சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Workers and youth across US speak on police murder of Michael Brown

மைக்கேல் பிரௌனின் பொலிஸ் படுகொலை குறித்து அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கருத்துரைக்கின்றனர்

By our reporters
19 August 2014

Use this version to printSend feedback

18 வயது நிரம்பிய மைக்கேல் பிரௌன், பொலிஸால் படுகொலை செய்யப்பட்டதைக் குறித்தும் மற்றும் மிசோரியின் ஃபேர்க்குஷன் நகர போராட்டங்களுக்கு இராணுவமயமாக்கப்பட்ட பொலிஸ் படைகள் காட்டிய மூர்க்கமான விடையிறுப்பைக் குறித்தும், கடந்த பல நாட்களாக உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தி சேகரிப்பாளர்கள் குழு, அந்நாடெங்கிலும் நடந்த அஞ்சலி நிகழ்வுகளிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் இருந்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களோடு கலந்துரையாடியது.

பெரும்பாலும் ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாள வர்க்கம் நிறைந்த நியூ யோர்க் புரூக்லினின் பெட்போர்ட்-ஸ்டூவெசண்ட் சுற்றுப்பகுதிகளில் மைக்கேல் பிரௌனுக்காக கூடிய அஞ்சலி நிகழ்வுகளுக்கு வந்திருந்தவர்களை அந்த செய்திக்குழு நேர்காணல் செய்தது.


புரூக்லினிலிருந்து க்வீன்

ஓர் ஓய்வூபெற்ற வெரிஜோன் தொழிலாளரான க்வீன் கூறுகையில், “பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்த வேண்டியுள்ளது. நாங்கள் முற்றுகையிடப்பட்டிருக்கிறோம். எனது குழந்தைகள், என்னுடைய உடன்பிறந்தவர்களின் குழந்தைகள் குறித்து எனக்கு பயமாக இருக்கிறது. அமெரிக்க சமூகம் அடிப்படையில் சமூக அநீதியின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய ஆயுள்காலத்தில் இது சரியாகப் போவதில்லை. பள்ளிகள், வீடுகள், நம்முடைய உள்கட்டமைப்பு பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன. நீங்கள் இரு நகரங்களின் கதையைக் (Tale of Two Cities) கேட்டிருக்கிறீர்கள்? நாங்கள் இரண்டு நாடுகளில் வாழ்கிறோம். பெண்டகன் உள்ளூர் பொலிஸிற்கு டாங்கிகளை வழங்கி வருகிறது. எதற்காக? மக்களைக் கொல்வதற்காக," என்றார்.

ஜோஷ்வா பிரௌன் கூறுகையில், “இவை எல்லாமே ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இளம் கருப்பின இளைஞரைக் குறி வைப்பது குறித்து பொலிசாருக்கு நன்றாக தெரியும். விடயங்கள் இன்னும் வன்முறையாக மாறக்கூடும். அதை நோக்கித்தான் இது போய் கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்வினை காட்டி வருகிறார்கள், பொலிசாரோ அவர்களின் வன்முறையை அதிகரிக்கிறார்கள், மக்கள் அதற்கு எதிர்வினை காட்டுகிறார்கள். இது தீவிரமடைந்து வருகிறது. இந்த அமைப்புமுறை நீதிமன்றங்களில் இருக்கும் ஒழுங்குமுறையைப் போல இருந்தால், பொலிசாரை நீங்கள் தோற்கடிக்க முடியாது. ஆகவே அங்கே இன்னும் செய்வதற்கு வேறென்ன இருக்கிறது? இதுவரையில் என்ன மாதிரியான நடவடிக்கை இன்னமும் முயற்சிக்கப்படவில்லை?” என்றார்.

மற்றொரு செய்தி சேகரிப்பு குழு, பிரதானமாக ஹிஸ்பானிக் தொழிலாள வர்க்கம் வசிக்கும் சான் டியாகோவின் அண்டைப்பகுதியான பாரியோ லோகனில் தொழிலாளர்களோடு கலந்துரையாடியது.

