சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The international significance of Australia’s World War Icelebrations”

ஆஸ்திரேலியாவினது முதலாம் உலக போர் "கொண்டாட்டங்களின்" சர்வதேச முக்கியத்துவம்

Nick Beams
7 August 2014

Use this version to printSend feedback

முதலாம் உலக போர் நினைவாண்டைக் கொண்டாடுவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தால், மற்றும் மாநில அரசாங்கங்கள், ஊடகங்கள், கல்வித்துறை அமைப்புகளின் பின்புல ஆதரவோடு நடத்தப்பட்டு வருகின்ற அசாதாரணமான பிரச்சாரம், ஆளும் மேற்தட்டுக்களின் ஒரு உலகளாவிய சித்தாந்த தாக்குதலினது பாகமாகும். அவர்கள் இந்த முறை அணுஆயுத விளைவுகளின் சாத்தியக்கூறுகளைக் கொண்ட மற்றொரு பேரழிவுக்குள் மனிதயினத்தை மூழ்கடிக்க தயாராகி வருகிறார்கள்.

அடுத்த நான்காண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு வடிவத்தில் நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும் நினைவுதின விழாக்களைக் கடந்த ஜனவரியில் தொடங்கி வைத்து பிரதம மந்திரி டோனி அப்போட் கூறுகையில், அதுவொரு "மக்களின் விழாவாக" இருக்கும் ஏனென்றால் முதலாம் உலக யுத்தம் "நம்முடைய நாட்டை வடிவமைத்த உலைக்களமாக" இருந்தது என்றார்.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் 300 மில்லியன் டாலர் செலவிட உள்ளன, பெருநிறுவன நன்கொடைகளால் அது இன்னும் அதிகரிக்கப்படும்இவை பிரிட்டனில் திட்டமிடப்பட்ட செலவுகளை விட குறைந்தபட்சம் இரண்டு மடங்காக இருக்கும். பள்ளிக்கூடங்கள் பிரச்சாரத்தால் நிரம்பி வழிகின்றன, கட்டுரை போட்டிகள், சுற்றுலாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற அதேவேளையில், குறிப்பாக இவை முக்கிய வளர்ச்சிக்குரிய பருவத்தில் இருக்கும் குழந்தைகளை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.

பனிப்போர் காலத்தில், இதே போன்ற நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசாங்கங்களும் ஊடக நிறுவனங்களும் "கம்யூனிச மூளைச்சலவையாக" குற்றஞ்சாட்ட பயன்படுத்தின. இன்றோ நிஜமான தொழில்துறை அளவிலான யுத்த-சார்பு பிரச்சாரத்தை அவையே ஏற்பாடு செய்து வருகின்றன. பாடசாலை அமைப்புமுறையினூடாக அடுத்த நான்காண்டுகளில் கடந்து செல்லும் எந்தவொரு சிறுவரோ அல்லது இளைஞரோ அந்த தடையைக் கடந்து தப்பிச் செல்ல முடியாது. அதற்கு மாறாக, அவர்கள் அதற்குள் பங்கெடுக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.

இந்த நடவடிக்கையின் செறிவு அதற்கு அடியிலுள்ள உள்நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது—அதாவது ஒரு புதிய உலக யுத்தத்திற்காக நடந்துவரும் தயாரிப்புகளில் ஆஸ்திரேலியா வகித்து வரும் பாத்திரத்திற்காக மக்களைத் தயார் செய்வது என்பதாகும்.

உலகெங்கிலும் உள்ள அவர்களின் எதிர்தரப்பினரைப் போலவே ஆஸ்திரேலிய ஆளும் மேற்தட்டுக்களும் பாரிய யுத்த-எதிர்ப்பு உணர்வை எதிர்கொண்டுள்ளனர். ஆகவே சாத்தியமான ஒவ்வொரு கருவிகளைக் கொண்டும் அதை உடைக்க, அனைத்திற்கும் மேலாக இளைஞர்களின் மனதில் நஞ்சூட்ட, இப்போது அவர்கள் முனைந்திருக்கிறார்கள்.

ஈராக்கிற்கு எதிரான திட்டமிட்ட அமெரிக்க யுத்தத்திற்கு எதிராக மிகப் பெரிய யுத்த-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அந்நாட்டின் வரலாற்றில் 2003இல் நடந்த போது, அங்கே யுத்தத்திற்கான எதிர்ப்பு வெளிப்பட்டது. பாரிய அழுத்தம் அந்த படையெடுப்பைத் தடுக்கும் என்று வாதிட்ட அந்த இயக்கத்தின் தலைமையினது நோக்குநிலையால் அது சிதறடிக்கப்பட்ட போதினும், அது உருவாக்கிய அந்த உணர்வுகள் இன்னும் விலகி போய்விடவில்லை. உண்மையில் கடந்த தசாப்தத்தில் நிகழ்ந்த முடிவில்லா வன்முறையின் சுழற்சியானது, அவை ஆழமடைந்துள்ளன என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

அதேநேரத்தில், அமெரிக்க போர் உந்துதலில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வருவதோடு சேர்ந்து, ஒரு புதிய உலக யுத்தத்தை நோக்கிய சரிவும் அதிகரித்துள்ளது.

