சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

SEP (Australia) Second National Congress: Greetings by David North

சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) இரண்டாவது தேசிய காங்கிரஸ்: டேவிட் நோர்த்திடம் இருந்தான வாழ்த்து

By David North
24 April 2014

Use this version to printSend feedback

சிட்னியில் 2014 ஏப்ரல் 18-21 தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின்  (ஆஸ்திரேலியா) இரண்டாவது தேசிய காங்கிரசுக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் பின்வருமாறு வாழ்த்தினை அனுப்பியிருந்தார்

அன்பான தோழர்களே,

உங்களது தேசிய காங்கிரஸின் வேளையில், அமெரிக்காவில் உள்ள உங்களது தோழர்கள் அனுப்பும் தோழமை கலந்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசிய காங்கிரஸ், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் ஒரு அதிமுக்கியமான புள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. அணு வல்லமை படைத்த சக்திகளுக்கு இடையிலான ஒரு இராணுவ மோதல் அபாயத்தை எழுப்புகின்ற வகையான ஒரு மோதல் அதிகரித்துச் செல்கின்ற நிலைமைக்கு மத்தியில் நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலாம் உலகப் போர் வெடித்து நூறு ஆண்டுகள் நிறைவடைய நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், அடிப்படையாக 1914 இன் பேரழிவுக்கு இட்டுச் சென்ற அதே முரண்பாடுகளும் உள்நோக்கங்களும் 2014 போராக வெடிக்க அச்சுறுத்துகின்றன. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, பால்கன்களில் நடந்த மோதல்தான் தீயைத் தூண்டியது. இன்று உக்ரேன் மீதான கட்டுப்பாடு விடயத்திலான ஒரு சண்டை உலகத்தை தீப்பிழம்பாக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. பால்கன்களில் ஆஸ்திரிய இளவரசர் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் திரி கொளுத்தப்பட்டிருந்தது. இன்றைய கிழக்கு ஐரோப்பாவில் கியேவில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் உளவு முகமைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு தான் நெருக்கடியை இயக்கத்தில் விட்டிருக்கிறது. ஆனால் இப்போதும், 1914 இல் போலவே, மிக ஆழமான பொருளாதார, புவிஅரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிப்போக்குகளின் வெளிமுகமான வெளிப்பாடு தான் நெருக்கடியைச் சூழ்ந்துள்ள உடனடிச் சூழல்களாய் இருக்கின்றன.     

உலகப் பொருளாதாரத்தின் இயக்கவியலானது தேசிய அரசு எல்லைகளின் தளைகளுக்கு எதிரான வன்முறையான எழுச்சியாக இருக்கின்றது. அமெரிக்காவின் தலைமையிலான பிரதான ஏகாதிபத்திய சக்திகள், தங்களது பாதையில் குறுக்கே வருபவர்களை ஒதுக்கித் தள்ளுவதற்கும், முக்கியமான ஆதாரவளங்களுக்கான அணுகலுக்கு தடையாக இருக்கும் அனைத்தையும் அகற்றும் வகையில் நடப்பு எல்லைகளை மறுஒழுங்கு செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. 1914 மற்றும் 1939 இல் போலவே, உலகின் ஒரு புதிய பிரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. நடப்பு நெருக்கடியில், உக்ரேன் குறித்த சண்டை என்பது ரஷ்யாவின் கதி குறித்த பெரும் யுத்தத்தில் ஒரு ஆரம்பக் கைகலப்பு மட்டுமே. ரஷ்யா மேற்கு ஐரோப்பாவிற்குள் பாய்வு காணும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவின் அளவைக் கட்டுப்படுத்த ஏன் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் கூட விட்டு விடலாம், அது கிழக்கு ஐரோப்பாவில் இருந்து விளாடிவோஸ்டோக் வரை எட்டு கால மண்டலங்களை (eight time zones) ஏன் ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்கான எந்தக் காரணமும் அமெரிக்கா அல்லது ஜேர்மனிக்கு புலப்படவில்லை.  

