சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Independent Workers Inquiry presents findings on Weliweriya water pollution

இலங்கை: சுயாதீன தொழிலாளர் விசாரணை வெலிவேரியவில் நீர் மாசடைதல் பற்றிய ஆய்வறிக்கைகளை வெளியிடுகின்றது

By our reporters
24 July 2014

Use this version to printSend feedback

வெலிவேரியவில் நீர் மாசடைவு தொடர்பான சுயாதீன தொழிலாளர் விசாரணை குழு, ஞாயிறன்று கம்பஹாவில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் அதன் கண்டுபிடிப்புக்கள் மற்றும் முடிவுகளை வெளியிட்டது.


கூட்டத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), வெனிக்ரோஸ் டிப்ட் புரடக்டஸ் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக பரந்தளவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், கடந்த நவம்பரில் இந்த சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழுவை ஆரம்பித்தது. இராஜபக்ஷ அரசாங்கம், ஆகஸ்ட் 1ம் திகதி, இந்த மாசுபடுத்தலுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை அடக்குவதற்கு இராணுவத்தை அணிதிரட்டியது. வன்முறைத் தாக்குதலில் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு இளம் தொழிலாளியும் கொல்லப்பட்டதுடன் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

நீரை மாசுபடுத்துவதாக வெனிக்ரோஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு மற்றும் அத்தோடு சம்பந்தப்பட்ட சுகாதார பிரச்சினைகள்; தொழிற்சாலையில் வேலை நிலைமைகள்; இராணுவ கொலைகளுக்கு யார் பொறுப்பு; தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பயங்கரமான தொழில்துறை மாசுபடுத்தலுக்கான ஒரு தீர்வு பற்றியும் ஆராய இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம், இந்த விசாரணைக் குழு, அவிஸ்ஸாவெல்ல துன்னானவில் உள்ள ஹன்வெல்ல இரப்பர் தயாரிப்புகள் ஆலை மூலம் நீர் மற்றும் காற்று மாசுபடுத்தப்படுவது பற்றி விசாரணை செய்ய தனது வேலையை நீட்டிக்க முடிவு செய்தது. இந்த ஆலையும் டிப்ட் புரடக்ட்ஸ் கம்பனிக்கே சொந்தமானதாகும்.

அரசாங்கம் மற்றும் நிறுவனத்தின் தூண்டுதலின் பேரில் மண்டபங்களின் உரிமையாளர்கள் போலீசாரால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில், விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கையை முன்வைக்கும் கூட்டத்துக்கான இடத்தை பல முறை மாற்ற வேண்டியிருந்தது. கூட்டம் ஆரம்பத்தில் வெலிவேரியவில் உள்ள விழா கயா மண்டபத்தில் ஜூன் 29 திட்டமிடப்பட்டிருந்த போதும், போலீஸ் சதித்திட்ட முறையில், விசாரணைக் குழுவின் மண்டப முன்பதிவை இரத்துசெய்யுமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஏனைய உள்ளூர் மண்டப உரிமையாளர்கள் நிகழ்வை நடத்த தங்கள் மண்டபங்களை வாடகைக்கு விடத் தயக்கம் காட்டினர்.

வெலிவேரியவில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்பஹா நகர மண்டபத்தில், ஜூலை 20 கூட்டத்தை நடத்த திட்டமிட்டு கட்டணமும் செலுத்தப்பட்டிருந்தது. அந்த மண்டபம் தற்போது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சி சபைக்கு சொந்தமானதாகும். கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், நகரசபை விசாரணைக் குழு, அந்த இடம் கிடைக்காது என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்தது. அன்றைய நாளில் மண்டபம் திருத்தப்பட உள்ளதாக ஒரு பொய் காரணம் கூறப்பட்டது. விசாரணைக் குழு விரைவில் கம்பஹாவில் மற்றொரு மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தது.

நிறுவனம், அரசாங்கம் மற்றும் போலீசும் ஆரம்பத்தில் இருந்தே விசாரணைக் குழுவின் விசாரணைகளுக்கு விரோதமாக இருந்தன. மற்ற கட்சிகள் அனைத்தும் பிரச்சினையை கைவிட்டுள்ளபோது, சோசலிச சமத்துவக் கட்சி இந்த பிரதேசத்தில் நீர் மாசுபாடு பற்றி கலந்துரையாடுவது ஏன், என வெலிவேரியவில் போலீசின் பொறுப்பதிகாரி விசாரணைக் குழு அமைப்பாளர் ஒருவரிடம் கேட்டார்.

