சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One hundred years since the outbreak of World War I

முதலாம் உலக யுத்தம் வெடித்ததில் இருந்து ஒரு நூறு ஆண்டுகள்

Nick Beams
5 August 2014

Use this version to printSend feedback

நேற்றைய தினம் ஜேர்மனிக்கு எதிரான பிரிட்டனின் யுத்த பிரகடனத்தின் 100வது நினைவுதினத்தை குறித்தது. அப்பிரகடனத்தோடு முதலாம் உலக யுத்தத்திற்குள் அனைத்து ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் பிரவேசமும் முழுமையடைந்தது.

பெல்ஜியம் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள நடுநிலைமை வகிப்பதாக அறிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 3 இல் பிரான்சிற்கு எதிரான ஜேர்மனியின் யுத்தப் பிரகடனத்தாலும் மற்றும் பெல்ஜிய மண்ணில் துருப்புகளை அது நிலைநிறுத்தியதால், அதனது நடுநிலைமை மீறப்பட்டுவிட்டது என்பதை போலிக்காரணமாகக் கொண்டு பிரிட்டனின் யுத்த பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

பிரான்சின் கூட்டாளியான ரஷ்யாவால் துருப்புகள் அணிதிரட்டப்பட்டதற்கு பின்னரே, ஜேர்மனி யுத்தப் பிரகடனத்தை வெளியிடவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில், அது மிகக்கவனமாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ரஷ்ய துருப்புக்களின் அணிதிரள்வு ஜூலை 28 இல் சேர்பியா மீதான ஆஸ்திரியாவின் யுத்த பிரகடனத்தால் தூண்டப்பட்டிருந்தது. ரஷ்யா தென்கிழக்கு ஐரோப்பாவில் அதன் விரிவாக்கவாத நோக்கங்களுக்காக சேர்பியாவை பாதுகாக்க உறுதியளித்திருந்தது.

அதற்கடுத்த நான்காண்டுகளில், அவற்றின் நிஜமான யுத்த நோக்கங்களை மூடிமறைப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகளின் பிரச்சார கருவிகள் மெருகூட்டப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன.

பிரிட்டன், "ஹூனின்" [Hun - ஜேர்மன் ஆஸ்திரிய இராணுவத்தினர்] அட்டூழியங்களை எதிர்க்கவும் மற்றும் "சிறிய தேசங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும்" தலையீடு செய்வதாக வாதிட்டது. ஆனால் "சிறிய பெல்ஜியம்" ஆபிரிக்காவில் கணிசமான காலனித்துவ பங்குடைமையை அதன் சொந்த உரிமையில் கொண்டிருந்ததோடு, ஒரு ஏகாதிபத்திய சக்தியாகவும் இருந்தது என்பதே உண்மையாகும்.

ரஷ்யாவின் ஏதேச்சதிகார மற்றும் இரத்தத்தில் ஊறிய ஜாரிச ஆட்சியோடு பிரான்ஸ் கூட்டணியில் இருந்ததோடு, அதற்கு வழங்கிய பெரும் கடன்கள் அந்த அரசின் இராணுவ மற்றும் ஒடுக்குமுறை எந்திரத்தைக் காப்பாற்றி வைக்க உதவின என்ற உண்மைக்கு இடையே, பிரஷ்ய இராணுவவாதத்திற்கு எதிராக சுதந்திரம் மற்றும் ஜனநாயக கருத்தியல்களை பாதுகாப்பதற்காகவே அது யுத்தத்தில் போரிடுவதாக பிரான்ஸின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஜேர்மனி ஐரோப்பா மீது மேலாதிக்கம் செலுத்தவும் மற்றும் ஒரு உலக வல்லரசாக "பூமியில் அதன் இடத்தை" அடையவும் முனைந்திருந்த போதினும், ஏனைய ஐரோப்பிய சக்திகளின் நடவடிக்கைகளால் அது யுத்தத்திற்குள் இழுக்கப்பட்டு இருந்ததாகவும் மற்றும் ஐரோப்பிய கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கு ரஷ்ய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அது கூறி வந்தது.

