சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Boston Marathon and the militarization of America

பாஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டியும், அமெரிக்க இராணுவமயமாக்கலும்

Kate Randall
23 April 2014

Use this version to printSend feedback

திங்களன்று நடந்த பாஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டி, அமெரிக்க உத்வேகத்தையும் பயங்கரவாதத்தின் தோல்வியையும் எடுத்துக்காட்டுவதாக பரந்தளவில் ஊடகங்களில் புகழப்பட்டன. கடந்த ஆண்டு நிகழ்வு, வெற்றிக் கோட்டிற்கு அருகே இரண்டு பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள் வெடித்ததோடு முடிவுற்றது, அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், 260க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

பாஸ்டன் நகரவாசிகள், இந்த வருட மாரத்தானில், "நகரை மீட்டெடுப்பார்கள்" என்று அதிகாரிகள் அங்கலாய்த்தனர். போட்டியில் கலந்து கொண்ட 36,000கும் அதிகமானவர்களையும், 1 மில்லியன் என மதிப்பிடப்பட்ட பார்வையாளர்களையும் கொண்டிருந்த அந்த திங்கட்கிழமை நிகழ்வு, எவ்வித அசம்பாவிதமுமின்றி நடந்ததாகவும், ஒரு மகத்தான வெற்றியாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் பாஸ்டன் பெருநகரின் வீதிகளிலும், வானங்களிலும் என்ன வெளிப்பட்டதென்றால், அங்கே வந்திருந்தவர்கள் மீதான பாரிய கண்காணிப்பும், முன்பில்லாதளவிலான நகர, மாநில மற்றும் மத்திய அமைப்புகளின் ஓர் ஒருங்கிணைந்த பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கையும் வெளிப்பட்டது.

கடந்த ஆண்டின் மாரத்தான் குண்டுவெடிப்புகளுக்காக, குற்றவாளியென சந்தேகிக்கப்பட்ட பத்தொன்பது வயது நிரம்பியவரை பொலிஸ் வேட்டையாடி இருந்த நிலையில், அந்நகரையும் அதன் சுற்று பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு அந்த சம்பவம் ஒரு போலிக்காரணமாக கைப்பற்றப்பட்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் ஆயிரக் கணக்கான தேசிய பாதுகாப்பு துருப்புகளும், பொலிஸூம் வெள்ளமென நிலைநிறுத்தப்பட்டிருந்தனர், காரணமற்ற சோதனைகள் மற்றும் கைப்பற்றல்களுக்கு எதிரான அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை அப்பட்டமாக மீறி, அவர்கள் உத்தரவாணை இல்லாமலேயே வீடு வீடாக சோதனை மேற்கொண்டனர்.

1 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அனைவரும் "வீட்டிற்குள் இருக்குமாறு" உத்தரவிட்டு பெயரளவிற்கான ஒரு உத்தரவாணை வழங்கப்பட்டிருந்தது, அதேவேளையில் இயந்திர துப்பாக்கி பொருந்திய ஆயுத வாகனங்கள் வெறிச்சோடிய வீதிகளில் உலா வந்ததோடு, ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலே வட்டமடித்து கொண்டிருந்தன. பொது போக்குவரத்து மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

நடைமுறையில் இராணுவ சட்டம் போன்றிருந்த, இந்த மிச்சசொச்ச ஜனநாயக உரிமைகளின் பறிப்பு, ஏறத்தாழ பரந்தளவில் ஊடகங்களால், ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான சட்டப்பூர்வ விடையிறுப்பாக பாராட்டப்பட்டது. அரசியல் ஸ்தாபகத்தின் எந்தவொரு பிரிவிலிருந்தும் எந்தவொரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் அங்கே இல்லை.

ஏப்ரல் 15, 2013 குண்டு வெடிப்புகள் நடந்து சில மாதங்களுக்குள், மாசசூசெட்ஸ் அவசரகால நிர்வாக அமைப்பு (MEMA) இந்த ஆண்டின் மாரத்தானுக்கு திட்டமிட மத்திய, மாநில மற்றும் நகர அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து வேலை செய்யத் தொடங்கியது. எட்டு நகரங்கள் மற்றும் சிறுநகரங்களுக்கு நீண்டிருந்த, 26.2 மைல் நீள ஓட்டப்பந்தய தூர பாதையில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளில், கண்காணிப்பு, தனிநபர் சோதனைகள் மற்றும் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றிற்காக 60க்கும் மேலான அரசு அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன.

கடந்த வருட குண்டுவெடிப்புகளை ஒட்டி, உள்நாட்டு பாதுகாப்புத்துறை இந்த ஆண்டின் ஓட்டப்பந்தயத்தை "தேசிய பாதுகாப்பின் சிறப்பு நிகழ்வு" என்று பெயரிட்டிருந்தது. அந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகளைக் குறித்த ஓர் ஆய்வு, பாரிய ஒடுக்குமுறைக்கும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்குமான ஒரு சோதனையோட்டமாக அரசாங்க அதிகாரிகளால் பயன்படுத்தப்ப ஒரு நடவடிக்கையாக அவற்றை அம்பலப்படுத்துகிறது.

கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக சுமார் 4,000 பொலிஸ், வழிநெடுகிலும் ரோந்து சுற்றியது. கடந்த ஆண்டில் கூடுதல் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி பெற்றிருந்த சீருடையில் இல்லாத 500 அதிகாரிகளும் இதில் உள்ளடங்குவர். வெடிகுண்டு மோப்ப நாய்களோடு கூடிய சுமார் 100 K-9 பிரிவுகளும் வழி நெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்தன, இதுவும் கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.

மாசசூசெட்ஸ், மெய்ன் மற்றும் ரோட்ஸ் தீவின் 800க்கும் அதிகமான தேசிய பாதுகாப்பு துருப்புகள் MEMA உடன் நெருக்கமாக வேலை செய்ய திரட்டப்பட்டிருந்தன. 118 ஆண்டுகால இந்த ஒட்டப்பந்தயத்தில் முதல் முறையாக, எல்லா பாதுகாப்பு துருப்புகளும் ஆயுதமேந்திய இராணுவ பாதுகாப்பு படை வல்லுனர்களாக இருந்தனர்.

வேதியியல், உயிரியியல், கதிர்வீச்சியல், அணுசக்தி துறைகளின் சிறப்பு வல்லுனர்களோடு மற்றும் முன்கூட்டிய வெடிபொருட்களைக் கண்டறியும் குழுக்களோடு, 20 மாநிலங்களில் இருந்து இராணுவமல்லாத உதவி குழுக்களையும் தேசிய பாதுகாப்பு படை அனுப்பி இருந்தது. அத்தோடு FBIஇன் SWAT குழுவும் உடனடி பயன்பாட்டிற்கு இருந்தது.

வெற்றி கோட்டிற்கு அருகிலும், பந்தய ஓடுபாதையின் ஏனைய பகுதிகள் மீதும் பறந்து சென்ற HH-60M வான்வழி ஆம்புலன்ஸ் பிளாக் ஹாக் ஹெலிகாப்டரின் ஒரு அணிவகுப்பும் நாள் முழுவதும் பார்க்க கிடைத்தது. ஹெலிகாப்டர்களில் கேமிராக்கல் இருந்ததாகவும், அது முகபாவங்களைக் கூட பெரிதாக்கிக் காட்டக் கூடிய திறன் வாய்ந்தவை என்றும் உள்ளூர் ஊடகங்கள் அறிவித்தன.

வெற்றிக்கோட்டு பகுதியை ஒட்டிய பாதுகாப்பு பகுதிகளில் இருக்க விரும்பிய, நீண்ட வரிசையில் நின்றிருந்த பார்வையாளர்கள், மெடல் டிடக்டர்களோடு கூடிய பாதுகாவலர்களால் சோதனைசாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஓடுபாதை நெடுகிலும் ஒரு நூறு உயர்திறன் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன, அத்தோடு பிராந்தியத்தின் நகர்வு கண்காணிப்பு அமைப்புமுறையின் கேமராக்களும் கண்காணிப்பை வழங்கின. ஓடுபாதை நெடுகிலும் இருந்த ஒவ்வொருவரின் முகபாவங்களையும் படம்படிக்க பயன்படுத்தப்பட்ட தேனீ-வடிவத்திலான கேமராக்கள், மாரத்தான் ஓட்டப்பந்தய வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பரந்த கண்காணிப்பு வலையமைப்பிலிருந்து வெளியான நேரடி ஒளிபரப்புகள், “பங்கர்" (பதுங்கு குழி) என்ற புனைப்பெயரைக் கொண்ட ஒரு பனிப்போர் காலத்திய நிலத்திற்கடியில், ஜன்னல்கள் இல்லாத ஒருங்கிணைப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கே அவற்றை கண்காணிக்க சுமார் 260 பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இத்தகைய அதிகளவிலான முறைமைகள், விளையாட்டு நிகழ்வுக்கு இருப்பதாக அனுமானிக்கப்பட்ட எந்தவொரு அச்சுறுத்தலோடும் பொருந்துவதாக இல்லை. அதுபோன்ற பொலிஸ்-இராணுவ குவிப்புகளையும், அத்தோடு பொலிஸ் மற்றும் பாரிய கண்காணிப்புகளை பொதுயிடங்களில் வழக்கமாக இருத்துவதை பொதுமக்கள்—பாஸ்டனிலும், அதற்கு அங்காலும்—ஏற்றுக் கொள்ளுமாறு செய்யவும், ஊடகங்களின் பின்புலத்தோடு, அரசாங்க அதிகாரிகளால் செய்யப்பட்ட ஒரு முயற்சியின் பாகமாக அவை அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டின் சம்பவங்களை ஒரு போலிக்காரணமாக கைப்பற்றிய அதேவேளையில், சந்தேகத்திற்குரிய குண்டுதாரிகளில் ஒருவரான தாமர்லன் ஜார்னெவ்வின் (Tamerlan Tsarnaev) பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து FBIஇன் எண்ணற்ற எச்சரிக்கைகள் ஒருபுறம் இருக்க, அந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் என்று சந்தேகத்திற்குரியவர்களால் எவ்வாறு தடையின்றி செயல்பட முடிந்தது என்பதன் மீது அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு விளக்கமும் அங்கே இல்லை. 9/11 தாக்குதல் போலவே மீண்டுமொருமுறை அந்த சம்பவம் குறித்து FBI மற்றும் CIAக்கு நன்கு தெரிந்திருந்தும், குண்டுதாரிகள் அவர்களின் குற்றங்களை திறமையாக நடத்தினார்கள் என்றால் அது பொலிஸின் அல்லது கண்காணிப்புகளின் எந்தவொரு குறைபாடாலும் ஏற்பட்டதல்ல.

