சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US war drive in Asia continues apace

அமெரிக்கா ஆசிய யுத்த உந்துதலை வேகமாக தொடர்கிறது

Peter Symonds
16 August 2014

Use this version to printSend feedback

ஒவ்வொரு பிரதான சர்வதேச கூட்டங்களும், விவாத கருத்தரங்குகளும் அல்லது உச்சி மாநாடுகளும் புதிய ஆத்திரமூட்டல்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும், யுத்த தயாரிப்புகளுக்கும் ஒரு களமாக மாறி வருகின்றன என்ற அளவுக்கு உலகம் முழுவதிலும் புவிசார்-அரசியல் உறவுகளின் செறிந்த நிலைமை நிலவுகிறது. கடந்த வாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெலின் ஆசியப் பயணங்களும் இதேபோன்றவொரு விடயமாக இருக்கின்றன.

அந்த இரண்டு அதிகாரிகளுமே செவ்வாயன்று அவர்களது ஆஸ்திரேலிய சமதரப்பினரோடு AUSMIN ஆண்டு பேச்சுவார்த்தைக்காக சிட்னி சென்றிருந்தனர். அமெரிக்க கப்பல்கள், போர்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான ஒரு தளமாக ஆஸ்திரேலியாவை பலப்படுத்தக்கூடிய, சீனாவிற்கு எதிராக நோக்கங்கொண்ட, ஒரு இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திடுவதே அக்கூட்டத்தின் மையப்புள்ளியாக இருந்தது. ஆனால் அந்த இரண்டு கூட்டாளிகளும் ரஷ்யாவிற்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை விடுப்பதற்கு, ஈராக்கில் புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க வான்வழி போருக்கு அவர்களின் பொறுப்புறுதியை அறிவிப்பதற்கு, மற்றும் காசாவில் இஸ்ரேலின் இடுக்கிப்பிடிக்கு ஆதரவளித்து கொண்டிருக்கின்ற அதேவேளையில் அப்பகுதியைக் குறித்து சிறிது முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் அதை பயன்படுத்தின.

மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டியும், மற்றும் அந்த விபத்து நடந்த இடத்தில் சர்வதேச புலனாய்வாளர்களை நிறுத்த ஒரு ஐநா தீர்மானத்திற்கு அழுத்தம் அளித்தும், ஆஸ்திரேலிய கூட்டணி அரசாங்கம் உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் பதட்டங்களைத் தூண்டிவிடுவதில் குறிப்பாக ஒரு ஆத்திரமூட்டும் பாத்திரத்தை வகித்துள்ளது. அந்த MH17 விமானம் சுட்டுவீழ்த்தப்படுவதற்கு ரஷ்யா தான் பொறுப்பாகும் என்ற ஆதரமற்ற வாதங்களை மீண்டும் வலியுறுத்துவதற்கு, மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ஜி20 உச்சிமாநாட்டிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் விலக்கி வைக்கப்பட வேண்டுமென்று எச்சரிப்பதற்கு கெர்ரி சிட்னியின் தளத்தைப் பயன்படுத்தினார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலியா பிஷாப்போ இன்னும் மேலதிகமாக மோதல்போக்கோடு இருந்தார். ரஷ்ய உதவிப்பொருள் வாகனங்கள் மீது ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே பகிரங்கமான மோதல் அபாயம் அதிகரித்திருக்கையில், அவர் ஏதோவொருவித மனிதாபிமான நடவடிக்கையின் போர்வையின் கீழ் உக்ரேனுக்குள் நுழைவதற்கான ரஷ்யாவின் எந்தவொரு முயற்சியையும் ஆஸ்திரேலியா சாத்தியமான பலமான வார்த்தைகளைக் கொண்டு கண்டிக்கும்" என்று அறிவித்தார். “மேஜையின் மீது அனைத்தும் பரிசீலனைக்கு உள்ளன," என்ற அறிவிப்போடு, ஏற்கனவே அவர், ரஷ்யாவிற்கு உரேனியம் தாது விற்பதற்கு கான்பெர்ரா தடைவிதிக்கக்கூடுமென கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.

ஈராக்கிய வான் எல்லைகளில் அமெரிக்க போர் விமானங்கள் திரும்பி வந்ததை நியாயப்படுத்துவதற்காக ஈராக்கில் ஒபாமா நிர்வாகத்தினது "மனிதாபிமான" திட்டத்திற்கு கான்பெர்ரா முழு ஆதரவளிக்கின்ற நிலையில், இந்த பாசாங்குத்தனம் திகைப்பூட்டுவதாக இருக்கிறது.

