சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

UK parliamentary panel demands NATO prepare for confrontation with Russia

ரஷ்யா உடனான மோதலுக்கு நேட்டோ தயாராக வேண்டுமென இங்கிலாந்து நாடாளுமன்ற குழு கோருகிறது

By Julie Hyland
1 August 2014

Use this version to printSend feedback

ரஷ்யா உடனான மோதலுக்கு தயாராக மேற்கத்திய இராணுவ அதிகாரங்கள் நேட்டோவைப் பலப்படுத்த வேண்டுமென இங்கிலாந்தின் நாடாளுமன்ற இராணுவ கமிட்டி முறையிட்டுள்ளது.

"நேட்டோ கூட்டணி இருபது ஆண்டுகளாக ரஷ்யாவை ஒரு எதிரியாகவோ அல்லது அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒரு முக்கிய பிராந்திய அச்சுறுத்தலாகவோ கருதாமல் விட்டுவிட்டது", இப்போது தான் கிழக்கு உக்ரேனில் "ரஷ்யாவின் சமீபத்திய நடவடிக்கைகளின் ஒரு விளைவாக அவ்வாறு கருத நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக" பழமைவாத கட்சி, தொழிற்கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களினது அனைத்துக் கட்சி குழுவின் அறிக்கை குறை கூறுகிறது.

இதற்கிடையே, நேட்டோ கூட்டணியின் உறுப்பு நாடுகள் அவற்றின் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை வெட்டியுள்ளதால், ரஷ்ய "ஆக்ரோஷத்தை" முகங்கொடுக்க அது "தயாரிப்பின்றி நொடிந்து போய்" விடப்பட்டு, பலவீனமடைந்துள்ளதோடு, சாத்தியமான அளவிற்கு ஒருமித்த நடவடிக்கை எடுப்பதற்கான ஒருமனதான அரசியல் விருப்பமும்" இல்லாமல் இருக்கிறது... என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தோல்விகள் என கருதப்படும் இவற்றிற்கு பரிகாரமாக, செப்டம்பரில் வேல்ஸில் ஒன்றுகூட உள்ள நேட்டோ உச்சிமாநாட்டில், “தற்போதிருக்கும் நேட்டோ அதிரடி பதிலடிப் படையை" விரிவாக்கவும், “பால்டிக் நாடுகளில் முன்கூட்டிய உபகரணங்களை நிலைநிறுத்துவதைத்" தொடங்குமாறும், “பால்டிக்கில் (தொழில்நுட்பரீதியாக நிரந்தரமாக இல்லையென்றாலும்) நேட்டோ துருப்புகளின் தொடர்ச்சியான பிரசன்னத்தை" ஸ்தாபிக்கவும் மற்றும் "அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பரந்தளவிலான இராணுவ ஒத்திகைகளை" மறு-ஸ்தாபிதம் செய்யவும் இராணுவ கமிட்டி அழைப்புவிடுக்கிறது. அது அனைத்து உறுப்பு நாடுகளும் அவற்றின் இராணுவ செலவுகளை அதிகரிக்குமாறும் பரிந்துரைக்கிறது.

நேட்டோ கூட்டணியின் ஸ்தாபக உடன்படிக்கையின் 4 மற்றும் 5வது ஷரத்துகளின் விதிமுறைகளை அது விரிவாக்க வேண்டுமென்ற அந்த கமிட்டியின் பரிந்துரை குறிப்பிடத்தக்கதாகும், அந்த ஷரத்துகள் ஒரு நேட்டோ கூட்டாளி மீதான ஒரு "ஆயுதமேந்திய தாக்குதல்" சம்பவத்தில் ஒருமித்த நடவடிக்கையைத் தூண்டுகிறது.