அதேபோல அமெரிக்க நலன்கள் உதாசீனப்படுகின்ற வகையில் சீனாவின் புவிஅரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கு தொடர்ந்து விரிவடைவதை அமெரிக்கா அனுமதிக்கவும் போவதில்லை. ரஷ்யாவுடனான ஒரு மோதலுக்கு மத்தியிலும் கூட, ஜனாதிபதி ஒபாமா, சீனாவைக்கட்டுக்குள் வைப்பதற்கானதிட்டங்களைத் திறனாய்வு செய்வதற்கு ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேயைச் சந்திக்க இந்த மாத இறுதியில் ஜப்பான் செல்லவிருக்கிறார். சென்காகு/டையாயு தீவுகள் தொடர்பாக ஜப்பானுக்கு சீனாவுடனான மோதல் அதிகரித்துச் செல்வது தொடர்பான உரையாடலும் அவர்களது சந்திப்பில் இடம்பெறவிருக்கிறதுவெடிப்புத்திறனில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பதட்டங்கள், கிழக்கு ஐரோப்பா, கருங்கடல் மற்றும் காகசஸ் பதட்டங்களுக்கு சளைத்தவை அல்ல.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இந்த ஆபத்தான சூழல், SEP இன் தேசிய காங்கிரஸ் நடைபெறுகின்ற சாலப் பொருத்தமான காலத்தை ஊர்ஜிதப்படுத்துவதோடு மட்டுமல்ல, ஒபாமா நிர்வாகத்தின்ஆசியாவை நோக்கிய திருப்பம்குறித்த கட்சியின் பகுப்பாய்வின் அரசியல் தீர்க்கதரிசனத்தையும், சீனாவுக்கு எதிரான போருக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்கின்ற தயாரிப்புகளில் ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் கட்டுப்பாடற்று ஒத்துழைப்பதற்கு எதிரான அதன் போராட்டத்தையும் சரியென நிரூபணம் செய்கிறது.

ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் வெடிப்பும் போருக்கான முனைப்பும் ஒவ்வொரு நாட்டிலும், மிக முக்கியமாய் ஏகாதிபத்திய மையங்களிலுமே கூடசமூக உறவுகளில் மிக ஆழமான விளைவுகளைக் கொண்டிருக்கும். இராணுவவாதத்தின் நிர்ப்பந்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான பொருளாதார மற்றும் அரசியல் தாக்குதல்களை அதிகப்படுத்தக் கோருவதால், வர்க்கப் போராட்டமானது இன்னும் மிகக் கூர்மையாக வளர்ச்சி காணும். நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களை பாதிக்கக் கூடிய ஒரு அரசியல் தீவிரமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கு அபிவிருத்தி காணும்.

அரசியல் சூழல் குறித்த மதிப்பீட்டில், தாட்சண்யமற்ற புறநிலைப் பார்வையை மார்க்சிச அரசியல் கோருகிறது. கற்பனையான நம்பிக்கைவாதத்தின் பேரில், நெருக்கடியின் மிக முன்னேறிய கட்டத்திற்கும் பரந்த மக்களிடையே இருக்கும் நடப்பு அரசியல் நனவு மட்டத்திற்கும் இடையே இருக்கக்கூடிய முற்றிய முரண்பாட்டை மறுப்பதில் எந்த முற்போக்கான நோக்கமும் இல்லை. இருப்பினும், தீவிரமான சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ் புரட்சிகர நனவு துரிதமாக அபிவிருத்தி காண்பதற்கான சாத்தியம் குறைமதிப்பிடப்பட்டு விடக் கூடாது. இந்த மாற்றம் வெறுமனேஆகாயத்தில் இருந்துகுதித்து விடாது. கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களில் வாழ்க்கை நிலைமைகள் இடைவிடாது மோசமடைந்து சென்றிருப்பதானது முதலாளித்துவத்தின் மீதான நம்பிக்கையையும் அதற்கான ஆதரவையும் தொடர்ந்து கீழறுத்து வந்திருக்கிறது. அதேபோல ஒரு சிறு செல்வந்த தட்டின் கைகளில் மலைக்க வைக்கும் செல்வம் குவிந்திருப்பதும் கவனிப்புக்கு தப்பிவிடவில்லை. பொய்களின் அடிப்படையிலான போர்களும் அத்துடன் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ந்த தாக்குதல்களும் பரந்த மக்களை நடப்பு அமைப்புமுறையில் இருந்து ஆழமாய் அந்நியப்படுத்தியிருக்கிறது. புரட்சிகர வெடிப்புகளுக்குப் பிந்தையமூலக்கூறு அளவிலான நிகழ்ச்சிப்போக்குகள்ஏற்கனவே மிக முன்னேறிய அபிவிருத்திக் கட்டத்தில் இருப்பதை தூரத்திலிருந்தும் துல்லியமாகக் காணமுடிவதை ஏட்டறிவு வரலாற்றாசிரியர்கள் உணர்கிறார்கள், விளங்கப்படுத்துகிறார்கள்.

