சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

As eastern Ukrainian protesters dismiss calls to end occupations
US prepares to send troops to Poland

ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரும் அழைப்புக்களை கிழக்கு உக்ரேனிய எதிர்ப்பாளர்கள் உதறித்தள்ளுகையில்

அமெரிக்கா போலந்திற்குப் படைகளை அனுப்பத் தயாராகிறது

By Johannes Stern 
19 April 2014

Use this version to printSend feedback

வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்ட், உக்ரேன் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், நேட்டோ இராணுவப் படைகளை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் விரிவாக்குவதின் ஒரு பகுதியாக போலந்தும் அமெரிக்காவும் அடுத்த வாரம் அமெரிக்க தரைத் துருப்புக்களை போலந்தில் நிலைகொள்ள செய்வதென அறிவிக்கும் எனத் தகவல் கொடுத்துள்ளது.

போஸ்ட் இன் கருத்துப்படி, போலந்தின் பாதுகாப்பு மந்திரி தோமஸ் சீமோனியக், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகலை பென்டகனில் சந்தித்து வந்த பின்னர், “இந்த முடிவு அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் இராணுவத் திட்டமிடுபவர்கள் விவரங்களை வேலைசெய்வர்” என்றார் எனக் கூறியது. கட்டுரை தொடர்கிறது: “விமான பாதுகாப்பு, சிறப்புப படைகள், சைபர் பாதுகாப்பு இன்னும் பிற பகுதிகளிலும் தீவிர ஒத்துழைப்பு இருக்கும். 'அமெரிக்க ஆதரவின் கீழ்' போலந்து முக்கிய பிராந்திய பங்கைக் கொள்ளும் என்றார்.”

இந்த அறிக்கை, உக்ரேனில் “அழுத்தங்கள் குறைக்கப்பட வேண்டும்” எனப்படுவதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் ஜெனிவா உடன்பாட்டை கொண்டது என்பது நல்லெண்ணத்தில் அல்ல என்பதைத் தெளிவாக்குகிறது. ரஷ்யா உடன்பாட்டை மீறியதாகக் கூறப்படுவது, விரிவான தடைகள் மற்றும் ஆக்கிரோஷ அமெரிக்க, நேட்டோ படைகளை கிழக்கு ஐரோப்பாவில் கட்டமைத்து, ரஷ்யாவை சுற்றி நெரித்தலை நியாயப்படுத்துவதற்காக நோக்கம் கொண்டுள்ளது.

போலந்திற்கு அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்படுவது, ஒரு பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும்; இது, உக்ரேனில் மட்டும் உண்மையான ஆபத்தான உள்நாட்டுப்போரை உயர்த்துகிறது என்பது மட்டுமின்றி, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் நேட்டோ ஆகியவை அணுவாயுதங்கள் கொண்ட ரஷ்யாவிற்கு எதிரான போரையும் உயர்த்துகிறது. உக்ரேன் நெருக்கடி, வேண்டுமென்றே வாஷிங்டனால் அரசியல், பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவத் தாக்குதல் ரஷ்யாவிற்கு எதிராக நடத்தப்படுவதற்காக நீண்ட நாளாகவே திட்டமிடப்பட்டு வரும் போலிக்காரணம் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜெனிவா உடன்பாட்டில், கிழக்கு உக்ரேனில் அரசாங்க எதிர்ப்பாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எந்த அறிகுறியும் இல்லை; அவர்கள் கட்டிடங்களை கைப்பற்றி வலதுசாரி, அதி-தீவிர தேசிய கியேவ் ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பை அறிவித்துள்ளனர். அந்த அரசாங்கம் கடந்த பெப்ருவரி மாதம் வாஷிங்டன், பேர்லின் ஏற்பாடு செய்த ஆட்சி சதியால் நிறுவப்பட்டது.

வியாழன் அன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகியவை எதிர்ப்பாளர்களை ஆக்கிரமிப்புக்களை கைவிடுமாறு வெளியிட்ட கூட்டு அறிக்கையை உக்ரேன் கிழக்குப் பகுதியில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் உதறித் தள்ளியுள்ளனர்.

வெள்ளியன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு உக்ரேனிய நகரங்களில் கட்டிட ஆக்கிரமிப்புக்களை தொடர்ந்தனர். தூர கிழக்கு நகரமான லுகன்ஸ்க்கில், ன்ட்ரேய் என்றழைக்கப்படும் ஒரு போராளிக்குழு உறுப்பினர், அவருடைய குழு கைவிடும் திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை, “தளத்தில் அனைத்தும் நேற்று, அதற்கு முந்தைய தினம், அதற்கும் முந்தைய தினம் என்ன இருந்ததோ அதுபோலவே உள்ளன. நாங்கள் வெளியேறப்போவது இல்லை” என பிரகடனப்படுத்தினார்.

கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களை கொண்ட பிராந்தியத்தின் தொழில்துறை மையமான டோனெட்ஸ்க்கில், தடைகள் மீது எழுதப்பட்டுள்ள அடையாளம் மக்களின் பரந்த அடுக்குகளின் உணர்வைச் சுருக்கமாகக் கூறுகிறது; இவர்கள் உக்ரேனில் ஏகாதிபத்திய சக்திகள் தலையீடு செய்வது குறித்து ஆழ்ந்த விரோதப்போக்கு கொண்டுள்ளனர். அது கூறுகிறது: “இரத்த வெறி பிடித்த அமெரிக்கா. இழிந்த ஐரோப்பிய ஒன்றியம். உக்ரேனைத் தனியே விடுங்கள்.”

சில ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அழைப்புக்களில் மேற்கத்திய சக்திகளுடன் கையெழுத்திட்ட ரஷ்யாவின் முடிவை கண்டித்தனர். கியேவில் உள்ள இடைக்கால அரசாங்கம் இராஜிநாமா செய்யும் வரை மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை ஆட்சி சதியின் மூலம் பெப்ருவரி 22ல் அகற்றியதில் பங்கு கொண்ட வலது பிரிவு போன்ற ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைந்து, நாட்டின் மேற்குப் பகுதியில் தங்கள் ஆக்கிரமிப்பை நிறுத்தும் வரை தாங்கள் கைப்பற்றிய அரசாங்கக் கட்டிடங்களை கைவிடமாட்டோம், ஆயுதங்களையும் களையமாட்டோம், என்று வலியுறுத்தியுள்ளனர்.

தம்மைத்தாமே “டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு” என்று அறிவித்துக் கொண்டுள்ள டென்னிஸ் புஷிலின், ஜெனிவா பேச்சுக்களில் பங்கு பெற்ற ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், எங்களுக்காக எதிலும் கையெழுத்திடவில்லை, ரஷ்யக் கூட்டமைப்பின் சார்பில்தான் கையெழுத்திட்டுள்ளார்” என அறிவித்தார். ஸ்லாவ்யன்ஸ்க்கில் எதிர்ப்பாளர்களில் ஒருவரான அலெக்சி, ராய்ட்டர்ஸிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஆதரவை இழந்துவருகிறார் என்று தெரிவித்தார். புட்டினை “வோவா” எனக் குறிப்பிட்ட அவர், “நாங்கள் நினைத்த அளவு வோவா எங்களை நேசிக்கவில்லை எனத் தோன்றுகிறது” என்றார்.

இக்கருத்துக்கள் மேற்கத்திய அரசாங்கங்களும், செய்தி ஊடகங்களும் கிழக்கு உக்ரேனில் உள்ள எதிர்ப்பாளர்கள் ரஷ்ய படையினர் அல்லது முகவர்கள், மாஸ்கோவினால் இவர்களுடைய செயல்கள் ஆணையிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தில் உள்ள பொய் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எதிர்ப்புக்கள் பெருகிய முறையில் மேற்கத்திய ஆதரவுடைய கியேவ் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடுகள் ஆகும் – அதில் வெளிப்படையான பாசிஸ்ட்டுக்கள், யூத எதிர்ப்பாளர்கள் மற்றும் ரஷ்ய பேரினவாத எதிர்ப்பாளர்கள் உள்ளனர், இது மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சுமத்த உறுதி எடுத்துள்ளது.

வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு காண ரஷ்யா விரும்புகையில், கியேவ் ஆட்சி மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் ஜெனிவா பேச்சுக்களை கிழக்கு உக்ரேனில் அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவப் படைகளை திரட்டவும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ இராணுவ நிலைப்பாடு கொண்டு ரஷ்யாவையே அச்சுறுத்துவதற்கு போலிக் காரணத்தை அளிக்கவும்தான் பயன்படுத்துகின்றன.

“அனைத்துத் தரப்பினரும் எத்தகைய வன்முறை, மிரட்டல் அல்லது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்” என அறிவிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்ட மை உலர்வதற்குள், உக்ரேனிய வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி டேஷ்சிட்சியா, அரசாங்கத்தின் “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை” எனப்படுவது, ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தொடரும் என்று அறிவித்தார். இழிந்த முறையில் அவர், அதன் தீவிரம் உடன்பாட்டின் நடைமுறைச் செயற்பாட்டை சார்ந்து இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

உக்ரேனிய இரகசியப் பிரிவின் (SBU) செய்தித் தொடர்பாளர் மரினா ஓஸ்டபெங்கோ “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நம் நாட்டில் பயங்கரவாதிகள் இருக்கும் வரை தொடரும்” என்றார். அவர் மேலும் கூறுகையில்: “ஈஸ்டர் விடுமுறை நாட்கள் மற்றும் ஜெனிவா உடன்பாடுகளை ஒட்டி, செயற்பாடுகள் இப்போது செயலற்ற நிலையில் உள்ளது. தலைமையகம் மறுதிட்டத்தை தயாரிப்பது இப்பொழுது நடந்து வருகிறது.”

