சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

War threat grows as Russia prepares to intervene in east Ukraine

கிழக்கு உக்ரேனில் ரஷ்யா தலையீடு செய்ய தயாராகின்ற நிலையில் யுத்த அச்சுறுத்தல் அதிகரிக்கிறது

By Alex Lantier
12 August 2014

Use this version to printSend feedback

கிழக்கு உக்ரேனில் ரஷ்யாவின் மனிதாபிமான தலையீட்டிற்கான தயாரிப்புகள், ரஷ்யாவிற்கும் அமெரிக்க ஆதரவிலான உக்ரேனிய ஆட்சிக்கும் இடையே ஒரு இராணுவ மோதலுக்கு களம் அமைத்து வருகின்றன. உக்ரேனிய உள்நாட்டு யுத்தத்தில் சம்பந்தப்பட்ட வெவ்வேறு சக்திகளின் நிலைப்பாடுகளைப் பொறுத்த வரையில் குழப்பம் அதிகரிக்கையில், கியேவில் உள்ள உக்ரேனிய ஆட்சி ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளிடம் முறையிடும் என்கிற நிலையில், ஒரு உலக யுத்தமாக தீவிரமடையக்கூடிய அபாயம் இன்னும் மேலதிகமாக கூர்மையடைகின்றது.

நேற்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், கியேவ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதுடன், டொனெட்ஸ்க் மற்றும் லூகன்ஸ்க் நகரங்களுக்கு அடிப்படை வினியோகங்களை வழங்கும் ஒரு மனிதாபிமான திட்டத்திற்கான ரஷ்யாவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டதாக வாதிட்டார். அந்நகரங்களைக் கியேவிற்கு விசுவாசமான பாசிச படைகள் சுற்றி வளைத்திருப்பதோடு, இரக்கமின்றி குண்டுவீசி வருகின்றன.

மிக கவனமாக நம்பிக்கையோடு, இப்போது என்னால் கூற முடியும், சாத்தியமான மற்றும் சாத்தியமில்லாத எல்லா சாக்குபோக்குகளும் உதறித் தள்ளப்பட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன். மிக அண்மித்த எதிர்காலத்தில், இந்த மனிதாபிமான நடவடிக்கை செஞ்சிலுவை அமைப்பின் கீழ் நடத்தப்படும்,” என்று லாவ்ரோவ் தெரிவித்தார். அந்த திட்டம், தற்போது மின்சாரமோ, குடிநீரோ, அல்லது உணவுப்பொருட்களின் மறுவினியோகமோ இல்லாமல் இருக்கும் அவ்விரு நகரங்களுக்கும் வெளிப்பார்வைக்கு அவசரகால வினியோகங்களைக் கொண்டு வரக்கூடும். அங்கே ஒரு மில்லியனுக்கும் மேலானவர்கள் பட்டினியையும், ஒருவேளை தொற்றுநோய்களையும் முகங்கொடுத்திருக்கிறார்கள். 700,000க்கும் மேலான உக்ரேனியர்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு வெளியேறி இருக்கிறார்கள்.

கியேவில் உள்ள அமெரிக்க கைப்பாவை ஆட்சியிடமிருந்து அந்த திட்டத்திற்கான ஒப்புதலை அது பெற்றுவிட்டதாக மாஸ்கோவ் நம்புகிறதென்று லாவ்ரோவ் சுட்டிக் காட்டுகின்ற போதினும், அதுபோன்றவொரு திட்டத்தை எதிர்த்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனியிலிருந்து இந்த வாரயிறுதியில் வந்த அறிக்கைகளை அவர் கண்டித்தார். “அவ்வாறு கூறப்பட்டது உண்மையென்றால், அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதால் தென்கிழக்கு உக்ரேனிற்கு மனிதாபிமான உதவி தேவையில்லை என்று அந்த மூன்று தலைவர்களும் உடன்பட்டார்கள் என்றால், அது வெறுப்பூட்டுவதன் ஒரு அப்பட்டமான வெளிப்பாடாகும்,” என்று அவர் தெரிவித்தார்.  