உண்மையில், அந்த யுத்தம் "ஜனநாயகத்திற்காகவோ", சிறிய தேசங்களின் உரிமைக்காகவோ, அல்லது சர்வாதிபத்தியத்தை தோற்கடிப்பதற்காகவோ நடத்தப்படவில்லை, மாறாக சந்தைகளுக்காக, இலாபங்களுக்காக, காலனித்துவத்திற்காக மற்றும் செல்வாக்கின் எல்லையை விரிவாக்குவதற்காக நடத்தப்பட்டது. ஓர் அரிய நடுநிலைமையான தருணத்தில், கடற்படைகளின் அப்போதைய முதல் பிரபுவாக விளங்கிய வின்ஸ்டன் சர்ச்சில் விவரிக்கையில், பிரிட்டனின் வன்முறையால் பெறப்பட்டதும் படைபலத்தினால் தக்கவைக்கப்பட்டதுமான ஒரு சாம்ராஜ்ஜியத்தை அது கொண்டிருப்பதாகவும், மற்றவர்களும் அதேயே அடைய முயல்வதாக விவரித்தார்.

அப்போது இருந்த ஐரோப்பாவின் அரசியல் மேல்கட்டுமானம்ஒரு ஜேர்மன் கெய்சர், ஒரு ரஷ்ய ஜார் மற்றும் ஓர் ஆஸ்திரிய பேரரசர்இன்று இருப்பதைவிட அப்பொழுது மிகவும் வேறுபட்டதாக இருப்பினும், யுத்தத்திற்கான உந்து சக்திகளோ முதலாளித்துவ பொருளாதாரத்தில் தான் வேரூன்றி இருந்தன.

இன்றையகாலகட்டத்தின் பூகோளமயப்பட்ட உற்பத்தி யுகத்திற்கு மிகவும் பலமாக பொருந்துகின்ற வார்த்தைகளில், லியோன் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, நிலம், கடல் உள்ளடங்கிய அனைத்தையும் (இன்றோ வெளியுலக விண்வெளியையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம்) அதற்கு முந்தைய 40 ஆண்டுகளில் நடந்திருந்த பரந்த பொருளாதார விரிவாக்கம் உலகை ஒரே பொருளாதார பட்டறையாக மாற்றியிருந்ததை அர்த்தப்படுத்தியது. உலகப் பொருளாதாரமோ, ஒட்டுமொத்தமாக, பொருளாதார அபிவிருத்தியின் நடுமையமாக தேசிய அரசின் இடத்தை எடுத்துக்கொண்டு விட்டது. ஆனால் உலகமோ தேசிய-அரசு அமைப்புமுறையால் பிளவுப்பட்டு, ஏகாதிபத்திய சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக இருந்தது.

சுருக்கமாக கூறுவதானால், உலக மக்களின் பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளமான மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி முதலாளித்துவ இலாப அமைப்புமுறை எதில் வேரூன்றியுள்ளதோ அந்த தேசிய-அரசு கட்டமைப்போடு மோதலுக்குள் வந்திருந்தது.

ட்ரொட்ஸ்கி எழுதினார், எந்த முதலாளித்துவ வல்லரசு ஒரு மேலாதிக்க சக்தியாக வரக்கூடும் என்பதைத் தீர்மானிப்பதற்கு, அனைத்தும் ஒன்றுக்கு எதிராக ஒன்று ஒரு இரத்தந்தோய்ந்த சண்டை மூலமாக இந்த முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்ளுமாறு ஏகாதிபத்தியம் முன்மொழிகின்றது. அதன் அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில் அதன் இந்த தீர்க்கவியலாத முரண்பாட்டை முதலாளித்துவம் தீர்க்க முனையும் வழிமுறையே யுத்தமாகும்.