கடந்த ஏழு மாதங்களில், வெலிவேரிய மற்றும் துன்னான குடியிருப்பாளர்களிடம் இருந்தும், டிப்ட் புரடக்ட்சுக்கு சொந்தமான இரண்டு ஆலைகளின் பல தொழிலாளர்களிடம் இருந்தும், விசாரணைக் குழு விரிவான ஆதாரங்களை சேகரித்துள்ளது. பல்வேறு அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றியும் விசாரணைக் குழு தகவல்களை திரட்டிக்கொண்டது. அவை பெரும்பாலும் நிறுவனத்தை பாதுகாப்பனவாக இருந்தன. எதிர்ப்பு காட்டும் உள்ளூர்வாசிகளுக்கு எதிராக இராணுவம் நிறுத்தப்பட்டமை பற்றிய விரிவான தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

ஞாயிறு கூட்டத்துக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் W.A. சுனில் தலைமை தாங்கியதோடு விசாரணை கண்டுபிடிப்புகளை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் விசாரணைக் குழு அழைப்பாளருமான விலானி பீரிஸ் முன்வைத்தார். குழு விசாரணை செய்த பிரச்சினைகள் பற்றி ஆறு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விசாரணைக் குழுவுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரவலான ஆதரவு கிடைத்தது. வெலிவேரியவில் மற்றும் துன்னானவில் இருந்தும் பிரதிநிதிகள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


பாணினி விஜேசிறிவர்தன

நீர் மாசுபாடு பற்றிய அறிக்கையை முன்வைத்த சோசக அரசியல் குழு உறுப்பினர் பாணினி விஜேசிறிவர்தன கூறியதாவது: "தொழிற்சாலையில் இருந்து வெளியிடப்பட்ட தண்ணீரில் நச்சு இரசாயனங்கள் கலந்திருந்தமையே பிரதேசத்தில் நீர் மாசுபட காரணம், ஆனால் கம்பனி மற்றும் சுற்றுச் சூழல் அதிகாரசபை உட்பட பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் நனவாக இந்த உண்மையை மூடிமறைத்துள்ளன.

"உள்ளூர் மக்களின் எதிர்ப்பு வளர்ச்சி கண்ட நிலையில், ஜனாதிபதி இராஜபக்ஷ, விஞ்ஞானபூர்வமான ஆய்வை செய்யும் திறன் கொண்ட தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனத்தை நீர் மாசடைவு பற்றி ஆராய்ச்சி செய்யுமாறு உத்தரவிட்டார். ஆனால், வரையறுக்கப்பட்ட வழியிலேனும் நிறுவனத்தில் குற்றம் கண்டதனால் அந்த அமைப்பின் அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. விஜேசிறிவர்தன, நீர் மாசுபாடு பற்றியும் அதன் விளைவாக ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் பற்றியும் விரிவான அறிவியல் தரவுகளை வழங்கினார்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் சஞ்சய வில்சன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட நிராயுதபாணிகளான உள்ளூர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இராணுவ தாக்குதலை ஆராய்ந்தார். கண்கண்ட சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் இராணுவ நடவடிக்கை ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பதை நிரூபிக்கின்றன, மற்றும் அது இலங்கை இராணுவத்தினர் 2009ல் முடிவுக்கு வந்த தமிழர்களுக்கு எதிரான கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒத்தவையாகும் என்று அவர் கூறினார்.

"தாக்குதலின் தன்மை மற்றும் விசாரணைக் குழு சேகரித்த சான்றுகள் அனைத்தும், இராணுவ நிலைநிறுத்தம் மற்றும் தாக்குதலே கூட அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி இடம்பெற்றதாகவே காட்டுகின்றன, என்று அவர் தெரிவித்தார்.



W.A.
சுனில்

கூட்டத்தின் தலைவர் W.A. சுனில் வெனிக்ரோஸ் தொழிற்சாலையின் வேலை நிலைமைகள் பற்றிய ஆதாரங்கைள வழங்கினார்.

உற்பத்தி தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் இருந்து பெற்ற ஒப்பந்த ஊழியர்களாவர், என அவர் விளக்கினார். "அவர்களின் அன்றாட ஊதியம் 350 ரூபாய் (2.70 டாலர்) மட்டுமே மற்றும் அவர்களது மாத வருமானம் 22,500 ரூபாவுக்கு மேற்பட்டதாக இல்லை," என அவர் கூறினார்.

"180 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரமாக்க வேண்டும் என தொழில் சட்டங்கள் கூறுகின்ற போதிலும், வெனிக்ரோஸ் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு காலமாக ஒப்பந்த தொழிலாளர்களை வைத்துள்ளது. தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், ஒடுக்குமுறை நிலைமைகளில் உழைக்கின்றார்கள்."

