சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Frictions over trade at US-India Strategic Dialogue

அமெரிக்க-இந்திய மூலோபாய பேச்சுவார்த்தையில் வர்த்தகம் மீது விரிசல்கள்

By Deepal Jayasekera
6 August 2014

Use this version to printSend feedback

அமெரிக்க-இந்திய மூலோபாய பேச்சுவார்த்தையின் கடந்த வார ஆண்டுக்கூட்டத்தில், உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒரு பரிந்துரைக்கப்பட்ட உடன்படிக்கையின் மீது இரு நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் எழுந்தன. ஜூலை 31இல் புது டெல்லியில் நடந்த அந்த கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரி சுஷ்மா சுவராஜூடன் இணைந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி துணை-தலைமை வகித்தார்.

ஜெனிவாவில் விவாதத்தின் கீழ் இருந்த WTO ஒப்பந்தம் ஜூலை 31ஐ இறுதிக்கெடுவாக கொண்டிருந்ததோடு, உணவுதானிய சேமிப்பு பிரச்சினையின் மீது விட்டுக்கொடுப்புகள் இல்லாமல் இந்தியா கையெழுத்திட மறுத்ததால், அந்த உடன்படிக்கை முறிந்து போனது. அவர்களின் பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியாவின் வர்த்தகத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராம் அவரது அமெரிக்க எதிர்தரப்பில் இருக்கும் பென்னி பிரிட்ஜ்கெரிடம், இந்தியா அதன் நிலைப்பாட்டிலிருந்து மாறாது என்று தெரிவித்தார்.

சுவராஜூடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், கெர்ரி ஒரு தெளிவான அச்சுறுத்தலை விடுத்தார்: “இந்தியா உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றால், அது WTO விதிமுறையை மீறி நிற்கும் அபாயத்தை எடுக்கும்," என்றார். அதற்கடுத்த நாள் பிரதம மந்திரி நரேந்திர மோடி உடனான அவரது சந்திப்பையும், கையெழுத்திடுவதற்கு இந்தியா மறுப்பது மீதான அமெரிக்காவின் கவலைகளை மேலெழுப்ப பயன்படுத்தினார், இந்தியா வர்த்தகத்திற்காக திறந்திருக்கிறது என்ற மோடியின் சேதியை அது பலவீனப்படுத்தக்கூடுமென அவர் எச்சரித்தார்.

சுங்க விதிமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலமாகவும், மற்றும் ஏழைகளுக்கு மானிய உணவை வழங்கும் இந்தியாவின் உணவுதானிய சேமிப்பைக் குறைப்பதன் மூலமாக WTO உடன்படிக்கை இந்தியாவின் சந்தைகளுக்குள் பெரும் அணுகுதலை வழங்குமென அமெரிக்க அராசங்கம் நம்பி வந்திருந்தது. “சிறிய இந்திய விவசாயிகள் குறித்த கவலைகளில்" இந்தியாவின் நிலைப்பாடு ஊன்றியிருப்பதாக மோடி வாதிட்ட போதினும், WTO உடன்படிக்கை மலிவு இறக்குமதிகளுக்கான தடைகளை நீக்கி, இந்திய வர்த்தகங்களுக்கு குழிபறிக்கும் என்பதே அவரது பிரதான எதிர்ப்புரையாகும்.

வர்த்தக கருத்துவேறுபாடுகள் இருந்த போதினும், இருதரப்பும் இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை அபிவிருத்தி செய்ய தீர்மானமாக உள்ளன. மூலோபாய பேச்சுவார்த்தைகளுக்குப் பிந்தைய அவர்களின் கூட்டு அறிக்கை குறிப்பிடுகையில், இந்தியாவிற்கு நாளை வரவிருக்கிற அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹாகெலின் விஜயம், “இராணுவ ஒத்திகைகள், பாதுகாப்பு, வர்த்தகம், கூட்டு-உற்பத்தி மற்றும் கூட்டு-அபிவிருத்தி, மற்றும் இராணுவத்திற்கான புதிய தொழில்நுட்பங்கள் மீதான ஆராய்ச்சிகளுக்காக" அமைந்திருக்கும் என்று குறிப்பிட்டது.

