன. அமெரிக்கா முழுவதிலும் உள்ள வங்கிகளும், அரசியல் சேவகர்களும் — ஸ்பெயின், கிரீஸ் மற்றும் போர்ச்சுக்கல் போன்றே — "அளவுக்கதிகமான தாராள" ஓய்வூதிய சலுகைகளை நீடிக்க சமூகத்தில் ஆதாரவளங்கள் இல்லையென வாதிடுகின்றன.

ஒரு நூற்றாண்டுக்கு அதிகமான கால போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தால் போராடி வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஆதாயங்களையும் அழிக்க, பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவம் தீர்க்கமாக உள்ளது.

மே 1 இல் தொடங்கி பரிந்துரைக்கப்பட்ட தொகுப்புகளின் மீது டெட்ராய்ட் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், “இது தான் அதிகபட்சமாக அவர்களுக்கு கிடைக்க கூடியது", அதையும் எதிர்த்தால் அது இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களுக்கு மட்டுமே இட்டுச் செல்லும் என்று வலியுறுத்திக் கொண்டு, அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் ஊடக தலைமை பேச்சாளர்களின் ஒருமித்த கூக்குரலில் தொழிற்சங்கங்களும் சேருவதை அவர்கள் முகங்கொடுக்க உள்ளனர்.

பிரச்சாரம் மற்றும் மிரட்டலின் இந்த பரப்புரைகள் நிராகரிக்கப்பட வேண்டும்! ஓய்வூதியங்கள், மருத்துவ நல வெட்டுக்கள், கலாச்சாரத்தை அணுகுவதற்கான வசதி வாய்ப்புகள் உட்பட தொழிலாளர் வர்க்கம் அதன் உரிமைகளுக்கான போராட்டத்தில், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி உட்பட அனைத்து உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புகளிடமிருந்தும் சுயாதீனமாக ஒழுங்கமைக்க வேண்டும் என்பதையே திவால்நிலைமைக்கு பின்னால் வரையப்படும் இந்த ஒரு "மாபெரும் பேரம்" தெளிவாக்குகிறது. டெட்ராய்ட் தொழிலாளர்களின் போராட்டமானது, டெட்ராய்ட் நகர்புற பகுதி முழுவதிலும், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதோடு பிணைக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களிடம் பற்றாக்குறையாக இருப்பது போராடுவதற்கு விருப்பமில்லாமல் இருப்பதல்ல, மாறாக திவால்நிலைமைக்குப் பின்னால் உள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சக்திகளைக் குறித்த புரிதல் இல்லாமையும், போராடுவதற்கு ஓர் அரசியல் வேலைத்திட்டத்தோடு ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு தலைமை இல்லாததுமே ஆகும். அதனால் தான் சோசலிச சமத்துவக் கட்சி டெட்ராய்ட் திவால்நிலைமை மீதும், DIA & ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் மீதும் பெப்ரவரி 15 இல் தொழிலாளர்கள் விசாரணையை ஏற்பாடு செய்ததோடு, எதிர்ப்பைத் தொடர்ந்து ஒழுங்கமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

திவால்நிலையின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் நிராகரிக்கப்பட வேண்டும். அந்நகரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், பெரும் பணக்காரர்களுக்காக அல்லாமல் தொழிலாள வர்க்கத்திற்காக அந்நகரை மறுகட்டமைப்பு செய்வது உட்பட சமூக பயன்பாட்டிற்காக, நிதியியல் பிரபுத்துவத்தால் முறையற்ற வகையில் சேர்க்கப்பட்ட ஆதாயங்கள் அபகரிக்கப்பட வேண்டும். அதற்கான போராட்டமானது, யுத்தம், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட முட்டாள்தனமான சமூக சமத்துவமின்மையின் அளவுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும்.