ஒரு கிரெம்ளின் அறிக்கையின்படி, ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோஸ் மானுவல் பாரோஸோவை அழைத்ததோடு, அவரிடம் கூறுகையில் "சர்வதேச செஞ்சிலுவை அதிகாரிகளோடு சேர்ந்து வேலை செய்து வரும் ரஷ்யா, உக்ரேனுக்கு ஒரு மனிதாபிமான குழுவை அனுப்புகிறது,” என்றார். உக்ரேனில் எந்தவொரு ஒருதலைபட்சமான இஇராணுவ நடவடிக்கையையும்" எடுக்க வேண்டாமென புட்டினுக்கு பாரோஸோ கூறியதாக செய்திகள் தெரிவித்தன.  

ரஷ்ய தலையீடு குறித்து விவாதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று உக்ரேனிய ஜனாதிபதியை அழைத்து பேசினார். வெள்ளை மாளிகையின் ஓர் அறிக்கையின்படி, ஒபாமா "உக்ரேனிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அவரது பலமான ஆதரவை வெளியிட்டார்," மற்றும் ரஷ்யாவின் தலையீட்டை அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு, வாஷிங்டனின் பார்வையில், அது சர்வதேச சட்ட மீறலாக இருக்குமென்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறிருந்த போதினும், அந்த நடவடிக்கைக்கு கியேவ் சம்மதித்தால் அமெரிக்க அரசாங்கம்  ரஷ்யாவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ளக்கூடுமென்று அறிவுறுத்தி, அமெரிக்க நிலைப்பாட்டில் சில குழப்பத்தை ஒபாமா விட்டு வைத்திருந்தார்.

இது உக்ரேனில் ஒரு ரஷ்ய தலையீடு மீதான அமெரிக்க நிலைப்பாட்டில் விளக்கப்படமுடியாத ஒரு 180-பாகை திருப்பமாக இருந்தது. வெள்ளியன்று, ஐநா தூதர் சமந்தா பௌவர் கூறுகையில், “மனிதாபிமான உதவி வழங்குவதற்காக என்ற சாக்கில் செய்யப்படுவது உட்பட, உக்ரேனிய பிராந்தியத்திற்குள் ரஷ்யாவின் எந்தவொரு மேற்படி ஒருதலைபட்சமான தலையீட்டையும் முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு அது உக்ரேன் மீதான ஒரு தாக்குதலாக பார்க்கப்படும்," என்றார்.

கியேவ் பல்வேறு முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்தது. ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் வலெரி சாலெ அப்பட்டமாக ரஷ்ய தலையீட்டை மறுத்ததோடு, அவரது பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு எழுதினார்: “நாங்கள் எந்தவொரு விதமான 'மனிதாபிமான உதவிக்குழுவையும்' எதிர்பார்க்கவில்லை."

அசோசியேடெட் பிரஸ் உடன் பேசுகையில் ஏனைய கியேவ் ஆட்சி அதிகாரிகள்தீவிர பீரங்கி குண்டுவீச்சுக்களோடு அந்நகரங்களை நசுக்கவும், தனிமைப்படுத்தவும் அது முயன்று வருகின்ற நிலையில் அந்நகரங்களுக்கே உதவுவதற்காககியேவ் தான் ஒரு மனிதாபிமான தலையீட்டிற்காக அந்த முயற்சியைத் தொடங்கியதாக அர்த்தமற்ற வாதங்களைக் பரப்பினார்கள்.

உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையும் கூட ரஷ்ய தலையீட்டை வரவேற்பதாக வெளியானது, அது ஒரு சர்வதேச நிவாரண முயற்சியின் பாகமாகும் என்று அது வாதிட்டது. “உக்ரேனால் வழங்கப்படும் வினியோகங்களுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அத்தோடு ரஷ்யாவால் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கப்படும் உதவிகள் உட்பட, ஒரு சர்வதேச அம்சங்களை அத்திட்டம் கொண்டிருக்கும்," என்று அந்த அறிக்கை அறிவித்தது

ரஷ்ய அதிகாரிகளோ அவர்களின் "மனிதாபிமான" திட்டத்தில் என்ன உள்ளடங்கியிருக்கும் என்பதைக் குறித்து முரண்பட்ட சமிக்ஞைகளை அளித்தார்கள். கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ரஷ்ய மனிதாபிமான குழு இந்த வாரத்தில் உக்ரேனுக்குள் நுழையக்கூடும் என்பதோடு அந்த குழுவிற்கு ஒரு இஇராணுவ பாதுகாப்பும் இருக்காது என்றும் தெரிவித்தார். கிழக்கு உக்ரேனில் கியேவிற்காக சண்டையிடும் பாசிச போராளிகள் குழுக்கள் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான விரோதமாக இருக்கின்ற நிலையில், இது ஒரு தற்கொலைக்கு நிகரான மூலோபாயமாக இருக்கக்கூடும்.

