சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The danger of war in Asia

ஆசியாவில் போர் அபாயம்

Peter Symonds
26 April 2014

Use this version to printSend feedback

உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடனான அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் மோதல்களால் ஐரோப்பாவில் போர் ஆபத்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், ஜனாதிபதி ஒபாமா ஆசியாவில் இருக்கும் அமெரிக்க கூட்டாளி நாடுகளுக்கு விஜயம் செய்து, அங்கு பிராந்திய பதட்டப்பகுதிகளில் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார், அமெரிக்க இராணுவத்தின் சீனச் சுற்றிவளைப்புக்கு வலுவூட்டிக் கொண்டிருக்கிறார், அத்துடன் பசிபிக் பிராந்தியத்தில் மோதலுக்கும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

ஒபாமாவின் பயணத்தில் மையமான நிகழ்ச்சிநிரலாக இந்த வாரத்தில் ஜப்பானுக்கு அவர் மேற்கொண்ட அரச பயணம் அமைந்திருந்தது. அங்கு அவர் ஆசிய-பசிபிக்கில் அமெரிக்க தலைமைக்கு புத்துயிரூட்டுவதற்கு தான் தீர்மானத்துடன் இருப்பதை மீண்டும் உறுதி செய்தார். சீனாவைக் கீழ்ப்படியச் செய்யும் நோக்கம் கொண்ட இராஜதந்திரரீதியான தாக்குதல் மற்றும் இராணுவப் பெருக்க நடவடிக்கையான அமெரிக்காவின் ஆசியாவை நோக்கித் திரும்புதல் நிறுத்தப்பட்டு விட்டிருப்பதாக வந்த ஊகங்களுக்கு திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கத்துடன் இந்த கூற்று அமைந்திருந்தது.  

கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஒபாமாவின் திரும்புதலானது இந்தோ-பசிபிக் பகுதியை புவியரசியல் போட்டிகள் மற்றும் பதட்டங்களின் ஒரு வெடிக்கிடங்காக மாற்றி விட்டிருக்கிறது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அமெரிக்க கூட்டாளிகள் கிழக்கு சீனா மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் சீனாவுடனான அந்நாடுகளின் பிராந்திய மோதல்களை மூர்க்கமாக முன்னெடுக்க ஊக்குவிக்கப்பட்டன. ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே உடன் கூட்டாகப் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒபாமா, ஜப்பானின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவிருக்கும் கடப்பாடு சர்ச்சைக்குரிய சென்காகு/டையாயு தீவுகள் உள்ளிட முழுமையானது என்று உறுதிப்பட கூறி எரியும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றினார்.

கிழக்கு சீனக் கடலில் இருக்கும் சிறிய, மக்கள் வசிக்காத, பாறைகள் நிறைந்த முகட்டுப் பகுதிகள் தொடர்பாக சீனாவுக்கு எதிரான ஒரு போரில் ஜப்பானுடன் இணைந்து கொள்ள ஒபாமா விருப்பம் காட்டுவதென்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அப்பட்டமான பொறுப்பற்ற தன்மையையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட அதிகம் அறியப்படாத ஒரு சிறு சர்ச்சையாக இருந்த ஒரு விடயம் இராணுவ மோதலுக்கான ஒரு ஆபத்தான வெடிப்புப்புள்ளியாக உருமாற்றப்பட்டிருக்கிறது. ஜப்பானுக்கு அமெரிக்காவின் முழுமையான இராணுவ ஆதரவை அறிவித்திருப்பதன் மூலமாக, சீனாவுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கான சமிக்கையை அபேவுக்கு ஒபாமா வழங்கியிருக்கிறார்.

உக்ரேனில் அமெரிக்கா பகிரங்கமாக பாசிச அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. ஜப்பானில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தையவற்றில் மிகவும் வலது-சாரியான அரசாங்கத்துடன் ஒபாமா அணிசேர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்திற்குள்ளாக, அபே தசாப்தத்தில் முதல்முறையாக இராணுவச் செலவினங்களை அதிகரித்திருக்கிறார், ஜப்பானிய இராணுவப் படைகளுக்கு அரசியல்சட்டரீதியாக இருக்கும் வரம்புகளை முடிவுக்குக் கொண்டுவர முனைகிறார், அத்துடன் அமெரிக்க பாணியிலான தேசியப் பாதுகாப்பு கவுன்சில் ஒன்றையும் ஸ்தாபித்திருக்கிறார். சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு சீனா உரிமை கோருவதை ஒப்புக் கொள்ளவும் கூட அவர் மறுக்கிறார்.