மாறாக, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு போர் என்று கூறப்பட்டதன் பெயரில், முதல் அரசியலமைப்பு திருத்தம் வழங்கிய அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமையும், சட்டவிரோத சோதனைகள் மற்றும் பிரத்யேக தனிநபர் மீதான தாக்குதல்களுக்கு எதிரான நான்காம் அரசியலமைப்பு திருத்தத்தின் பாதுகாப்புகளும் உட்பட, ஜனநாயக உரிமைகளைத் துண்டுதுண்டாக கிழிப்பதை "புதிய நடைமுறையாக" பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

உக்ரேன் மீதான ரஷ்யா உடனான தற்போதைய மோதல் போன்ற, அமெரிக்க உலகளாவிய இராணுவ செயல்களோடு இணைந்த வகையில், உள்நாட்டில் பாரிய ஒடுக்குமுறை அணுகுமுறைகளை அரசாங்கம் அதிகளவில் தயாரித்து வருகின்றது. நாடெங்கிலும் உள்ள பொலிஸ் துறைகள் இராணுவமயமாக்கப்பட்டு வருவதோடு, அவற்றில் பல காலாவதியான ஆயுதமேந்திய போர் வாகனங்களை நகர்புற SWAT குழுக்கள் பயன்படுத்தும் விதத்தில், உபயோகப்படுத்திற்கு உட்படுத்தி உள்ளன.

வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கை தரங்களாலும் வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மையாலும் எரியூட்டப்பட்டு, உள்நாட்டில் வர்க்க பதட்டங்கள் முன்னணியில் உருவாகி வருவதன் மீதான அச்சமே மேற்கூறிய நடவடிக்கைகளுக்கும் மற்றும் மக்கள் சுதந்திரங்களின் மீதான ஏனைய தாக்குதல்களும் பின்னால் இருப்பவை ஆகும். அமெரிக்க மக்களின் பரந்த பெரும்பான்மையினருக்கு வறுமை மற்றும் யுத்தத்தைத் தவிர வேறொன்றையும் தர இயலாத இந்த அமைப்புமுறை நிலைமைகளின் கீழ், தவிர்க்கவியலாமல் எழக்கூடிய சமூக வெடிப்புகளை எதிர்கொள்ள ஆளும் மேற்தட்டு பொலிஸ்-இராணுவ எந்திரத்தின் ஒடுக்குமுறை சக்திகளை ஒன்று குவித்து வருகிறது.

ஒரு பயங்கரவாத தாக்குதல் மீதான அச்சம் அல்ல, இந்த தவிர்க்கவியலாமை குறித்த அரசியல் ஸ்தாபகத்தின் முன்அனுமானம் தான் இந்த ஆண்டின் பாஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டிக்கான அரசாங்கத்தின் விடையிறுப்புக்கு உந்துதலாக இருந்தது. “வலிமையான பாஸ்டன்" குறித்த அறிவிப்புகள் மற்றும் பொருந்தா தேசப்பற்றுவாதமும் ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டன மற்றும் இத்தகைய கூர்மையான யதார்த்தங்களுக்கு மக்கள் கண்மூடி இருக்க வேண்டுமென்றும் மற்றும் அரசு படைகளோடு போலித்தனமான ஓர் ஐக்கியத்தில் பங்களிக்க வேண்டுமென்றும் அரசியல் தலைவர்கள் கோருகின்றனர்.

திங்களன்று காட்டப்பட்ட பாரிய பொலிஸ்-இராணுவ நடவடிக்கையானது, ஆளும் மேற்தட்டு அதன் வர்க்க ஆட்சியைப் பாதுகாப்பதில் பயன்படுத்த தயாரிப்பு செய்துவரும் அணுகுமுறைகள் மீதான ஒரு எச்சரிக்கையாக சேவை செய்கிறது.