சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The slaughter in Gaza: A warning to the international working class

காசா படுகொலை: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை

Peter Symonds
4 August 2014

Use this version to printSend feedback

காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூரமான படுகொலைகள் வாரயிறுதி வரையில் தொய்வின்றி தொடர்ந்தன. பெருமளவிலான அப்பாவி பொதுமக்களுடன், நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட பாலஸ்தீனியர்களின் மரண எண்ணிக்கை, 1,822ஆக உயர்ந்தது. 10,000 பேருக்கு அண்மித்தளவில் மக்கள் காயமடைந்துள்ளனர், சுமார் 1.8 மில்லியன் மக்களின் வாழ்விடமான அங்கே பெரும்பாலான ஏனைய உள்கட்டமைப்பைப் போலவே, நிரம்பி வழியும் மருத்துவமனைகளும் இயங்கமுடியா கட்டத்தை எட்டியுள்ளன.

சமீபத்திய அட்டூழியத்தில்—ஞாயிறன்று ரஃபாஹில் ஓர் ஐ.நா பள்ளிகூடத்தின் மீது நடத்தப்பட்ட ஓர் ஏவுகணை தாக்குதலில்—குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டதோடு, ஏனைய 35 பேர் காயமடைந்தார்கள். தாக்கப்பட்ட அந்த மூன்றாவது ஐ.நா பள்ளிக்கூடம், கடந்த மாதத்தில் காசா பகுதியில் அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டுள்ள 450,000க்கும் மேலான மக்களில் சுமார் 3,000 பேருக்கு தஞ்சம் அளித்திருந்தது. அந்த பள்ளிக்கூடத்தின் பூகோள விபரக்குறிப்புகளை ஐநா அதிகாரிகள் பல முறை இஸ்ரேலிய இராணுவத்திற்கு அளித்திருந்தார்கள்.

நிலவிவரும் சர்வதேச கோபம், சீற்றம் மற்றும் போராட்டங்களுக்கு இடையே, அந்த பள்ளிகூடத்தின் மீதான தாக்குதல் வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளிடம் இருந்து முற்றிலும் பாசாங்குத்தனமான விமர்சனங்களை முன்னுக்குக் கொண்டு வந்தது, அவை இஸ்ரேலிய தாக்குதலை முழுமையாக ஆதரித்து வந்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாக்கி அறிவிக்கையில், அந்த பள்ளிக்கூடத்தின் மீதான "இரக்கமற்ற குண்டுவீச்சால்" அவரது அரசாங்கம் அதிர்ச்சியடைந்திருப்பதாக அறிவித்ததோடு, அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்தைக் கேட்டுக் கொண்டார்.

எவ்வாறிருந்த போதினும், ஒபாமா நிர்வாகம் காசா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றகரமான யுத்தத்தில் அதன் முழு அரசியல் ஆதரவை மட்டும் வழங்கியிருக்கவில்லை; அது அதை நடத்துவதற்கான கருவிகளையும் வழங்கியுள்ளது. ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் அளவில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகள் மற்றும் பொருளுதவிகள் செய்து வரும் அமெரிக்கா, இஸ்ரேலிய இராணுவத்தின் கையிருப்பில் குறைந்திருக்கும் படைதளவாடங்கள், சிறுபீரங்கி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய ஆயுதங்களின் வினியோகங்களை மீண்டும் நிரப்புவதற்கு, கூட்டு நாடுகளுக்கான யுத்த தளவாட கையிருப்பு-இஸ்ரேலில் (War Reserves Stock Allies-Israel) என்றறியப்படும் திட்டத்தின்கீழ் ஆயுதங்களைப் பெருமளவில் சேமித்து வைக்கும் கிடங்கைக் கடந்த வாரம் திறந்தது.

நடவடிக்கைகளில் ஏழு-மணிநேர நிறுத்தத்தை இன்று அறிவித்திருக்கின்ற போதினும், அதன் நோக்கங்கள் எட்டப்படும் வரையில் அது நிறுத்தப் போவதில்லை என்பதை அந்த இஸ்ரேலிய ஆட்சி முற்றிலுமாக தெளிவுபடுத்தி உள்ளது. பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தானியாஹூ நேற்று அறிவிக்கையில், "எவ்வளவு காலமெடுத்தாலும், எந்தளவிற்கு படைகள் தேவைப்பட்டாலும் சரி" இராணுவ நடவடிக்கை தொடரும் என்று அறிவித்தார்.