இந்த அல்லது அந்த ஏகாதிபத்திய சக்திகளின் வெற்றியால் அல்ல, மாறாக ஏகாதிபத்திய வன்முறை மற்றும் அழிவிற்கான வெடிப்பிற்கு மூலகாரணமாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிவது மட்டுமே அதற்கு ஒரே முற்போக்கான தீர்வாக இருந்தது. உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டம் அந்நாளின் நிகழ்ச்சிநிரலாக வந்துள்ளது.

ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு வரலாற்று நெருக்கடியை அந்த யுத்தம் வெளிப்படையாக எடுத்துக் காட்டுகையில், அது தொழிலாளர் இயக்கத்தில் ஓர் ஆழ்ந்த நெருக்கடியைப் பலத்துடன் வெளிப்படுத்தியது. ஆகஸ்ட் 4, 1914, துப்பாக்கிகள் சுடத் தொடங்கிய போது, பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் சோசலிஸ்ட் கட்சிகள்அதாவது தொழிலாளர் அகிலத்தின் பிரெஞ்சு பிரிவு (SFIO) மற்றும் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி (SPD)—அவற்றின் சொந்த அரசாங்கங்களுக்கு ஆதரவாக வாக்களித்தன.

அவை எந்த அமைப்பில் பிரதான பிரிவுகளாக இருந்தனவோ, அந்த இரண்டாம் அகிலம் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யுத்த அபாயம் குறித்து குறிப்பிட்டிருந்தது. 1912இல் பாசலில் நடந்த அதன் மாநாட்டில், அது யுத்தத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கும், மற்றும், யுத்தத்தை தடுக்க முடியாமல் போனால், யுத்தத்தால் உருவாக்கப்படும் நெருக்கடியை முதலாளித்துவத்தை தூக்கியெறிவதை துரிதப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதென அதன் பிரிவுகள் பொறுப்பேற்று வாக்களித்திருந்தது. அந்த கடமைப்பாடு துண்டு துண்டாக கிழித்தெறியப்பட்டன. இரண்டாம் அகிலம் சோசலிசத்தின் நோக்கங்களைப் பொறுத்த வரையில் மரணித்துப்போனது.

ஒப்பீட்டளவில் அப்போது வெகு குறைவாகவே அறியப்பட்டிருந்த மார்க்சிச தலைவர் விளாடிமீர் லெனினால் மிக தொலைநோக்கான தீர்மானங்கள் வரையப்பட்டன. அவர் விவரிக்கையில், இரண்டாம் அகிலம் ஏன் காட்டிக்கொடுப்பை செய்திருந்தது என்ற கேள்விக்கான பதிலை வெறுமனே தனிப்பட்ட தலைவர்களின் அரசியல் சுயசரிதங்களில் இருந்தல்ல, அவர்களை ஆராய்வது முக்கியமானதே என்றபோதும், அவற்றில் காண முடியாது. அனைத்திற்கும் மேலாக, அது ஓர் ஒட்டுமொத்த சகாப்தத்தின் முடிவையும் அதாவது இரண்டாம் அகிலம் எந்தக் காலப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டு வளர்ந்து வந்ததோ, அந்த முதலாளித்துவத்தின் அமைதியான, அமைப்புரீதியிலான அபிவிருத்தியின் முடிவையும் யுத்தங்களினதும் புரட்சிகளினதும் ஒரு புதிய சகாப்தத்தின் உதயத்தையும் சமிக்ஞை செய்தது என்று விளங்கப்படுத்தினார்.

யுத்தத்திற்கு எதிராக பாரிய இயக்கம் அபிவிருத்தி அடையுமென்பதில் அவர் நிச்சயமாக இருந்தபோதினும், அதற்கான தந்திரோபாய முழக்கங்களை அபிவிருத்தி செய்வது லெனினது மேலோங்கிய கேள்வியாக இருக்கவில்லை, மாறாக அதை வழிநடத்துவதற்கான ஒரு முன்னோக்கைக் குறித்த கேள்வியே மேலோங்கி இருந்தது. சோசலிச புரட்சி என்றோ ஒருநாள் வரவிருக்கின்ற தொலைவிலுள்ள சம்பவமல்ல, மாறாக அதுவொரு வரலாற்று நிகழ்வுபோக்கு என்பதை, அதற்காக செயலூக்கத்தோடு தயாரிப்பு செய்யப்பட வேண்டும் மற்றும் நனவுபூர்வமாக எதிர்நோக்கவேண்டும் என்பதை உள்வாங்கிக் கொள்வது அவசியமாக இருந்தது. அது தான் "ஏகாதிபத்திய யுத்தத்தை ஓர் உள்நாட்டு யுத்தமாக திருப்பிவிடுவதற்கு" அவர் விடுத்த அழைப்பின் அர்த்தமாக இருந்தது.