"தெற்காசிய பிராந்தியத்திலும், ஆசியாவிலும் மற்றும் உலகளவிலும் பிராந்திய அமைதி, ஸ்திரப்பாடு மற்றும் செல்வ வளத்தில், ஓர் உண்மையான இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுறவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மந்திரி சுவராஜூம் செயலர் கெர்ரியும் ஏற்றுக் கொள்வதாக," அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஆப்கானிஸ்தானும் மற்றும் கென்யா, லைபீரியா, மலாவி, ரவாண்டா மற்றும் கானா போன்ற ஆபிரிக்க நாடுகளும் உட்பட, “ஏனைய கூட்டு நாடுகளுக்கு இணைந்து ஒத்துழைக்கும் அவர்களின் கடமைப்பாட்டை" அவ்விரு அதிகாரிகளும் "மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்."

அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டுறவுக்கும் அமைதி மற்றும் செல்வ வளத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. சீனாவை ராஜாங்கரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பலவீனப்படுத்த மற்றும் இராணுவரீதியில் அதை சுற்றி வளைக்க நோக்கம் கொண்ட ஒரு பரந்த மற்றும் ஆக்ரோஷமான மூலோபாயமான அமெரிக்காவினது "ஆசியாவை நோக்கிய முன்னெப்பின்" பாகமாக அது உள்ளது. வாஷிங்டன் அந்த "முன்னெடுப்பின்" ஒரு முக்கிய உட்கூறாக இந்தியாவைக் காண்கிறது, அதேவேளையில் புது டெல்லியோ அதன் பிராந்திய எதிரியான சீனாவிற்கு எதிராக ஆசியா மற்றும் உலகளவில் அதன் இடத்தை உயர்த்திக் கொள்ள முனைந்து வருகிறது.

அவர்களின் அறிக்கையில், கெர்ரியும் சுவராஜூம் "பொருளாதார மண்டலங்களை அபிவிருத்தி செய்வது உட்பட மியான்மர் வழியாக தெற்காசியா மற்றும் ஆசியானுக்கு (ASEAN) இடையே போக்குவரத்து மற்றும் வர்த்தக இணைப்பைக் கட்டமைக்க இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்." இது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை இலக்கில் வைத்து அமெரிக்க-தலைமையிலான முத்தரப்பு கூட்டணிக்குள் இந்தியாவை மேலதிகமாக ஒன்றிணைப்பது என்பதைக் குறிக்கிறது. கெர்ரி இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான், இந்தியா ஐந்தாண்டுகளில் முதல் முறையாக மலபார் ஜலசந்தியில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு கடற்படை ஒத்திகைகளில் இணைந்தது.

காசா பகுதியின் படுபயங்கர இஸ்ரேலிய தாக்குதல் போன்ற பிரச்சினைகளில் இந்தியா கூடுதலாக அமெரிக்க முகாமிற்குள் சாய்ந்து வருகிறது என்பதையும் அந்த கூட்டு அறிக்கை எடுத்துக்காட்டியது. “காசா மற்றும் இஸ்ரேல் வன்முறையின் அதிகளவிலான தீவிரத்தன்மை குறித்து அது கவலை" வெளியிட்டதோடு, “இருதரப்பும் அதிகபட்ச கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்குமாறு அழைப்புவிடுத்தது." இஸ்ரேலை மற்றும் அதன் தசாப்தகால குற்றங்களை நியாயப்படுத்துவதில் அமெரிக்கா முன்னிலை வகித்துள்ள நிலையில், இந்தியா காலகாலமாக பாலஸ்தீன மக்களின் ஒரு ஆதரவாளராக காட்டி வந்துள்ளது. இருதரப்பினது வன்முறை குறித்து பேசும் அமெரிக்காவோடு இணைந்ததன் மூலமாக, பாலஸ்தீனிய மக்கள் மீதான இஸ்ரேலின் ஒருதரப்பிலான படுகொலைகளைக் கண்டிப்பதை மோடி அரசாங்கம் தவிர்ப்பதோடு, இஸ்ரேலுடன் மேற்கொண்டும் உறவுகளைப் பலப்படுத்த இந்தியாவின் கதவுகளைத் திறந்துவிடுகிறது.