"சமச்சீரற்ற தாக்குதல்களுக்கு எதிராக, 'ஒருமித்த பாதுகாப்பு' ஒத்துழைப்புக்கான ஷரத்து 4இன் கீழ் அழைப்பு விடுப்பதற்கான தகுதிவகைகள், கோட்பாடுகள் மற்றும் விடையிறுப்புகளை" மீண்டும் மறுஆய்வு செய்ய வேண்டுமென அது குறிப்பிடுகிறது. குறிப்பாக எந்தவொரு தாக்குதல் வடிவத்திற்கான விடையிறுப்பு நடவடிக்கையில் உதவுவதற்காக, 5வது ஷரத்திலிருந்து "ஆயுதபாணியாக்குவது" என்ற சொல்லை நீக்க வேண்டுமென அது வாதிடுகிறது. உளவியல் நடவடிக்கைகள், தகவல் பரிமாற்ற யுத்தமுறை மற்றும் அணுஆயுதமல்லாத படைகளை ஒன்றுதிரட்டி பயமுறுத்துதல் உட்பட", இத்தகைய நடவடிக்கைகளை "உடைமையாக்க முடியாது" என்றாலும் கூட, அதுபோன்ற பல்வேறு விதமான கருவிகளைக் கொண்டு அதன் நலன்களைப் பின்தொடர்வதில் ஓர் எதிராளியை", ரஷ்யாவின் ஆற்றலை, "முடமாக்குவதை" உள்ளடக்க வேண்டுமென அது வாதிடுகிறது.

உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடன் பிரிட்டன் "மூன்றாம் உலக யுத்தத்தைத் தொடங்காது" என்ற பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அளித்திருந்த மறுஉத்தரவாதங்களை இந்த அறிக்கை பொய்யென்பதாக வெளிப்படுத்துகிறது.

முதலாம் உலக யுத்தம் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தைத் தூண்டிவிட்ட நெருக்கடிகளை உக்ரேனிய நெருக்கடியோடு ஒப்பிட்ட பின்னர் கேமரூன் புதனன்று குறிப்பிடுகையில், “நாங்கள் ஓர் ஐரோப்பிய யுத்தத்தைத் தொடங்கப் போவதில்லை, நாங்கள் கருங்கடலுக்கு ஒரு படையை அனுப்பப் போவதில்லை, நாங்கள் ஓர் இராணுவ மோதலை எதிர்நோக்கி இல்லை, ஆனால் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்றால் எங்களிடம் இருக்கும் பொருளாதார சக்தியை பயன்படுத்தப் போகிறோம்," என்றார்.

இராணுவத் தாக்குதல் உட்பட ரஷ்ய கூட்டரசு மீதான நேட்டோவின் நீண்டகால புவிசார் மூலோபாய வடிவமைப்புகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், இராணுவ கமிட்டியின் அந்த அறிக்கை, முன்பைவிட அதிக வெறித்தனமான பிரச்சார இயக்கத்தின் பாகமாக உள்ளது.

சம்பவங்களை ஒட்டிய நேட்டோ நிலைப்பாட்டைக் குறித்த இராணுவ கமிட்டி தரும் விளக்கத்திற்கு நேர்மாறாக, அந்த நேட்டோ கூட்டணியோ 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து அந்த மூலோபாயத்தைத் தான் பின்பற்றி வந்திருக்கிறது. அந்த ஆண்டில் தொடங்கி, அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் தலைமையில் மேற்கத்திய அதிகாரங்கள் ஸ்லோவேனியா, குரோஷியா மற்றும் பின்னர் பொஸ்னியாவின் உடைந்து சென்ற அரசுகளை அங்கீகரித்தன் மூலமாக யூகோஸ்லாவியாவை உடைக்கத் தொடங்கியதோடு, 1999இல் சேர்பியாவின் மீது நேட்டோவின் குண்டுவீச்சைக் கொண்டு வந்தன.

