சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian workers speak in solidarity with International May Day

இந்திய தொழிலாளர்கள் சர்வதேச மே தின கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசினர்

By our correspondents
26 April 2014

 Use this version to printSend feedback

சர்வதேச இணையவழி மே தின கூட்டத்துக்கான உலகளவிலான பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் குழுவினர், சென்னை ஸ்ரீ பெரும்புதூர் சிறப்பு பொருளாதார வலயம் மற்றும் நெய்வேலி நகரத்தில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) நிறுவனத்திலும் உள்ள ஊழியர்கள் உட்பட இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுடன்  பேசினர்.

அரசுக்கு சொந்தமான லிக்னைட் அகழ்வு மற்றும் மின் உற்பத்தி திட்டமான என்.எல்.சி., இப்போது மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கலை எதிர்கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 30,000 தொழிலாளர்கள் என்.எல்.சி.யில் வேலை செய்கின்றனர். இவர்களில் பாதிபேர் குறைந்த ஊதியம் பெறும், பாதுகாப்பற்ற மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர். அவர்களுக்கு போதுமான சுகாதார சேவைகளோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி வசதிகளோ கிடையாது.

என்.எல்.சி.யின் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரால் (CIRF) ஒரு ஒப்பந்த தொழிலாளியான ராஜ்குமார் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக, மார்ச் 18 அன்று வேலை நிறுத்தம் செய்தனர். என்.எல்.சி.யின் சுரங்கம் 1ல் பணிபுரிந்த ராஜ்குமார், முந்தைய நாள் ஒரு சக தொழிலாளியை பார்க்க அனுமதி கேட்டது சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தின் பின்னர், ஒரு CIRF பாதுகாப்பு உத்தியோகத்தரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரு நிரந்தர என்.எல்.சி. தொழிலாளியான சண்முகம், சர்வதேச மே தின கூட்டத்தில் பங்குபற்றுமாறு விடுத்த அழைப்பை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யாவிட்டால் உக்ரைன் நெருக்கடி ஒரு போருக்கு வழிவகுக்கும் என்று தான் நினைத்ததாக அவர் கூறினார்.

"இங்கே இந்தியாவில் இப்போது நடக்கும் மக்களவை தேர்தரலில், அரசியல் கட்சிகள் மத தீவிரவாதத்தையும் தேசியவாதத்தையும் தூக்கிப் பிடிப்பதை நீங்கள் பார்க்க முடியும்" என சண்முகம் கூறினார். "அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டமைக்கு பொறுப்பான பாரதிய ஜனதா கட்சி, முஸ்லிம்களுக்கு எதிரான மத தீவிரவாதத்தை தூண்டி வருகின்றது. தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, தமிழ் தேசியவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றன.

"வேலைத் தளங்களிலும் அதே போல் குடியிருப்பு பகுதிகளிலும் நாம் சகோதர சகோதரிகள் போல் இருக்கின்றோம். ஆனால் அரசியல் கட்சிகளே எங்களை பிரிக்க முயற்சிக்கின்றன. நான் அதை முற்றிலும் எதிர்க்கிறேன். எங்களுக்கு மத அல்லது இனவாத பிளவுகள் தேவையில்லை. தங்கள் உரிமைகளுக்காக போராட தொழிலாளர்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையே அவசியம். எனவே உலகப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க சர்வதேச மே தினம் முக்கியமானது. நான் அதில் பதிவு செய்து பங்கேற்க வேண்டும்."

உப-ஒப்பந்த தொழிலாளியான செல்வகுமார் கூறியதாவது: "நான் ராஜ்குமார் கொல்லப்பட்டதற்கு விரோதமான எதிர்ப்பில் பங்கேற்றபோது தாக்கப்பட்டேன். நான் 30 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதும் எனக்கு ஆறு நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. நான் 13 ஆண்டுகளாக என்.எல்.சி.யில் வேலை செய்கிறேன். ஆனால் இன்னும் நான் நிரந்தரமாக்கப்படவில்லை. எனது மாத சம்பளம் 5,000 ரூபாய் [சுமார் 82 அமெரிக்க டொலர்] மட்டுமே. என் மனைவியும் கூட கூலி வேலை செய்கிறார். அவளுக்கு ஒரு நாளைக்கு 50 ரூபாய் மட்டுமே கிடைக்கும். நாம் வேலை நிறுத்தம் செய்தோம், ஆனால் தொழிற்சங்கங்கள் எமது போராட்டத்தை தனிமைப்படுத்தி எங்களை காட்டி கொடுத்துவிட்டன. அவர்கள் நிர்வாகத்திடம் தங்களை விற்றுக்கொண்டனர்."