"சிரியாவில் தொடர்ந்துவரும் வன்முறை மற்றும் மோசமடைந்துவரும் மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த கவலைகளை" வெளிப்படுத்தி, இந்தியாவும் அமெரிக்காவும் சிரியா மீது ஒரேமாதிரியான எரிச்சலூட்டும் மொழிகளைப் பயன்படுத்தின, அத்தோடு "அவற்றின் கருத்துவேறுபாடுகளை அனுசரித்துக் கொண்டு ஒரே தளத்தில் இருக்க" முயலுமாறு அனைத்து கட்சிகளையும் வலியுறுத்தின. மேலெழுந்த வாரியாக பார்க்கும் போதே அந்த கருத்துக்கள் அர்த்தமற்றவையாக உள்ளன—ஜனாதிபதி பஷீர் அல்-அசாத்தின் ஆட்சிக்கும் அவரை வெளியேற்ற முனைந்து வருகின்ற அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கும் இடையே அங்கே எந்தவொரு பொதுவான தளமும் இருக்க முடியாது. சிரியாவில் அமெரிக்க ஆட்சி-மாற்றத்திற்கான நடவடிக்கைக்கு இந்தியா அதன் மறைமுகமான ஆதரவை வழங்கி வருகிறது.

வரவிருக்கின்ற காலத்தில் அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்கள், தலையீடுகள் மற்றும் யுத்தங்களுக்கு தெளிவாக இன்னும் அதிகளவிலான இந்தியாவின் ஆதரவை கெர்ரி பார்த்து வருகிறார். “வார்த்தையில் கூறுவது சுலபமானது. வரவிருக்கின்ற நாட்களில் நாம் எடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகள் தான் நம்முடைய நட்புறவை நிஜமாக தீர்மானிக்கும்," என்று அவர் அறிவித்தார். “இந்த சந்திப்பிலிருந்து தீர்மானத்திற்கு வந்து நாம் அனைவரும் நிறைய வேலை செய்ய வேண்டியதிருக்கிறது என்று நான் [இந்தியாவின்] வெளியுறவு மந்திரியிடம் தெரிவித்தேன்," என்றார்.

சுவராஜ், ராஜாங்க வெற்றுரைகளோடு விடையிறுப்பு காட்டினார், “எங்களின் மூலோபாய கூட்டுறவின் பிராந்திய மற்றும் உலகளாவிய அம்சம் இருதரப்பிற்கும், குறிப்பாக தற்போதைய உலகளாவிய மற்றும் பிராந்திய பாய்ச்சலில், பெரும் மதிப்பைக் கொண்டுள்ளது," என்று அவர் அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “எங்களின் மூலோபாய நட்புறவின் முதிர்ச்சி, இருதரப்பிற்கும் மேற்கொண்டு பேசுவதற்கும் மற்றும் கலந்துரையாடுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக, நாங்கள் முரண்பட்டுள்ள பிரச்சினையைக் கையாள்வதற்கான தகைமையை அளித்துள்ளது என்பதையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம்," என்றார்.

யதார்த்தத்தில், அப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் ஆதரவைப் பாதுகாப்பதற்கு விலையாக இந்தியா தான் மேற்படி விட்டுகொடுப்புகளை அளிக்க கேட்டுக் கொள்ளப்படும்.

அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உண்மையான நட்புறவு, மோடியின் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) மூத்த தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்தது என்ற எட்வார்ட் ஸ்னோவ்டெனின் அம்பலப்படுத்தல்களால் எடுத்துக்காட்டப்பட்டது. “நம்முடைய இரண்டு நாடுகளும் ஒன்றையொன்று நட்பு நாடுகளாக கருதுகின்ற நிலையில், அமெரிக்க அதிகாரிகளின் தரப்பில் செய்யப்பட்ட இந்த நடவடிக்கையை எங்களால் முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாது," என்பதை அவர் கெர்ரிக்கு கூறிவிட்டதாக சுவராஜ் அறிவித்தார்.

கெர்ரி வெறுமனே அந்த பிரச்சினையை மழுப்பிவிட்டார், அமெரிக்க அரசாங்கம் உளவுத்துறை விவகாரங்களைப் பகிரங்கமாக விவாதிப்பதில்லை என்று கூறிய பின்னர், அமெரிக்க மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு இடையிலான நெருக்கமான கூட்டுறவைப் பாராட்டினார். எதிர்காலத்தில் இந்திய தலைவர்கள் மீது அது உளவுபார்க்காது என்ற ஒரு பொறுப்புறுதியை வழங்க கூட வாஷிங்டனுக்கு விருப்பமில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா அதன் வசதியைப் பின்தொடர, ஏனைய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளைப் போல, இந்தியாவும் அது கருதும் விதத்தில், எதிர்பார்க்கும் விதத்தில் பொருந்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

கெர்ரி மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஹாகெலின் விஜயங்கள், ஜனாதிபதி ஒபாமா உடனான பேச்சுவார்த்தைகளுக்காக அடுத்த மாதம் மோடியின் வாஷிங்டனுக்கான விஜயத்திற்கு பாதை அமைக்கும்.