உலகின் மறுபக்கத்தில் கான்பெர்ரா வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் முகவராக செயல்பட்டு வருகிறது என்ற உண்மை ஒரு பிதற்றலோ அல்லது MH17 சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு வெறுமனே ஒரு விடையிறுப்போ அல்ல. அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய போர் திட்டங்களுக்குள் ஆஸ்திரேலியா நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளது என்பதிலிருந்து வருகிறது.

உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் அமெரிக்க தலைமையிலான மோதல், சீனாவிற்கு எதிரான அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் இராணுவத்தைக் கட்டமைக்கும் அதன் நடவடிக்கைகளின் ஒரு துணுக்காகும். மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே, வாஷிங்டன் அதன் மூலோபாய ஒருங்குவிப்பை யுரேஷியாவிற்கு மாற்றியுள்ளது. ஒப்பீட்டளவில் அதன் வரலாற்று வீழ்ச்சியால் உந்தப்பட்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்த பரந்த நிலப்பகுதியின் மீதும், மலிவு உழைப்புகள் மற்றும் மூலப்பொருட்களின் அதன் பரந்த வளங்களின் மீதும் மேலாதிக்கம் செலுத்துவதற்கு அதன் நீண்டகால அபிலாஷையைப் பின்தொடர்ந்து வருகிறது.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் யுத்தத்திற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருக்கின்ற நிலையிலும் கூட, ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் பெய்ஜிங்கை நோக்கமாக கொண்ட இராணுவ கூட்டணிகளின் ஒரு வலையமைப்பைக் கட்டமைத்து வருகிறது, அத்தோடு சீனாவிற்கும் அதன் அண்டைநாடுகளுக்கும் இடையிலே ஒரு பிளவைத் தூண்டிவிடுவதற்கும் மற்றும் சீன ஆட்சியை "விரிவாக்கவாத ஆட்சியாக" சித்தரிப்பதற்கும் முயன்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் அவர்கள் வருவதற்கு முன்னர், கெர்ரியும் ஹாகெலும் புதிய வலதுசாரி இந்திய அரசாங்கத்தோடு அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டுறவுகளை ஒருங்கிணைக்க புது டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார்கள். முக்கியமாக இராணுவ தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதில் ஹாகெல் நெருக்கமான கூட்டுறவுக்கு முன்மொழிந்தார், அது அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரமாக இருக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக காலங்காலமாக இந்தியா ரஷ்ய ஆயுதங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து அதை பிரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

கெர்ரி கடந்த வாரம் பர்மாவில் நடந்த தெற்காசிய நாடுகள் அமைப்பின் (ஆசியான்) பிராந்திய விவாத கருத்தரங்கிலும் கலந்து கொண்டார், அங்கே அவர் தென்சீனக் கடலில் சீனாவினது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் என்று கூறப்படுபவைகளை "நிறுத்துவற்கான" கோரிக்கையோடு சீனாவை எதிர்கொண்டார். பதட்டங்களைத் தணிப்பதற்காக அல்லாமல், பெய்ஜிங்கின் நடவடிக்கைகளை ஒரு ஆக்ரோஷமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளாக முத்திரை குத்துவதில் ஒரு புதிய அளவுகோலை அமைப்பதே கெர்ரியின் நோக்கமாக இருந்தது. கடந்த நான்காண்டுகளாக, ஒபாமா நிர்வாகம் சீனாவிற்கு எதிராக குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை அவற்றின் உரிமைகோரல்களுக்கு மூர்க்கமாக அழுத்தம் அளிக்க ஊக்குவித்ததன் மூலமாக, தென்சீனக் கடலில் ஓப்பீட்டளவில் சிறிய எல்லை பிரச்சினையாக இருந்ததை அபாயகரமான யுத்த வெடிப்புப்புள்ளிகளாக மாற்றிவிட்டிருக்கிறது.

இந்தியா மற்றும் ஜப்பானோடு சேர்ந்து, ஆஸ்திரேலியாவும் அமெரிக்க "முன்னெடுப்பின்" முக்கிய அச்சாணிகளில் ஒன்றாக உள்ளது. இந்த வாரம் கையெழுத்தான படைகளை நிலைநிறுத்துவதற்குரிய அமெரிக்க-ஆஸ்திரேலிய ஒப்பந்தமானது, வடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்க கப்பற்படைகளை நிலைநிறுத்துவதற்கு 2011இல் முந்தைய தொழிற் கட்சியுடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அந்த ஆவணம் டார்வினில் ஒட்டுமொத்த கடல்வழி வான்வழி/தரைவழி படைப்பிரிவுகளை நிறுத்துவதற்கும், அத்தோடு வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் "விரிவாக்கப்பட்ட விமான கூட்டுறவு" மற்றும் "கடற்படை கூட்டுறவுக்கும்" சட்டபூர்வ மற்றும் நிதியியல் கட்டமைப்புகளை அமைத்துக் கொடுக்கிறது.

ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால், அமெரிக்கா ஆஸ்திரேலிய கண்டத்தை சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பரந்த இராணுவ தளமாக மாற்றி வருகிறதுஅதுவும் குறிப்பாக தென்சீனக் கடலில் மலாக்கா ஜலசந்தி போன்ற இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களின் மத்தியில் மூலோபாய கப்பல் போக்குவரத்து தடைச்சாவடிகளை அமைக்க முனைந்து வருகிறது. படைகளை நிலைநிறுத்தும் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க-இந்திய பாதுகாப்பு கட்டமைப்பு உடன்படிக்கையில் உள்ளடங்கி இருக்கும் முக்கிய கடமைப்பாடுகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட இரகசியங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. முதலாம் உலக போருக்கு களம் அமைத்த இரகசிய நெறிமுறைகள் மற்றும் உடன்படிக்கைகளைப் போல, தற்போதைய இராணுவ திட்டங்களும் தயாரிப்புகளும், யார் யுத்தத்திற்கு பெரிதும் விரோதமாக இருக்கிறார்களோ அந்த உழைக்கும் மக்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலிய ABC-TVஇன் "7.30" நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்களில், பாதுகாப்புத்துறை செயலர் ஹாகெல் அமெரிக்கா உலகின் எந்தவொரு பாகத்திலிருந்தும் பின்வாங்கி வருகிறது என்ற கருத்தை அழுத்தமாக நிராகரித்தார். “நீங்கள் ஆசிய பசிபிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்; நாங்கள் ஆசிய பசிபிக்கில் முன்னொருபோதும் செய்யாத அளவிற்கு அங்கே மேலதிக கப்பல்களோடு, மேலதிக நபர்களோடு, மேலதிக முனைவுகளோடு நிறைய செய்து வருகிறோம். நாங்கள் உலகின் எந்தவொரு பாகத்திலிருந்தும் பின்வாங்கவில்லை. உக்ரேனில் பாருங்கள், கிழக்கு ஐரோப்பாவில் நாங்கள் ஈடுபட்டிருப்பதைப் பாருங்கள். நாங்கள் மத்திய கிழக்கில் பெரும் எண்ணிக்கையில் படைகளை நிலைநிறுத்தி இருக்கிறோம்," என்று அறிவித்தார்.

"ஒரு புதிய உலக அமைப்பு முறையை வரையறுக்க முயன்றுவருவதை நான் உலகின் கணிக்கவியலாத அபாயமாக கருதுகிறேன்," என்று அவர் கவலையை வெளியிட்டார். “புதிய உலக அமைப்பு முறைக்கு" தலைமை கொடுக்கவும் மற்றும் அதை வடிவமைக்கவும் அமெரிக்கா கடமைப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஹாகெல் குறிப்பிடும் அந்த "கணிக்கவியலாத அபாயம்", கடந்த நூற்றாண்டில் இரண்டு உலக போர்களை விளைவித்த முதலாளித்துவத்தின் அதே தீர்க்கவியலா முரண்பாட்டிலிருந்து, அதாவது உலகளாவிய பொருளாதாரத்திற்கும் காலங்கடந்த தேசிய அமைப்புமுறைக்கும் இடையிலிருக்கும் முரண்பாட்டிலிருந்து, வெடித்தெழுந்த விளைபொருளாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் வார்த்தையளவில் ஒட்டுமொத்த உலகையும் அதன் நலன்களுக்கிணங்க "வடிவமைக்க" முனைந்துள்ளது. அதன் இரக்கமற்ற அதிகளவிலான இராணுவப் படை பிரயோகங்களின் மூலமாக, அது மற்றொரு பெரும்மோதலை நோக்கி மனிதகுலத்தை மூழ்கடித்து வருகிறது.

அதன் மூலகாரணமாக உள்ள முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலமாக இந்த யுத்த உந்துதலை நிறுத்துவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே தகைமை கொண்டதாகும். அதற்கு சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஓர் ஒருங்கிணைந்த, சர்வதேச யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும், அதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே போராடி வருகிறது.