காசா பகுதி மீது மரணகதியிலான தாக்குதலின் நோக்கம், வெறுமனே பாலஸ்தீன போராளிகளால் இஸ்ரேலுக்குள் வீசப்படும் பிரயோசனமற்ற ராக்கெட்டுகளைத் தடுப்பதோ அல்லது அவர்களின் சுரங்கவழி வலையமைப்பை அழிப்பதோ மட்டுமல்ல. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளோடு சேர்ந்து அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல் ஏதோ தவறாக நிகழ்ந்த பிழைகள் அல்ல, மாறாக அவை ஒட்டுமொத்த மக்களையும் அச்சுறுத்துவதை மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான 66 ஆண்டுகால பாலஸ்தீனிய எதிர்ப்பின் வரலாறை தகர்ப்பதை நோக்கமாக கொண்ட ஒரு கணக்கிடப்பட்ட திட்டத்தின் பாகமாகும்.

இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு எந்திரத்தால் தசாப்தங்களாக உருவாக்கி மெருகூட்டப்பட்ட முறைகள்—விசாரணையின்றி சிறையில் அடைப்பது, சித்திரவதை, இலக்கில் வைத்து படுகொலை செய்வது, ஒட்டுமொத்தமாக தண்டனை வழங்குவது, நகர்புறங்களில் கண்மூடித்தனமாக குண்டுவீசுவது போன்றவை— 1930கள் மற்றும் 1940களில் ஆக்கிரமிப்பு ஐரோப்பாவில் நாசி அட்டூழியங்களை நினைவூட்டும் அளவிற்கு வேறொன்றையும் நினைவுக்குக் கொண்டு வருவதில்லை. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தில் தங்கியிருப்பது, யூத-பாதுகாப்புவாத திட்டத்தின் திவால்நிலைமையை நிரூபணம் செய்கிறது, அத்திட்டம், இஸ்ரேலின் ஸ்தாபிப்பை அதேபோன்ற கொடுமைகளில் இருந்து யூத மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு புகலிடமாக நியாயப்படுத்தியது.

மேலும் அதுவொரு பரந்த சர்வதேச முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. காசாவில் இன்று நடத்தப்பட்டு வருகின்ற யுத்த குற்றங்களும், அனைத்து பிரதான சக்திகளால் அவை ஆதரிக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மையும், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக என்ன தயாரிக்கப்பட்டு வருகிறதோ அதைக்குறித்த ஒரு எச்சரிக்கையாகும். பிரதான சக்திகள் அவற்றின் சூறையாடும் அபிலாசைகளைப் பின்தொடர்வதில் மில்லியன் கணக்கானவர்களை கொன்ற அந்த முதலாம் உலக யுத்தம் வெடித்த நூறாம் நினைவாண்டோடு, காசா பகுதியில் நடக்கும் இந்த இனப்படுகொலைகள் பொருந்தியுள்ளன. மீண்டுமொருமுறை, ஏகாதிபத்திய சக்திகள் பேரழிவுகரமான யுத்தத்திற்கு தயாரிப்பு செய்து வருகின்றன.

1930களுக்குப் பிந்தைய மிக மோசமான நிதியியல் உடைவுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், பூகோளமயப்பட்ட முதலாளித்துவத்தை சுற்றி வளைத்துள்ள நெருக்கடி ஆழப்பட்டுள்ளதோடு, புதிய பேரழிவுகளையும் கொண்டு அச்சுறுத்தி வருகிறது. முதலாளித்துவம் எதில் வேரூன்றியுள்ளதோ அந்த காலங்கடந்த தேசிய அரசு அமைப்புமுறை மற்றும் பூகோளந்தழுவிய பொருளாதாரத்திற்கு இடையிலான தீர்க்கவியலாத முரண்பாட்டிலிருந்து எழும் ஆழ்ந்த சமூக பொருளாதார சிக்கல்களுக்கு, உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களிடம் எந்தவொரு பகுத்தறிவான தீர்வும் இல்லை. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் வெளிநாட்டு விரோதிகளுக்கு எதிரான யுத்தத்திற்கும் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்க யுத்தத்திற்கும் தயாரிப்பு செய்வதன் மூலமாக தங்களைத்தாங்களே விடுவித்துக் கொள்ள முனைந்து வருகின்றன.