கிருஷ்னன்

மாநில பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்ட தொழிலாளியின் இளைய சகோதரர் கிருஷ்னன், ஒரு மின்சார தொழிலாளி ஆவார். WSWS  நிருபர்களிடம் பேசிய அவர் விளக்கியதாவது: "என்னுடைய சகோதரன் மரணமடைவதற்கு முன்பிருந்தே நான் மாற்று அமைப்பு ஒன்றை தேடி வந்தேன். நான் உண்மையில் உங்களை சந்தித்த பின்னர் ஊக்கமடைந்துள்ளேன். உங்கள் அமைப்பு ஒரு சர்வதேச மே தின கூட்டத்தை நடத்தப் போகிறது என்பது மிகவும் சுவாரஸ்யமான செய்தி. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இலங்கை போரில் கொல்லப்பட்டனர். நாம் போர் விரும்பவில்லை."

இந்திய தேர்தல் பற்றி கருத்து தெரிவித்த அவர், "நான் எந்த கட்சியையும் நம்பவில்லை. அரசியல்வாதிகள் தேர்தலில் நாட்களுக்கு முன் மட்டுமே வருகின்றனர். சிபீஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் சிபீஎம் (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டவை அல்ல. எனவே மக்களுக்கு செல்வந்தர்களின் நலன்களுக்கு அன்றி, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் மாற்று அரசியல் அமைப்பு ஒன்று வேண்டும்."

சென்னை ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) இந்தியாவில் மிக பெரிய தொழில்துறை வலயங்களில் ஒன்றாகும். 200,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தெற்கு மற்றும் வடக்கில் வறுமை வாடும் கிராமப்புற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிறிய அறைகளில் வாழ்கின்றனர்.

52 வயதான பயிற்சி அலுவலரான கோபிநாத், இணயவழி கூட்டம் பற்றி உற்சாகத்துடன் பேசினார். “அமெரிக்கா மனிதப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய மோசடியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஈராக்கை ஆக்கிரமிக்க அதனது இராணுவத்தை பலப்படுத்தியது. அந்த நாட்டை ஆக்கிரமித்தமை, இலட்சக்கணக்கான மக்களின் சாவை விளைவித்தது. தனது நலன்களுக்கு தீர்க்கமானதாக உள்ள எந்த நாட்டுக்கும் எதிராக அமெரிக்கா யுத்தம் நடத்தி வந்துள்ளது. இப்போது அது தனது பொம்மை ஆட்சி ஒன்றை உக்ரேனில் உருவாக்கியுள்ளது. அது ஏற்கனவே ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக யுத்த திட்டங்களைக் கொண்டுள்ளது... இந்த நாடுகள் அனுவாயுதங்களைக் கொண்டுள்ளதால் அவை ஒன்றுக்கொன்று மோதலுக்கு போவதில்லை, மாறாக சமாதானப் பேச்சுக்களில் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் என நான் நினைத்தேன். ஆனால் உங்களது விளக்கம் சரியானது –அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளும் உலகை போருக்குள் இழுத்து, ஒரு அனுவாயுத மோதல் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.”


ரஞ்சன்

21 வயதான ஹுன்டாய் விநியோக நிறுவனத்தின் வடிவமைப்பாளரான ரஞ்சன் கூறியதாவது: “இதுவரை என் வாழ்க்கையில் நான் ஒரு மே தினக் கூட்டத்தில் பங்குபற்றியதில்லை. ஆனால் எனக்கு மே தினத்தைப் பற்றியும் 8 மணித்தியால வேலை நாளுக்கான போராட்ட வரலாற்றை பற்றியும் எனக்குத் தெரியும். இப்போது முதலாளிகள் உலகம் பூராவும் வேலை நன்மைகளையும் ஊதியங்களையும் வெட்டிக் குறைக்கின்றனர். தொழிற்சங்கங்கள் எமது உரிமைகளை பாதுகாப்பதில்லை. நீங்கள் சொல்வது போல் தொழிலாளர்களுக்கு சக்தி வாய்ந்த அமைப்புகள் தேவை மற்றும் அது சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போராட வேண்டும். பல நாடுகளில் இருந்து தலைவர்கள் சர்வதேச மே தினக் கூட்டத்தில் உரையாற்றுவர் என்ற விடயம் என்னை ஈர்த்துள்ளது. நான் அதில் பங்குபற்ற தயாராக உள்ளேன்.”