1937 நான்ஜிங் படுகொலையை (இதன்போது ஏகாதிபத்திய துருப்புகள் நூறாயிரக்கணக்கில் சீன அப்பாவி மக்களையும் படைவீரர்களையும் கொன்று குவித்தன) ஒத்த அட்டூழியங்களுக்கு பொறுப்பாக இருந்த ஜப்பானிய இராணுவவாதத்தின் முறையற்ற வழக்கங்களுக்கு அபே திட்டமிட்டு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார். போரில் இறந்த ஜப்பானியர்களுக்கான படுபயங்கரமான யாசுகுனி திருவிடத்திற்கு (இவ்விடத்தில் 14 முதல் வகுப்பு (Class A )போர் குற்றவாளிகள் புனிதமாக்கப்பட்டுள்ளனர்)சென்ற டிசம்பரில் அவர் விஜயம் செய்ததானது, ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை பூசிமெழுகுவதற்கான ஒரு பிரச்சாரத்திற்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் அமைந்திருந்தது.

ஜப்பானிய இராணுவவாதம் இவ்வாறாய் புத்துயிரூட்டப்படுவதற்கு ஒபாமா நிர்வாகமே நேரடிப் பொறுப்பாகும். ஜப்பான் பிரதமராக இருந்த யுகியோ ஹடோயோமோ சீனாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதற்கும் ஒகினாவாவில் இருந்த அமெரிக்க இராணுவத் தளங்களை அகற்றுவதற்கும் திட்டமிட்டதானது  திரும்புதலுக்கான தயாரிப்புகளுடன் மோதலுற்றதால் 2010 ஜூனில் அவர் இராஜினாமா செய்வதற்கு வெள்ளை மாளிகையில் இருந்து நிர்ப்பந்தம் பெற்றார். சென்காகு/டையாயு தீவுகள் தொடர்பான மோதல் பற்றியெரிந்த சமயத்தில், சீனாவுடன் ஜப்பான் போரிட்டால் ஜப்பானுக்கே ஆதரவு என பகிரங்கப்படுத்தி அமெரிக்கா பதட்டங்களை மேலும் மூட்டியது. அபேயும் அவரது வலது-சாரி தாராளவாத ஜனநாயகக் கட்சியும் 2012 தேசியத் தேர்தலில் வெற்றி பெற இந்த அச்ச சூழலை சுரண்டிக் கொண்டன.

இந்த வாரத்தின் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில், அபே எங்களது கூட்டணிக்கு காட்டியிருக்கும் அசாதாரணமான உறுதிப்பாடு க்காக அவருக்குப் பாராட்டுப்பத்திரம் வாசித்த ஒபாமா ஜப்பானின் மறுஇராணுவமயமாக்கத்திற்கு தனது ஒப்புதல் முத்திரையையும் வழங்கினார். எங்களது ஆழம்பெறுகின்ற பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் எங்களது படைகளை மறுஒழுங்கு செய்வதில் முன்னேற்றம் ஆகியவற்றைப் பாராட்டிய ஒபாமா ஜப்பானில் இருக்கும் அமெரிக்கப் படைகளில் எங்களது மிக முன்னேறிய இராணுவத் திறன்கள் இடம்பெற்றிருக்கும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

உக்ரேன் விடயத்தில் ஒபாமாவின் ரஷ்யாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களும், சீனாவை நோக்கமாகக் கொண்ட அவரது ஆசியாவை நோக்கிய திரும்பலும் ஈரோஆசிய(Eurasian)நிலப்பரப்பை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படியச் செய்யும் நோக்குடனான ஒரு விரிந்த மூலோபாயத்தின் இரண்டு முனைகளாகும். அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை பராமரிப்பதற்கு ஈரோ-ஆசியாவின் மையமான முக்கியத்துவம் குறித்து, 1997 இல், சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவை ஒட்டி, அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzezinski அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார். Foreign Affairs கட்டுரையில் அவர் அறிவித்தார்: ஈரோ-ஆசியா இப்போது தீர்மானகரமான புவியரசியல் சதுரங்கப்பலகையாக சேவை செய்து கொண்டிருக்கும் நிலையில், இனியும் ஐரோப்பாவுக்கென ஒரு கொள்கையையும் ஆசியாவிற்கென இன்னொரு கொள்கையையும் வகுப்பது மட்டுமே போதுமானதல்ல. ஈரோ-ஆசிய நிலப்பரப்பில் அதிகாரப் பகிர்வு விடயத்தில் என்ன நடக்கிறது என்பது அமெரிக்காவின் உலகளாவிய முக்கியத்துவத்திற்கும் அதன் வரலாற்றுவழி மரபிற்கும் தீர்மானகரமான முக்கியத்துவம் கொண்டதாக ஆகவிருக்கிறது.