அதை தொடர்ந்து பின்னர், 2003இல் ஜோர்ஜியாவில் "ரோசா வண்ணப் புரட்சி", மற்றும் 2004இல் உக்ரேனில் "ஆரெஞ்சு புரட்சி" ஆகியவை ஆதரிக்கப்பட்டன—அவை இரண்டுமே மேற்கத்திய-சார்பிலான ஆட்சிகளை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டிருந்தன. ஆகஸ்ட் 2008இல், தெற்கு ஒசேஷியா மாகாண உடைவின் மீது ஒரு ஜோர்ஜிய தாக்குதலை அமெரிக்கா ஊக்குவித்தது.

ஜோர்ஜிய நடவடிக்கையின் தோல்வியால் ஓர் அடி பின்வாங்கிய நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான மேற்கத்திய தலையீடுகளின் பேரழிவுகரமான விளைவுகளோடு, கடந்த ஆகஸ்டில் சிரியாவிற்கு எதிரான நேரடி இராணுவ தலையீட்டிற்கான அதன் திட்டங்களை ரஷ்யா தடுத்தபோது நேட்டோ அதன் அபிலாஷைகளை மீண்டும் புதுப்பித்தது.

உக்ரேனிய மக்களுக்கு எதிராக கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதை உள்ளடக்கி இருந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகளை நெருக்கமாக்குவதுமான பரிந்துரைகளை அப்போதைய ஜனாதிபதி யானுகோவிச் நிராகரித்த பின்னர், வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனிய ஆட்சி மாற்றத்திற்கான திட்டங்களை முடுக்கிவிட்டன.

வாஷிங்டனின் உயர்மட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி விக்டோரியா நூலாந்து, "ஐரோப்பிய ஒன்றியத்தை சீரழியுங்கள்" என்ற அவரது இழிவார்ந்த தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டதைப் போல, மேற்கத்திய சார்பிலான "எதிர்ப்பு" சக்திகளை கட்டமைப்பதற்கு அமெரிக்கா 5 பில்லியன் டாலர் செலவிட்டிருந்ததோடு, அந்த இயக்க உந்துதலையும் கைப்பற்றியது.

யானுகோவிச்சை வன்முறைரீதியில் நீக்குவதை வடிவமைக்கவும், அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் செல்வந்த மேற்தட்டுக்களின் ஓர் அரசாங்கத்தை நிறுவவும் பாசிசவாத குண்டர்கள் மற்றும் ஆத்திரமடைந்திருந்தவர்களை சார்ந்திருந்து, மைதான் போராட்டங்கள் என்றழைக்கப்பட்டதை, ஜேர்மனியின் ஒத்துழைப்போடு, அமெரிக்கா ஆதரித்தது.

இப்போதோ, இந்த சூழ்ச்சியின் சமீபத்திய கட்டத்தில், நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் குற்றகரமான நோக்கங்களை முன்னெடுக்க கிழக்கு உக்ரேனில் MH17 மலேசிய விமானத்தின் துன்பியலான வெடிப்பை பற்றிக்கொண்டுள்ளன.

மாஸ்கோவால் ஆதரிக்கப்படும் ரஷ்ய-சார்பிலான பிரிவினைவாதிகளே அந்த விமானத்தில் இருந்த 298 பேரின் மரணங்களுக்கு பொறுப்பாகிறார்கள் என்ற அவர்களின் வாதங்களுக்கு ஆதரவாக, இரண்டு வாரங்கள் ஆகியும், மேற்கத்திய சக்திகள் முக்கிய ஆதாரத்தின் ஒரு துணுக்கையும் கூட சமர்ப்பிக்கவில்லை. உண்மையில் ரஷ்யாவினால் வழங்கப்பட்ட செயற்கைகோள் மற்றும் உளவுத்துறை ஆதாரங்கள், அப்பகுதியைச் சுற்றியுள்ள சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களின் மீது திட்டமிட்டு குண்டுவீசுவது உட்பட விமானம் வெடித்த இடத்தை அணுகவிடாமல் தடுக்கும் உக்ரேனிய ஆட்சியின் ஆக்ரோஷ நடவடிக்கைகளோடு சேர்ந்து, ஒருவேளை அந்த விமானம் சுட்டுவீழ்த்தப்படுவதற்கு கியேவுடன் சேர்ந்துள்ள சக்திகளே பொறுப்பாக இருந்திருக்குமோ என குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

இருந்த போதினும், அந்த விமான வெடிப்பை ஒட்டி வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் மாஸ்கோவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன.

ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை பதவியிலிருந்து இறக்கவும் மற்றும் இன்னும் மேற்கத்திய-சார்பிலான ஆட்சியை நிறுவுவதற்கும் ரஷ்யாவின் செல்வந்த மேற்தட்டுக்களை ஊக்குவிப்பதே கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட நிதியியில் தடைகளின் உடனடி நோக்கமாகும்.

ஆனால் இங்கிலாந்து இராணுவ கமிட்டி அறிக்கை தெளிவுபடுத்துவதை போல, சாத்தியமானரீதியில் ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தின் படுபயங்கர விளைவுகளோடு, ரஷ்ய பொருளாதாரத்தைச் சிதைப்பதற்கு அமெரிக்காவும் பிரதான ஐரோப்பிய சக்திகளும் தயாராக உள்ளன என்பது மட்டுமல்ல. அவற்றின் நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கு உள்ளேயே உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச்செல்லும் என்ற சாத்தியக்கூறுகளாலும் கூட அவை பின்வாங்கவில்லை.

அவற்றின் பொறுப்பற்ற உபாயங்கள், அணுஆயுத போர் அபாயத்திற்கு உட்படுத்துகின்ற நிலையிலும் கூட, ரஷ்ய கூட்டரசை உடைப்பதும், அதன் முக்கிய ஆதாரவளங்களைக் கைப்பற்றுவதுமே அவற்றின் இறுதியான இலக்காக உள்ளது.

ஐரோப்பாவில் உள்ள நேட்டோவின் உயர்மட்ட தளபதி ஜெனரல் பிலிப் பிரீட்லோவ் கடந்த வாரம் நேப்ள்சில் சுருக்கமாக கூறுகையில், போலாந்தின் ஸ்க்ஜெசினில் உள்ள நேட்டோ கூட்டணியின் இராணுவ தளம் "முன்கூட்டியே ஆயத்தப்படுத்திய வினியோகங்களுக்கான, முன்கூட்டியே ஆயத்தப்படுத்திய தகைமைகளுக்கான மற்றும் தொடர்ந்துவரும் படைகளை வேகமாக ஏற்றுக்கொள்ள தயாரான ஓர் ஆதார பகுதிக்கான," ஓர் அரங்கமாக மாற்றப்பட உள்ளது," என்றார்.

இத்தகைய தூண்டுதல்களில் இங்கிலாந்து ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அக்டோபரில், நேட்டோவின் Black Eagle ஒத்திகை போலாந்தில் தொடங்கும், அது ரஷ்யாவிற்கு எதிராக "பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வாக" சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதில் பங்கெடுக்க, 1,350 துருப்புகள் மற்றும் 350க்கும் அதிகமான ஆயுதமேந்திய மற்றும் ஏனைய வாகனங்களை உள்ளடங்கிய "யுத்தத்திற்கு தயாரான" ஒரு இராணுவபடை பிரிவை அனுப்புவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது, இது 2008இல் ஜோர்ஜிய ஆத்திரமூட்டலுக்கு பின்னர் அப்பிராந்தியத்தில் அதன் மிகப்பெரிய பொறுப்பேற்பாகும்.

The Duke of Lancaster’s Regiment என்ற இங்கிலாந்தின் முதல் இராணுவ படைப்பிரிவிலிருக்கும் மிதமான காலட்படை துருப்புகள், 16 நேட்டோ மற்றும் கூட்டு நாடுகள் பங்கெடுக்கும் அமெரிக்க தலைமையில் இந்த மாத இறுதியில் போலாந்தில் நடக்கும் சாப்ரே ஜங்ஷன் (Sabre Junction) ஒத்திகையிலும் பங்குபெற உள்ளன.