பல்வேறு உதாரணங்கள் மேற்கோள் காட்டிய சுனில், தொழில்துறை மாசுபடுத்தல் தேசிய மற்றும் சர்வதேச பேரழிவாகும் என்று கூறினார். "சில சுற்று சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் கூறியது போல், இது தொழில்துறை வளர்ச்சியின் ஒரு தவிர்க்க முடியாத விளைவு அல்ல. மாறாக, உழைக்கும் மக்கள் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல், கொள்ளையடிக்கும் முதலாளித்துவ உற்பத்தியினதும் இலாப விரிவாக்கத்தினதும் விளைவாகும்."

கூட்டத்தில் உரையாற்றிய சோசலிச சமத்துவக் கட்சி, அரசியல் குழு உறுப்பினர் ரொஹான்த டி சில்வா, "நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது கட்சிகள், நீர் மாசடைவதற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டத்தை தடம்புரளச் செய்வதில் மோசடிப் பாத்திரம் கொண்டிருந்தனர்" என்று கூறினார்.

நவ சம சமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் மக்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்கு வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சிக்கு உதவின, ஆனால் "இப்போது அவர்கள் அனைவரும் மௌனமாக இருக்கின்றனர்... தொழிலாளர்களும் இளைஞர்களும் இத்தகைய கட்சிகளை நிராகரிக்க வேண்டும். இந்த அமைப்புகள் கூறுவது போல், முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தொழிற்துறை மாசுபடுத்தலுக்கு தீர்வு இருக்க முடியாது" என்று அவர் மேலும் கூறினார்.


விலானி பீரிஸ்

விலானி பீரிஸ் ஆதாரங்களை சுருக்கமாக முன்வைத்து விசாரணை முடிவுகளை வெளியிட்டார்: "வெலிவேரியவில் மற்றும் துன்னானவில் உள்ள ஆலைகளின் உரிமைத்துவம் கொண்ட டிப்ட் புரடக்ட்ஸ், நீர் மற்றும் காற்று மாசடவைதற்கு பொறுப்புடைமை கொண்டுள்ளதோடு இரண்டு இடங்களிலும் நடந்த இராணுவ மற்றும் பொலிஸ் தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுபு என்று விசாரணைக் குழு ஸ்தாபித்துள்ளது.

"வெலிவேரியவில் வெனிக்ரோஸ் ஆலை மூடப்பட்டால் நீர் மாசுபடும் பிரச்சினை தீர்ந்து விடும் என்று அரசாங்கம் கூறுவது பொய்யாகும். பிரதேசத்தில் நீர் ஏற்கனவே மாசுபட்டுள்ளது. உள்ளூர் மக்கள் வரவுள்ள பல ஆண்டுகளுக்கு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதே இதன் அர்த்தமாகும், என்று அவர் கூறினார்.

அருகில் உள்ள பியகம சுதந்திர வர்த்தக வலயத்துக்கு வெனிக்ரோஸ் ஆலையை இடமாற்றம் செய்வதன் அர்த்தம், அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்களும் அதே பிரச்சினைகளை எதிர்கொவர் என்பதே ஆகும், என்று பீரிஸ் கூறினார். வெனிக்ரோஸ் தொழிலாளர்கள் விசாரணைக் குழுவுக்கு வழங்கிய தகவல்களின் படி, புதிய இடத்தில் ஒரு சில ஊழியர்களுக்கு மட்டுமே வேலைகள் வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகள் குறைக்கப்பட்டுள்ளன, என்று அவர் கூறினார்.

"ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு எதிராக இராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், அரசாங்கம் முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் வணிகர்களை பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ளதையே காட்டுகிறது... இந்த தாக்குதல்களின் மூல காரணம், இலாப முறையின் ஆழ்ந்த நெருக்கடியே ஆகும்," என்று அவர் கூறினார்.

"இந்த அமைப்பு முறையினால் மக்களின் அடிப்படை தேவைகளை வழங்க முடியாது. மாறாக, அது கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் வென்ற அனைத்து உரிமைகளையும் அழிக்க முயல்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு சமூக எதிர்ப்-புரட்சி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சோசலிச அமைப்புமுறை ஒன்றை ஸ்தாபித்து உற்பத்தியை ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, மனித தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு அறிவுபூர்வமாக ஒழுங்கமைப்பதன் ஊடாக மட்டுமே, தொழில்துறை மாசுபடுத்தலையும் பிற பேரழிவு நிலைமைகளையும் முடிவுக்கு கொண்டுவர முடியும்," என பீரிஸ் விளக்கினார்.