ராமொன், 31 வயது நிரம்பிய இவர், நாடெங்கிலும் சமீபத்தில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் அதிகரிப்பதற்குக் கண்டனம் தெரிவித்தார், “அந்த சிறுவனுக்கு [பிரௌனுக்கு] நடந்தது மிகவும் கொடூரமானதென நான் நினைக்கிறேன். நான் சமீபத்தில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் மற்றொரு வீடியோவைக் கண்டேன், அதில் ஒரு அதிகாரி ஒரு பெண்ணை சாலையோரத்தில் தடுத்து நிறுத்தி, குத்துகிறார். அது எனக்கு மிகவும் கோபமூட்டியது. மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த பெண்மணி உங்கள் தாயாகவோ அல்லது சகோதரியாகவோ இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?"

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பொலிஸ் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தோடு நடந்து கொள்வது குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டபோது, ராமொன் விடையிறுத்தார், “அவர்கள் ஏழை மக்களைக் குறித்து கவலைப்படுவதே இல்லை. இன்றைய நாட்களில் மக்கள் வாழ்வதே மிகவும் சிரமமாகிவிட்டதாக நான் நம்புகிறேன். அவர்கள் வெறுமனே எங்களின் வாழ்க்கையை இன்னும் மோசமாக்க வழி காண முயல்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்."


சான் டியாகோவில் ஒரு WSWS பிரச்சாரகரிடம் இருந்து ஜோய் ஆவணங்களைப் பெறுகிறார்

அங்கே வசிப்பவர்களில் ஒருவரான ஜோய் கூறுகையில், “இந்த துப்பாக்கிசூடு குறித்து நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நாம் அனைவரும், அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன். அரசாங்கம் நம்மிடம் இருந்து நிறைய விஷயங்களை மறைக்கின்றன. நாம் அவர்களை செய்ய வைக்க அங்கே நிறைய கோரிக்கைகள் இருக்கின்றன.

"மெக்சிகோவைப் போலவே அமெரிக்க அரசாங்கமும் நிறைய ஊழல் நிறைந்து இருக்கிறது; அவர்கள் வேறு எந்தவொரு அரசாங்கமும் மூடிமறைப்பதை விட சிறப்பாக விடயங்களை மூடி மறைக்கிறார்கள்."

சமீபத்தில் உயர்பள்ளி படிப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் ஒலி கையாள்கைதுறையில் ஒரு பட்டம் பெறுவதற்கு தேவையான செலவுகளுக்காக, அவரால் ஆனமட்டும் சம்பாதிக்கும் முயற்சியில் சில்லறை விற்பனைக் கடையில் பகுதிநேரமாக வேலை செய்துவரும் கார்லா, ஃபேர்க்குஷன் நகர போராட்டக்காரர்கள் மீது பொலிஸால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். “மக்கள் தங்களின் உணர்வுகளைத் தலையில் துப்பாக்கியை வைத்துக் காட்டி வெளிப்படுத்த முடியாது. அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பயத்தை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது," என்றார்.


பால்டிமோரில் இருந்து கெல்லி மற்றும் பிரிட்டானி

பால்டிமோரில் இருந்த செய்திக்குழு அங்கே குடியிருக்கும் கெல்லி மற்றும் பிரிட்டானியோடு பேசியது, அவர்கள் மிசோரியில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் அளவைக் கண்டு ஆத்திரமடைந்திருந்தார்கள். பிரிட்டானி கூறுகையில், “என்னால் நம்ப முடிகிறது. இது நாடுமுழுவதிலும் நடந்து வருவதோடு, துப்பாக்கிசூடு மட்டுமே நடக்கவில்லை. நானும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தான். ஒரு பொலிசார் அவரது நண்பர்கள் முன்னால் என்னை பாலியியல்ரீதியாக காயப்படுத்தினார். அது மிகவும் மோசமானது," என்றார்.

"அவர்கள் சட்டத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்," என்பதை கெல்லி சேர்த்து கொண்டார்.

