சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US expands air war in Iraq

ஈராக்கில் வான்வழி போரை அமெரிக்கா விரிவாக்குகிறது

By Peter Symonds
18 August 2014

Use this version to printSend feedback

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) போராளிகள் குழுவிற்கு எதிராக ஈராக்கில் அமெரிக்கா அதன் வான்வழி போரை விரிவாக்கி வருவதுடன், ஒபாமா நிர்வாகம் அதன் மனிதாபிமான போலிக்காரணத்தையும் கைவிட்டிருக்கிறது. ஈராக்கில் அச்சுறுத்தப்பட்டிருக்கும் ஈராக்கிய சிறுபான்மையினர் மற்றும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கு அவசியமானதாக ஆரம்பத்தில் நியாயப்படுத்தப்பட்ட அந்த வான்வழி தாக்குதல்கள், வாரயிறுதியில், மோசூல் அணையை மீட்பதற்கான ஈராக்கிய மற்றும் குர்திஷ் படைகளின் ஒரு இராணுவ தாக்குதலுக்கு ஆதரவாக மாறியிருந்தது.

சமீபத்திய செய்திகளின்படி, வடக்கு ஈராக்கின் பெரும் பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் திக்ரிஸ் ஆறை ஒட்டி ஒரு மிகப்பரந்த கட்டமைப்பாக விளங்கும் அந்த மூலோபாய அணையைச் சுற்றியிருந்த முக்கிய பிரதேசங்களைக் குர்திஷ் போராளிகள் குழுக்கள் அல்லது பெஷ்மெர்கா கைப்பற்றிக் கொண்டுள்ளது. ஜூனில் வடக்கு நகரமான மோசூலை கைப்பற்றிய பின்னர் குர்திஷ் படைகளிடம் இருந்து விலகியிருந்த ஒரு நிலைபாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, குர்திஷ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளை கைப்பற்றும் ஒரு தாக்குதலின் பாகமாக ISIS போராளிகள் ஆகஸ்ட் தொடக்கத்தில் அந்த அணையை ஆக்கிரமித்திருந்தார்கள்.

தரைவழி குண்டுவீசிகளும் அத்தோடு சிப்பாய்களும் மற்றும் ஆளில்லா டிரோன்களும் ஞாயிறன்று 14 தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய இராணுப்பிரிவு அறிவித்ததுஇது ஆகஸ்ட் 7 அன்று ஈராக்கில் ஒரு புதிய வான்வழி யுத்தத்திற்கு ஜனாதிபதி ஒபாமா ஒப்புதல் வழங்கியதற்குப் பின்னர் ஒரேநாளில் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தாக்குதலாகும். இது, குர்திஷ் சுயாட்சி பிராந்திய தலைநகரான எர்பில் நகருக்கு அருகாமையிலும் அணையைச் சுற்றியுள்ள பகுதியிலும் சனியன்று நடத்தப்பட்ட ஒன்பது வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தது.

சின்ஜார் குன்றில் ISISஆல் வளைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான ஈராக்கிய யாஜிதி சிறுபான்மை உறுப்பினர்களின் கதியை உயர்த்திக்காட்டிய ஓர் ஊடக பிரச்சாரத்திற்கு இடையே தான், வான்வழி தாக்குதல்களைப் பயன்படுத்துவதற்கு ஒபாமா ஒப்புதல் வழங்கினார். ஆனால் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த சிறுபான்மையினர் மீதான அந்த அச்சுறுத்தலைப் பயன்படுத்திய பின்னர், இப்போதோ வாஷிங்டன் மனிதாபிமான பாசாங்குத்தனத்தை கலைத்து வருவதோடு, பாக்தாத்தில் உள்ள அதன் கைப்பாவை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஓர் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையின் பாகமாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்க படைகள் இப்போது "முக்கிய உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும்" அத்தோடு ISIS போராளிகளை "எதிர்ப்பதில் ஒன்றுசேர்ந்து வேலை செய்து வரும் ஈராக்கிய பாதுகாப்பு படைகள் மற்றும் குர்திஷ் இராணுவ படைகளுக்கு ஆதரவு வழங்கவும்" செயல்பட்டு வருவதாக நேற்றைய ஒரு பெண்டகன் அறிக்கை குறிப்பிட்டது. காங்கிரஸின் ஒப்புதல் ஒருபுறம் இருக்க, கேபிட்டல் ஹில்லில் ஒரு சம்பிரதாயமான விவாதம் கூட இல்லாமல் ஒபாமா, அமெரிக்க இராணுவ தலையீட்டை ஈராக்கில் விரிவாக்கி வருகிறார். அவர் சமீபத்திய வான்வழி தாக்குதல்களுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டதாக சர்வசாதாரணமாக காங்கிரஸிற்கு அறிவித்திருந்தார்.

பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியை வெளியேற்ற வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளின் ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தைப் பின்தொடர்ந்து, கடந்த வியாழனன்று அவர் பதவியிலிருந்து இறங்கியதற்கு பின்னர், ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் ஈடுபாடு இன்னும் மேலதிகமாக விரிவடைந்துள்ளது. 2003 தாக்குதலை அடுத்து அமெரிக்கா அதன் ஆக்கிரமிப்பைப் பலப்படுத்திக் கொள்ள, அது திட்டமிட்டு தூண்டிவிட்டிருந்த ஷியைட்-சுன்னி பிரிவினைவாத பிளவை மலிக்கி ஆழப்படுத்தியதாக அது போலித்தனமாக அவரை குற்றஞ்சாட்டி வந்துள்ளது.

மலிக்கிக்கு மாற்றீடான, ஹைதர் அல்-அபாதி, வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்டிருப்பதோடு, ISISக்கு சுன்னி மக்களிடையே இருக்கும் ஆதரவைக் குறைப்பதற்காக சுன்னி தலைவர்களையும் உள்ளடக்கிய ஓர் அரசாங்கத்தை அமைக்க பணிக்கப்பட்டிருக்கிறார். வெள்ளியன்று, சுன்னி பழங்குடியின மற்றும் மத தலைவர்களுக்கான ஒரு செய்தி தொடர்பாளர் தாஹா மொஹம்மத் அல்-ஹம்தூன் "கண்மூடித்தனமான குண்டுவீச்சை" நிறுத்துமாறு அழைப்புவிடுத்தார்.

வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்குப் பின்னால் அணிதிரள அபாதி ஒரு "தேசிய ஒருமைப்பாட்டு மூலோபாயத்தை" வரைய இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் வெள்ளியன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு (WSJ) தெரிவித்தனர். அந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததும் "நாங்கள் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆலோசிக்க தயாராக இருக்கிறோம்,” என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி அந்த பத்திரிகைக்கு தெரிவித்தார். சந்தேகத்திற்கு இடமின்றி "எல்லா சாத்தியக்கூறுகளும்" என்பதில் ஈராக்கிய இராணுவத்திற்கு ஆதரவாக ஒரு தீவிரப்படுத்தப்பட்ட வான்வழி போர், ஆயுதங்கள் மற்றும் படைதளவாடங்களின் வினியோகம், மற்றும் அமெரிக்க தரைவழி இருப்பை விரிவாக்குவது ஆகியவையும் உள்ளடங்கும். போரிடும் துருப்புகளை அனுப்புவதை ஒபாமா நிராகரித்துள்ள போதினும், அமெரிக்கா ஏற்கனவே 900க்கும் அதிகமான சிறப்பு படைகளையும், இராணுவ ஆலோசகர்களையும் மற்றும் ஏனைய நபர்களையும் ஈராக்கிற்கு அனுப்பி உள்ளது.

சுன்னி பிரிவினரின் வலுவானபிடியில் இருக்கும் அன்பார் மாகாணம் போன்றவைகளில் இஸ்லாமிய அரசு [ISIS] படைகளைத் தாக்க ஒரு விரிவாக்கப்பட்ட வான்வழி நடவடிக்கைக்கும் இராணுவ அதிகாரிகள் திட்டங்களை வரைந்துள்ளதாக,” WSJ குறிப்பிட்டது. அதுபோன்ற வான்வழி தாக்குதல்களை நடத்த தற்போது அமெரிக்க இராணுவத்திற்கு அதிகாரம் இல்லை என்ற போதினும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்காக என்ற பாசாங்குத்தனத்தின் கீழ் அந்த தலைநகர் உட்பட்ட சுற்றியுள்ள பகுதிகளில் "வான்வழி தாக்குதல்களை அதிகரிக்க போதுமான அளவிற்கு ஓட்டைகளை" பெண்டகன் கொண்டிருந்தது.

ஐயத்திற்கிடமின்றி ஒபாமா நிர்வாகம், ஈராக்கில் ஒரு நிரந்தரமான இராணுவ பிரசன்னத்திற்கு வழியைத் திறந்துவிடும் வகையில் பாக்தாத்தில் அபாடியின் கீழ் இன்னும் அதிகமாக வளைந்து கொடுக்கக்கூடிய ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க விரும்புகிறது. சுமார் 10,000 அமெரிக்க இராணுவ சிப்பாய்களின் தொடர்ச்சியான பிரசன்னத்திற்கு சட்ட விலக்களிப்பை வழங்கும் படைகளை நிலைநிறுத்தும் உடன்படிக்கைக்கு மலிக்கி அரசாங்கம் உடன்பட மறுத்த பின்னர், 2011இல் ஒபாமா ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெற்றார்.