நவம்பர் 2011இல் ஜனாதிபதி ஒபாமாவால் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தளத்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்கு" கையெழுத்திட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய இராணுவ எந்திரம் சீனா உடனான ஒரு மோதலுக்காக இப்போது தீவிரமடைந்துவரும் பெண்டகனின் இராணுவ தயாரிப்புகளுக்குள் முற்றிலுமாக ஒருங்கிணைந்துள்ளது. சீன மண்ணின் மீதான தாக்குதல்களுக்கு பெண்டகனின் வான்வழி/கடல்வழி போர் திட்டத்தின் பாகமாக, சீனாவிற்கான எண்ணெய் மற்றும் ஏனைய அத்தியாவசிய இறக்குமதிகள் எதன் வழியாக கடந்து செல்கிறதோ, அந்த ஆஸ்திரேலியாவிற்கு மிக அருகே வடக்கில் அமைந்துள்ள முக்கிய கடல் வழிகளில் உள்ள திணறடிக்க செய்யும் முனைகளை அடைக்க, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள ஆஸ்திரேலியா அதிமுக்கியமானதாக உள்ளது.

அனைத்திற்கும் மேலாக மத்திய ஆஸ்திரேலியாவின் பைன் கேப் (Pine Gap) இல் உள்ள அமெரிக்க தொலைதொடர்புகளுக்கு வசதியளிக்கும் இராணுவத் தளங்கள் ஏற்கனவே, மத்திய கிழக்கில் இருந்து கிழக்கு ஆசியா வரையில் நீண்டிருக்கும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எந்தவொரு அமெரிக்க தாக்குதலும் மிக இயல்பாக அதன் ஆஸ்திரேலிய தளங்களைப் பயன்படுத்தும் என்ற அளவிற்கு ஒருங்கிணைப்பின் அளவு அமைந்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ரஷ்யா மற்றும்/அல்லது சீனா உடனான, சாத்தியமான அளவிற்கு அணுஆயுத பயன்பாட்டைக் கொண்டிருக்கும், அமெரிக்காவால் தூண்டப்படும் யுத்தத்தில் ஆஸ்திரேலியா சேர்வது குறித்து முடிவெடுப்பது என்பதே கூட மேலெழாது. அது ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட ஒரு விவகாரமாக இருக்கும்.

உக்ரேனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டுவீழ்த்தப்பட்டதன் மீது ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களில், எதிர்கட்சிகளால் முற்றிலுமாக ஆதரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்களிப்பால், அமெரிக்க போர் திட்டங்களில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் இன்னும் அதிகமாக அடிக்கோடிடப்படுகிறது. அந்த விமானம் நொருக்கப்பட்ட அந்த காலையில் ஒபாமா நிர்வாகத்தால் அறிக்கைகள் வழங்கப்பட்ட பின்னர் உடனடியாக, அப்போட் ரஷ்யா மீதான சர்வதேச குற்றச்சாட்டுக்களில் முன்னணி வகித்தார். அதைத் தொடர்ந்து, சாத்தியமானால் ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் இராணுவ சிப்பாய்களின் பின்புலத்தோடு, ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை ஸ்தாபிப்பதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆஸ்திரேலியாவால் அழுத்தம் அளிக்கப்பட்டது.

பெருநிறுவனத்திற்கு சொந்தமான ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளும், முதலாம் உலக யுத்தம் அவசியமாக மட்டும் இருக்கவில்லை, ஆஸ்திரேலியாவின் பங்கெடுப்பும் இன்றியமையாததாக இருந்தது என்ற வாதத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்தகால குற்றங்களை நியாயப்படுத்துவதென்பது எப்போதுமே புதிய குற்றங்களை நடத்துவதற்கான தயாரிப்பாகும்.

முர்டோக்கிற்கு சொந்தமான ஆஸ்திரேலியன் இதழின் தலைமை பதிப்பாசிரியர் ஃபால் கெல்லியின் ஒரு கருத்துப்படி, “நாம் சண்டையிட்டே ஆக வேண்டியிருந்த ஒரு போராக அது இருந்தது", அதை வேறுவிதமாக வாதிடுபவர்கள் "முட்டாள்களாக, அறிவற்றவர்களாக" இருக்கிறார்கள்.

இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆஸ்திரேலிய ஆய்வுகளுக்கான மென்ஜிஸ் மையத்தின் இயக்குனர் கார்ல் பிரிட்ச்சை கெல்லி மேற்கோளிட்டு காட்டுகிறார். முதலாம் உலக போரில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை ஆதரிக்கும் பிரிட்ச்சின் வலியுறுத்தல்கள், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அமெரிக்க போர் உந்துதலின் வரிசையில் ஏன் நின்றது என்பதற்கான இன்றியமையாத காரணங்களை, குறிப்பாக ஜடரீதியிலான மற்றும் பொருளாதாரரீதியிலான காரணங்களை அடிக்கோடிடுகின்றன.

"பிரிட்டன், நமது வர்த்தகத்தில் 60 சதவீதத்தோடு, ஆஸ்திரேலியாவின் வர்த்தக கூட்டாளியாக இருந்தது," என்று பிரிட்ச் எழுதுகிறார். “பிரிட்டன் பிரச்சினையில் சிக்கினால், பின்னர் ஆஸ்திரேலியாவும் பிரச்சினையில் சிக்கிவிடும். நமது ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஆடிப்போகும். அங்கே இருந்த முதலீட்டு உட்கூறுகள், நமது பிரதான வெளிநாட்டு முதலீட்டு ஆதாரமாக தொலைதூரத்தில் விலகியிருந்த இலண்டன் இருந்தது," என்று குறிப்பிட்டார்.

இன்றோ சீனா தான் ஆஸ்திரேலியாவின் பிரதான வர்த்தக கூட்டாளி என்றாலும் கூட, பொருளாதாரத்தை முழுவதுமாக நிதியியல் மூலதனமே ஆட்சி செலுத்துகிறது என்பதால் அது, அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் உள்ள உலகளாவிய பணச் சந்தைகளின் நடவடிக்கைகளோடு பிணைந்துள்ளது. கடந்த ஜனவரியில், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலியா பிஷாப் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு இடையிலான முரண்பாட்டைக் குறித்த எந்தவொரு கருத்தையும் ஒதுக்கித் தள்ளினார். அவர் குறிப்பிடுகையில், சீனா ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருக்கின்ற போதினும், முதலீடு மற்றும் நிதியைக் கணக்கில் எடுத்துப் பார்த்த பின்னர், “நம்முடைய ஒரேயொரு மிக முக்கிய பொருளாதார கூட்டாளியாக இருப்பது, உண்மையில், அமெரிக்காவாகும்," என்றார்.

முதலாளித்துவ அரசியல்வாதிகளின் ஓர் ஆரம்பக்கட்ட தலைமுறை, இலாபங்கள், சந்தைகள் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கத்தின் செல்வ வளத்தைப் பாதுகாப்பதற்கு முதலாம் உலகப் போரை அத்தியாவசியமானதென்று உணர்ந்து, அதன் இரத்த ஆறில் "கடைசி நபர் வரையில், கடைசி சிப்பாய் வரையில்" அர்பணித்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையும் அதன் சூறையாடலையும் பாதுகாத்த தொழிற் கட்சி தலைவர் ஆண்ட்ரூ பிஷ்ஷரின் கடமைப்பாட்டைக் கௌரவித்திருந்தது.

இன்று அதே அடிப்படைக் காரணங்களுக்காக, ஒட்டுமொத்த அரசியல் மேற்தட்டும் இன்னும் அதிகளவிலான பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கக் கூடிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த உந்துதலோடு தன்னைத்தானே சேர்த்துக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகம் எந்த உற்சாகத்தோடு இந்த நிகழ்ச்சிநிரலை ஆதரித்துள்ளதோ, முதலாம் உலக போரின் அதன் "கொண்டாட்டத்தில்" மிக கூர்மையாக வெளிப்பட்டுள்ள அதை, ஏதோவொரு வகை ஆதிகால விசித்திரமென்று உதறிவிட முடியாது. மாறாக, அது உலகம் முழுவதிலும் உள்ள ஏகாதிபத்திய யுத்த கடவுள்கள் மீண்டுமொருமுறை தாகமெடுத்திருக்கின்றன என்பதற்கான நிச்சயமான அறிகுறி என்பதோடு, அவற்றின் காலங்கடந்த சமூக அமைப்புமுறையைச் சர்வதேச தொழிலாளர் வர்க்கம் முடிவுக்குக் கொண்டு வந்தால் ஒழிய அது ஒரு பேரழிவுக்குள் மனிதகுலத்தை மூழ்கடிக்காமல் விடாது.