ஃபேர்க்குஷனில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தால் அவர் வெறுப்படைந்திருப்பதாக மார்கரேட் தெரிவித்தார், “பொலிசார்கள் குற்றவாளி கும்பல்களைப் போல நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கின்றன, அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்," என்றார்.

பால்டிமோரில் குடியிருக்கும் வேலைவாய்ப்பற்ற வால்டரிடம் ஃபேர்க்குஷன் சம்பவங்கள் குறித்து கேட்ட போது, அவர் மார்டின் லூதர் கிங்கை மேற்கோளிட்டுக் காட்டினார்: “எங்கேனும் அநீதி இருப்பதானது எங்கேயும் இருக்கும் நீதிக்கு அச்சுறுத்தலாகும்," என்று கூறியதோடு தொடர்ந்து கூறுகையில், “பொலிஸ் அவர்களின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், அரசியல்வாதிகளும் அவர்கள் தரப்பில் இருக்கிறார்கள். கொலைகாரர்கள் யார் என்பது சமூகத்திற்கு தெரியும், ஆனால் அவர்களின் சமூகம் மற்றும் எங்களின் சமூகம் என அங்கே இரண்டு சமூகங்கள் இருக்கின்றன," என்றார். தற்காப்புக்காக என்ற பொலிஸின் வாதங்கள் அர்த்தமற்றவை என்று கூறிய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அந்த சிறுவன் முதுகைக் காட்டி திரும்பி நிற்கையில் நீங்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக எவ்வாறு உணர முடியும்? நீங்கள் செய்வதைப் போல, நாங்களும் பேசத் தொடங்கினால், பின்னர் எங்களால் அவர்களை அம்பலப்படுத்திக் காட்ட முடியும்," என்றார்.

காசா குண்டுவீச்சுக்கு எதிராக மெட்ரோ-டெட்ராய்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு போராட்டத்தில் WSWS குழு, “மிசோரியின் ஃபேர்க்குஷன்: யுத்தம் உள்நாட்டிற்குள் வருகிறது" என்ற WSWS முன்னோக்குடன் சேர்ந்து, “காசா மீதான ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்ப்போம்" என்ற சோசலிச சமத்துவ கட்சியின் தீர்மானத்தினது நகல்களையும் வினியோகித்து, தலையீடு செய்தது. அந்த போராட்டத்தில் பிரதானமாக இளம் தொழிலாளர்களும் மாணவர்களும் என சுமார் ஒரு நூறு பேர் கூடியிருந்தார்கள்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆயுத உதவி வழங்கப்பட்ட இஸ்ரேலின் யூத-பாதுகாப்புவாத ஆட்சியின் கொடூரத்திற்கும் மற்றும் உள்நாட்டில் அரச ஒடுக்குமுறையின் கட்டமைப்பிற்கும் இடையிலான தொடர்பை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஒரு இளம் தொழிலாளரான நாகி கருத்துரைக்கையில், “யார் மீதும் படைகளைப் பயன்படுத்துவது தவறு. மைக்கேல் பிரௌன் கொல்லப்பட்டதில் இருந்து, நான் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் பல சம்பவங்களைச் சித்தரித்துக் காட்டும் யூ-டியூப் விடியோக்களைப் பார்த்து வருகிறேன். ஒரு வீடியோவில் ஒரு பொலிஸ் யாரோ ஒருவரை தரையில் போட்டு உதைக்கிறார், அவர்கள் நியூ யோர்க் தொழிலாளரிடையே செய்ததைப் போல அதேவிதத்தில் ஏறத்தாழ அவரைக் கொல்லும் அளவுக்கு கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தார். ஒருவர் குற்றவாளியென நிரூபிக்கப்படும் வரையில் குற்றமற்றவர் தான் என்ற அவர்களின் சொந்த விதிமுறைகளையோ அல்லது அமெரிக்க அரசியலமைப்பையோ கூட அவர்கள் மதிப்பதில்லை, கடந்த சில ஆண்டுகளில், இந்த நாட்டில் எந்தளவிற்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதைக் கண்டால் ஒருவர் உண்மையிலேயே அதிர்ந்து போய்விடுவார்," என்றார்.