ஈரோ-ஆசியாவில் அமெரிக்க லட்சியங்களுக்கான முதன்மையான முட்டுக்கட்டைகளாக இருப்பது சீனாவும் ரஷ்யக் கூட்டமைப்பும் ஆகும். ஒபாமாவைப் பொறுத்தவரையில் இந்த இரு நாடுகளும் ஏற்கனவே மத்திய கிழக்கில், குறிப்பாக சிரியாவில் இராணுவத் தலையீடு விடயத்தில், அமெரிக்கத் திட்டங்களை விரக்தியடையச் செய்திருக்கின்றன. ரஷ்யாவுடனான ஒரு மோதலைத் திட்டமிட்டுத் தூண்டியிருக்கின்ற உக்ரேனிலான அமெரிக்க சூழ்ச்சிகள், ஒரு அணு வல்லமை பெற்ற எதிரியுடன் போர் ஆபத்தில் குதிக்கவும் கூட ஒபாமா விருப்பம் கொண்டிருப்பதை விளங்கப்படுத்துகின்றன. சென்ற நவம்பரில் சீனா வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் ஒன்றை அறிவித்ததை சவால் செய்வதற்கு அணுத் திறன் படைத்த B-52 குண்டுவீச்சு விமானங்களுக்கு உத்தரவிட்ட போதே ஒபாமா சீனாவுடனான மோதல் என்ற ஆபத்தான விளையாட்டை ஏற்கனவே ஆடியிருந்தார். வாஷிங்டனின் நோக்கம் வெறுமனே ரஷ்யா மற்றும் சீனாவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, அவற்றை முழுமையாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காய் கீழ்ப்படியச் செய்ய வேண்டும், அதற்கு அவசியமென்றால் அவை உடைவதாலும் பிரிவதாலுமேனும் இது நடந்தாக வேண்டும் என்பதே அதன் நோக்கம் ஆகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் பெரும் அபாயங்களுக்கு முகம்கொடுக்கிறது. முதலாம் உலகப் போர் வெடித்த நூறு ஆண்டுகளுக்கும் பின்னரும், முதலாளித்துவமானது, 20 ஆம் நூற்றாண்டில் உலகத்தை காட்டுமிராண்டித்தனத்திற்குள் இருமுறை தள்ளிய அதே அடிப்படை முரண்பாடுகளால் உலுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் போருக்குச் செய்யும் முனைப்புடன் கைகோர்த்து தாயகத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிரான ஒரு ஆழமடைகின்ற வர்க்கப் போரும் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும், ஜப்பானிலும், மற்றும் ஐரோப்பாவிலும் இராணுவவாதம் மற்றும் போரின் ஊக்குவிப்பானது முற்றிய நிலையில் இருக்கும் உள்முகமான சமூகப் பதட்டங்களை வெளிப்புறமாக வெளியிலிருக்கும் ஒரு எதிரியை நோக்கித் திசைமாற்றி விடுவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாக இருக்கிறது.   

காலாவதியாகிப்போன இலாப அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுவதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு அரசியல் போராட்டம் இல்லாமல், போரை நோக்கிய சரிவு என்பது தவிர்க்கமுடியாததாகும். உலகெங்கும் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு தொடக்கமளிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் மே 4 அன்று இணையவழி சர்வதேச மே தினப் பேரணி ஒன்றை நடத்துகின்றன. இந்தப் போராட்டத்திற்கு உயிரூட்டக் கூடிய சர்வதேசப் புரட்சிகர சோசலிச முன்னோக்கு குறித்த இந்த பொதுவான களம் மற்றும் விவாதத்தில் இணைந்துகொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். internationalmayday.org அல்லது http://www.wsws.org/tamil/category/mayday-2014.html இன்றே முகவரியில் பதிவு செய்யுங்கள்.