அதன் துருப்புகளைத் திரும்ப பெறுவதற்கு முன்னதாக—ISIS இன் முன்னோடி அமைப்பானஅல் கொய்தாவை ஈராக்கில் தனிமைப்படுத்துவதற்கான தந்திரோபாயங்களை மீண்டும் நடத்த அபாடியின் கீழ் ஒரு "தேசிய ஒருமைப்பாட்டு மூலோபாயம்" உதவுமென வாஷிங்டன் நம்பி வருகிறது. அன்பார் மாகாணம் போன்ற பகுதிகளில் அல் கொய்தா போராளிகளை வெளியேற்றுவதில் உதவ சுன்னி பழங்குடியின போராளிகள் குழுக்களுக்கு அமெரிக்கா தான் நிதியுதவிகள், ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கியது. எவ்வாறிருந்த போதினும், ஈராக்கில் உள்ள அல் கொய்தா அண்டைநாடான சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையுடன் இணைந்ததோடு, ISISஐ பேணி வளர்ந்தது, இப்போது அது அந்த இரண்டு நாடுகளிலுமே ஒரு இஸ்லாமிய காலிபாவிற்கான அதன் பிற்போக்குத்தனமான திட்டத்தைப் பின்தொடர்ந்து வருகிறது.

வாஷிங்டனின் மத்திய கிழக்கு கொள்கை முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது. ஈராக்கில் ஒரு தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான அமெரிக்க முயற்சிகளும் பாக்தாத்திற்கும், குர்திஷ்தான் பிராந்திய அரசாங்கத்திற்கும் (Kurdistan Regional Government -KRG) இடையிலான கூர்மையான பதட்டங்களால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறது. கிர்குக் நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள எண்ணெய் வயல்களையும் கைப்பற்ற KRG ஜூனில் ISIS தாக்குதலைப் பயன்படுத்தியது. KRG சுதந்திரமாக எண்ணெய் விற்பதற்கான உரிமையைக் கோரி வந்துள்ளது, பாக்தாத்தோ அதை கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.

ISIS போராளிகள் குழுக்களுக்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருக்கும் குர்திஷ் பெஷ்மெர்காவை ஆயுதமேந்த செய்வதற்கான அவர்களின் விருப்பத்தை அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் அனைவருமே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள், ஆனால் அதுபோன்ற வினியோகங்களுக்கு பாக்தாத் அரசாங்கம் ஒப்புதல் வழங்க வேண்டியிருப்பதாக அது வலியுறுத்துகிறது. “எல்லா தரப்பினரும் தற்போதைய வடக்கு ஈராக்கிய நிலைமையைச் சுரண்ட முனைய வேண்டாமெனவும், மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் உள்ளூர் கட்சிகளுக்கு ஆயுதங்களை அனுப்புதற்காக வான்வழி இறையாண்மையை மீற வேண்டாமெனவும்" எச்சரித்து ஞாயிறன்று ஈராக்கிய இராணுவ உயர்தலைமை ஓர் அறிக்கையை பிரசுரித்தது. கூடுதல் வலிமையான ஆயுதங்களைக் கொண்ட பெஷ்மெர்கா ஒரு தனி குர்திஷ் அரசை நோக்கி மட்டுமே அதை பலப்படுத்துமென பாக்தாத் அஞ்சுகிறது.

அதேநேரத்தில், துருக்கியில் உள்ள ஒரு குர்திஷ் பிரிவினைவாத அமைப்பான குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) போராளிகள், ISISக்கு எதிரான தாக்குதலில் ஈராக்கிய பெஷ்மெர்கா போராளிகள் குழுவுடன் இணைந்திருப்பதாக அங்கே செய்திகள் அதிகரித்து வருகின்றன. PKK, துருக்கிய இராணுவத்துடன் ஒரு நீண்டகால மோதலில் இருந்து வந்துள்ளதோடு, அமெரிக்க வெளியுறவுத் துறையால் ஒரு "பயங்கரவாத அமைப்பாக" முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. PKK போராளிகள் அமெரிக்க ஆதரவிலான பெஷ்மெர்கா தாக்குதலின் பாகமாக மட்டும் இல்லை, மாறாக, பகுப்பாய்வாளர் ஷ்வான் ஜூலால் France24க்கு கூறுகையில், “PKKஉம் அமெரிக்க கடற்படையும் சின்ஜாருக்கு அருகில் நிலைமையை மதிப்பிடுவதில் மிக வெளிப்படையாகவே ஒருசில தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாக தெரிவித்தார். அதுபோன்ற கூட்டுறவுகள் ஒரு நேட்டோ கூட்டாளியான துருக்கியிடம் இருந்து அநேகமாக கூர்மையான எதிர்ப்புகளைக் கொண்டு வரக்கூடும்.

அதன் 2003 படையெடுப்பின் மூலமாக ஈராக்கை நிலைகுலைய செய்திருப்பதோடு, ஒபாமா நிர்வாகம் அந்நாட்டின் மீது அதன் மேலாதிக்கத்தை தக்க வைக்கும் மற்றொரு முயற்சியில் இரக்கமில்லாமல் தலையீடு செய்து வருகிறார். ஈராக்கில் சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டைக் கொண்டு வருவதிலிருந்து வெகுதூரத்திற்கு அப்பால், அமெரிக்க இராணுவ தலையீடு ஈராக்கில் மட்டுமல்ல பரந்த பிராந்தியம் முழுவதிலும் குறுங்குழுவாத மற்றும் இனவாத மோதல்களுக்கு இன்னும் மேலதிகமாக எண்ணெய் வார்க்க அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.