யுத்தம், இராணுவவாதம் மற்றும் சிக்கன நிகழ்ச்சிநிரலுக்கு தொழிலாள வர்க்கத்தினது எதிர்ப்பிற்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் பயன்படுத்தப்பட உள்ள நடவடிக்கைகளுக்கு, இஸ்ரேலின் காசா படுகொலைகள் ஒரு முன்னெச்சரிக்கை ஆகும். விரோதம் காட்டும் மக்களை பயமுறுத்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான ஒரு தசாப்தகால யுத்தங்களின் போக்கில் அபிவிருத்தி செய்யப்பட்ட முறைகள், தொழிலாளர்கள் தங்களின் வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க போராடும் போராட்டத்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.

ஒரு பொலிஸ் அரசுக்கான அடித்தளம் ஏற்கனவே எழுப்பப்பட்டு உள்ளது. அமெரிக்காவில், பாரிய NSA மற்றும் CIA இன் உளவு எந்திரத்திலும், மற்றும் டிரோன் தாக்குதல் மூலமாக அமெரிக்க பிரஜைகளைப் படுகொலை செய்ய ஒபாமா நிர்வாகம் அங்கீகாரம் அளிப்பதிலும் மிக அப்பட்டமாக அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. ஆயுதமேந்திய வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் பின்புலத்தோடு கனரக ஆயுதமேந்திய சிப்பாய்களும் பொலிஸூம் 2013இல் ஓர் ஒட்டுமொத்த அமெரிக்க நகரத்தையும் —பாஸ்டன் நகரம்— கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை, பரந்த சமூக எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி போன்ற சம்பவத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இராணுவ-பொலிஸ் தயார்ப்படுத்தல்கள் எந்தளவிற்கு நடந்து வருகின்றன என்பதை அம்பலப்படுத்தியது.

ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஏகாதிபத்திய மையங்களிலும் இந்த தயாரிப்புகள் குறைவாக ஒன்றும் முன்னெடுக்கப்படவில்லை. “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற பதாகையின் கீழ், குற்றப்பதிவு இல்லாமல் கைது செய்து சிறையில் அடைப்பது, பாரிய உளவு வேலைகள் மற்றும் பெருநிறுவன நிதியியல் மேற்தட்டின் கட்டளைகளை நடைமுறைப்படுத்த இராணுவத்தை அழைப்பது உட்பட ஆழ்ந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்கு சட்டரீதியிலான கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் பிரதான சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய மாநாடுகளில், ஒரு பாரிய பாதுகாப்பு பிரசன்னமும் மற்றும் செயல்பாடும் வழக்கமாக சூழப்பட்டுள்ளன, இவை உழைக்கும் மக்களை ஒடுக்க பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னோட்டமாகும்.

இரக்கமற்ற ஏதேச்சதிகார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு யுத்தம் மற்றும் சிக்கனத்திற்கான உந்துதல் என்பது ஒரு திவாலாகிப் போன சமூக அமைப்புமுறையின் விளைபொருளாகும். தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால், அதன் சொந்த தயாரிப்புகளை செய்ய வேண்டும் —அதாவது முதலாளித்துவத்தை மற்றும் அதன் அனைத்து சூறையாடல்களை முடிவுக்குக் கொண்டு வர மற்றும் ஒருசில செல்வந்தர்களின் இலாபத்திற்காக அல்லாமல் மனிதகுலத்தின் பாரிய பெரும்பான்மையினரின் நலன்களுக்காக சோசலிசத்தின் அடிக்கோட்டில் சமூகத்தை மாற்றியமைக்க ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.