உக்ரேனிய அரசாங்கமும் அதன் வாஷிங்டன் மற்றும் பேர்லினில் உள்ள அதன் நட்பு கூட்டுக்களும் ஜெனிவா உடன்பாட்டை சிறிய இடைவெளி கொடுப்பதாகக் கருதுகிறது; அக்காலத்தில் அவை தம்மை மீமைத்துக் கொண்டு கடந்த வாரம் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தலாம் என கருதுகின்றன. அப்பொழுது CIA இயக்குனர் ஜோன் பிரென்னன் கியேவில் ஆட்சியுடன் பேச்சுவார்த்தைகளுக்கு திருட்டுத்தனமாக வந்திருந்தார். கிரமடோர்ஸ்க் இராணுவ விமானத்தள தாக்குதலுடன் செயற்பாடு செவ்வாயன்று தொடங்கியது, ஆனால் உக்ரேனிய ராணுவம் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு தாக்க மறுத்ததோடு சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சென்ற நிலையில் நிறுத்தப்பட்டது.

பென்டகன் ஆத்திரமூட்டும் வகையில் உக்ரேனிய இராணுவத்திற்கு இன்னும் அதிகமான உதவியை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது. “நீர் சுத்தகரிப்பு முறைகள், சீருடைகள், மருத்து உதவி அளிப்புக்கள் மற்றும் தளத்தில் தொடர்ந்து இருக்க உதவும் பொருட்கள் வழங்கப்படும்” என்று ரியர் அட்மைரல் ஜோன் கிர்பி, பென்டகனின் செய்தி செயலர் CNN இடம் தெரிவித்தார்.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ கட்டமைப்பு ரஷ்யாவை சுற்றி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் பாகமாக, வாஷிங்டன் கியேவிற்கு இராணுவ ஆதரவை அதிகரித்துள்ளது. புதனன்று ஜேர்மனிய அரசாங்கம், குறைந்தப்பட்சம் ஒரு போர்க்கப்பல் மற்றும் 6 யூரோபைட்டர் (Eurofighter) போர்விமானங்களை கிழக்கு ஐரோப்பாவிற்கு அனுப்பும் திட்டங்களை அறிவித்துள்ளது. ஜேர்மன் கப்பல் “எல்ப” தலைமையில் ஐந்து மைன் கண்டுபிடிப்புக் கப்பல்கள் பால்டிக் கடல் பகுதிக்கு புறப்பட உள்ளது.

புதன் அன்றே, நேட்டோ தலைமைச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசென் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு பாரிய நேட்டோ விரிவாக்கம் வரும் என அறிவித்தார்.

கிழக்கு உக்ரேனில் தொடரும் எதிர்ப்புக்களை, மாஸ்கோ ஜெனிவா உடனபாட்டை மீறிவிட்டது என்று கூறுவதற்கு மேற்கோளிட வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது, இதையொட்டி அது ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சுமத்த, இன்னும் ஆக்கரோஷ இராணுவப் படைகளை நிலைப்படுத்துவது ஆகியவற்றை நியாயப்படுத்த விரும்புகிறது. அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி கூறினார்: “நாட்டின் கிழக்கில் எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்தவர்களிடம்தான் இதற்கான பொறுப்பு உள்ளது” என்றார் – இது ரஷ்யாவை குறிப்பிடுவதாகும். அவர் மேலும் கூறினார்: “அடுத்த சில நாட்களின் போக்கில் படிப்படியாக முன்னேற்றம் ஏதும் இல்லை என்றால், சரியான திசையில் விஷயங்கள் நகரவில்லை என்று நாங்கள் நினைத்தால், பின் கூடுதல் தடைகள் வரும், அவற்றின் விளைவாக கூடுதல் இழப்புக்களும் நேரும்.”

ஜனாதிபதி பாரக் ஒபாமா வியாழன் செய்தியாளர் கூட்டத்தில் இதே நிலைப்பாட்டைத்தான் பின்பற்றினார். "இந்த கட்டத்தில் நாம் எதையும் நிச்சயமாக சொல்ல முடியும் என நான் நினைக்கவில்லை" என்று அவர் கூறினார்.  மேலும், “அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கிழக்கு, தெற்கு உக்ரேனில் ரஷ்யர்களின் தலையீட்டு முயற்சி தொடர்வது போல் தோன்றுவதை எதிர்க்க திறன் கொண்டவையாக வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

வாஷிங்டனின் நிலைப்பாட்டை எதிரொலிக்கும் வகையில், வலது பிரிவு (Right Sector) செய்தித் தொடர்பாளர் ஆர்ட்டே லியோபர்ட்ஸ்கின் தான் ஜெனிவா உடன்பாடு கிழக்கே இருக்கும் ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களை மட்டும்தான் எதிர்த்து இயக்குவதாகக் காண்பதாக அறிவித்தார். வலது பிரிவு “எத்தகைய சட்டவிரோத ஆயுதங்களையும் கொண்டிருக்கவில்லை, எனவே ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்பது எங்களுக்கு பொருந்தாது.” அவர் மேலும்: “உக்ரேனிய புரட்சியின் முன்னணிப்படையை வெளிப்படையான குண்டர் கும்பலுடன் ஒப்பிடக்கூடாதுஎனவும் கூறினார்.