அதேநேரத்தில், ரஷ்ய இராணுவ அதிகாரிகளோ உக்ரேனிய-ரஷ்ய எல்லையோரத்தில் தெளிவாக பெரியளவிலான தாக்குதலுக்கு தயாரிப்புகள் செய்து வருகிறார்கள். 45,000 ரஷ்ய துருப்புகள் எல்லையோரத்தில் திரட்டப்பட்டு வருகின்றன என்பதோடு கடந்த வாரம் ரஷ்யா பெரியளவிலான விமான ஒத்திகைகளையும் நடத்தி இருந்ததாக நேட்டோ குறிப்பிட்டது. ரஷ்யாவின் 15வது எந்திர துப்பாக்கிப்படை பிரிவைப் பார்வையிட்ட ரஷ்ய இராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு துருப்புகளிடையே பேசுகையில், “உலகம் வேகமாக மாறியுள்ளது. இந்த படைப்பிரிவின் அனுபவம் உட்பட கடந்த சம்பவங்களில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள், அமைதிபடைகள் எப்போது வேண்டுமானாலும் அழைக்கப்படலாம்," என்றார்.  

கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆட்சியினது மேற்கத்திய ஆதரவிலான தாக்குதல் ஐரோப்பாவையும் உலகையும் யுத்தத்தின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. உக்ரேனில் ஒரு ரஷ்ய மனிதாபிமான தலையீட்டை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மீது வாஷிங்டன் மற்றும் கியேவ் ஆட்சியின் நிலைப்பாட்டில் இருக்கும் திடீர் மாற்றத்தால் ஆழ்ந்த கேள்விகள் மேலெழும்பி உள்ளன. எந்த விதத்திலும் தெளிவாக இல்லாத இந்த அறிக்கைகள் நன்னம்பிக்கையை உருவாக்குவதற்காக வழங்கப்படுகின்றன என்றாலும் கூட, ஒபாமாவாவது அல்லது போறோஷென்கோவாவது ரஷ்ய உதவிக்குழுவை அந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கின்ற சிஐஏ கையாட்கள், பிளாக்வாட்டர் கைக்கூலிகள் மற்றும் உக்ரேனிய பாசிச போராளிகள் குழுக்கள் மீது உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அங்கே எந்த உத்தரவாதமும் இல்லை.    

மாஸ்கோவ்வும் அல்லது கியேவும் என்னவெல்லாம் அறிக்கைகள் வெளியிட்டாலும் கூட, அப்பிராந்தியத்தில் சண்டையிட்டு வரும் ரஷ்ய-விரோத உக்ரேனிய பாசிச போராளிகள் குழுவிடமிருந்து ஒரு இஇராணுவ விடையிறுப்பைத் தூண்டிவிடாமல், கிழக்கு உக்ரேனில் ஒரு மனிதாபிமான நடவடிக்கையை ரஷ்யா நடத்தும் என்ற வாதங்கள் வெறுமனே நம்பத்தகுந்தவையாக இல்லை. அங்கே ஏற்கனவே கியேவ் ஆட்சியால் தொடர்ச்சியாக ரஷ்ய எல்லை சாவடிகளின் மீது குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய மற்றும் உலக தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்துள்ள யுத்த அபாயம் இதைவிட அப்பட்டமாக இருக்க முடியாது. அது அமைதியான "மனிதாபிமான" நடவடிக்கை என்று கூறப்பட்டு தொடங்கினாலும் கூட உக்ரேனில் ஒரு ரஷ்ய தலையீடு என்பது ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான யுத்த வெடிப்புக்கு இட்டுச் செல்லும் என்பதை ஊகித்துவிட முடியும். இது வேகமாக ரஷ்யா மற்றும் நேட்டோவிற்கு இடையிலான ஒரு மோதலுக்குள் தீவிரமடையக்கூடும். உக்ரேனிய நெருக்கடி வெடித்ததில் இருந்தே நேட்டோ கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் மற்றும் கருங்கடலிலும் அதன் படைகளைக் கட்டியமைத்து வருகிறது