ஆனாலும் உண்மையான புரட்சிகர நனவின் மட்டத்திற்கான இன்னுமொரு தீர்க்கமான குறிகாட்டியும் உள்ளது: மார்க்சிச முன்னணிப்படையின் அபிவிருத்தி!

1914 இல் இரண்டாம் அகிலத்துடன் இணைந்திருந்த பாரிய தொழிலாள-வர்க்கக் கட்சிகள் இருந்தன. ஆனால் அவை ஏகாதிபத்தியப் போரின் முதல் சில மணி நேரங்களிலேயே அம்பலப்படுகின்ற அளவுக்கு சந்தர்ப்பவாதத்தால் ஆழமாக அரிக்கப்பட்டிருந்தன. ஒரு புதிய புரட்சிகர அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்முயற்சி எடுப்பது, ரஷ்ய சமூக-ஜனநாயக இயக்கத்தின் ஒரு சிறிய கன்னையின் தலைவராக இருந்த, லெனினின் பொறுப்பானது. ரஷ்ய இயக்கத்திற்குள்ளாக சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக முந்தைய தசாப்தத்தில் அவர் நடத்தியிருந்த போராட்டத்தின் காரணத்தால் அவரால் இந்தப் பணியை மேற்கொள்ள முடிந்தது.

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஆறு தசாப்தத்திற்கும் அதிகமான அரசியல் போராட்டத்தின் விளைபொருளே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகும். இந்த ஆண்டு, இலங்கையில் பப்லோவாத LSSP காட்டிக் கொடுத்த ஐம்பதாவது ஆண்டின் நிறைவு என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அமெரிக்காவில், இந்த காட்டிக்கொடுப்பின் முக்கியத்துவத்தை விவாதிக்கக் கோரிய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (SWP) இருந்து வெளியேற்றப்பட்டு, அவர்கள் நான்காம் அகிலத்தின் அமெரிக்கக் குழுவை (ACFI) உருவாக்கச் சென்றனர். இரண்டாண்டுகளுக்குப் பின்னர், ACFI அமெரிக்க SEP இன் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கை ஸ்தாபித்தது. இலங்கையில், SLFP பிரதமரான பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் LSSP சேர்வதை எதிர்த்த மிகத் துணிச்சலான மற்றும் அரசியல் ரீதியாய் தொலைநோக்குடைய கூறுகள், அனைத்துலகக் குழுவின் வழிகாட்டலின் கீழ், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை உருவாக்கின. பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள் (SLL) நெருக்கடி பெருகிய போதிலும், 1960களின் ஆரம்பத்தில் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த கோட்பாடுகள் ஜேர்மனியிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒரு பதிலிறுப்பைக் கண்டன. அங்கு முறையே 43 மற்றும் 42 ஆண்டுகளுக்கு முன்பாக ICFI இன் புதிய பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.