அதற்கும் மேலாக, ஒரு பாரிய இயக்கம் எழுச்சி பெறும் வரையில் காத்திராமல், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர தலைமையாக மூன்றாம் அகிலத்தை ஸ்தாபிப்பது அவசியமாக இருந்தது. அது தான், முதலாளித்துவ யுத்த காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் பெருந்திரளானவர்கள் உள்ளிழுக்கப்படும்போது, தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான அத்தியாவசிய முன்நிபந்தனையாக இருந்தது.

அப்பட்டமாக காட்டிக்கொடுப்பை நடத்திய இரண்டாம் அகிலத்தில் இருந்த வலதுசாரிகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக அவர்களை மூடிமறைத்த "இடதுகளுக்கு" எதிராகவும் என, சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான மிகவும் விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தின் மூலமாக மூன்றாம் அகிலத்தின் கட்டமைப்பு நடந்ததென்று லெனின் வலியுறுத்தினார்.

லெனின், ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ், இந்த முன்னோக்கைத்தான் போல்ஷ்விக் கட்சி, உலக சோசலிசப் புரட்சியின் முதல் அடியாக, அக்டோபர் 1917 இல் ரஷ்ய புரட்சி மூலமாக கொண்டு சென்றது.

லெனின் ஒரு தனித்துவமான பாத்திரம் வகித்தார், ஏனெனில் போல்ஷ்விக் கட்சியை கட்டுவதற்கான அவரது ஒட்டுமொத்த போராட்டமும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டத்தை அடித்தளமாக கொண்டிருந்தது. அவரது எதிர்ப்பாளர்களுக்கு எது "குறுங்குழுவாதமாக," “கோட்பாட்டுவாதமாக," மற்றும் "குறிக்கோள்களுக்கான நுண்கூர்வேறுபாடுகளாக" தெரிந்ததோ அது ஒரு உலக-வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அது புதிய சகாப்தத்தின் கடமைகளைப் பூர்த்தி செய்ய தகைமை பெற்ற ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசிய முன்நிபந்தனையாக இருந்தது.

ஏகாதிபத்திய சக்திகள் மனிதகுலத்தை ஒரு மூன்றாம் உலக யுத்தத்திற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்ற நிலையில், முதலாம் உலக யுத்தம் வெடித்து இந்த நூறாம் ஆண்டில், இத்தகைய படிப்பினைகள் ஓர் மிகஅத்தியாவசியமான முக்கியத்துவத்தை பெறுகின்றன. ரஷ்யா மற்றும் சீனா போன்ற அணுஆயுதமேந்திய சக்திகளோடு ஒரு மோதலை உருவாக்க அச்சுறுத்துபவை, சிரியா, ஈராக், லிபியா, உக்ரேன் மற்றும் அவற்றை கடந்து பரவிவரும் யுத்தங்கள் மட்டுமல்ல, மாறாக ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள போலி-இடது கட்சிகளால் இந்த யுத்தங்கள் அரவணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக, இத்தகைய யுத்தங்கள் பரவுகையில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான பதட்டங்களும் அதிகரிக்கின்றன.

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அவசியமான புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கான பணி, அனைத்துலக குழுவின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தின் மீது விழுகிறது. அதற்காக தேசிய சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும், ஆறு தசாப்தங்களுக்கு மேலான அதன் நீடித்த போராட்டமே தீர்க்ககரமான தயாரிப்பாக இருக்கின்றது.