இந்த சூழ்நிலைமைக்கான முக்கிய பொறுப்பு வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய சக்திகளின் மீது தங்கியுள்ளது, அவை ரஷ்ய-ஆதரவிலான உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சைக் கவிழ்க்க பாசிச சக்திகளின் தலைமையிலான பெப்ரவரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியையும், போராட்டங்களையும் ஆதரித்தன. ரஷ்ய எல்லைகளில் நேரடியாக ஒரு வன்முறை கொண்ட ரஷ்ய-விரோத ஆட்சியை நிறுவியமை, குறிப்பாக யானுகோவிச் எங்கே அவரது அடித்தளத்தைக் கொண்டிருந்தாரோ அங்கே ரஷ்யாவிற்கு அருகே உள்ள அந்த கிழக்கு உக்ரேனில் பாரிய எதிர்ப்பைத் தூண்டிவிடவும் மற்றும் கிரெம்ளின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செய்யப்பட்டதாகும்.  

எரியும் தீயில் தொடர்ந்து எண்ணெய் ஊற்றி, மேற்கத்திய அரசாங்கங்களும் ஊடகங்களும் ரஷ்யாவைக் கண்டித்ததோடு, அதை இஇராணுவரீதியில் அச்சுறுத்தியதோடு, உக்ரேனிய பாசிச அட்டூழியங்கள் நீடித்த போதும் கூட ரஷ்யா மீது பாரிய தடைகளை அவை விதித்துள்ளன. உக்ரேனிய நெருக்கடிக்கு ரஷ்ய அரசாங்கம் ஒரு இராணுவ விடையிறுப்பைக் காட்டுமாறு முடிவெடுக்க, பின்னர் சுவற்றில் எறிந்த பந்தைப் போல திருப்பித் தாக்க, ஒரு சூழலைத் தூண்டிவிட அவை அனைத்தும் செய்துள்ளன.

கிழக்கு உக்ரேனில் ஒரு ரஷ்ய "மனிதாபிமான" திட்டத்தின் மீதான அமெரிக்க விமர்சனங்களின் பாசாங்குத்தனம் மலைப்பூட்டுவதாக உள்ளது. மக்கள் மிகக் குறைவாகவே பாதிக்கப்பட்டு இரத்தஞ்சிந்திய நாடுகளில், வாஷிங்டன் அது விரும்பினால் குண்டுவீசுவதற்கும் தாக்குவதற்கும் உரிமை இருப்பதாக வாதிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்க வகையில் 2011இல் லிபிய தாக்குதலில் அவ்வாறு செய்தது, பெங்காசியில் அமெரிக்க ஆதரவிலான ஒரு மேலெழுச்சியின் மீது அரச ஒடுக்குமுறைக்கான சாத்தியக்கூறு எழுந்த போது தாக்குதல் அவசியப்படுவதாக அது வாதிட்டது.

ஆனால் இவற்றில் எதுவும் கிரெம்ளின் மற்றும் ரஷ்யாவின் திவாலாகிப் போன முதலாளித்துவ செல்வந்த மேற்தட்டுக்களின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு முற்போக்கான குணாம்சத்தையும் வழங்கிவிடாது. அமெரிக்க, ஐரோப்பிய, மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் யுத்த-எதிர்ப்பு உணர்வுகளுக்கு எந்தவொரு அழைப்பும்விட இலாயக்கற்று, அவ்வாறான அழைப்புவிடுவதற்கு விரோதமாகவும் உள்ள அது, நேட்டோ மற்றும் உக்ரேனிய பாசிசவாத தாக்குதல்களுக்கு எதிராக வெறுமனே ரஷ்ய தேசியவாத எதிர்ப்பை ஒன்றுதிரட்ட முனைந்துள்ளது. அதன் எதிர்ப்பாளர்களின் கியேவ் படுகொலைகளை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, இப்போது அது துரிதமாக ஒரு முழு அளவிலான யுத்தத்தை விரைவில் தீவிரப்படுத்தக்கூடிய அதன் சொந்த தலையீட்டிற்குத் தயாரிப்பு செய்து வருகிறது.