டிம் வொல்ஃபோர்த்தின் சந்தர்ப்பவாதத்தின் மீதான மறுதலிப்பு என்ற வேர்க்கர்ஸ் லீக்கின் போராட்ட வரலாற்றில், ஒரு தீர்மானகரமான திருப்புமுனையாக நிரூபணமான ஒன்றின் நாற்பதாவது ஆண்டாகும் இது. வொல்ஃபோர்த்தின் ஓடுகாலித்தனத்திற்கு எதிரான போராட்டமானது பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் புதுப்பிக்கப்படுவதற்கும், அத்துடன் அப்போராட்டத்தின் ஊடாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுடன் அமெரிக்க பிரிவு கொண்டிருந்த பிணைப்பு (1923 இல் இடது எதிர்ப்பாளர்கள் அணி ஸ்தாபிக்கப்பட்டது மற்றும் 1928 இல் ஜேம்ஸ் பி. கனனால் கம்யூனிஸ்ட் லீக் ஆஃப் அமெரிக்கா உருவாக்கப்பட்டது ஆகியவை வரை இந்த வரலாறு பின்நோக்கி செல்லத்தக்கது) மீண்டும் வலுவூட்டப்படுவதற்கும் இட்டுச் சென்றது. இந்த சக்திவாய்ந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த பாரம்பரியத்தின் உட்கிரகிப்பு தான் 1982 இல் பிரிட்டிஷ் WRP இன் சந்தர்ப்பவாதச் சீரழிவுக்கு எதிராக போராடுவதற்கு வேர்க்கர்ஸ் லீக்கிற்கு ஆற்றலளிப்பதில் அதிமுக்கியமான காரணியாக இருந்தது. இந்த எதிர்ப்பை தனிமைப்படுத்துவதற்கும் அழிப்பதற்கும் WRP செய்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயின. 1985 இலையுதிர் காலத்தில், அனைத்துலகக் குழுவிற்குள் இருந்த மரபுவழியான ட்ரொட்ஸ்கிச கன்னை ஒரு தீர்மானகரமான பெரும்பான்மையை பெற்றது, WRP சந்தர்ப்பவாதிகளிடம் இருந்து IC இன் கட்டுப்பாட்டை கைப்பற்றியது, அத்துடன் நான்காம் அகிலத்திற்குள்ளாக ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டியது.

தசாப்தங்கள் நீடித்த இந்த போராட்டம் தான், தோழர்களே, அனைத்துலகக் குழுவின் அடுத்துவந்த முன்னேற்றங்கள் அனைத்திற்குமான - நமது பழையலீக்குகள் அனைத்தும் கட்சிகளாக உருமாற்றப்பட்டமை, உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்பட்டமை, மற்றும் உலகெங்கிலும் நமது இயக்கத்தின் செல்வாக்கு பரந்து விரிந்தமை - அத்தியாவசியமான அடித்தளமாகும். கர்வத்தின் பிடியில் சிக்கி விட வேண்டாம் என்பதால், இந்த வெற்றிகளில் நாம் ஊறித் திளைக்கப் போவதில்லை. தீவிரமான சவால்கள் நம் முன் நிற்கின்றன. ஆயினும், மார்க்சிசவாதிகளாகவும் வரலாற்று சடவாதிகளாகவும், நமது வரலாற்றின் புறநிலை முக்கியத்துவம் குறித்து நாம் புரிந்து கொள்கிறோம். தொழிலாள வர்க்கம் அதன் பழைய அமைப்புகளின் உருக்குலைவை மட்டுமல்லாமல் 1917 அக்டோபர் புரட்சியில் இருந்து எழுந்த தொழிலாளர்அரசு கலைக்கப்படுவதையும் கண்ணுற நேர்வதற்குக் காரணமாய் இருந்த தீவிரமான தலைமை நெருக்கடிக்கு மத்தியில், எந்த அத்தியாவசியமான நிகழ்முறையின் ஊடாக அது இருபதாம் நூற்றாண்டின் அனுபவங்களை உட்கிரகித்துக் கொண்டதோ, தன்னை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புரட்சிகரப் போராட்டங்களுக்காய் தயாரித்துக் கொண்டதோ  அந்த நிகழ்முறையை இது குறித்து நிற்கிறது.

நிறைவாக, உங்களது பிரிவின் தலைமையில் இருக்கின்ற, மிகப் பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை தமது தோள்களில் சுமந்து வந்திருக்கக் கூடிய, அத்துடன் லியோன் ட்ரொட்ஸ்கி கனவுகண்டவாறாக சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் அழிக்கவியலாத ஒரு பாத்திரத்தை ஆற்றியிருக்கின்ற, அனைத்து தோழர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் எல்லையற்ற நன்றியையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன்

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
டேவிட் நோர்த்,
ஏப்ரல் 17, 2014.